*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 88 👈👈👈*
*📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚*
*27. 🕋🕋🕋வெள்ளிக்கிழமை☪️☪️ சூரத்துல் 📚📚கஹ்ஃபு📚📚 ஒதுவத☪️☪️ வேண்டுமா❓🕋🕋🕋*
*28. 🥎🥎நடுவிரலில்🥎🥎 மோதிரம்⚫ அணியலாமா.❓⚫⚫*
*27. 🕋வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃபு ஒதுவத வேண்டுமா❓🕋*
*✍️✍️✍️வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவது சுன்னத் என்று ஆரம்பத்தில் கூறிவந்தோம். ஆனால் இது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை ஆகும். எனவே வெள்ளிக் கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்ற கருத்து மாற்றிக் கொள்ளப்பட்டது.✍️✍️✍️*
*🕋மக்கா 🕋வரை🕋 ஒளி❓🕋*
*🙋♂️🙋♂️🙋♂️யார் வெள்ளிக்கிழமை அன்று கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதி பின்பு தஜ்ஜாலை அடைந்தால் தஜ்ஜால் அவருக்குத் தீங்கு இழைக்க முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதியை ஓதுவாரோ அவருக்கும் மக்கா வரை ஒளி உண்டாகும் என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.🙋♂️🙋♂️🙋♂️*
*நூல்: ஷஅபுல் ஈமான் பாகம்: 3, பக்கம்: 112*
*✍️✍️✍️இந்த செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️நன்மை,தீமைகள், ஹலால், ஹராம் போன்றவற்றை திருக்குர்ஆன் அல்லது நபி (ஸல்) மட்டுமே கூற முடியும். அவர்கள் கூறியதை மட்டுமே மார்க்கமாக அங்கீகரிக்க முடியும்.எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது🙋♀️🙋♀️🙋♀️.*
*☪️மேகம்☪️ வரை☪️ ஒளி❓☪️*
*✍️✍️✍️யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு மறுமை நாளின் அவரின் பாவத்திலிருந்து வானத்தின் மேகம் வரை ஒளி ஏற்படும். மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️*
*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் செய்தியை இப்னு மர்தவைஹி அவர்கள் தனது தப்ஸீரில் பதிவு செய்திருப்பதாக தப்ஸீர் இப்னு கஸீரில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️இதில் இடம்பெற்றிருக்கும் காலித் பின் ஸயீத் பின் அபீ மர்யம் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். இவர் யாரென நாம் அறியவில்லை என்று இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️*
*(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 3, பக்கம்: 83*
*🙋♂️🙋♂️🙋♂️இந்த தரத்தில் அமைந்த அறிவிப்பாளர்களின் செய்திகள் ஆதாரமாகக் கொள்ளப்படாது.*
*அனைத்து சோதனையிருந்தும் பாதுகாப்பு?*
*யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை அன்று ஓதுவாரோ அவர் ஒவ்வொரு சோதனையில் இருந்தும் எட்டு நாள் பாதுகாக்கப்படுவார், தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அல்அஹாதீஸில் முக்தார் (பாகம்: 2, பக்கம்:50)*
*✍️✍️✍️இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முஸ்அப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.!✍️✍️✍️*
*(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 201*
*🌐பத்து 🌐நாட்கள்🌐 பாதுகாப்பு❓🌐*
*🙋♂️🙋♂️🙋♂️நான் உங்களுக்கு ஒரு அத்தியாயத்தை அறிவிக்கட்டுமா? அதன் மகத்துவம் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள இடைப்பட்ட அளவாகும். அதை ஓதியவருக்கு இது போன்ற நன்மைகள் கிடைக்கும். யார் வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் அது நீட்டிக்கப்படும் (அதை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர் ஆம் என்றார்கள். அது தான் கஹ்ஃப் அத்தியாயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தைலமீ)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இச்செய்தியில் ஹிஷாம் பின் அப்துல்லாஹ் பின் இக்ரிமா அல்மக்ஸுமி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இவர் அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️* ‘
*(நூல்: அல்லுஃபாவு வல்மத்ரூகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்:3, பக்கம்: 175)*
*☪️☪️அணைத்து நோயிலிருந்து பாதுகாப்பு❓☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️யார் கஹ்ஃப் அத்தியாத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடதிலிருந்து மக்கா வரை ஓலி கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை யிலிருந்து அடுத்த ஜூம்ஆ வரையிலும் மேலும் மூன்று நாட்கள் வரை பாவங்கள் மன்னிக்கப்படும். அவருக்காக காலை வரை வானவர்கள் ஆயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவார்கள். பைத்தியம் அணைத்து தொழுநோய், தஜ்ஜாலின் சோதனையிலிருந்து காப்பாற்றப்படுவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*(நூல் : தத்கிரதுல் மவ்லூஆத் பாகம்: 565*
*✍️✍️✍️இந்தச் செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டது. என்றும் இதில் இடம்பெறும் இஸ்மாயீல் என்பவர் பொய்யர் என்றும் எந்த செய்தியை பதிவு செய்துள்ள நூலாசிரியரே குறிப்பிடுகிறார்…✍️✍️✍️*
*28. 🥎நடுவிரலில் மோதிரம் அணியலாமா.❓🥎*
*🙋♂️🙋♂️🙋♂️நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலை பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம் தீன் குலப்பெண்மணி இதழிலும் முன்னர் எழுதி இருந்தோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது மேற்கண்ட விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு. இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
۳۹۱۱ حدثنا يحيى بن يحيى أخبرنا أبو الأحوص عن عاصم بن كليب عن أبي بردة قال قال علي تهاني شول الله صلى الله عليه وسلم أن أختم في إضبعي هذه أو هذه قال فأومأ إلى الوسطى والتي تليها رواه مسلم
*✍️✍️✍️நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை . இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை . இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*☪️☪️முஸ்லிம் நூலில் இடம்பெற்ற மற்றொரு அறிவிப்பில்☪️☪️*
نهاني – يعني النبي صلى الله عليه وسلم – أن أجعل خاتمي في هذه ، أو التي تليها – لم بدر عاصم في أي الثنتين
*✍️✍️✍️இரண்டு எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது✍️✍️✍️.*
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس عن عاصم عن أبي بردة عن علي قال نهاني رسول الله صلى الله عليه وسلم أن أتختم في هذه وفي هذه يعني الخنصر والإبهام
*🙋♂️🙋♂️🙋♂️கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது. எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக ஆறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்🙋♀️🙋♀️🙋♀️.*
*29. ☪️☪️☪️நோன்பு🕋🕋🕋 திறக்கும்🟣🟣 துஆ🤲🤲🤲*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 89*
*🌹🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment