பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து - 80

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 80 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚* 


 *11.🧶🧶🧶 முதுகைத்🔵🔵 தொட்டு 🟠ஜமாஅத்தில்🟠 சேரலாமா❓🔴🔴🔴* 


 *12. 🟣மாவுபிசைவது🟣 போல் ⚫கைகளை🟡 ஊன்றி🔴 எழுவது🟠 நபிவழியா❓🛑* 


 *11.🧶 முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா❓🔴* 


 *✍️✍️✍️ஒருவர் தனியாகத் தொழும் போது அவருடன் இன்னொருவர் சேரலாமா? என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.✍️✍️✍️* 


صحيح البخاري

 *117* – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الحَكَمُ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: «نَامَ الغُلَيِّمُ» أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என் சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தங்கியிருந்தார்கள். அவர்கள் இஷா தொழுவித்து விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து சின்னப் பையன் தூங்கி விட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டிருக்கும்போதே) என்னை இழுத்து தம் வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 

 *நூல் : புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316* 


 *🕋🕋🕋நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தொழும் எண்ணத்துடன் தான் நின்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) தம்மோடு சேர்ந்து தொழுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி இருந்தும் இப்னு அப்பாஸ் (ரலி) தன்னோடு சேர்ந்து தொழுவதை அறிந்தவுடன் அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை இதில் இருந்து அறியலாம். இமாமாக இருப்பவர் இமாம் என்ற எண்ணத்துடன் தொழுகையைத் துவக்கி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனியாகத் தொழுபவர் இன்னொருவர் வந்து சேரும் போது இமாமாக ஆகலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.🕋🕋🕋* 


 *✍️✍️✍️ஒருவருடன் இன்னொருவர் சேர்ந்து தொழும் போது இமாமுக்கு வலது புறம் நிற்க வேண்டும். இந்த விதிக்கு முரணாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இடது புறம் நிற்கிறார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பிடித்து இழுத்து வலது புறம் திருப்பினார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து கிடைக்கும் இன்னொரு விஷயம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதாவது தொழுகை முறையில் ஒருவர் ஏதாவது முறைகேடு செய்தால் தொழுது கொண்டிருக்கும் இமாம் அதைச் சரி செய்யலாம்; அதனால் தொழுகைக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது இதில் இருந்து தெரிகிறது. ஒருவர் மட்டும் இமாமுடன் சேர்ந்து தொழும் போது இமாமுடன் ஒட்டி வலது புறம் நிற்க வேண்டும். மேலும் ஒருவர் வந்து விட்டால் அவர்கள் இருவரும் இமாமுக்குப் பின்னால் செல்ல வேண்டும். பின்னால் செல்ல வசதி இல்லாவிட்டால் இமாம் முன்னால் செல்ல வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

صحيح البخاري

 *380* – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ


 *✍️✍️✍️என் பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில்  சிறிதைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போயிருந்த எங்களின் பாயை எடுத்து அதில் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்✍️✍️✍️* .

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)* 

 *நூல் : புகாரி 380, 727, 860, 874, 727, 860, 874* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒருவர் தனியாகத் தொழும் போது இன்னொருவர் சேர்வதாக இருந்தால் அவர் முதுகில் குத்தக் கூடாது. மாறாக அவருடன் ஒட்டி அவருக்கு வலது புறம் நிற்க வேண்டும். நம்முடன் ஒருவர் சேர்ந்து தொழவுள்ளார் என்று முதலாமவர் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இவ்விருவரும் தொழுது கொண்டிருக்கும் போது மற்றொருவர் வந்தால் இப்போது அதற்கேற்ப வரிசையை அமைக்க வேண்டும். அதாவது இமாமுடன் ஒட்டி நிற்பவரும், இமாமும் பிரிய வேண்டும். ஒட்டி நின்றவர், மூன்றாவதாக வந்தவருடன் சேர வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️பின்னால் இடம் இருந்தால் மூன்றாவது வருபவர் இமாமைத் தொடாமல் அவருடன் ஒட்டி நிற்பவரைத் தொட வேண்டும். அவர் புரிந்து கொண்டு பின்னால் வந்து விடுவார். பின்னால் நகர இடமில்லை என்றால் இமாம் முன்னால் நகர வேண்டும். இது போன்ற நேரத்தில் இமாமைத் தொடலாம். அவர் புரிந்து கொண்டு முன்னால் சென்று விட வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்படி உணர்த்தாவிட்டால் மார்க்கம் சொல்கின்ற வகையில் வரிசை அமையாது. தொழுகையில் இருக்கும் போதே வரிசையைச் சரி செய்வதற்காக காதைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழுத்துள்ளதால் தொடுவது அதை விடக் குறைந்தது தான். தனியாகத் தொழுபவர் எப்போது இமாமாகி விடுகிறாரோ அவர் இமாமுக்கு உரிய கடமைகளைச் செய்தாக வேண்டும். பின்னால் உள்ளவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதுதலையும், தஸ்பீஹ் போன்றவற்றையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *12. 🟣மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா❓⚫* 


 *✍️✍️✍️இது குறித்து ஒரு ஹதீஸ் இருக்கிறது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல என்று கடந்த கால அறிஞர்கள் முடிவு செய்து இவ்வாறு செய்யக் கூடாது என்று உறுதி செய்தனர். ஆனால் சமகால அறிஞரான அல்பானி அவர்கள் இது பலவீனமான ஹதீஸ் அல்ல. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் என்று வாதிட்டதுடன் முந்தைய அறிஞர்கள் அனைவரும் பலவீனமான ஹதீஸ் என்று முடிவு செய்ததில் தவறு செய்து விட்டனர் என்று எழுதினார். இதன் பிறகு தான் இது சில அரபுகளிடமும், அரபு நாட்டில் பணியாற்றி விட்டு தாயகம் வருவோரிடமும், சில மதனிகளிடமும் நடைமுறைக்கு வந்தது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நாம் ஆய்வு செய்த போது முந்தைய அறிஞர்கள் சரியாகத் தான் ஆய்வு செய்துள்ளனர் என்பதையும், அல்பானி தான் தவறு செய்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *☪️☪️இது குறித்து அல்பானி கூறுவதை முதலில் பார்ப்போம்.☪️☪️* 


السلسلة الضعيفة – (ج *2* / ص *466* 

و قد جاء عنه مرفوعا إلى النبي صلى الله عليه وسلم . فأخرجه أبو إسحاق الحربي في غريب الحديث *( 5 / 98 / … )* عن الأزرق بن قيس : رأيت ابن عمر يعجن في الصلاة : يعتمد على يديه في الصلاة إذا قام ، فقلت له : ؟ فقال : رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله

. قلت : و إسناده حسن ، و هو هكذا : حدثنا عبيد الله ( الأصل : عبد الله و هو خطأ من الناسخ ) بن عمر حدثنا يونس بن بكير عن الهيثم عن عطية بن قيس عن الأزرق بن قيس به .

قلت : و ابنا قيس ثقتان من رجال الصحيح .

و الهيثم هو ابن عمران الدمشقي ، أورده ابن حبان في الثقات *( 2 / 296 )* و قال : يروي عن عطية بن قيس ، روى عنه الهيثم بن خارجة . و أورده ابن حاتم في الجرح و التعديل *( 4 / 2 / 82 – 83 )* و قال : روى عنه محمد بن وهب بن عطية ، و هشام بن عمار ، و سليمان بن شرحبيل . قلت : و لم يذكر فيه جرحا و لا تعديلا ، لكن رواية هؤلاء الثقات الثلاثة عنه و يضم إليهم رابع و هو الهيثم بن خارجة ، و خامس و هو يونس بن بكير ، مما يجعل النفس تطمئن لحديثه لأنه لو كان في شيء من الضعف لتبين في رواية أحد هؤلاء الثقات عنه ، و لعرفه أهل الحديث كابني حبان و أبي حاتم زد على ذلك أنه قد توبع على روايته هذه كما تقدم قريبا من حديث حماد بن سلمة نحوه . و الله أعلم . و أما يونس بن بكير و عبيد الله بن عمر ، فثقتان من رجال مسلم ، و الآخر روى له البخاري أيضا و هو عبيد الله بن عمر بن ميسرة القواريري ، و وقع في التهذيب ( ابن عمرو ) بزيادة الواو و هو خطأ مطبعي ، و قد ذكر الخطيب في الرواة عنه من ترجمته ( *10 / 320* ) إبراهيم الحربي هذا .

و جملة القول : أن الاعتماد على اليدين عند القيام سنة ثابتة عن رسول الله صلى الله عليه وسلم ، و ذلك مما يؤكد ضعف هذا الحديث في النهي عن الاعتماد ، و كذا الحديث الآتي بعده

. ( تنبيه ) : لقد خفي حديث ابن عمر هذا المرفوع على الحفاظ الجامعين المصنفين كابن الصلاح و النووي و العسقلاني و غيرهم ، فقد ، فقد جاء في تلخيص الحبير

 *( 1 / 260 )* ما نصه : حديث ابن عباس : أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام في صلاته وضع يده على الأرض كما يضع العاجن ، قال ابن الصلاح في كلامه على الوسيط : هذا الحديث لا يصح ، و لا يعرف ، و لا يجوز أن يحتج به ، و قال النووي في شرح المهذب : هذا حديث ضعيف ، أو باطل لا أصل له ، و قال في التنقيح : ضعيف باطل . هذه هي كلماتهم كما نقلها الحافظ العسقلاني عنهم ، دون أن يتعقبهم بشيء ، اللهم إلا بأثر ابن عمر الذي عزاه في الفتح لعبد الرزاق ، فإنه عزاه هنا للطبراني في الأوسط ، فلم يقف على هذا الحديث المرفوع صراحة ، مصداقا للقول المشهور : كم ترك الأول للآخر . فالحمد لله على توفيقه ، و أسأله المزيد من فضله

غريب الحديث لإبراهيم الحربي – *(ج 2 / ص 288)* 

 *613* – حدثنا عبيد الله بن عمر ، حدثنا يونس بن بكير ، عن الهيثم ، عن عطية بن قيس ، عن الأزرق بن قيس : رأيت ابن عمر يعجن في الصلاة ؛ يعتمد على يديه إذا قام ، فقلت له ، فقال : رأيت رسول الله صلى الله عليه يفعله.

 *✍️✍️✍️அல்பானி கூறுவதன் கருத்து இது தான்: இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (ஸஜ்தாவிலிருந்து) எழும்போது மாவு பிசைவது போல் கைகளை ஊன்றி எழுந்ததை நான் பார்த்தேன். இது குறித்து அவரிடம் நான் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்துள்ளேன் என்று விடையளித்தார்கள் என அஸ்ரக் பின் கைஸ் என்பார் அறிவிக்கிறார் என்று ஹதீஸ் உள்ளது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்ராஹீம் அல்ஹர்பீ அவர்களின் கரீபுல் ஹதீஸ் என்ற நூலில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 

 *1- இப்னு உமர்* 

 *2- அஸ்ரக் பின் கைஸ்* 

 *3- அதிய்யா பின் கைஸ்* 

 *4- ஹைஸம்* 

 *5- யூனுஸ் பின் புகைர்* 

 *6- உபைதுல்லாஹ் பின் உமர்* 

 *என்ற அறிவிப்பாளர் வரிசைப்படி இது பதிவு செய்யப்பட்டுள்ளது.* 
 *முதல் அறிவிப்பாளர் நபித்தோழர் என்பதால் அதில் விமர்சனம் இல்லை.* 
 *இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிவிப்பாளர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள். அதிலும் விமர்சனம் இல்லை.* 
 *நான்காவது அறிவிப்பாளர் ஹைஸம் ஆவார். யாருடைய மகன் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆய்வு செய்யும் போது இவரது தந்தை டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த இம்ரான் ஆவார் என்று தெரிகிறது.* 
 *இவரை இப்னு ஹிப்பான் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.* 
 *இவர் வழியாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள் யார் என்று தேடிப்பார்க்கும் போது நான்கு நம்பகமானவர்கள் இவர் வழியாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். எனவே இவர் விஷயத்தில் மன நிறைவு ஏற்படுகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் தான். இதை நடைமுறைப்படுத்துவது நபிவழியைச் செயல்படுத்துவது தான் என்று அல்பானி வாதிடுகிறார்.* 
 *மேலும் ஹதீஸ் கலை மேதைகளான இப்னுஸ் ஸலாஹ், நவவீ, இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோருக்கு இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தெரியாமல் போய் விட்டது எனவும் அல்பானி விமர்சனம் செய்கிறார். அல்பானி கூறுவது போல் ஹைஸம் என்பார் இம்ரானின் மகனாக இருந்தால் அவரது வாதம் சரியானது தான். ஆனால் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஹைஸம் என்பார் இம்ரானின் மகன் அல்ல.* 
 *இந்தப் பெயரில் ஏராளமான அறிவிப்பாளர்கள் இருந்துள்ளனர். எனவே இவரது தந்தை யார் என்று தெரிந்தால் தான் எந்த ஹைஸம் என்று முடிவு செய்ய முடியும். ஹைஸம் என்பவர் இம்ரான் என்பவரின் மகன் ஹைஸம் என்று அல்பானி முடிவு செய்திருப்பது அவசர கோலத்தில் செய்யப்பட்ட முடிவாகவே உள்ளது.* 
 *ஒரு நூலில் ஹைஸம் என்று குறிப்பிடப்பட்டால் இந்த ஹதீஸ் வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஹைஸம் என்பார் யார் என்று விபரம் உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும். அப்படி தேடிப்பார்க்கும் போது மேற்கண்ட ஹதீஸ் தப்ரானி அவர்களின் கபீர் என்ற நூலிலும், அவ்ஸத் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 
 *அந்த அறிவிப்புகள் இது தான்✍️✍️✍️.* 


المعجم الكبير للطبراني – (ج *11* / ص *383* )

 *902* - حَدَّثَنَا عَلِيُّ بن سَعِيدٍ الرَّازِيُّ ، قَالَ : نا عَبْدُ اللَّهِ بن عُمَرَ بن أَبَانَ ، قَالَ : نا يُونُسُ بن بُكَيْرٍ ، قَالَ : نا الْهَيْثَمُ بن عَلْقَمَةَ بن قَيْسِ بن ثَعْلَبَةَ ، عَنِ الأَزْرَقِ بن قَيْسٍ ، قَالَ : رَأَيْتُ عَبْدَ اللَّهِ بن عُمَرَ وَهُوَ يَعْجِنُ فِي الصَّلاةِ يَعْتَمِدُ عَلَى يَدَيْهِ إِذَا قَامَ ، فَقُلْتُ : مَا هَذَا يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ؟ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِنُ فِي الصَّلاةِ ، يَعْنِي : يَعْتَمِدُ . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الأَزْرَقِ إِلا الْهَيْثَمُ ، تَفَرَّدَ بِهِ : يُونُسُ بن بُكَيْرٍ

المعجم الأوسط للطبراني – (ج *9* / ص *207* )

 *4154* – حدثنا علي بن سعيد الرازي قال : نا عبد الله بن عمر بن أبان قال : نا يونس بن بكير قال : نا الهيثم بن علقمة بن قيس بن ثعلبة ، عن الأزرق بن قيس قال : رأيت عبد الله بن عمر وهو يعجن في الصلاة يعتمد على يديه إذا قام ، فقلت : ما هذا يا أبا عبد الرحمن ؟ قال : رأيت رسول الله صلى الله عليه وسلم يعجن في الصلاة ، يعني : يعتمد ، لم يرو هذا الحديث عن الأزرق إلا الهيثم ، تفرد به : يونس بن بكير


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த அறிவிப்புகளில் ஹைஸம் என்று பொதுவாகக் கூறப்படாமல் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இவர் அல்கமாவின் மகனாவார். கைஸ் என்பாரின் பேரனாவார். ஸஅலபா என்பவரின் கொள்ளுப் பேரனாவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அல்பானி அவர்கள், இம்ரானின் மகனாகிய ஹைஸமுக்கு உரிய விமர்சனத்தை எடுத்துக் காட்டி ஆள்மாறாட்டம் செய்து இது சரியான ஹதீஸ் என்கிறார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மேற்கண்ட தப்ரானியின் அறிவிப்பில் ஹைஸம் என்பாரின் தந்தை பெயர் கூறப்பட்டுள்ளது. பாட்டனாரின் பெயரும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹைஸம் என்பாரின் நம்பகத்தன்மை குறித்து எந்தத் தகவலும் இல்லை. அறிவிப்பாளர்களின் வரலாற்றை எடைபோடும் எந்த நூலிலும் இவரைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. எனவேதான் இவர் யாரென அறியப்படாதவர் என்று முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டனர். அது சரியானது தான்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்பானியோ இந்த ஹதீஸுக்குச் சம்பந்தமில்லாத வேறொரு ஹைஸம் என்பாரின் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு இதை நியாயப்படுத்தி புது நடைமுறையைப் புகுத்தி விட்டார். எனவே இது குறித்து முந்தைய அறிஞர்கள் செய்த விமர்சனம்தான் மிகச் சரியானது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இந்த பித்அத்தை உடனே விட்டொழிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் ஒரு வாதத்துக்காக அல்பானி கூறும் ஆள் மாறாட்டத்தை ஒப்புக் கொண்டாலும் அவரது முடிவில் நேர்மை இல்லை. ஏனெனில் அவர் தவறாகப் புரிந்து கொண்ட ஹைஸம் என்பாரை இப்னு ஹிப்பான் மட்டும் தான் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். வேறு ஒருவரும் இவ்வாறு கூறவில்லை.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கக் கூடாது; ஏனெனில் யாரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லையோ அவரை நம்பகமானவர் என்று கூறுவது இப்னு ஹிப்பானின் வழக்கம். நம்பகமானவர்கள் மட்டுமின்றி யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் அவர் சேர்த்துள்ளார். ஏனெனில் யாரென அறியப்படாதவர்களை ஒருவரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். இந்தக் காரணத்தைக் கூறி ஒரு ஹதீஸை அல்ல; நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை பலவீனமாக்கியவர் அல்பானி🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆனால் இவர் ஆள் மாறாட்டம் செய்த ஹைஸம் என்பாரை இப்னு ஹிப்பான் தவிர வேறு ஒருவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை என்று தெரிந்து கொண்டே மனநிறைவு அடைவதாக இவர் கூறுவது நேர்மையாக இல்லை. இவர் கூறுகின்ற ஹைஸம் என்பவரும் யாரென அறியப்படாதவர் தான். ஆள்மாறாட்டம் செய்தாலும் இது பலவீனமான ஹதீஸ் தான்✍️✍️✍️* 
.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆள் மாறாட்டம் குறித்து இதற்கு முன் யாரும் சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அல்பானி வாழும் காலத்திலேயே இப்னு ஹிப்பான் மட்டும் தானே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இது எப்படி சரியான ஹதீஸாகும் என்று அவர் வாழும் காலத்திலேயே இணைய தளங்களில் கேட்கப்பட்டது. அல்பானி இதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இப்னு ஹிப்பான் மட்டுமே ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் யார் என்று அறியப்படாதவர் என்று காரணம் கூறி அல்பானி தள்ளுபடி செய்த பின் வரும் ஹதீஸ்கள் சுட்டிக் காட்டப்பட்டன.✍️✍️✍️* 


السلسلة الضعيفة – (ج *1* / ص *240* )

قلت : و توثيق ابن حبان لا يعتمد عليه كما سبق التنبيه عليه مرارا و بخاصة إذا خولف ! .


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னுஹிப்பான் நம்பகமானவர் என்று கூறுவதை ஏற்கமுடியாது. இதைப் பலமுறை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.* *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


السلسلة الضعيفة – (ج *1* / ص *270* )

قلت : قد سبق غير مرة أن توثيق ابن حبان وحده لا يعتمد عليه لتساهله فيه


 *✍️✍️✍️இப்னுஹிப்பான் நம்பகமானவர் என்று கூறியிருப்பது ஏற்கமுடியாத்தாகும். ஏனெனில் இதில் இப்னு ஹிப்பான் அலட்சியப்போக்குள்ளவர்* .
 *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா✍️✍️✍️* 


السلسلة الضعيفة – (ج *1* / ص *290* )

و أما ابن حبان فقد ذكره في الثقات *( 4 / 123 )* ، و هذا منه على عادته في توثيق المجهولين كما سبق التنبيه عليه مرارا ، و توثيق ابن حبان هذا هو عمدة الهيثمي حين قال في المجمع *( 3 / 217 )* : رواه أحمد و رجاله ثقات


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவரை இப்னு ஹிப்பான் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது அவரது வழக்கமாகும். இதை பல முறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.* 
 *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


السلسلة الضعيفة – (ج *1* / ص *481* )

و توثيق ابن حبان *( 7 / 501 )* إياه مما لا يعتد به كما نبهت عليه مرارا


 *✍️✍️✍️இப்னுஹிப்பான் நம்பகமானவர் என்று கூறியிருப்பது ஏற்கமுடியாததாகும். இதை பல முறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.* 
 *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா✍️✍️✍️* 


السلسلة الضعيفة – *(ج 2 /* ص *136* )

و توثيق ابن حبان إياه من تساهله الذي عرف به عند المحققين ، و قد يغتر به كثير ممن لا تحقيق عندهم ، فيصححون أحاديث كثيرة تقليدا له ، من ذلك هذا الحديث


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு ஹிப்பான் ஒருவரை நம்பகமானவர் என்று கூறுவது அவரது அலட்சியப்போக்கு என்பது ஹதீஸ்கலை நிபுணர்களிடம் அறியப்பட்டதாகும். போதிய ஞானம் இல்லாத அதிகமானவர்கள் அவரைக் கண்மூடி பின்பற்றி அதிகமான ஹதீஸ்களை சரியான ஹதீஸ்கள் என்று கூறியுள்ளனர்* .
 *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


السلسلة الضعيفة – (ج *2* / ص *260* )

. لكن توثيق ابن حبان لا قيمة له لاسيما مع مخالفة من هو أعرف منه بالرجال كأبي حاتم و الدارقطني


 *✍️✍️✍️ஒருவரை நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் கூறுவதற்கு எந்த மதிப்பும் இல்லை. குறிப்பாக இவரை விட அறிவிப்பாளர்களை நன்கு அறிந்த அபூஹாதம், தாரகுத்னீ ஆகியோருக்கு மாற்றமாக இவர் சொல்லும் போது இவரது கருத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.* 
 *நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளால் பல ஹதீஸ்கள் பற்றிய விமரசனங்களில் அல்பானி கூறியுள்ளார். அவற்றில் சிலவற்றைப் பாருங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


السلسلة الضعيفة – (ج *2* / ص *377* )
و جملة القول أن الحديث لم يصح عندي لعدم الاطمئنان إلى توثيق ابن حبان للغنوي هذا

السلسلة الضعيفة – (ج *2* / ص *395* )
أن توثيق ابن حبان مما لا ينبغي الاعتماد عليه ، لأن من قاعدته فيه توثيق المجهولين

السلسلة الضعيفة – (ج *2* / ص *446* )
و أما توثيق ابن حبان إياه ، فمما لا يقام له وزن – و إن اغتر به بعض المتقدمين و المعاصرين كما يأتي – لما عرف أنه متساهل في التوثيق

السلسلة الضعيفة – (ج *2* / ص *451* )
و توثيق ابن حبان فيه تساهل معروف ، ولذلك فإني غير مطمئن لصحة روايته

السلسلة الضعيفة – (ج *2* / ص *470* )
أما قوله في إبراهيم بن حسن أنه ثقة ، ففيه تساهل لا يخفى على أهل العلم ، لأنه لم يوثقه غير ابن حبان كما عرفت ، و هو قد أشار إلى أن توثيقه إياه إنما بناه على توثيق ابن حبان ، و إذا كان هذا معروف بالتساهل في التوثيق فمن اعتمد عليه وحده فيه فقد تساهل

السلسلة الضعيفة – (ج *3* / ص *27* )
و قال الذهبي : لا يعرف ، و أما توثيق ابن حبان إياه ، فمما لا يعول عليه لما عرف من قاعدته في توثيق المجهولين ، كما فصلت القول عليه في الرد على التعقيب الحثيث و لهذا لم يعرج الأئمة المذكورون على توثيقه ، و لم يعتمدوا عليه في هذا و لا في عشرات بل مئات من مثله وثقهم هو وحده ، و حكموا عليهم بالجهالة

السلسلة الضعيفة – (ج *3* / ص *130* )
فهذا أبو إسرائيل لم يوثقه ابن حجر في التقريب و إنما قال فيه : مقبول ، يعني عند المتابعة ، و إلا فلين الحديث كما نص عليه في المقدمة . و لذلك فإني أرى أن تجويد الحافظ المنذري و العراقي لإسناد هذا الحديث ، غير جيد ، لأنه قائم على الاعتماد على توثيق ابن حبان لرواية أبي إسرائيل ، و هو بالتجهيل أولى منه بالتوثيق لأنه لم يرو عنه غير شعبة ، مع عدم توثيق غير ابن حبان له . والله أعلم .

السلسلة الضعيفة – (ج *3* / ص *132* )
لأن توثيق ابن حبان مما لا يوثق به عند التفرد كما هو الشأن هنا لما عرفت من تساهله فيه ، فلذلك لا يقبل توثيقه هذا إذا لم يخالف ممن هو مثله في العلم بالجرح و التعديل

السلسلة الصحيحة – (ج *3* / ص *315* )

و على كل حال فالإسناد ضعيف لجهالة أيمن ، و توثيق ابن حبان إياه مما لا يوثق به كما هو معروف و إن اعتمده الهيثمي ، فقال في تخريج الحديث ( *10* / *67* ) : رواه أحمد و الطبراني أسانيد و رجالها رجال الصحيح غير أيمن بن مالك الأشعري و هو ثقة

السلسلة الصحيحة – (ج *4* / ص *119* )

قلت : توثيق ابن حبان فيه تساهل كثير كما نبهنا عليه مرارا ، و لذلك فقد أورد الذهبي في الميزان محمد بن معاذ بن محمد بن أبي بن كعب عن أبيه عن جده قال . و عن ابنه معاذ قال ابن المديني : لا نعرف محمد هذا و لا أباه و لا جده في الرواية . و هذا إسناد مجهول

ظلال الجنة – *(ج 2 / ص 289)* 

وقول الهيثمي فيه وهو ثقة إنما هو اعتماد منه على توثيق ابن حبان إياه وتساهله في التوثيق معروف ولذلك قال الذهبي غير معروف وقال الحافظ مقبول يعني عند المتابعة

تحذير الساجد – *(ج 1 / ص 19)* 

وكون توثيق ابن حبان لا يوثق به مما لا يرتاب فيه المتضلعون في هذا العلم الشريف وقد فصلت القول في ذلك في ردي على رسالة التعقب الحثيث للشيخ عبدالله الحبشي وقد نشر في التمدن الإسلامي في مقالات متتابعة ثم نشر في رسالة مستقلة تحت عنوان الرد على التعقب الحثيث فراجع *( ص 18 21 )* .

تمام المنة – (ج *1* / ص *25* )

وإن مما يجب التنبيه عليه أيضا أنه ينبغي أن يضم إلى ما ذكره المعلمي أمر آخر هام عرفته بالممارسة لهذا العلم قل من نبه عليه وغفل عنه جماهير الطلاب وهو أن من وثقه ابن حبان وقد روى عنه جمع من الثقات ولم يأت بما ينكر عليه فهو صدوق يحتج به وبناء على ذلك قويت بعض الأحاديث التي هي من هذا القبيل كحديث العجن في الصلاة فتوهم بعض الناشئين في هذا العلم أننى ناقضت نفسي وجاريت ابن حبان في شذوذه وضعف هو حديث العجن وسيأتي الرد عليه مفصلا إن شاء الله مع ذكر عشرة أمثلة من الرواة الذين وثقهم ابن حبان فقط وتبعه الحافظان الذهبي والعسقلاني فاطلب ذلك في بحث كيفية الرفع من السجود *( ص 197 – 207 )* وجملة القول أن صاحب الجزء أخطأ خطأ ظاهرا في تضعيفه لحديث ابن عمر في العجن لأنه اعتمد فيه على بعض ما قيل في توثيق ابن حبان ولم يعرف تفصيل القول في ذلك الذي جرى عليه عمل الحفاظ كالذهبي والعسقلاني وعلى نقول متناقضة لم يجد له مخرجا منها إلا باعتماده على ما يناسب تضعيفه للحديث منها وأفحش منه تشكيكه في سنية الاعتماد على اليدين عند النهوض مع ثبوته في حديثين مرفوعين غير حديث العجن في أحدهما التصريح بالاعتماد على اليدين والآخر يلتقي معه عند العلماء ويؤيدهوبعد فإن مجال نقد الجزء تفصيليا وإظهار ما فيه من المخالفات لاقوال العلماء وأصولهم وتقويته ما لا يصح من الحديث واستشهاده ببعض الأقوال ووضعها في غير موضعها ومبالغته في بعض الأمور والتهويل فيها مجال واسع جدا يتطلب بيان ذلك من الوقت ما لا أجده الآن فإن وجدته فيما يأتي من الأيام بادرت إلى بيانه في كتاب خاص والله تعالى هو المستعان وعليه التكلان


 *✍️✍️✍️ஆக மேற்கண்ட ஹதீஸில் ஹைஸம் என்பார் இம்ரானின் மகன் என்று அல்பானி முடிவு செய்திருப்பது முற்றிலும் தவறாகும்.* 
 *இம்ரானின் மகன் என்று வைத்துக் கொண்டாலும் அவரும் நம்பகமானவர் அல்ல. எனவே ஸஜ்தாவில் இருந்து எழும் போது கைகளை மாவு பிசைவது போல் ஊன்றி எழுவது பித்அத்தாகும்✍️✍️✍️.* 


 *13. ☪️☪️☪️பாங்கு☪️☪️ சொல்லும்🕋🕋 போது 🕋🕋கைகளால் 🤝🤝காதுகளை👂👂 மூட👂 👂வேண்டுமா❓☪️☪️☪️* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 81* 


🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment