பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 29, 2019

ழுஹா *தொழுகையின்*சிறப்பு:*

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 05 ]🍃*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும
      
*☄உபரியான*
                *வணக்கங்கள்*
                            *புரிவோம் [ 17 ]*

*☄ழுஹா*
          *தொழுகையின்*
                        *சிறப்பு:*

_*🍃மனித உடலில் உள்ள எல்லா மூட்டுக்களுக்கும் மனிதன் தர்மம் செய்தாக வேண்டும். தான் சந்திப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும் தர்மமாகும்.* நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் ஸதகாவாகும். பாதையில் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும்.*_

_*🍃மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மமாகும். ழுஹாவுடைய நேரத்தில் தொழப்படும் இரண்டு ரக்அத்துக்கள் இவை அத்தனையையும் ஈடு செய்யும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’*_

*🎙அறிவிப்பவர்: அபூதர் (ரலி)*

*📚 *அபூதாவூத்: 1285 📚*

_🍃முஸ்லிமுடைய அறிவிப்பில், ‘சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் எனக் கூறுவதும் தர்மமாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. ழுஹா தொழுகை மனித உடம்புக்காகச் செய்யப்பட வேண்டிய ஸதகாவை ஈடு செய்கின்றது என இந்த நபிமொழி கூறுகின்றது._

_*🍃‘மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் எனக் கேட்கப்பட்ட போது, ‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது,.. போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் ழுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என நபியவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூ ஹுரைரா(ரலி)*

*📚நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242📚*

_(இது ஹஸனான அறிவிப்பு என ஷுஐப் அல் அர்னாஊத் கூறுகின்றார்.)_

*🏮🍂இந்த நபிமொழிகள் மூலம் ஸலாதுல் ழுஹா எனப்படும் ழுஹா தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்று என்பதையும் அதன் சிறப்பையும் அறியலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment