பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து - 92

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 92 👈👈👈* 


*📚📚📚 தலைப்பு  7 மாற்றப்பட்ட நிலைப்பாடு 📚📚📚*  


 *11. ☪️☪️☪️நபி☪️☪️ அவர்கள்📚📚 இரண்டை 📚📚விட்டுச்🕋🕋 செல்கின்றனர்🕋🕋 ஹதீஸ்📚📚📚.* 


*12. 🕋🕋🕋குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றது🕋🕋🕋*



 *13. 🌐🌐🌐”சீனா சென்றேனும் சீர் கல்வியைத் தேடு”🌐🌐🌐* 


 *14. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் தவறிழைப்பவர்களே!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


*11. ☪️நபி அவர்கள் இரண்டை  விட்டுச் செல்கின்றனர் ஹதீஸ்📚.* 


 *✍️✍️✍️இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்✍️✍️✍️.* 


 *📚அறிவிப்பு : 1📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *1395* و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ


 *✍️✍️✍️நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *நூல் : முஅத்தா (1395)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *📚அறிவிப்பு : 2📚* 


 *✍️✍️✍️இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது✍️✍️✍️.* 


جامع بيان العلم وفضله –
 مؤسسة الريان – *(2 / 55(724-* حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: “تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم”.



 *அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.✍️✍️✍️* 


 *12. 🕋குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றது🕋* 


 *298* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ரலி),* 
 *நூல் : திர்மிதீ (298)* 


 *✍️✍️✍️இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் : 662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423), முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373) ஷ‚அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.* 
 *இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1, பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.* *எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.✍️✍️✍️* 


 *13. 🌐”சீனா சென்றேனும் சீர் கல்வியைத் தேடு”🌐* 


، ينابيشلا ةبقع نب دمحم نب يلع نسحلا وبأ انربخأ ، ظفاحلا للها دبع وبأ انربخأ  *161* يناهبصلأا دمحم وبأ انربخأو ح ، نافع نب يلع نب دمحم انثدح دبع يبأ ةياور يفو லிيركسعلا رماع نب رفعج اوُبُلْطا ” :َمَّلَسَو ِهْيَلَع ُهَّللا ىَّلَص ِللها ُلوُسَر َلاَق :َلاَق ،ٍكِلاَم ِنْب ِسَنَأ ْنَع ةكتاع وبأ انثدح லிُهُنْت􀆬َم ٌثيِدَح اَذَه ” ” ٍمِلْسُم ِّلُك ىَلَع ٌةَضيِرَف ِمْلِعْلا َبَلَط َّنِإَف ،ِنْيِّصلاِب ْوَلَو َمْلِعْلا *174/ 4* يقهيبلل ناميلإا بعش லி،ٍهُجْوَأ ْنِم َيِوُر ْدَقَو ” ٌفْيِعَض ُهُداَنْسِإَو


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி),* 

 *நூல்கள் : பைஹகீலிஷுஅபுல் ஈமான், பாகம் :4, பக்கம் :174,* 

 *அல்லுஅஃபாவுல் கபீர்லி உகைலீ, பாகம் :4, பக்கம் : 162,* 

 *ஜாமிவு பயானில் இல்மி வஃபழ்ஹிலிஇப்னு அப்துல்பர், பாகம் :1, பக்கம் :14,15,21,* 

 *அல்காமில் ஃபீ லுஅஃபாவுல் ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :1, பக்கம் 177,* 

 *முஸ்னதுல் பஸ்ஸார், பாகம் : 1, பக்கம் : 98* 


 *✍️✍️✍️இச்செய்தியைப் பதிவு செய்த இமாம்கள் இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அதன் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்* 
 *இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும் என்றும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளர்கள். இந்தச் செய்தியில் சீனா என்ற வாசகத்தை அபூ ஆத்திகா என்பவர் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இவர் ஹதீஸ்கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) ஆவார்.* 
 *”கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ள அறிவிப்பும் பலவீனமானதே என்று இமாம் உகைலீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.*  *இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் என்று இப்னு அதீ அவர்கள் அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.* *அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை. இந்த செய்தி அடிப்படையற்ற செய்தியாகும் என்று இமாம் பஸ்ஸார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *14.🙋‍♂️ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் தவறிழைப்பவர்களே!🙋‍♀️* 


 *✍️✍️✍️ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் தவறிழைப்பவர்களே! தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ (2423), இப்னுமாஜா (4241), அஹ்மத்(12576), தாரமீ (2611), முஸ்னதுல் பஸ்ஸார் (7236), முஸ்னத் அபீ யஃலா(2922), ஹாகிம் (7617)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இச்செய்தியில் அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.* *எனினும் இதே கருத்தில் அஹ்மதில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.* 
 *ஆதமுடைய மக்கள் ஒவ்வெருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கிறார்கள். பின்னர் என்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறார்கள். நான் அவர்களை மன்னிக்கிறேன்… என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர்:அபூதர் (ரலி), நூல்: அஹ்மத் (20451)* 


 *15. 🟣🟣🟣🟣நாளின் துவக்கம் இரவுவா❓ பகலா❓🟣🟣🟣* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 93* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment