பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து ‎- ‏91

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 91 👈👈👈* 


*📚📚📚 தலைப்பு  7 மாற்றப்பட்ட நிலைப்பாடு 📚📚📚* 


 *4. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பாதிரியார்களை🙋‍♀️🙋‍♀️ கடவுளாக🙋‍♀️🙋‍♀️ எடுத்துக்கொள்ளுதல்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *5. 🟣கோபம்🧶 வந்தால்🛑 அமருங்கள்🟣* 


 *6. 🕋பாங்கு🕋 இகாமத்☪️ இடையே☪️ துஆ🕋* 


 *7. 🔵மூன்று🔵 விசயங்கள்🌐 தாமதப்படுத்தக்கூடாது🥎* 


 *8. 🙋‍♂️🙋‍♂️பொறாமை🙋‍♀️🙋‍♀️ நன்மைகளை♥️ அழித்துவிடும்♥️♥️* 


 *9. 📚📚📚திருமணத்தை♥️♥️ பிரகடனப்படுத்துங்கள்📚📚📚* 


 *10. 🕋🕋🕋ஜும்மாவில்🕋🕋🕋 ஒரு☪️ நேரம்☪️ இருக்கிறது🕋🕋🕋* 



*4. 🙋‍♂️பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்🙋‍♂️* 


 *3020* حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي


 *✍️✍️✍️என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை. மாறாக அவர்கள் ஏதாவது ஒன்றை ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹராமாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் :திர்மிதீ (3020)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இச்செய்தியில் குதைஃபின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *5. 🟣கோபம்🧶 வந்தால்🛑 அமருங்கள்🟣* 


 *4151* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ عَنْ دَاوُدَ عَنْ بَكْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا ذَرٍّ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ الْحَدِيثَيْنِ رواه ابوداود


 *✍️✍️✍️ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி, இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : அபூதாவூத் (4151)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இச்செய்தியை இருவழிகளில் அபூதாவூத் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஒரு வழியில் அறிவிப்பாளர் தொடர் இணைந்ததாகவும் ஒருவழியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாகவும் உள்ளது. இதில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாக வரும் செய்தியே சரியானதாகும் என்று அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் தாவூத் பின் அபீ ஹின்த் என்ற அறிவிப்பாளர்களிடமிருந்து அபூமுஆவியா என்பவர் தாவூத் பின் அபீஹின்த்இ அபூஹர்ப் வழியாக அறிவிக்கிறார். இது முன்கதிவு (தொடர்பு அறுந்த செய்தியாக) இடம் பெற்றுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதைப் போன்று காலித் என்பவர் தாவூத் பின் அபீ ஹின்த்இ பக்ர் பின் அப்துல்லாஹ் என்பவர் வழியாக முர்ஸலாக (நபித்தோழர் இல்லாமல் தொடர்பு அறுந்து) இடம்பெற்றுள்ளது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதைப் போன்று அப்துர்ரஹீம் பின் சுலைமான் என்பவர் தாவூத் பின் அபீஹின்த், பக்ர் பின் அப்துல்லாஹ் வழியாக முன்கதிவு (தொடர்பு அறுந்ததாக) அறிவித்துள்ளார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தாவூத் பின் அபீ ஹின்த் என்பவரிடமிருந்து அறிவிக்கும் மூன்று அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் எதற்கும் முன்னுரிமை வழங்க முடியாத இள்திராப் (குளறுபடி நிறைந்த) வகையைச் சார்ந்ததாக அமைகிறது✍️✍️✍️.* 


 *4152* حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ قَالَ دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدٍ السَّعْدِيِّ فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَطِيَّةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْغَضَبَ مِنْ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنْ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ رواه ابوداود


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அதிய்யா (ரலி) நூல் :அபூதாவூத் (4152)* 


 *✍️✍️✍️இச்செய்தியில் இடம்பெறும் உர்வா பின் முஹம்மத் அஸ்ஸஅதீ என்பவர் யாரென அறியப்படாதவர்.✍️✍️✍️* 


 *6. 🕋பாங்கு🕋 இகாமத்☪️ இடையே☪️ துஆ🕋* 


 *437* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)* 

 *நூல்கள் : அபூதாவூத் (437), திர்மிதீ (196), அஹ்மத் (11755), முஸ்னத் அபீயஃலா (4147), பைஹகீ (2013), தப்ரானீ-அவ்ஸத் (4053), அத்துஆ-தப்ரானீ (483), அத்துஆ -பைஹகீ (60), முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (1909)* 


 *✍️✍️✍️இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்✍️✍️✍️.* 


 *7. 🔵மூன்று🔵 விசயங்கள்🌐 தாமதப்படுத்தக்கூடாது🥎* 


 *156* حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ رواه الترمذي


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அலீயே! மூன்று விசஷயங்களை தாமதப்படுத்தாதே! தொழுகை அதன் நேரம் வரும் போது, ஜனாஸா தாயாராகிவிட்டதும், துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான மணமகனை நீர் கண்டபோது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்கள் : திர்மிதீ (156), ஹாகிம் (2686)* 


 *✍️✍️✍️இந்த செய்தியில் முஹம்மத் பின் உமர் பின் அலீ என்பவரும் ஸயீத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.✍️✍️✍️* 


 *8. 🙋‍♂️பொறாமை நன்மைகளை அழித்துவிடும்♥️* 


 *4200* حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَر قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ عَنْ عِيسَى بْنِ أَبِي عِيسَى الْحَنَّاطِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ رواه ابن ماجة


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️விறகை நெருப்பு திண்டுவிடுவதைப் போல் பொறாமை நன்மைகளை திண்டுவிடும். நெருப்பை தண்ணீர் அணைத்தவிடுவதைப் போல் தர்மம் பாவங்களை அழித்துவிடும். தொழுகை முஃமின்களின் ஒளியாகும். நோன்பு நரகத்தை காக்கும் கேடயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)* 

 *நூல் : இப்னுமாஜா (4200), அபூதாவூத் (4257), பஸ்ஸார் (6212, 8412), முஸ்னத் அபீ யஃலா (3656), ஹாகிம் (1430), முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (26053) இப்னுமாஜா, பஸ்ஸார் ஆகிய நூல்களில் ஈஸா பின் அபீ ஈஸா அல்ஹன்னாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் ஆவார்* .


 *✍️✍️✍️அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களில் இப்ராஹீம் பின் அபீ உஸைதின் பாட்டனார் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.* 
 *இப்னு அபீஷைபா என்ற நூலில் யஸீத் அர்ராஸியீ என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்✍️✍️✍️.* 

 *9. 📚திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்📚* 


 *1009* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الَّذِي يَرْوِي عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ التَّفْسِيرَ هُوَ ثِقَةٌ رواه الترمذي


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திருணமத்தை பகிரங்கப்படுத்துங்கள், அதை பள்ளிவாசலில் வைத்து நடத்துங்கள், அதில் தஃப் (கொட்டு) அடியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 

 *நூல்கள் : திர்மிதீ (1009), இப்னுமாஜா (1885), இப்னுஹிப்பான் (4066), முஸ்னத் பஸ்ஸார் (2214), பைஹகீ (15082, 15093), ஹாகிம் (2718), தப்ரானீ-கபீர், பாகம் :18, பக்கம் :362, தப்ரானீ-அவ்ஸத். பாகம் :5, பக்கம் : 222, ஸுனனுஸ் ஸுக்ரா- பைஹகீ- (2014) திர்மிதீ, பைஹகீ (15093) ஆகிய நூல்களில் ஈஸா பின் மைமூன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.* 


 *✍️✍️✍️இப்னுஹிப்பான், பஸ்ஸார், பைஹகீ(15082), ஹாகிம், தப்ரானி-கபீர், அவ்ஸத், இமாம் பைஹகீயின் ஸுனனுஸ் ஸுக்ரா ஆகிய நூல்களில் அப்துல்லாஹ் பின் அஸ்வத் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.* 
 *இப்னுமாஜா என்ற நூலில் காலித் பின் இல்யாஸ் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்✍️✍️✍️.* 


 *10. 🕋🕋🕋ஜும்மாவில்🕋🕋🕋 ஒரு☪️ நேரம்☪️ இருக்கிறது🕋🕋🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபியவர்கள் கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும், அந்த நேரம் எது என்று தெளிவு படுத்தப்படவில்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்தோம். ஆனால் அநத நேரம் அத்தஹியாத்து நேரம் என்று தற்போது ஹதீஸ்களின் மூலம் தெரியவருகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *விளக்கம்* 

 *1409* و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم


 *✍️✍️✍️அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்✍️✍️✍️.* 


 *முஸ்லிம் (1546)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது.* 
 **இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறது? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு* *இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும். இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது; பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது. அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்-லிலிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது✍️✍️✍️.* 


 *நூல் : முஸ்லிம் (1543)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன.* 

 *ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.* 
 *புகாரி 935, 5295, 6400*
 *ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا رواه البخاري


 *✍️✍️✍️அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்üக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், “ஜுமுஆ நாüல் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்-லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.✍️✍️✍️* 


 *நூல் : புகாரி (935)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.* 
 *இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்* 
 *சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.* 
 *இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.✍️✍️✍️* 


صحيح ابن خزيمة – *(3 / 120)* *1739* – أنا أبو طاهر نا أبو بكر نا أحمد بن عبد الرحمن بن وهب نا عمي أخبرني مخرمة عن أبيه عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه و سلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت نعم سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம் சொல்லி இருக்கிறோம். அந்தக் கருத்தில் இருந்து நாம் விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்.✍️✍️✍️* 


 *11. ☪️☪️☪️நபி☪️☪️ அவர்கள்📚📚 இரண்டை 📚📚விட்டுச்🕋🕋 செல்கின்றனர்🕋🕋 ஹதீஸ்📚📚📚.* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 92* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment