*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*💁🏻♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
⤵
*மண்ணறை வாழ்க்கை*
*✍🏼...தொடர்- [ 04 ]*
*☄ மண்ணறையின் நிலையே*
*மறுமையின் நிலை*
*🏮🍂 மண்ணறை வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்து விடும். ஆனால் மண்ணறை வாழ்க்கை சோகத்திற்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கை அதைவிட வேதணைக்குரியதாக அமைந்து விடும்.*
எனவே சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
_١٣٧- *عَنْ هَانِيءٍؒ مَوْلَي عُثْمَانَؓ أَنَّهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَي قَبْرٍ بَكَي حَتَّي يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ اْلآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ: وَقَالَ رَسُولُ اللّٰهِؐ : مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ.*_
_*🍃உஸ்மான் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு கப்ருக்கருகில் நின்றால், தாடி நனையும் வரை அழுவார்கள். “சொர்க்க, நரகத்தைப் பற்றிக் கூறும் பொழுது கூட இவ்வளவு அழுவதில்லையே, கப்ரைக் கண்டு இந்த அளவு அழுகிறீர்களே ஏன❓’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. “மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் கப்ரு, அதில் ஈடேற்றம் பெற்றவருக்கு அடுத்தடுத்த தங்குமிடங்கள் அதைவிட மிக எளிதாகிவிடும், அந்தத் தங்குமிடத்தில் ஈடேற்றம் பெறாதவருக்கு பிறகு வரக்கூடிய தங்குமிடங்கள் அதைவிட மிகக் கடினமானதாக ஆகிவிடும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். மேலும், “கப்ரில் நிகழும் காட்சியைவிட பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்" என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்- ஹானிஃ (ரஹ்)*
*📕நூல்-திர்மிதி-(2230)📕*
எனவே உடலில் உயிர் இருக்கும் போதே நண்மைகளை செய்துக் கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும் கவலைப்பட்டாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை.
1289 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﻋﻤﺮﺓ ﺑﻨﺖ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، ﺃﻧﻬﺎ ﺃﺧﺒﺮﺗﻪ ﺃﻧﻬﺎ: _*ﺳﻤﻌﺖ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻟﺖ: ﺇﻧﻤﺎ ﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻳﻬﻮﺩﻳﺔ ﻳﺒﻜﻲ ﻋﻠﻴﻬﺎ ﺃﻫﻠﻬﺎ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻬﻢ ﻟﻴﺒﻜﻮﻥ ﻋﻠﻴﻬﺎ ﻭﺇﻧﻬﺎ ﻟﺘﻌﺬﺏ ﻓﻲ ﻗﺒﺮﻫﺎ»*_
_*🍃இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்“ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி(ஸல்) கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்-ஆயிஷா (ரலி)*
*📕நூல்-புகாரி-1289📕*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment