பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 29, 2020

மண்ணறை - 11

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 11 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 06 ]*

*☄நெருக்கடியா வாழ்வில்*
          *பாம்புகள் தரும் வேதனை*

*🏮🍂 இறந்தவனிடத்தில் நன்மைகள் ஏதும் இருக்கிறதா❓ என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல்  நல்லுபதேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான்.*
மண்ணறையில் கேட்க்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூற மாட்டான்.
*இதனால் அவனுடைய எலும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறையில் இறைமறுப்பாளனின் தலைபுறமாக (நன்மை ஏதும் இருக்கிறதா❓) என்று பார்க்கப்படும். ஆனால் (அங்கு) எதுவும் இருக்காது. அவனது கால்களிடத்தில் (நன்மை ஏதும் இருக்கிறதா❓) என்று பார்க்கப்படும். ஆனால் (அங்கும்) எதுவும் இருக்காது. எனவே அவன் திடுக்கிட்டு பயந்தவனாக அமருவான்.*_

_*உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்னக் கூறிக் கொண்டிருந்தாய்❓ என்று அவனிடம் வினவப்படும். அதற்கு அவன் மக்கள் எதையோ கூறிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அவர்கள் கூறியதைப் போல் நானும் கூறிக் கொண்டிருந்தேன் என்று கூறுவான். நீ உண்மை கூறினாய்.*_

_*இப்படி தான் நீ வாழ்ந்தாய். இப்படியே மரணித்தாய். இவ்வாறு அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவனிடம் கூறப்படும்.  அவனுடைய விலா எலும்புகள் ஒன்றொடொன்று பின்னிக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். இதைப் பற்றி தான் அல்லாஹ் (இந்த வசனத்தில்) கூறுகிறான். "எனது போதனையை புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105📚*

_*🍃எனது போதனையை புறக்கனிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை  உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா❓ நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா❓ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினார்கள்.*_

_*இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது.) எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதானையாக அவனுக்கெதிராக தொண்ணூற்றொண்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா❓*_

_*ஒவ்வொரு  பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனனுடைய உடம்பில் (விஷக் காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்துக் கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
              *அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : முஸ்னது அபீயஃலா (6504)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Tuesday, February 25, 2020

மண்ணறை - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 10 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 05 ]*

*☄பதில் கூறாதவனுக்கு*
                  *தண்டனை☄*

*🏮🍂 கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாதவனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப்படும். நெருப்பில் புரட்டப்படுவான்.*

_*ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻓﻴﺮاﻫﻤﺎ ﺟﻤﻴﻌﺎ، ﻭﺃﻣﺎ اﻟﻜﺎﻓﺮ - ﺃﻭ اﻟﻤﻨﺎﻓﻖ - ﻓﻴﻘﻮﻝ: ﻻ ﺃﺩﺭﻱ، ﻛﻨﺖ ﺃﻗﻮﻝ ﻣﺎ ﻳﻘﻮﻝ اﻟﻨﺎﺱ، ﻓﻴﻘﺎﻝ: ﻻ ﺩﺭﻳﺖ ﻭﻻ ﺗﻠﻴﺖ، ﺛﻢ ﻳﻀﺮﺏ ﺑﻤﻄﺮﻗﺔ ﻣﻦ ﺣﺪﻳﺪ ﺿﺮﺑﺔ ﺑﻴﻦ ﺃﺫﻧﻴﻪ، ﻓﻴﺼﻴﺢ ﺻﻴﺤﺔ ﻳﺴﻤﻌﻬﺎ ﻣﻦ ﻳﻠﻴﻪ ﺇﻻ اﻟﺜﻘﻠﻴﻦ "*_
 _*🍃 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : அனஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1338) 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவனுக்கு நெருப்பாலான ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திருப்பி விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜுவாலையும் அவனிடத்தில் வந்துக் கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றொடொன்று கோர்த்துக்கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை   (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார். அவருடன் இரும்பால் ஆன சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலைகூட மண்ணாகி விடும்.*_
_*ஜின்களையும்,மனிதர்களையும் தவிர கிழக்கிற்க்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகி விடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.*_

*🎙அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி)*

*📚 நூல் : அபூதாவூத் (4127) 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்து விட்ட) கெட்ட மனிதரிடம் வருவார். உனக்கு தீங்கு தரக் கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இது தான் என்று கூறுவார்.*_

_*அதற்கு அவன் உன் முகமே மீண்டும் மீண்டும் தீய செய்தியைத் தருகிறதே நீயார்❓ என்று கேட்பான். அதற்கு நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று பதில் கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே என்று கூறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி)*

*📚 நூல் : அஹ்மத் (17803) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ரகசியம் ஓர் அமானிதமே!

ரகசியம் ஓர் அமானிதமே!

“நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார். அவரும் இதை ஒப்புக்கொண்டு அந்தச் செய்தியைச் செவியுறுவார். மீண்டும் அவர் தனது வேண்டுகோளைப் புதுப்பித்தவராக, “நீ இதை யாரிடமும் சொல்லி விடாதே!” என்று கேட்டுக் கொள்வார்.

இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல! பல தடவை இவ்வாறு கேட்டுக் கொள்ளும் போது, சொல்ல மாட்டேன் என்று தலையாட்டி விட்டு, செய்தியைச் சொன்னவர் இடத்தைக் காலி செய்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு நண்பரிடம் இதைக் கூறி விடுவார். அதுவும், இதை யாரிடமும் சொல்லி விடாதே! என்ற நிபந்தனையுடன் இந்த ரகசியத்தைச் சொல்வார். கொஞ்சமும் மன உறுத்தலின்றி, கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய கவலையின்றி அப்படியே அந்தச் செய்தியைக் கொட்டி விடுவார். கொட்ட வேண்டியதையெல்லாம் கொட்டி விட்டு கடைசியில், “இதை அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார், எனவே நீ யாரிடமும் சொல்லாதே!” என்று கேட்டுக் கொள்வார். இவரிடம் கேட்டவர் இதே நிபந்தனையுடன் அடுத்த நபரிடம் இவ்வாறே முடிச்சவிழ்ப்பார்.

ரகசியத்தைப் பரப்புவது ஓர் அமானித மோசடி!

ரகசியத்தைப் பரப்புவதில் மேற்கண்ட ரகத்தினர் ஒரு வகை! இன்னொரு வகையினர் இருக்கின்றனர். இவர்கள் ரகசியத்தைப் பரப்புவதில் தனக்கு ஆர்வமில்லாததைப் போல் நடிப்பார்கள்.

“இன்னார் என்னிடம் ஒரு செய்தியைக் கூறினார். அதை நான் பரப்ப விரும்பவில்லை” என்று கூறி நிறுத்தி விடுவார்கள். அருகிலிருப்பவர் அதை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் பலமுறை கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு வந்ததும், தனக்கு விருப்பமில்லாதது போல் சொல்லி முடிப்பார்கள். ரகசியத்தைப் பரப்புவதில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

ரகசியத்தைப் பரப்புவதில் மற்றொரு ரகத்தினர், “சொல்லட்டுமா? சொல்லட்டுமா?” என்று கேட்டு, வழிப்பறிக்காரன் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல் மிரட்டிக் கொண்டிருப்பார். இதன் மூலம் அவனிடத்தில் பணம் பறிப்பது அல்லது அவனை அடிமைப்படுத்தி அவனிடத்திலிருந்து ஏதாவது ஒரு வகையான இலாபத்தை அடைந்து கொண்டிருப்பார்.

இத்தகையோரிடம், நீ சொல்லடா என்று சொல்லி அவனது பயமுறுத்தல் என்ற இரும்புச் சங்கிலியை தகர்த்தெறிந்து விட்டு வெளியே வந்து விடும் போது, அவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி ஊர் முழுக்க அல்ல! உலகம் முழுக்க பரப்பி விடுவார். இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஒருவரிடம் ரகசியம் சொல்பவர், யாரிடமும் சொல்லாதே என்ற நிபந்தனையிட்டே அந்தச் செய்தியைச் சொல்கின்றார். அவரும் அதை ஒப்புக் கொண்டு, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த பின்னர் தான் அந்தச் செய்தியைப் பெறுகின்றார். அதன் பின்னர் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதைப் பரப்புகின்றார் என்றால் இவர் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகின்றார் என்று தான் அர்த்தம்.

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ وَاَوْفُوْا بِالْعَهْدِ‌ۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـــُٔوْلًا‏
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

(அல்குர்ஆன்17:34)

இந்த வசனத்தின்படி வாக்குறுதிக்கு மாறு செய்ததற்காக மறுமையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலும் இவர் செய்கின்ற இந்தப் பாவம் அல்லாஹ்வுக்குச் செய்த பாவம் மட்டுமல்லாமல் அடியாருக்குச் செய்த பாவமாகும். அல்லாஹ் தனக்கு ஓர் அடியான் செய்த பாவத்தை அவன் நாடினால் மன்னித்து விடுவான். ஆனால் இந்தப் பாவம் ஒரு அடியான் இன்னோர் அடியானுக்குச் செய்த பாவமாகும். இதை சம்பந்தப்பட்ட அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

செல்லுபடியாகாத செலவாணிகள்

பாதிக்கப்பட்ட அடியான் மன்னிக்கவில்லையெனில் அதற்கு ஈடு செய்ய மறுமை உலகில் எந்தக் கரன்சியும் – செலவாணியும் செல்லுபடியாகாது. அமல்கள் என்ற செலவாணியைத் தவிர! அப்போது இதுபோன்று வாக்குறுதிக்கு மாறாக ரகசியத்தை வெளியிட்டவன் மலை மலையாகச் செய்த அமல்கள் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவனின் கணக்கில் வரவு வைக்கப்படும். அமல்கள் என்ற கரன்சி காலியாகி விட்டால் உலகில் பாதிக்கப்பட்டவனின் பாவங்கள் இவன் தலையில் கட்டப்பட்டு நரகில் தூக்கி எறியப்படுவான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

6744 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ». قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ. فَقَالَ « إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِى يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِى قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِى النَّارِ
“திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது. “யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 4678

ரகசியத்தைப் பேணிய அபூபக்ர் (ரலி)

4005- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُحَدِّثُ
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَدْ شَهِدَ بَدْرًا تُوُفِّيَ بِالْمَدِينَةِ قَالَ عُمَرُ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ قَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي فَلَبِثْتُ لَيَالِيَ فَقَالَ : قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ قُلْتُ نَعَمْ قَالَ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ إِلاَّ أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا
உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:  நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு உஸ்மான் (ரலி), “இந்த விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மானைச் சந்தித்த போது, “இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள்.

ஆகவே நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான் அவர்களை விட அபூபக்ர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போது, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா குறித்து சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது வருத்தம் இருக்கக் கூடும்” என்று கூறினார்கள். நான், ஆம் என்றேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் கூறிய போது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். 

அறி : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), 

நூல் : புகாரி (4005)

ரகசியம் பாதுகாத்த ஃபாத்திமா (ரலி)

(நபி-ஸல் அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார்.

6285- حَدَّثَنَا مُوسَى ، عَنْ أَبِي عَوَانَةَ ، حَدَّثَنَا فِرَاسٌ ، عَنْ عَامِرٍ ، عَنْ مَسْرُوقٍ حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ قَالَتْ
إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِنْدَهُ جَمِيعًا لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ فَأَقْبَلَتْ فَاطِمَةُ – عَلَيْهَا السَّلاَمُ – تَمْشِي لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ ، أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ إِذَا هِيَ تَضْحَكُ فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالسِّرِّ مِنْ بَيْنِنَا ثُمَّ أَنْتِ تَبْكِينَ فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ
 

அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறி விட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த ரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி இப்போது (தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்ன போது, “எனக்கு ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக் காட்டி நினைவூட்டுவார். ஆனால் அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையாக இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி சென்று விடுவேன்” என்று சொன்னார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! “இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது “இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ நீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா?” என்று ரகசியமாகக் கேட்டார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 6285, 6286, 3263

ரகசியம் காத்த அனஸ் (ரலி)

6533 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ أَتَى عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
وَأَنَا أَلْعَبُ مَعَ الْغِلْمَانِ – قَالَ – فَسَلَّمَ عَلَيْنَا فَبَعَثَنِى إِلَى حَاجَةٍ فَأَبْطَأْتُ عَلَى أُمِّى فَلَمَّا جِئْتُ قَالَتْ مَا حَبَسَكَ قُلْتُ بَعَثَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِحَاجَةٍ. قَالَتْ مَا حَاجَتُهُ قُلْتُ إِنَّهَا سِرٌّ . قَالَتْ لاَ تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَحَدًا. قَالَ أَنَسٌ وَاللَّهِ لَوْ حَدَّثْتُ بِهِ أَحَدًا لَحَدَّثْتُكَ يَا ثَابِت
நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வர தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், “தாமதமானதற்கான காரணம் என்ன?” என்று என் தாயார் வினவினார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். “அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். “அது ரகசியமாகும்” என்றேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே” என்று கூறினார்.

அறி : அனஸ் (ரலி), 

நூல்: முஸ்லிம் 4533

மாபெரும் அமானித மோசடி

இன்று மணமுடித்த மாப்பிள்ளை தனது முதலிரவில் அனுபவித்த ரகசியத்தைப் பற்றி நண்பர்களிடம் சர்வ சாதாரணமாகப் பகிர்ந்து கொள்கின்றான். அது போல் பெண்ணும் முதலிரவு ரகசியத்தைப் பற்றி தன் தோழிகளிடம் பகிர்ந்து கொள்கின்றாள். நான்கு பெண்கள் ஓரிடத்தில் கூடிவிட்டால் அவர்களிடத்தில் அதிகமாக உலவும் பேச்சு இந்த வகையான பேச்சு தான். இந்த வக்கிரமான, அக்கிரமமான ஆபாச வர்ணனைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

3615 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
தானும் தனது மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் அவளது அந்தரங்கத்தைப் பரப்புபவன் தான் மறுமையில் அல்லாஹ்விடம் மிக மிகக் கெட்ட ரக மனிதனாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 

நூல் : முஸ்லிம் 2597

எனவே ரகசியங்களைக் காத்து, இத்தகைய அமானித மோசடியிலிருந்து விலகிக் கொள்வோமாக!

Monday, February 24, 2020

மண்ணறை - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 10 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 05 ]*

*☄பதில் கூறாதவனுக்கு*
                  *தண்டனை☄*

*🏮🍂 கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாதவனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப்படும். நெருப்பில் புரட்டப்படுவான்.*

_*ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻓﻴﺮاﻫﻤﺎ ﺟﻤﻴﻌﺎ، ﻭﺃﻣﺎ اﻟﻜﺎﻓﺮ - ﺃﻭ اﻟﻤﻨﺎﻓﻖ - ﻓﻴﻘﻮﻝ: ﻻ ﺃﺩﺭﻱ، ﻛﻨﺖ ﺃﻗﻮﻝ ﻣﺎ ﻳﻘﻮﻝ اﻟﻨﺎﺱ، ﻓﻴﻘﺎﻝ: ﻻ ﺩﺭﻳﺖ ﻭﻻ ﺗﻠﻴﺖ، ﺛﻢ ﻳﻀﺮﺏ ﺑﻤﻄﺮﻗﺔ ﻣﻦ ﺣﺪﻳﺪ ﺿﺮﺑﺔ ﺑﻴﻦ ﺃﺫﻧﻴﻪ، ﻓﻴﺼﻴﺢ ﺻﻴﺤﺔ ﻳﺴﻤﻌﻬﺎ ﻣﻦ ﻳﻠﻴﻪ ﺇﻻ اﻟﺜﻘﻠﻴﻦ "*_
 _*🍃 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : அனஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1338) 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவனுக்கு நெருப்பாலான ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திருப்பி விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜுவாலையும் அவனிடத்தில் வந்துக் கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றொடொன்று கோர்த்துக்கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை   (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார். அவருடன் இரும்பால் ஆன சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலைகூட மண்ணாகி விடும்.*_
_*ஜின்களையும்,மனிதர்களையும் தவிர கிழக்கிற்க்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகி விடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.*_

*🎙அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி)*

*📚 நூல் : அபூதாவூத் (4127) 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்து விட்ட) கெட்ட மனிதரிடம் வருவார். உனக்கு தீங்கு தரக் கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இது தான் என்று கூறுவார்.*_

_*அதற்கு அவன் உன் முகமே மீண்டும் மீண்டும் தீய செய்தியைத் தருகிறதே நீயார்❓ என்று கேட்பான். அதற்கு நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று பதில் கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே என்று கூறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி)*

*📚 நூல் : அஹ்மத் (17803) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Friday, February 21, 2020

ஜின்களும் - 70

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖7️⃣0️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 07 }☄️*

*☄️இறுதியில் நரகம் செல்வான்*

*وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي ۖ فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم ۖ مَّا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنتُم بِمُصْرِخِيَّ ۖ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ*

_*🍃“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்” என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு*_

    *📖அல்குர்ஆன் (14 : 22)📖*

_*🍃வழி கெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே❓” அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா❓ அல்லது தமக்குத்தாமே உதவிக் கொள்வார்களா❓ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.*_

   *📖அல்குர்ஆன் (26 : 91)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Thursday, February 20, 2020

மண்ணறை - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 09 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 04 ]*

*☄தீயவர்களுக்கு*
         *மலக்குகளின் வரவேற்பு*

*🏮🍂 கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும் போது அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு  கொடுப்பார்கள்.*

_*عن البراء بن عازب قال : خرجنا مع النبي صلى الله عليه و سلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه و سلم وجلسنا حوله وكأن على رءوسنا الطير وفي يده عود ينكت في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا ثم قال ان العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلسوا منه مد البصر ثم يجئ ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة أخرجي إلى مغفرة من الله ورضوان قال فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوط ويخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الأرض قال فيصعدون بها فلا يمرون يعنى بها على ملأ من الملائكة الا قالوا ما هذا الروح الطيب فيقولون فلان بن فلان بأحسن أسمائه التي كانوا يسمونه بها في الدنيا حتى ينتهوا بها إلى السماء الدنيا فيستفتحون له فيفتح لهم فيشيعه من كل سماء مقربوها إلى السماء التي تليها حتى ينتهى به إلى السماء السابعة فيقول الله عز و جل اكتبوا كتاب عبدي في عليين وأعيدوه إلى الأرض فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى قال فتعاد روحه في جسده فيأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه و سلم فيقولان له وما علمك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت فينادى مناد في السماء ان صدق عبدي فافرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة قال فيأتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بصره قال ويأتيه رجل حسن الوجه حسن الثياب طيب الريح فيقول أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد فيقول له من أنت فوجهك الوجه يجئ بالخير فيقول أنا عملك الصالح فيقول رب أقم الساعة حتى أرجع إلى أهلي وما لي قال وان العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح فيجلسون منه مد البصر ثم يجئ ملك الموت حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الخبيثة أخرجي إلى سخط من الله وغضب قال فتفرق في جسده فينتزعها كما ينتزع السفود من الصوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يجعلوها في تلك المسوح ويخرج منها كأنتن ريح جيفة وجدت على وجه الأرض فيصعدون بها فلا يمرون بها على ملأ من الملائكة الا قالوا ما هذا الروح الخبيث فيقولون فلان بن فلان بأقبح أسمائه التي كان يسمى بها في الدنيا حتى ينتهى به إلى السماء الدنيا فيستفتح له فلا يفتح له ثم قرأ رسول الله صلى الله عليه و سلم { لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط } فيقول الله عز و جل اكتبوا كتابه في سجين في الأرض السفلى فتطرح روحه طرحا ثم قرأ { ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق } فتعاد روحه في جسده ويأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول هاه هاه لا أدري فيقولان له ما دينك فيقول هاه هاه لا أدري فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول هاه هاه لا أدري فينادى مناد من السماء ان كذب فافرشوا له من النار وافتحوا له بابا إلى النار فيأتيه من حرها وسمومها ويضيق عليه قبره حتى تختلف فيه أضلاعه ويأتيه رجل قبيح الوجه قبيح الثياب منتن الريح فيقول أبشر بالذي يسوءك هذا يومك الذي كنت توعد فيقول من أنت فوجهك الوجه يجئ بالشر فيقول أنا عملك الخبيث فيقول رب لا تقم الساعة*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும்போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்ளுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள்அமர்ந்திருப்பார்கள்.*_

_*பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே அல்லாஹ்வின் கோபத்துடனும், அதிருப்தியுடனும் நீ வெளியேறு என்று கூறுவார். அப்போதுதான் அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும்.*_

_*ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும்நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச்சேர்த்து விடுவார்.*_

_*🍃 பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்.  இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச்செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்துச் செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது❓ என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.  உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த  கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.*_

_*இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவை திறக்குமாறு கேட்க்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த இடத்திலே) இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம் (7 : 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜின் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் அப்போது கூறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி)*

*📚 நூல் : அஹ்மத் (17803) 📚*

_*عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ‏"‏ وَإِنَّ الْكَافِرَ إِذَا خَرَجَتْ رُوحُهُ  - قَالَ حَمَّادٌ وَذَكَرَ مِنْ نَتْنِهَا وَذَكَرَ لَعْنًا - وَيَقُولُ  أَهْلُ السَّمَاءِ رُوحٌ خَبِيثَةٌ جَاءَتْ مِنْ  قِبَلِ الأَرْضِ ‏.‏ قَالَ فَيُقَالُ انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ  الأَجَلِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَرَدَّ رَسُولُ اللَّهِ  صلى الله عليه وسلم رَيْطَةً كَانَتْ عَلَيْهِ عَلَى أَنْفِهِ هَكَذَا*_

_*🍃ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது -அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள்.*_ _*வானுலகவாசிகள், "ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது" என்று கூறுகின்றனர். அப்போது "இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்" என்று கூறப்படுகிறது.*_
_*இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை "இப்படி" கொண்டுசென்றார்கள்.*_
 
*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (5119) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Tuesday, February 18, 2020

ஜின்களும் - 68

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣8️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 05 }☄️*

*☄️உறுதியாக இருந்தால்*
                       *அஞ்சுவான்*

*🏮🍂ஷைத்தான் கூறும் ஆசைவார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் தீமைகளை வெறுத்து ஒதுக்குவதில் உறுதியாக இருந்தால் ஷைத்தான் நம்மைப் பார்த்து பயப்படுவான். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு இருந்ததால் அவர்களைப் பார்த்து ஷைத்தான் அஞ்சியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

ﺣﺪﺛﻨﺎ ﻋﻠﻲ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﻋﻦ ﺻﺎﻟﺢ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺒﺪ اﻟﺤﻤﻴﺪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺯﻳﺪ، ﺃﻥ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻌﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻭﻗﺎﺹ، *ﺃﺧﺒﺮﻩ ﺃﻥ ﺃﺑﺎﻩ ﺳﻌﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻭﻗﺎﺹ، ﻗﺎﻝ: اﺳﺘﺄﺫﻥ ﻋﻤﺮ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻋﻨﺪﻩ ﻧﺴﺎء ﻣﻦ ﻗﺮﻳﺶ ﻳﻜﻠﻤﻨﻪ ﻭﻳﺴﺘﻜﺜﺮﻧﻪ، ﻋﺎﻟﻴﺔ ﺃﺻﻮاﺗﻬﻦ، ﻓﻠﻤﺎ اﺳﺘﺄﺫﻥ ﻋﻤﺮ ﻗﻤﻦ ﻳﺒﺘﺪﺭﻥ اﻟﺤﺠﺎﺏ، ﻓﺄﺫﻥ ﻟﻪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻀﺤﻚ، ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﺃﺿﺤﻚ اﻟﻠﻪ ﺳﻨﻚ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: «ﻋﺠﺒﺖ ﻣﻦ ﻫﺆﻻء اﻟﻻﺗﻲ ﻛﻦ ﻋﻨﺪﻱ، ﻓﻠﻤﺎ ﺳﻤﻌﻦ ﺻﻮﺗﻚ اﺑﺘﺪﺭﻥ اﻟﺤﺠﺎﺏ» ﻗﺎﻝ ﻋﻤﺮ: ﻓﺄﻧﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻛﻨﺖ ﺃﺣﻖ ﺃﻥ ﻳﻬﺒﻦ، ﺛﻢ ﻗﺎﻝ: ﺃﻱ ﻋﺪﻭاﺕ ﺃﻧﻔﺴﻬﻦ، ﺃﺗﻬﺒﻨﻨﻲ ﻭﻻ ﺗﻬﺒﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻗﻠﻦ: ﻧﻌﻢ، ﺃﻧﺖ ﺃﻓﻆ ﻭﺃﻏﻠﻆ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ، ﻣﺎ ﻟﻘﻴﻚ اﻟﺸﻴﻄﺎﻥ ﻗﻂ ﺳﺎﻟﻜﺎ ﻓﺠﺎ ﺇﻻ ﺳﻠﻚ ﻓﺠﺎ ﻏﻴﺮ ﻓﺠﻚ»*

_*🍃(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண் களை நோக்கி) “தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ் வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும் போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்” என்று பதிலளித்தார்கள். (அப்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *சஅத் பின்*
                    *அபீவக்காஸ் (ரலி)*

          *📚நூல் : புகாரி (3294)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 08 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 03 ]*

*☄தீய வாழ்வைப் பற்றிய*
               *முன்னறிவிப்பு☄*

*🏮🍂 மரணிக்கும் தறுவாயில் இருக்கும் போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்புச் செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்னறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்க விருப்பவர் அறிந்துக் கொள்வார்.*

_*وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ ۗ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمُ ۖ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ*_

_*🍃அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).*_

*📖திருக்குர்ஆன்  6:93📖*

_*عَنْ  عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله  عليه وسلم ‏"‏ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ  وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ ‏"‏ ‏.‏  فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَكَرَاهِيَةُ الْمَوْتِ فَكُلُّنَا  نَكْرَهُ الْمَوْتَ فَقَالَ ‏"‏ لَيْسَ كَذَلِكِ وَلَكِنَّ الْمُؤْمِنَ  إِذَا  بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ أَحَبَّ لِقَاءَ  اللَّهِ فَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَإِنَّ الْكَافِرَ إِذَا بُشِّرَ  بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ كَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ  لِقَاءَهُ ‏"‏*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)❓ அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்❓" என்று கேட்டேன்.*_

_*அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறைமறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும்போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்) சொன்னார்கள்.*_

*🎙 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (5208) 📚* 

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Monday, February 17, 2020

ஜின்களும் - 66

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣6️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 03 }☄️*

*☄️தீய எண்ணங்களைத்*
                *தோற்றுவிப்பான்*

*وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا*

_*🍃“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.*_

*📖 அல்குர்ஆன் (4 : 119) 📖*

*يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا*

_*🍃அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.*_

*📖 அல்குர்ஆன் (4 : 120) 📖*

_*🍃அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.*_

*📖 அல்குர்ஆன் (114 : 4) 📖*

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، *قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ ـ رضى الله عنهما ـ أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ، فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهَا يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ‏"‏‏.‏ فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ‏.‏ وَكَبُرَ عَلَيْهِمَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا ‏"‏‏.‏"*

_*🍃ஸஃபிய்யா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் “ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.*_

   *📚 நூல் : புகாரி (2035) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 07 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை[ 02 ]*

*☄பாவமன்னிப்பின் வாசல்*
             *அடைக்கப்படும்☄*

*🏮🍂 மலக்குகள் உயிரை கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே தாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்த பிரார்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.*

_*إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا*_ _*وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا*_

_*🍃அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக்கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான்.  அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.*

_*தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.*_

*📖திருக்குர்ஆன்  4:18📖*

_*هَلْ يَنظُرُونَ إِلَّا أَن تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ رَبِّكَ ۗ يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِن قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا ۗ قُلِ انتَظِرُوا إِنَّا مُنتَظِرُونَ*_

_*🍃(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை,அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா❓ உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது. "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக!*_

*📖திருக்குர்ஆன்  6:158📖*

*🏮🍂 ஃபிர்அவ்ன் என்ற கொடிய அரசன் மரணிக்கும் தருவாயில் ஈமான் கொண்டுவிட்டதாக கூறினான். மரணம் சம்பவிக்கும் போது இவ்வாறு அவன் கூறுவதால் அல்லாஹ் அவனுடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால் அவன் மண்ணறையிலும், மறுமையிலும் தண்டிக்கப்படுகிறான்.*

_*وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ*_ _*آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ*_

_*🍃இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்.*_

_*இப்போதுதானா❓ (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.*_

*📖திருக்குர்ஆன்  10:91📖*

_குற்றம் புரிபவர்கள் மரணிப்பதற்க்கு முன்பே பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்._

_*أَنَّ أَبَا مَالِكٍ  الأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"وَقَالَ ‏"‏ النَّائِحَةُ إِذَا لَمْ  تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا  سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ ‏"‏*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.*_

*🎙அறிவிப்பவர்:அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)* 

*📚 நூல்: முஸ்லிம்-1700 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நபிகளார் தேடிய 🤲* ⤵ *🤲பாதுகாப்பு - 7

,•┈┈• ❀❣🍃🌹🍃❣❀ •┈┈•

       *🤲 நபிகளார் தேடிய 🤲*
                           ⤵
                *🤲பாதுகாப்பு🤲*

         *✍🏻...தொடர் : [ 07 ]*

*☄கெட்ட கனவு கண்டால்☄*

حَدَّثَنَا  عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، -  يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ   يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ  الرَّحْمَنِ، _*يَقُولُ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، يَقُولُ سَمِعْتُ   رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ الرُّؤْيَا مِنَ اللَّهِ  وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى  أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ عَنْ يَسَارِهِ ثَلاَثَ  مَرَّاتٍ وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَنْ  تَضُرَّهُ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.*_

*📚 நூல் : (முஸ்லிம் 4552) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Sunday, February 16, 2020

ஜின்களும் - 66

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣6️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 03 }☄️*

*☄️தீய எண்ணங்களைத்*
                *தோற்றுவிப்பான்*

*وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا*

_*🍃“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.*_

*📖 அல்குர்ஆன் (4 : 119) 📖*

*يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا*

_*🍃அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.*_

*📖 அல்குர்ஆன் (4 : 120) 📖*

_*🍃அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.*_

*📖 அல்குர்ஆன் (114 : 4) 📖*

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، *قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ ـ رضى الله عنهما ـ أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ، فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهَا يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ‏"‏‏.‏ فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ‏.‏ وَكَبُرَ عَلَيْهِمَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا ‏"‏‏.‏"*

_*🍃ஸஃபிய்யா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் “ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.*_

   *📚 நூல் : புகாரி (2035) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Saturday, February 15, 2020

ஜின்களும் - 65

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣5️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 02 }☄️*

*☄️தீய காரியங்களை*
             *செய்யுமாறு ஏவுவான்*

*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான்.*_

*📖 அல்குர்ஆன் (24 : 21) 📖*

*الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ ۖ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ*

_*🍃ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.*_

*📖 அல்குர்ஆன் (2 : 268) 📖*

*يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ إِنَّمَا يَأْمُرُكُم بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ*

_*🍃மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.*_

*📖அல்குர்ஆன் (2 : 168.169)📖*

*إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ*

_*🍃மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ள மாட்டீர்களா❓*_

*📖 அல்குர்ஆன் (5 : 91) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Friday, February 14, 2020

ஜின்களும் - 64

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣4️⃣*

*☄️ஷைத்தானின்*
                 *சூழ்ச்சிகள் { 01 }☄️*

*☄️ தீயவற்றை*
         *அலங்கரித்துக்காட்டுவான் ☄️*

*فَلَوْلَا إِذْ جَاءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا وَلَٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ*

_*🍃அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா❓ மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.*_

*📖 அல்குர்ஆன் (6 : 43) 📖*

*تَاللَّهِ لَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ الْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ*

_*🍃அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.*_

*📖 அல்குர்ஆன் (16 : 63) 📖*

*وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ*

_*🍃அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் அந்தப் பறவை கூறிற்று.)*_

*📖 அல்குர்ஆன் (27 : 24) 📖*

*وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ ۖ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ*

_*🍃இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!*_

*📖 அல்குர்ஆன் (6 : 137) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Thursday, February 13, 2020

மண்ணறை - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 05 ]*

*☄உயிர்களைக்*
           *கைப்பற்றும்*
                   *வானவர்கள்*

*🏮🍂முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட "இஸ்ராயீல்" என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர்தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர் என்று பரவலாக நம்புகின்றனர்.*

🏮🍂 ஆனால் *"இஸ்ராயீல்"* என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை. *இதற்கு சான்றும் இல்லை. ஒரே ஒரு வானவர் தான் அத்தனை பேருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்ககும் எந்த சானறும் இல்லை.*

*திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உயிரைக் கைப்பற்றுவதற்க்கு வானவர்கள் இருப்பதாக பின் வரும் வசனம் கூறுகிறது.*

_*قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ*_

_*🍃 "உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!*_

*📖திருக்குர்ஆன் 32:11📖*

_*إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ قَالُوا فِيمَ كُنتُمْ ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَسَاءَتْ مَصِيرًا*_

_*🍃 தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்' என்று இவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா?' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.*_

திருக்குர்ஆன் 4:97

_*الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوءٍ ۚ بَلَىٰ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ*_

_*🍃 தமக்குத் தாமே தீங்கிழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும்போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன்.*_

*📖 திருக்குர்ஆன் 16:28 📖*

_*فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ*_

_*🍃 அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்❓*_

*📖 திருக்குர்ஆன் 47:27 📖*

*🏮🍂 நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று வானவர்கள் குறித்த பின்வரும் வசனங்களிலும் காணலாம்.*

_*فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ ۚ أُولَٰئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُم مِّنَ الْكِتَابِ ۖ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ ۖ قَالُوا ضَلُّوا عَنَّا وَشَهِدُوا عَلَىٰ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ*_

_*🍃அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்❓ விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள் அவர்களிடம் வரும்போது *"அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள். "எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். "நாங்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக இருந்தோம்'' எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.*_

*📖 திருக்குர்ஆன் 7:37 📖*

_*وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ*_

_*🍃அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.*_

திருக்குர்ஆன் 6:61

*🏮🍂 உயிர்களைக் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வனஙகள் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.*

🏮🍂 ஒரு வானவர் உலகத்திலுள்ள அத்தனை பேருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஜின்களும் - 63

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣3️⃣*

*☄️ஷைத்தான்*
                *உறுமாறுவானா { 02 }*

*☄️நாய் வடிவில் வருவானா❓*

_*🍃அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், “உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.*_

_*உடனே நான், “அபூதர் (ரலிலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன❓” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள் என்றார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
          *அப்துல்லாஹ் பின்*
                  *அஸ்ஸாமித் (ரஹ்)*

*📚 நூல் : முஸ்லிம் (882) 📚*

*🏮🍂ஷைத்தான் நாய் வடிவில் உருமாறுவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸையே ஆதாரம் காட்டுகிறார்கள். கருப்பு நாயை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து ஷைத்தான் நாய் வடிவில் வர முடியும் என்று வாதிடுகிறார்கள்.*

*🏮🍂ஆனால் உண்மையில் ஷைத்தான் நாயாக உருமாறினான் என்பதற்கோ அல்லது சாதாரண நாயாக இருந்த பிராணியின் உடம்பில் ஷைத்தான் நுழைந்து கொண்டான் என்று கூறுவதற்கோ இந்த செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.*

*🏮🍂தீய குணமுள்ளவைகளுக்கும் கெடுதல் தருபவைகளுக்கும் ஷைத்தான் என்று கூறப்படும் என்பதற்கு முன்பு ஆதாரங்களை கூறியிருக்கிறோம். இந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸிலும் கறுப்பு நாயை ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.* அதாவது மிகவும் கெடுதல் தரக்கூடிய பிராணி என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

*🏮🍂நாய் பாம்பு போன்ற பிராணிகளை நபியவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டதைப் போல் ஒட்டகங்களையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.*

_*🍃ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆட்டுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
          *பராஉ பின் ஆஸிப் (ரலி)*

*📚நூல் : அபூதாவுத் (156)📚*

*🏮🍂ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இடஞ்சல்களை தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் தான் நாய் பாம்பு போன்ற பிராணிகளையும் நபியவர்கள் ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள்.*

*🏮🍂பொதுவாக நாய்கள் அனைத்துமே கெடுதல் தரக்கூடியவை தான். வேட்டையாடுவதற்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் இப்பிராணி உதவுவதால் இந்த வகை நன்மைக்காக மட்டும் நாய்களை பயன்படுத்திக்கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.*

*🏮🍂ஆனால் கறுப்பு நிற நாய்கள் பார்ப்பதற்கு கொடூரமாகவும் கெடுதல் தரக்கூடியதாகவும் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நாயை மட்டும் கொல்லுமாறு கூறினார்கள்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து, கிராமத்திலிலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், “கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
           *ஜாபிர் பின்*
                 *அப்தில்லாஹ் (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (3199) 📚*

*🏮🍂கறுப்பு நிற நாய் வெறிபிடித்த நாயாக இருப்பதால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *இப்னு உமர் (ரலி)*

     *📚 நூல் : புகாரி (1829) 📚*

*🏮🍂எனவே கெடுதல் தரக்கூடிய வஸ்த்துக்களுக்கு ஷைத்தான் என்று கூறும் வார்த்தைப் பிரயோகம் ஹதீஸ்களில் காணப்படுவதால் இது போன்ற ஹதீஸ்களை கொண்டு வந்து ஷைத்தான் உருமாறுவான் என்று வாதிடுவதற்கு ஆதாரமாக காட்டடக்கூடாது.*

*🏮🍂ஷைத்தான் திடீரென நாயாக மாறினான் அல்லது நாயுடைய உடலில் ஷைத்தான் புகுந்து கொண்டதால் அந்த நாய் ஷைத்தானக மாறியது என்று தெளிவாக ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது சரியாகும்.*

*🏮🍂உருமாறிய செய்தியோ உடலில் புகுந்த செய்தியோ ஹதீஸில் இல்லை என்கிற போது இவ்வாறு வாதிடுவது தவறாகும். மாற்று மதத்தினர் தங்கள் கடவுள்களுக்கு இவ்வாறு உருமாறும் தன்மை இருப்பதாக நினைக்கிறார்கள்.* எனவ ஷைத்தான் இவ்வாறு மாறுவான் என்று நம்புவது ஒரு வகையில் மாற்று மதத்தினர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கிறது.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Wednesday, February 12, 2020

ஜின்களும் - 62

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣2️⃣*

*☄️ஷைத்தான்*
              *உருமாறுவானா❓*

*🏮🍂ஷைத்தான் தான் விரும்பும் போது விரும்பிய வடிவில் உருவமாறும் ஆற்றல் கொண்டவன் என்று பரவலாக பலரால் நம்பப்படுகிறது. சில ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதின் விளைவாக இப்படியொரு தவறான கருத்து பரவியுள்ளது.*

*🏮🍂ஆனால் உண்மையில் இவ்வாரு நம்புவதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. விரும்பிய வடிவில் உருமாறும் ஆற்றல் ஷைத்தானிற்கு வழங்கப்படவுமில்லை.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️மனிதனாக*
            *உருமாறுவானா❓*

*🏮🍂ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.*

_*🍃அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள். “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.*_

_*நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.*_

_*அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்!’என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*📚நூல் : புகாரி (2311)📚*

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் வந்த மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறி இருக்கிறார்கள். எனவே ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்றக் கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள்.*

*🏮🍂கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் போங்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையை ஆதாரங்களோடு விளங்கிக்கொண்டால் மேற்கண்ட ஹதீஸையும் இது போன்று அமைந்த இன்ன பிற ஹதீஸ்களையும் சரியான பொருளில் விளங்கிக்கொள்ள முடியும்.*

*🏮🍂கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்*

_*🍃நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.*_

*📖 அல்குர்ஆன் (2 : 14) 📖*

*🏮🍂கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *அபூஹுரைரா (ரலி)*

      *📚 நூல் : புகாரி (3275) 📚*

_*🍃(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
           *அபூசயீத் அல்குத்ரீ (ரலி)*

*📚நூல் : முஸ்லிம் (4548)📚*

*🏮🍂தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.*

*🏮🍂நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும்.* இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.* திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.

*🏮🍂ஸகாத் பொருளை திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.* ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

*🏮🍂மனிதர்களின் கண்களுக்குப்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.* வந்தது ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.

*🏮🍂ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனை தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.*

*🏮🍂மேலும் மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.*

*🏮🍂திருடக்கூடியவன் யாரும் கண்டிராத வகையில் திருடிச் செல்லத் தான் விரும்புவான். ஆனால் அவனால் அவ்வாரு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் சாதாரண மனிதன் தான் என்பதை சந்தேகமற அறியலாம்.*

*🏮🍂ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.*

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களையே திருடுவதற்காக வந்துள்ளான். வந்தவன் சாதாரண மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.*

*🏮🍂எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஷைத்தான் மனித வடிவத்தில் வருவான் என்று வாதிடுவது தவறாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Tuesday, February 11, 2020

ஜின்களும் - 61

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣1️⃣*

*☄️ஜின்களும்*
          *ஷைத்தான்களும்*
                         *ஒன்றா❓[ 02 ]*

*🏮🍂ஜின் இனத்தை கூறும் போது ஷைத்தான்கள் என்று ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. இதை பின்வரும் ஹதீஸ்களில் பார்க்கலாம்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலளித்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்கüலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர்.*_

_*அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்தபோது, “உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…” என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருüனான்.*_

_*ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.*_

*🎙️அறிவிப்பவர் :*
            *இப்னு அப்பாஸ் (ரலி)*

      *📚 நூல் : புகாரி (773) 📚*

*🏮🍂வானுலகத்தில் வானவர்கள் பேசிக்கொள்ளும் செய்தியை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் சென்றன என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது.* இந்த ஜின்களில் குர்ஆனை செவிமடுத்து அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஜின்களும் உண்டு. *மேற்கண்ட ஹதீஸீல் ஜின்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.*

*🏮🍂ஜின்கள் ஷைத்தானுடைய வழிதோன்றல்கள் என்பதால் தான் ஜின்களை பொதுவாக ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்பதை அறியலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 04 ]*

*☄ மண்ணறையின் நிலையே*
            *மறுமையின் நிலை*

*🏮🍂 மண்ணறை வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்து விடும். ஆனால் மண்ணறை வாழ்க்கை சோகத்திற்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கை அதைவிட வேதணைக்குரியதாக அமைந்து விடும்.*
எனவே சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

_١٣٧- *عَنْ هَانِيءٍؒ مَوْلَي عُثْمَانَؓ أَنَّهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَي قَبْرٍ بَكَي حَتَّي يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ اْلآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ: وَقَالَ رَسُولُ اللّٰهِؐ : مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ.*_

_*🍃உஸ்மான் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு கப்ருக்கருகில் நின்றால், தாடி நனையும் வரை அழுவார்கள். “சொர்க்க, நரகத்தைப் பற்றிக் கூறும் பொழுது கூட இவ்வளவு அழுவதில்லையே, கப்ரைக் கண்டு இந்த அளவு அழுகிறீர்களே ஏன❓’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. “மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் கப்ரு, அதில் ஈடேற்றம் பெற்றவருக்கு அடுத்தடுத்த தங்குமிடங்கள் அதைவிட மிக எளிதாகிவிடும், அந்தத் தங்குமிடத்தில் ஈடேற்றம் பெறாதவருக்கு பிறகு வரக்கூடிய தங்குமிடங்கள் அதைவிட மிகக் கடினமானதாக ஆகிவிடும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். மேலும், “கப்ரில் நிகழும் காட்சியைவிட பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்" என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்- ஹானிஃ (ரஹ்)*

*📕நூல்-திர்மிதி-(2230)📕*

எனவே உடலில் உயிர் இருக்கும் போதே நண்மைகளை செய்துக் கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும் கவலைப்பட்டாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை.

1289 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﻋﻤﺮﺓ ﺑﻨﺖ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، ﺃﻧﻬﺎ ﺃﺧﺒﺮﺗﻪ ﺃﻧﻬﺎ: _*ﺳﻤﻌﺖ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻟﺖ: ﺇﻧﻤﺎ ﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻳﻬﻮﺩﻳﺔ ﻳﺒﻜﻲ ﻋﻠﻴﻬﺎ ﺃﻫﻠﻬﺎ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻬﻢ ﻟﻴﺒﻜﻮﻥ ﻋﻠﻴﻬﺎ ﻭﺇﻧﻬﺎ ﻟﺘﻌﺬﺏ ﻓﻲ ﻗﺒﺮﻫﺎ»*_

_*🍃இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்“ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி(ஸல்) கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்-ஆயிஷா (ரலி)*

*📕நூல்-புகாரி-1289📕*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஜின்களும் - 60

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣0️⃣*

*☄️ஜின்களும்*
          *ஷைத்தான்களும்*
                    *ஒன்றா❓[ 01 ]*

*🏮🍂ஒட்டு மொத்த ஜின் இனத்தையும் ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கத்தை ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது.* குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பொதுவாக ஜின்களை குறிப்பதற்கு ஷைத்தான்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

*وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ*

_*🍃ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக் காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.*_

*📖அல்குர்ஆன் (27 : 17)📖*

*وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ*

_*🍃ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.*_

*📖அல்குர்ஆன் (34 : 12)📖*

*🏮🍂மேற்கண்ட இரு வசனங்களிலும் சுலைமான் நபிக்கு ஜின்களை வசப்படுத்திக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதேக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் வேற இடங்களில் கூறும் போது ஜின்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறுகிறான்.* இதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

_*🍃அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.*_

*📖 அல்குர்ஆன் (38 : 36) 📖*

*وَمِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ*

_*🍃ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.*_

*📖அல்குர்ஆன் (21 : 82)📖*

*🏮🍂இவ்விருவசனங்களும் ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறது. ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடலாம் என்பதை தெளிவாக இதன் மூலம் அறியமுடிகிறது.*

*🏮🍂மனிதர்களின் ஆதிப்பிதாவாக ஆதம் (அலை) அவர்கள் இருப்பது போல் ஜின்களின் ஆதிப்பிதா ஷைத்தானாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாகும்.* ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாக இருப்பதால் தான் அல்லாஹ் ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற பெயரை சூட்டுகிறான்.

*🏮🍂ஜின் இனத்தை கூறும் போது ஷைத்தான்கள் என்று ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. அதை நாளைய தொடரில் காணலாம்...*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 03 ]*

*☄ மறுமையை நினைவூட்டும்*
                   *மண்ணறை*

*🏮🍂 மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!*_

*🎙அறிவிப்பவர்-அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல்-முஸ்லிம்-(1777) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻣﻨﻴﻊ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻫﺸﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﺸﻴﺒﺎﻧﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﻟﺸﻌﺒﻲ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻣﻦ ﺭﺃﻯ _*اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، «ﻭﺭﺃﻯ ﻗﺒﺮا ﻣﻨﺘﺒﺬا ﻓﺼﻒ ﺃﺻﺤﺎﺑﻪ ﺧﻠﻔﻪ، ﻓﺼﻠﻰ ﻋﻠﻴﻪ»*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.*_

*🎙அறிவிப்பவர்-புரைதா (ரலி)*

*📚 நூல்-திர்மிதி (974)*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻭﻫﺐ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ: ﺃﻧﻪ _*ﺳﻤﻊ ﺃﺳﻤﺎء ﺑﻨﺖ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺗﻘﻮﻝ: «ﻗﺎﻡ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻄﻴﺒﺎ ﻓﺬﻛﺮ ﻓﺘﻨﺔ اﻟﻘﺒﺮ اﻟﺘﻲ ﻳﻔﺘﺘﻦ ﻓﻴﻬﺎ اﻟﻤﺮء، ﻓﻠﻤﺎ ﺫﻛﺮ ﺫﻟﻚ ﺿﺞ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺿﺠﺔ»*_

_*🍃ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்-அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)*

*📚 நூல்-புகாரி (1373) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பிரதி பலன் கிடைக்குமிடம்☄*

🏮🍂 உலகில் நாம் செய்கின்ற நன்மைகளுக்கு முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டனையும் மறுமையில் தான் கிடைக்கவிருக்கிறது. *மண்ணறை, மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.*

*இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

ﺣﺪﺛﻨﺎ ﺁﺩﻡ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، _*ﻋ ﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺴﺒﻮا اﻷﻣﻮاﺕ، ﻓﺈﻧﻬﻢ ﻗﺪ ﺃﻓﻀﻮا ﺇﻟﻰ ﻣﺎ ﻗﺪﻣﻮا»*_

_*🍃இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.“*_

*🎙 அறிவிப்பவர்-ஆயிஷா(ரலி)*

*📚 நூல்-புகாரி- (1393)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻