பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து - 83

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 83 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚* 


 *18. 🤝🤝இடது🤝 கையை 🔴தரையில்🟣 ஊன்றி🟡 உட்காரலாமா❓🤝🤝* 


 *19. 🕋🕋🕋ஜும்மாவின் 🕋🕋போது☪️☪️ முட்டுக்கால்களில்☪️☪️ கைகளைக் கட்டி🕋🕋 அமரலாமா.❓🕋🕋* 


 *18. 🤝இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா❓🤝* 


 *✍️✍️✍️பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *☪️☪️☪️இது தொடர்பான செய்திகளையும், அந்த அறிவிப்புகள் எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் காண்போம்.* 
 *அபூதாவூதின் அறிவிப்பு:☪️☪️☪️* 


 *4848* حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ ، عَنْ أَبِيهِالشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ : مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي، وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي، فَقَالَ : ” أَتَقْعُدُ قِعْدَةَالْمَغْضُوبِ عَلَيْهِمْ ؟ “.


 *✍️✍️✍️அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று கேட்டார்கள்✍️✍️✍️.* 

 *நூல் : அபூதாவூத் 4848* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இடது கையை முதுகிற்குப் பின்புறமாக ஊன்றி உட்காருவது கூடாது என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🕋🕋ஆனால் மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானதாகும்🕋🕋* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு ஜுரைஜ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது  தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது போல் தத்லீஸ் செய்யும் அறிவிப்பாளர்கள் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று அறிவிக்காமல் இவரிடம் நான் கேட்டேன் என்றோ என்னிடம் இவர் சொன்னார் என்றோ நேரில் கேட்டதைத் தெளிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் தான் அது ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும்.* 
 *இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இமாம் அஹ்மத் கூறுகிறார் :* 
 *இன்னார் கூறினார், இன்னார் கூறினார் என்றோ எனக்கு அறிவிக்கப்பட்டது என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். (அஹ்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார் என்றோ (ஸமிஃத்து) நான் செவியேற்றேன் என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும். இப்னு ஜுரைஜ் உண்மையாளர் ஆவார். அவர் ஹத்தஸனீ என்று கூறினால் அது அவர் நேரடியாகச் செவியேற்றதாகும். அவர் அஹ்பரனீ  என்று கூறினால் அது அவர் ஆசிரியரிடம் படித்துக் காட்டியதாகும். அவர் சொன்னார் என்று கூறினால் அது அவர் செவியேற்காதவையும், அல்லது ஆசிரியரிடம் படித்துக் காட்டாதவையும் ஆகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் தாரகுத்னீ கூறுகிறார்:* 
 *இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்* .
 *இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் . பாகம் 6 பக்கம் 359* 


 *✍️✍️✍️மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனங்களிலிருந்து இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான வாசகங்களைப் பயன்படுத்தினால் தான் அது ஸஹீஹான ஹதீஸாகும். இல்லையென்றால் அது பலவீனமானதாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.* 
 *ஆனால் மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.* 
 *இந்தச் செய்தி இடம் பெற்ற அனைத்து அறிவிப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம்.* 
 *அஹ்மதுடைய அறிவிப்பு✍️✍️✍️* 


مسند أحمد ط الرسالة ( *32* / *204* )

 *19454* – حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ شَرِيدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي، وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ


 *☪️பைஹகி குப்ராவின் அறிவிப்பு☪️* 


سنن البيهقي الكبرى *(3/ 236)* 

 *5713* – أخبرنا الحسين بن محمد الفقيه أنبأ محمد بن بكر ثنا أبو داود ثنا علي بن بحر ثنا عيسى بن يونس ح وأخبرنا علي بن أحمد بن عبدان أنبأ أحمد بن عبيد الصفار ثنا عبيد بن شريك ثنا عبد الوهاب ثنا عيسى بن يونس عن بن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس هكذا وقد وضعت يدي اليسري خلف ظهري واتكأت على ألية يدي فقال أتقعد قعدة المغضوب عليهم لفظ حديث علي بن بحر وفي رواية عبد الوهاب قال وأنا جالس في المسجد واضع يدي اليسرى خلف ظهري متكىء على أليه يدي قال أبو داود قال القاسم أليه الكف أصل الإبهام وما تحته


 *🕋பைஹகியின் ஆதாப் அறிவிப்பு🕋* 


الآداب للبيهقي (ص: *105* )

 *256* – أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أَنْبَأَنَا أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْحٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟ . قَالَ أَبُو دَاوُدَ، وَقَالَ الْقَاسِمُ: أَلْيَةُ الْيَدِ: الْكَفُّ أَصْلُ الْإِبْهَامِ وَمَا تَحْتَهُ


 *☪️இப்னு ஹிப்பான் அறிவிப்பு☪️* 


صحيح ابن حبان بتحقيق الأرناؤوط – مطابق للمطبوع *(12/ 488)* 

 *5674* – أخبرنا أبو عروبة بحران قال : حدثنا المغيرة بن عبد الرحمن الحراني قال : حدثنا عيسى ين يونس عن ابن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس قد وضعت يدي اليسرى خلف ظهري واتكأت فقال النبي صلى الله عليه و سلم : ( أتقعد قعدة المغضوب عليهم ) قال ابن جريج : وضع راحتيه على الأرض وراء ظهره


 *🕋தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் அறிவிப்பு🕋* 


المعجم الكبير للطبراني ( *6* / *478* ، بترقيم الشاملة آليا)

 *7092* – حَدَّثَنَا مُحَمَّدُ بن عَمْرِو بن خَالِدٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عِيسَى بن يُونُسَ، عَنِ بن جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ قَاعِدٌ هَكَذَا مُتَّكِئٌ عَلَى أَلْيَةِ يَدِهِ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ: هَذِهِ قَعْدَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ.


 *☪️தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் மற்றொரு அறிவிப்பு☪️* 


المعجم الكبير للطبراني ( *6* / *478* ، بترقيم الشاملة آليا)

 *7093* – حَدَّثَنَا الْحُسَيْنُ بن إِسْحَاقَ التُّسْتَرِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا مِنْدَلٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَبْصَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا قَدْ جَلَسَ , فَاتَّكَأَ عَلَى يَدِهِ الْيُسْرَى، فَقَالَ: هَذِهِ جِلْسَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ.


 *🕋அல்அஹ்காமுஸ் ஷரயிய்யா🕋* 


الأحكام الشرعية للإشبيلي *581* *(3/ 125)* 

أبو داود : حدثنا علي بن بحر ، حَدَّثَنا عيسى بن يونس ، حَدَّثَنا ابن جريج ، عن إبراهيم بن ميسرة ، عن عمر بن الشريد ، عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا جالس هكذا ، وقد وضعت يدي اليسرى خلف ظهري ، واتكأت على ألية يدي ، فقال : أتقعد قعدة المغضوب عليهم ؟.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்படி மேலே நாம் எடுத்துக்காட்டிய எல்லா அறிவிப்புக்களிலும் நான் கேட்டேன் என்னிடம் சொன்னார் என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி இப்னு ஜுரைஜ் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்புகளாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஆயினும் பின் வரும் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பில் இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.* 
 *முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு✍️✍️✍️* 


مصنف عبد الرزاق *(2/ 198)* 

 *3057* – عبد الرزاق عن بن جريج قال أخبرني إبراهيم بن ميسرة أنه سمع عمرو بن الشريد يخبر عن النبي صلى الله عليه و سلم أنه كان يقول في وضع الرجل شماله إذا جلس في الصلاة هي قعدة المغضوب عليهم

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தொழுகையில் இருப்பில் இருப்பவர் தன்னுடைய இடது கையை (பின்புறமாக ஊன்றி) வைக்கும் விசயத்தில் இது எவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டதோ அவர்களுடைய இருப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர்: அம்ரு இப்னு அஸ்ஸரீத்* 

 *நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (3057)* 


 *✍️✍️✍️மேற்கண்ட அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யவில்லை. ஆனாலும் இதில் வேறு பலவீனம் உள்ளது.* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் சஹாபியாக – நபித்தோழராக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழாத ஒருவர் நபிகள் நாயகம் சொன்னதாக அறிவித்தால் அது முர்ஸல் எனும் பலவீனமான அறிவிப்பாகும்* 
 *இந்த ஹதீஸை அம்ரு இப்னு அஸ்ஸரீத் என்பார் நபியவர்களிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தாபியீ (இரண்டாம் தலைமுறை) ஆவார். இவர் நபியவர்களைச் சந்தித்தவர் கிடையாது. எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.* 
 *தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பது ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் மிகத் தெளிவாக வந்துள்ளது.* 
 *இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:* 
 *தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *நூல்: அஹ்மத் (6347)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பின்வரும் அறிவிப்பில் இடது கையின் மீது ஊன்றி இருப்பதைத் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.* 
 *தொழுகையிலே தமது இடது கையின் மீது ஊன்றி இருந்த ஒரு மனிதரை நபியவர்கள் தடுத்து இது யூதர்களின் தொழுகை என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)* 

 *நூல் : ஹாகிம் (1007)* 


 *✍️✍️✍️இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் வலிமையான ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.* 
 *எனவே தொழுகையின் இருப்பில் இடது கையை ஊன்றி அமர்வது தான் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர தொழுகை அல்லாத நேரங்களில் அவ்வாறு இருப்பது தவறு கிடையாது. அது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்✍️✍️✍️* 
.

 *19. 🕋ஜும்மாவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.❓🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர்.* 
 *முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் அல்ஹப்வா என்றும் குறிப்பிடுவார்கள். இவ்வாறு அமரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்தச் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாகவே உள்ளன. இது தொடர்பான செய்தி முஆத் இப்னு அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ஜாபிர் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.* *ஒவ்வொரு அறிவிப்பையும் அது எவ்வாறு பலவீனமானது என்பதையும் காண்போம்.* 
 *முஆத் இப்னு அனஸ் (ரலி அறிவிப்பு🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *514* – حدثنا محمد بن حميدالرازي وعباس بن محمد الدوري قالا حدثنا أبو عبد الرحمن المقرئ عن سعيد بن أبي أيوب حدثني أبو مرحوم عن سهل بن معاذ عن أبيه : أن النبي صلى الله عليه و سلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (رواه الترمدي)


 *✍️✍️✍️ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்✍️✍️✍️.* 


 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : திர்மிதி (514)* 
 *இந்த அறிவிப்பு அபூதாவூத் (1112), முஸ்னத் அஹ்மத் (15668), இப்னு குஸைமா (1815), தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (16797), சுனனுல் பைஹகி அல்குப்ரா (5704), முஸ்னத் அபீ யஃலா (1492, 1496) ஹாகிம் (1069), ஷரஹுஸ் சுன்னா (1082) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் என்பார் இடம் பெற்றுள்ளர். இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


حدثنا عبد الرحمن انا أبو بكر بن ابى خيثمة فيما كتب إلى قال سمعت يحيى بن معين يقول: سهل بن معاذ بن انس عن ابيه ضعيف. (الجرح والتعديل 


 *✍️✍️✍️ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பை பலவீனமானவை என இமாம் யஹ்யா இப்னு மயீன் விமர்சித்துள்ளார்கள்.✍️✍️✍️* 

 *நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேற்கண்ட செய்தியை இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் அது பலவீனமானதாகும்.* 
 *இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

سهل بن معاذ بن أنس ، يروى عن أبيه روى عنه زبان بن فائد منكر الحديث جدا (المجروحين 1/ *347* )


 *✍️✍️✍️ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார்✍️✍️✍️.* 

 *(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.* 
 *மேலும் மேற்கண்ட செய்தியில் அபூ மர்ஹும் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் அப்துர் ரஹீம் இப்னு மைமூன் என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

قال ابن أبي خيثمة عن ابن معين ضعيف الحديث وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به وقال الذهبي فيه لين


 *✍️✍️✍️இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் விமர்சித்துள்ளார். மேலும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்✍️✍️✍️.* 

 *(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் 354)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் பலவீனமானவர் என இமாம் தஹபீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)* 


 *✍️✍️✍️மேற்கண்ட அறிவிப்பில் ஸஹ்ல் இப்னு முஆத் மற்றும் அபூ மர்ஹும் ஆகிய இரண்டு பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலவீனமான அறிவிப்பு என்று உறுதியாகிவிட்டது.* 
 *ஸஹ்ல் பின் முஆத் என்பாரிடமிருந்து ஸப்பான் இப்னு ஃபாயித் என்பவர் வழியாகவும் இதே செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது✍️✍️✍️.* 


 *16798* – حَدَّثَنَا بَكْرُ بن سَهْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ زَبَّانَ بن فَايِدٍ، عَنْ سَهْلِ بن مُعَاذِ بن أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ ..(المعجم الكبير للطبراني *15/ 108)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜும்ஆ நாளில் முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானீ (16798) பாகம் 15, பக்கம் 108* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல பலவீனங்கள் உள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இது ஸஹ்ல் இப்னு முஆத் தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்பாகும். எனவே இது பலவீனமானதாகும். இது பற்றிய விபரத்தை முந்திச் சென்ற செய்தியின் விமர்சனத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.* 
 *இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸப்பான் இப்னு ஃபாயித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.✍️✍️✍️* 


قال أحمد أحاديثه مناكير وقال يحيى ضعيف وقال ابن حبان لا يحتج به .( الضعفاء والمتروكين لابن الجوزي *1/ 292)* 

قال ابن حبان منكر الحديث جدا يتفرد عن سهل بن معاذ بنسخة كأنها موضوعة لا يحتج به وقال الساجي عنده مناكير (تهذيب التهذيب *3/ 265)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு மயீன் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம் 1, பக்கம் 292* 


 *✍️✍️✍️இவர் ஹதீஸ் துறையில் மிகவும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார். இட்டுக்கட்டப்பட்டதைப் போன்று இருக்கும் ஒரு பிரதியை இவர் ஸஹ்ல் இப்னு முஆதிடமிருந்து தனித்து அறிவிக்கின்றார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவரிடம் மறுக்கத்தக்க செய்திகள் உள்ளன என இமாம் ஸாஜி கூறியுள்ளார்✍️✍️✍️.* 

 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 292)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூன்றாவது பலவீனம்: மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف – الضعفاء والمتروكين بن لهيعة ضعيف الحديث- (تاريخ ابن معين) سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه ( تاريخ ابن معين – رواية الدوري 4 */481* ) قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا… قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا ( المجروحين *2 /12)* 


 *✍️✍️✍️அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.✍️✍️✍️* 

 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம்: 1, பக்கம் : 64* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம் 1, பக். 153* 


 *✍️✍️✍️இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை  நான் செவியுற்றுள்ளேன்.✍️✍️✍️* 

 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம்: 1, பக். 481* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார் என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14* 


 *✍️✍️✍️மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் &ஸப்பான் இப்னு ஃபாயித் என்பாரின் இந்த அறிவிப்பு மிக மிகப் பலவீனமானது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.* 
 *அம்ரு இப்னு ஆஸ் அறிவிப்பு✍️✍️✍️* 


 *1134* – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ وَاقِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَنْ الِاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ، يَعْنِي: وَالْإِمَامُ يَخْطُبُ (سنن ابن ماجه)


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)* 

 *நூல்: இப்னு மாஜா 1134* 


 *✍️✍️✍️இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் இடம் பெற்றுள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு வாகித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.✍️✍️✍️* 


عبد الله ابن واقد شيخ لبقية مجهول (تقريب التهذيب *2* / *328* ) ولا أدري هو أبو رجاء الهروي ، أو أبو قتادة الحراني. أو آخر ثالث (تهذيب الكمال *16* / *258* ) قال ابن عدي مظلم الحديث ) المغني في الضعفاء *1* / *362* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பகிய்யத் இப்னு வலீத் என்பாரின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு வாகித் மஜ்ஹுல் யாரென்றே அறியப்படாதவர் ஆவார் என தக்ரீபுத் தஹ்தீப் நூலில் இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.* 
 *அப்துல்லாஹ் இப்னு வாகித் எனும் இவர் அபூ ரஜா அல்ஹர்வீ என்பவரா அல்லது அபூகதாதா அல்ஹர்ரானீ என்பவரா? அல்லது மூன்றாவதான வேறொருவரா என்பதை நான் அறிய மாட்டேன் என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மேலும் இவர் ஹதீஸ்களில் இருட்டடிப்பு செய்பவர் என இப்னு அதீ அவர்கள் இவரை தமது முக்னீ ஃபில் லுஅஃபா எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்.* *எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.* 
 *இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள பகிய்யா இப்னு வலீத் என்பது தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவார்.✍️✍️✍️* 


بقية ابن الوليد ابن صائد… صدوق كثير التدليس عن الضعفاء (تقريب التهذيب *1* / *126* )


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் பலவீனமானவர்களிமிருந்து அதிகம் தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீபில் குறிப்பிட்டுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *(பாகம் 1, பக்கம் 126)* 


 *✍️✍️✍️தத்லீஸ் என்றால் தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வாரத்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.* 
 *ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் பகிய்யா இப்னு வலீத் தமது ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.* 
 *எனவே இந்த விமர்சனத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தி பலவீனமானது. இது ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும் என்பது உறுதியாகிவிட்டது* .
 *ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு✍️✍️✍️* 


ثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا احمد بن الأزهر أبو الأزهر النيسابوري ثنا عبد الله بن ميمون القداح عن جعفر بن محمد عن أبيه عن جابر أن النبي صلى الله عليه وسلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (الكامل في ضعفاء الرجال *4/ 188)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)* 

 *நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 4, பக்கம் 188* 


 *✍️✍️✍️இந்தச் செய்தியும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல்கத்தாஹ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.✍️✍️✍️* 


قال البخاري ذاهب الحديث وقال أبو زرعة واهي الحديث وقال الترمذي منكر الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابع عليه. .. قلت: وقال النسائي ضعيف وقال أبو حاتم منكر الحديث وقال أبو حاتم يروي عن الاثبات الملزقات لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الحاكم روى عن عبيد الله بن عمر أحاديث موضوعة وقال أبو نعيم الاصبهاني روى المناكير. عليه. (تهذيب التهذيب *6/ 44)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் ஹதீஸ்களில் சறுகியவர் என்று இமாம் புகாரியும், இவர் ஹதீஸ்களில் மிகப் பலவீனமானவர் என அபூ சுர்ஆ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என திர்மிதி அவர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இவருடைய அறிவிப்புகளில் பெரும்பாலானவை மாற்று அறிவிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என நஸாயீ அவர்களும், இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என அபூ ஹாதிம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டி அறிவிப்பவர் ஆவார். இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்வது கூடாது என அபூஹாதிம் விமர்சித்துள்ளார். இவர் உபைதுல்லாஹ் இப்னு உமர் என்பார் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என ஹாகிம் கூறியுள்ளார். இவர் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அபூ நுஐம் அல்இஸ்பஹானி விமர்சித்துள்ளார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 44)* 


 *✍️✍️✍️இந்த ஜாபிர் (ரலி) அவர்களை கூறியதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு அறவே தகுதியில்லாத இட்டுக்கப்பட்டது என்ற தகுதியைப் பெறக்கூடிய அளவில் உள்ள மிகமிகப் பலவீனமான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டது. இமாமுடைய உரையைக் கேட்கும் போது கைகளால் முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமரக் கூடாது என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் மிகப்பலவீனமானவையாக உள்ளன. எனவே இந்தப் பலவீனமான அறிவிப்புகளை வைத்து மார்க்கச் சட்டங்களை வகுப்பது கூடாது.* 
 *ஒருவர் உரையைக் கேட்கும் போது முட்டுக் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால் அதில் எவ்விதத் தவறுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது✍️✍️✍️.* 

 *6272* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي غَالِبٍ ، أَخْبَرَنَاإِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَرَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِنَاءِ الْكَعْبَةِ مُحْتَبِيًا بِيَدِهِ هَكَذَا.


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை முழங்காலில் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *நூல்: புகாரி 6272* 


 *☪️🕋அதே நேரத்தில் மர்மஸ்தானம் தெரியும் வகையில் இவ்வாறு இருப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.☪️🕋* 


 *584* حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ أَبِي أُسَامَةَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلَاتَيْنِ : نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ ، وَعَنْ الِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلَامَسَةِ .


 *✍️✍️✍️மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : புகாரி 584* 

 
 *20. ☪️☪️☪️மாநபி☪️☪️ வழியில் 🕋🕋மழைத்🕋🕋 தொழுகை☪️☪️☪️* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 84* 


 *🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment