பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து - 87

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 87 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚* 


 *25. ☪️☪️☪️நோன்பை🕋🕋 விடுவதற்குப்🕋🕋 பரிகாரம்🕋🕋 உண்டா❓☪️☪️☪️* 


 *26. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ருகூவிற்கு 🟣🟣பிறகு🟡🟡 என்ன🔴🔴 கூறவேண்டும்.❓🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *25. ☪️நோன்பை விடுவதற்குப் பரிகாரம் உண்டா❓☪️* 


 *✍️✍️✍️நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நோன்பு நோற்கும் கடைமையும் இல்லை. அவர்கள் இதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையுமில்லை என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது.✍️✍️✍️* 


 *📚📚இது பற்றிய முழுவிபரத்தைப் பார்ப்போம்📚📚.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று 2:184 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன் என்று எதிர்மறைச்சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது “நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. அதுதான் இவ்வசனத்தில் (2:184) கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இது குறித்து புகாரியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.✍️✍️✍️*
 

۶۵۰۷ – حدثنا قتيبة، حدثنا بكر بن مضر، عن عمرو بن الحارث، عن بكير بن عبد الله، عن يزيد، مؤلی سلمة بن الأوع، عن سلمة، قال: لما لث: اوعلى الذين يطيقونه فذية طعام مشکين [البقرة: ۱۸۶]. «كان من أراد أن يفطر يفتدي، حتى نزلت الآية التي بعدها فنسختها، قال أبو عبد الله: «مات بكير، قبل يزيد


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ‘ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறைவசனம் ‘அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து ‘வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த ‘மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *நூல் : புகாரி 4507 ‘* 


 *✍️✍️✍️இதில் இருந்து தெரிய வருவது என்ன? நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் ‘விரும்பினால் நோன்பு நோற்கலாம். அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இல்ல. அருளப்பட்டது என்று தெரிகிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகார செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது ! இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது. ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காததற்காகப் பரிகாரம் செய்ய வேண்டுமா என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும் ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம்: செய்யச் சொல்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்.? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.✍️✍️✍️* 


۶۵۰۵ – حدثني إسحاق، أخبرنا روح، حدثنا كراء بن إسحاق، حدثنا عمرو بن دينار، عن عطاء، مع ابن عباس، يقرأ على الذين يطوقوته فلا يطيقونه في طعام مشکين قال ابن عباس: «ليست بمنشوة هو الشي الكبير، والمرأة الكبيرة لا يستطيعان أن يوما، في عمان مكان كل يوم مسكينا


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *நூல் : புகாரி 4505* 


 *✍️✍️✍️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஹஜ் செய்ய வசதியில்லாதவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை , அது போல் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமை” ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *26. 🙋‍♂️ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்.❓🙋‍♀️* 


 *✍️✍️✍️தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி என்று கூறுவது நவிவழி என்ற கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது✍️✍️✍️* . 


۷۹۹ حدثنا عبد الله بن مسلمة عن مالك عن تميم بن عبد الله المجمر عن علي بن یحیی ابن خلاد الرقي عن أبيه عن رفاعة بن رافع الرقي قال كنا يوما صلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الكعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال من المتكلم قال أنا قال رأي بضعة ولاثين ملكا دژونها أهم كتبها أو رواه البخاري


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், ”இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?’ என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட ‘ வானவர்கள் ‘இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்’ என (த் தமக்கிடையே) போட்டியிட்டுக்கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*
 ‘
 *✍️✍️✍️மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும் நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது✍️✍️✍️* 
.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம்பெறுகிறது இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


  وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا قَتَادَةُ وَثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ. فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَتَهُ قَالَ: ((أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ)). فَأَرَمَّ الْقَوْمُ فَقَالَ: ((أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا)). فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا. فَقَالَ: ((لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا)).


 *✍️✍️✍️அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, ‘அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் ‘உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?’ என்று கேட்டார்கள். மக்கள் பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), ‘உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை ” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் ‘நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே ‘இதை எடுத்துச் செல்பவர் யார் எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்✍️✍️✍️.* 

 *(முஸ்லிம் (1051)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும். ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச்சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை , இந்த வாசகத்தை கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (லல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருசுவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்கமாட்டார்கள். மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்த சான்றையும் நம்மால் காண முடியவில்லை.வானவர்கள் எடுத்துச்செல்ல போட்டிபோடுகின்றார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிலாகித்து சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழ்வதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *5458* حدثنا أبو نعيم حنا شفيا عن ثور عن خالد بن معدان عن أبي أمامة أن النبي صلى الله عليه وسلم كان إذا رضى مائدته قال الحمد لله كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه نا رواه البخاري


 *✍️✍️✍️அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கலீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள், பொருள். அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது: தவிர்க்க முடியாதது ஆகும்✍️✍️✍️.* 


 *(புகாரி (8458)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போபாட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையின் ருகூவிற்கு பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*
 . 

 *✍️✍️✍️நபிகள் நாயாகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருகூவுக்கு பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை. அப்படியானால் ருகூவு கிடைக்காது சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சி அடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம். என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதை பின்னர் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்✍️✍️✍️.* 


حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ فَلَمَّا صَلَّى قَالَ: ((مَا شَأْنُكُمْ)). قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ. قَالَ: ((فَلاَ تَفْعَلُوا، إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا)


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)’ என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்’ என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *நூல் : புகாரி : 635* 


حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَعَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ، وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا)).


 *✍️✍️✍️இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:’நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.’என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்✍️✍️✍️.* 


 *நூல் : புகாரி : 636* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அந்த நபித்தோழறைப் போல் வேகமாக ஓடி வந்து ருக்கூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *27. 🕋🕋🕋வெள்ளிக்கிழமை☪️☪️ சூரத்துல் 📚📚கஹ்ஃபு📚📚 ஒதுவத☪️☪️ வேண்டுமா❓🕋🕋🕋* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 88* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment