பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 29, 2019

இறைவனை நினைவு (திக்ர்)* செய்வதன் சிறப்புகள

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 06 ]🍃*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖3⃣3⃣*

*☄ இறைவனை நினைவு (திக்ர்)*
          *செய்வதன்  சிறப்புகள் [ 01 ]*

*🏮🍂தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற பெரும் பெரும் அமல்களை, அதிக நேரம் எடுக்கும் அமல்களை, பொருளாதாரத்தை செலவிட வேண்டிய அமல்களை செய்தால் தான் இறைவனிடத்தில் பெரிய அளவு தரஜாக்களை பெறமுடியும் என்று நம்மில் பல பேர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.* ஆனால் மிகமிகக் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சில அமல்களில் அல்லாஹ் மிகப் பெரிய நன்மையை வைத்துள்ளான் என்பது *ஈமான் கொண்டவர்களுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய பாக்கியம், தனிப் பட்ட அருள் என்றே சொல்லலாம்.*

*🏮🍂அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் சின்னஞ்சிறு அமல்களையும் செய்வதில் அலட்சியம் காட்டி விடக் கூடாது.* உதாரணத்திற்கு சுப்ஹானல்லாஹ் என்று சொல்லும் தஸ்பீஹை எடுத்துக் கொள்வோம். நம்மில் பலர் தொழுது விட்டு முப்பத்து மூன்று தடவை சொல்ல வேண்டிய இந்த தஸ்பீஹை கண்டு கொள்வது கிடையாது. *தொழுகை முடிந்தவுடன் துள்ளிக் குதித்து தப்பி ஓடுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். தொழுகை முடிந்த பின், இதர நேரங்களில், ஓடும் வாகனங்களில், ஓய்ந்திருக்கும் வேளைகளில் என்று கிடைக்கின்ற கால அவகாசங்களில் சுப்ஹானல்லாஹ் என்று வாய்க்கு எளிமையான இந்தச் சிறிய வார்த்தையைச் சொல்லத் தவறி விடுகின்றோம்.* இதற்குக் காரணம் இதற்குரிய நன்மைகளை, அதன் சிறப்புகளை நாம் அறியாமல் இருப்பது தான்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாவங்கள்*
               *மன்னிக்கப்படுதல்*

6408- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا جَرِيرٌ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِيالطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ. رَوَاهُ شُعْبَةُ ، عَنِ الأَعْمَشِ وَلَمْ يَرْفَعْهُ*

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்._

_*🍃அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால்,*_

_*“உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களது இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான்.*_

_*அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.*_

_*அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான்.*_

_*அதற்கு வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் என்னிடம் என்ன வேண்டுகின்றார்கள்” என்று கேட்பான். “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கின்றனர்” என்று வானவர்கள் கூறுவார்கள்.*_

_*“அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று இறைவன் கேட்பான். “இல்லை. உன் மீது ஆணையாக அதிபதியே, அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன் “அவ்வாறாயின் அதைப் பார்த்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்” என்று கேட்பான். “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.*_

_*”அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்?” என்று இறைவன் வினவுவான். “நரகத்திலிருந்து” என்று வானவர்கள் பதிலளிப்பர். “அதனை அவர்கள் பார்த்திருக்கின்றார்களா?” என்று இறைவன் கேட்பான்.*_

_*வானவர்கள், “இல்லை, உன் மீது ஆணையாக அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று கூறுவர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்?” என்று கேட்பான்.*_

_*”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்று வானவர்கள் கூறுவர். அப்போது இறைவன், “ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன்” என்று கூறுவான்.*_

_*அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ ஒரு தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்று கூறுவார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கிய மற்றவனாக ஆக மாட்டான்” என்று கூறுவான்.*_

*🎙அறிவிப்பவர் :*
              *அபூஹுரைரா (ரலி),*

        *📚 நூல் : புகாரி 6408 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment