*🌐🌐🌐சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள்🌐🌐🌐*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉 தொடர் பாகம் 5👈*
*🌭🌭🌭அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை🌭🌭🌭*
*✍குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்கு குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.✍*
📚இதே அடிப்படையில் நபித்தோழர்களும், இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை.📚
*✍✍இதன் அடிப்படையில் அஜ்வா வகை பேரீச்சம் பழம் பற்றி புகாரியில் இடம்பெற்றுள்ள செய்தி பலவீனமானது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.✍✍*
🌭அஜ்வா ஹதீஸ் தொடர்பாக நம்முடைய நிலைபாட்டைத் தெளிவுபடுத்திய பின் அதற்கு எதிராக எடுத்துவைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இங்கே பதில் கொடுப்போம்.🌭
*5445* حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ رواه البخاري
_🌹அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :_🌹
*✍✍✍தினந்தோறும் காலையில் ஏழு “அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.✍✍✍*
*இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
*நூல் : புகாரி (5445)*
🌭🌭அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்கள் விஷத்தை முறிக்கின்ற அளவுக்கு ஆற்றல் கொண்டது. மனித உயிரைக் கொல்லும் எப்படிப்பட்ட விஷமாக இருந்தாலும் இந்தப் பழத்தை உண்டவருக்கு அந்த விஷம் ஒன்றும் செய்யாது என இந்தச் செய்தி கூறுகின்றது.🌭🌭
*🌐நிரூபித்துக்காட்ட வேண்டும்🌐*
*✍இந்தச் செய்தி மனிதர்களின் சுய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கம் நரகம் போன்ற இஸ்லாத்தின் மறைவான விஷயங்களைப் பற்றி பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.✍*
📗மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதிபயங்கரமான ஆற்றல் இருப்பதாக்க் கூறுகின்றனது. எனவே உண்மையில் அஜ்வா பழத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும். இந்தச் செய்தியை நம்பக்கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள்📗.
*✍✍இதை நிரூபித்துக்காட்ட இவர்களுக்கு அஜ்வா பழம், விஷம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. இவை இரண்டையும் எளிதில் வாங்கிவிட முடியும். எனவே அஜ்வா பழத்தை உண்டுவிட்டு விஷம் குடிக்க வேண்டும். இதன் பிறகு விஷம் இவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டால் இந்தச் செய்தி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம்✍✍* .
📙இந்தச் செய்தி உண்மையானது என்பதை நிரூபிக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. அசத்தியத்தை தோலுரித்திக்காட்ட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.📙
*✍✍ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்✍✍.*
📘இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான்📘.
*✍✍✍உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய். என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்✍✍✍* .
{أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ( *258* ) *2*
📕தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்📕.
*அல்குர்ஆன் (2 : 258)*
*✍இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் அஜ்வா பழம் தொடர்பான செய்தி அசத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்.✍*
📚📚இந்தச் செய்தியைச் சரியானது என்று வாதிடக்கூடியவர்கள் நாம் விடும் சவாலை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இது சரியான செய்தி என்று அவர்களின் வாய் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக்காட்ட மறுப்பதின் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்📚📚.
*✍✍அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள்.✍✍*
وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا *(87)* *4* وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا ( *1224* (
*🌐🌐அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்❓🌎🌎*
*அல்குர்ஆன் (4 : 87)*
📗📗தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்📗📗.
*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.✍✍✍*
*அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)*
*நூல்: அஹ்மத் 15478*
📙📙அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்📙📙.
*அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)*
*நூல்: முஸ்லிம் 1*
*✍எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.✍*
📘📘இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்📘📘.
*நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276*
*🌎உளறல்களும் விளக்கங்களும்🌎*
*✍✍இந்தச் செய்தியைச் சரி காணக்கூடியவர்கள் நமது வாதங்களுக்குப் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு உளறி வருகிறார்கள். இவர்களின் இந்த உளறல்களே இந்தச் செய்தி பொய்யானது என்பதை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது✍✍.*
*🕋ஆய்வாளருக்குரிய தகுதி என்ன❓🕋*
📕📕பயணத்திலும் உள்ளூரிலும் கடமையான தொழுகை இரண்டு ரக்அத்களாக இருந்தது. இதன் பிறகு உள்ளூரில் இருந்தால் நான்கு ரக்அத் தொழ வேண்டும் என இரண்டு ரக்அத்கள் அதிகமாக்கப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முன்பு கூறினோம்.📕📕
*✍✍இதன் பிறகு வேறு சில செய்திகளை கவனிக்கும் போது இந்தச் செய்தியை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்கிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து முன்பு கூறிய கருத்திலிருந்து மாறி இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு வந்தோம்.✍✍*
🌭🌭🌭அஜ்வா பேரீச்சம் பழம் தொடர்பாக மறுப்புக் கூற வந்தவர்கள் இந்தப் பிரச்சனையை சுட்டிக்காட்டி நாம் ஆய்வில் அறை குறையாக இருக்கின்றோம் என்பதைப் பின்வருமாறு கூறியுள்ளனர்🌭🌭🌭.
*✍✍✍பயணத் தொழுகை பற்றிய ஹதீஸை முன்னர் தூக்கி எறிந்து விட்டு பின்னர் நாம் ஏற்றுக் கொண்ட்தால் அறைகுறை நாம் அறைகுறை ஆய்வு செய்பவர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்✍✍✍.*
📚📚📚இவர்களின் இந்த உளறல் படி பார்த்தால் உலகத்தில் ஒரே ஒரு ஆய்வாளர் கூட இருக்க மாட்டார். இவர்கள் உலகில் யாரைப் பெரிய ஆய்வாளர் என்று கூறுகிறார்களோ அவர்களும் இதே அளவுகோல் பிரகாரம் அறைகுறை ஆய்வாளர்கள் தான்.📚📚📚
*✍மார்க்க விஷயங்களில் முன்பு ஒரு கருத்தைக் கூறிவிட்டு அது தவறு என்று தெரிய வரும்போது அதிலிருந்து மாறிக் கொள்வது அனைத்து ஆய்வாளர்களிடமும் சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடியதாகும்.✍*
📗📗📗இத்தகைய தவறு வராத ஒரு ஆய்வாளரும் உலகத்தில் இல்லை. ஆய்வுகளில் எந்தத் தவறும் ஏற்படாத ஒருவர் இருக்கின்றார் என்றால் நிச்சயமாக அவர் ஆய்வாளராக இருக்க முடியாது.📗📗📗
*✍✍நான்கு இமாம்கள் உட்பட அனைத்து இமாம்களின் நிலையும் இதுவே. முன்பு ஒரு மார்க்கச் சட்டத்தைக் கூறிவிட்டு பின்பு மாற்றிய சம்பவங்கள் இமாம்கள் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றது.✍✍*
📙📙📙ஒரு ஹதீஸை பலவீனமானது என்று கூறிவிட்டு பிறகு அது சரியானது என்றும் சரியான செய்தி என்று கூறிவிட்டு பிறகு பலவீனமானது என்று கூறுவதும் இவர்கள் பெரிதும் மதிக்கும் அல்பானீ போன்ற அறிஞர்களிடம் நிறையவே ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அல்பானீ ஆய்வில் அறை குறை என்று கூறுவார்களா❓📙📙📙
*✍✍✍சொன்னது தவறு என்று தெரிந்த பிறகும் ஊருக்கு பயந்துகொண்டு உண்மையைச் சொல்லாமல் மறைப்பது தான் பெருங்குற்றமாகும். விமர்சிப்பவர்களுக்கு அஞ்சாமல் தான் சொன்னது தவறு என்று ஒருவர் வெளிப்படையாக்க் கூறினால் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.✍✍✍*
📘📘📘சிறப்புக்குரிய ஒன்றைக் குறையாகச் சொல்லிக்காட்டுகிறார்கள் என்றால் இவர்களின் சிந்திக்கும் திறன் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது📘📘📘.
*✍மேலும் பயணத் தொழுகை தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் குறிப்பிட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று நாம் கூறிய போது இவர்கள் யாரும் சரியான விளக்கத்தை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவில்லை. இன்றைக்கு அஜ்வா பழ செய்தியைச் சரிகாண உளறுவதைப் போன்று அந்தச் செய்தியிலும் உளறினார்கள்.✍*
📕📕📕இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் இவர்களின் கற்பனைகளாக இருந்தது. அஜ்வா ஹதீஸை நிலைநாட்ட உளறியுள்ளதைப் போல் அந்த ஹதீஸிலும் உளறினார்கள்.📕📕📕
*✍✍நாம் மறு ஆய்வு செய்யும் போது இதற்குரிய விளக்கத்தை ஆதாரங்களுடன் நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. நாமாகத் தான் ஆய்வு செய்து அதை அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்✍✍*
*🌭🌭அஜ்வா செய்தி குர்ஆனுடன் முரண்படுகின்றதா❓🌭🌭*
🌭🌭🌭அஜ்வா செய்தி மேற்கண்ட அடிப்படையில் குர்ஆனுடன் முரண்படுகின்றது என நாம் கூறியதற்கு இவர்கள் எழுப்பும் கேள்வி என்ன?
அஜ்வா பற்றிய ஹதீஸ் இந்தக் குர் ஆன் வசனத்துக்கு முரண்படுகிறது என்று நாம் எடுத்துக் காட்டவில்லையாம். அஜ்வா சாப்பிட்டால் விஷம் பாதிக்கும் என்று ஒரு வசனம் இருந்தால் தான் அது குர் ஆனுக்கு முரணாம். அப்படி ஒரு வசனம் இல்லாததால் இது குர்ஆனுக்கு முரண்படவில்லையாம்🌭🌭🌭.
*✍✍✍இது போன்ற கேள்விகள் கேட்பவர்கள் வடிகட்டிய மூடர்களாகத்தான் இருப்பார்கள். குர்ஆனுடைய போங்கை அறியாதவரே இது மாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். இறைவன் பயன்படுத்தும் ஒரு வார்த்தை பல்வேறு பிரச்சனைக்குத் தீர்வாக அமையக்கூடிய சிறப்பைப் பெற்றுள்ளது.✍✍✍*
📚உதாரணமாக இஸ்லாத்தில் போதைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நவீன காலத்தில் கஞ்சா, ஹெராயின், அபின், போதை மருந்து ஊசிகள் இன்னும் பல பெயர்களில் போதைப் பொருட்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.📚
*✍இந்த போதைப் பொருட்களுக்கு இவர்கள் வைத்துள்ள எந்தப் பெயரும் குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஒருவர் கஞ்சா குடிக்கக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? அபின் சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? என்று கேட்டால் அவர் குர்ஆனைப் படிக்காதவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் படித்தும் புரியாத அறிவிலியாக இருக்க வேண்டும்.✍*
📗இவர்களின் கேள்வியும் இந்த லட்சணத்தில் தான் அமைந்துள்ளது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. எதுவெல்லாம் பொய்யாக இருக்கின்றதோ அவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிரானவை என்று சாதாரண அறிவு படைத்த ஒவ்வொரும் அறிந்து கொள்வர். நான் சொல்வது போல் அல்லாஹ் சொன்னால் தான் அது முரண் என்று ஒப்புக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்கே பாடம் நட்த்தும் அறிவீனர்களை என்னவென்பது❓📗
*✍✍🌭அஜ்வா வகை பேரீச்சம் பழத்தையும் விஷத்தையும் உண்டு பாதிப்பு ஏற்டவில்லை என்பதை நிரூபித்தாலே இந்த பேரீச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையாகும்.🌭✍✍*
📙அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஜ்வா பழத்துக்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருப்பதாக்க் கூறினார்கள் என்ற இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன.📙
*✍✍✍இத்தனை ஆண்டுகளில் உலகத்தில் ஒருவர் கூட அஜ்வாவையும் விஷத்தையும் உண்டு நிரூபித்துக் காட்டவில்லை. இந்த ஹதீஸ் செயல்படுத்த இயலாத செய்தி என்பதை உணர்ந்த சிலர் இதை வெளிப்படையாக மறுத்துவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தோன்றிய கற்பனைகளைக் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றார்கள்.✍✍✍*
📘ஹதீஸ் கூறாத கருத்தை இவர்கள் கூறுவதாலும் இதைச் செயல்படுத்திக் காட்டி நிரூபிக்க இவர்கள் முன்வரவில்லை என்பதாலும் இவர்களும் இந்த செய்தியைப் பொய் என்றே நம்புகின்றனர்.📘
*✍இப்படிப்பட்ட பொய்யான செய்தியை அல்லாஹ் தன் தூதருக்கு கூறினான். இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த பொய்யை மக்களுக்குக் கூறினார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு எதிரான கூற்றாக இவர்களுக்குத் தெரியவில்லை.✍*
📕ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட சக்தி உண்டு என்று யாராவது வாதிட்டால் அதை நிரூபித்துக் காட்டுவது அவருடைய கடமை. நிரூபிக்க இயலாவிட்டால் அது தவறானது என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு தெளிவுபடுத்துகின்றது.📕
*✍✍🌭🌭அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் அதைச் செய்து காட்ட முன்வரவில்லை. எனவே குர்ஆனின் அளவுகோலின் படி இது பொய் என்பது உறுதியாகி விட்டது. பொய்யான தகவலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறினார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கை இல்லையா❓❓🌭🌭✍✍*
🕋🕋இதன் பிறகும் இந்தச் செய்தி குர்ஆனுக்கு எப்படி முரண்படுகின்றது என்று அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்🕋🕋.
*🏓சம்பந்தமில்லாத கேள்விகள்🏓*
*✍✍✍நபி இப்ராஹீ (அலை) அவர்களின் சம்வத்தை நாம் சுட்டிக்காட்டியதால் அதிலிருந்து பின்வருமாறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.✍✍✍*
📚📚இந்த வசனத்திற்கும் அஜ்வாவிற்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறதா? அஜ்வா ஹதீஸைச் சரி காணும் யாரேனும் உயிர்ப்பிக்கச் செய்யும்-மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வின் வல்லமைக்குப் போட்டியாக, அஜ்வா சாப்பிட்டால் நாங்கள் மரணிக்கவே மாட்டோம் என்று தர்க்கம் செய்தார்களா? அல்லது அல்லாஹ் மரணிக்கச் செய்தவனை அஜ்வாவை ஊசி மூலம் செலுத்தி உயிர்ப்பிப்போம் என்று சொன்னார்களா? அல்லது அஜ்வா சாப்பிட்டால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம்; உயிரோடு உள்ளவர்களை அஜ்வா கொடுத்து மரணிக்கச் செய்யலாம் என்று இந்த ஹதீஸின் அர்த்தம் சொல்கிறதா? இல்லையே!📚📚
*🌐🌐என்ன அற்புதமான கேள்விகள்! என்னே சிந்தனைத் தெளிவு!🌎🌎*
📗📗இந்தக் கேள்விகளைக் கேட்டதன் மூலம் இவர்கள் கூறவரும் விளக்கம் என்னவென்றால் ஒருவன் அல்லாஹ்வின் தன்மைகள் தனக்கு இருப்பதாகக் கூறினால் தான் அதை செய்து காட்டுமாறு அவனிடம் கேட்கலாம்📗📗.
*✍🌭அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் யாரும் அஜ்வாவிற்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாக நம்பவில்லை. எனவே இதை நாங்கள் செய்துகாட்ட வேண்டிய அவசியமில்லை என்பதே இந்தக் கேள்விகளின் சாராம்சம்.🌭✍*
📙📙இந்த ஹதீஸைத் தூக்கிப் பிடிக்க இவர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதமும் இவர்களின் அறியாமையைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவே அமைந்துள்ளது.📙📙
*✍✍ஒருவன் கற்களுக்குச் சிந்திக்கும் சக்தி உண்டு. மரங்களுக்கு பேசும் சக்தி உண்டு. கத்தரிக்காயில் விஷ முறிவுக்கு மருந்து உண்டு என்று கூறினால் அதையும் இவர்களின் வாதப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறுபவனிடம் இவற்றைச் செய்து காட்டி நிரூபிக்குமாறு கேட்கக் கூடாது.✍✍*
📘📘ஏனென்றால் இவன் கற்களுக்கும் மரங்களுக்கும் கத்தரிக்காய்க்கும் அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாக்க் கூறவில்லை. சிந்திப்பதும், பேசுவதும், விஷத்தை முறிப்பதும் அல்லாஹ்வின் தன்மையில்லை. மாறாக இவை படைப்பினங்களின் தன்மைகள். எனவே இவனுடைய கூற்றை இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்📘📘.
*✍✍✍இதை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒருவனுக்கு அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாக நம்புவது எவ்வாறு மடமையோ அது போன்று ஒரு பொருளுக்கு இல்லாத தன்மை இருப்பதாக நம்புவதும் மடமையாகும். அந்தத் தன்மை வேறு படைப்புகளில் உள்ள தன்மையாக இருந்தாலும் சரியே.✍✍✍*
📕📕மனிதன் சிந்திப்பான் பேசுவான் என்று கூறினால் யாரும் இதை மறுக்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவரும் இதைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் அனைத்து மரங்களும் பேசும் என்று கூறினால் இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அதை நிரூபித்துக் காட்டுவது கடமை📕📕.
*✍சொல்லப்போனால் அல்லாஹ்வின் தன்மை தனக்கு இருப்பதாக ஒருவன் வாதிட்டால் அதைச் செய்துகாட்டி நிரூபிக்குமாறு கேட்பது நியாயமானது என்றால் அஜ்வா பழத்திற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் இருப்பதை நிரூபித்துக்காட்டுமாறு கேட்பது அதை விடவும் நியாயமானது.✍*
🕋🕋🕋ஏனென்றால் அல்லாஹ்வை யாரும் கண்ணால் பார்க்கவில்லை. அவனுடைய படைப்புகளைச் சிந்தித்து அல்லாஹ்வையும் அவன் ஆற்றலையும் அறிந்து கொள்கிறோம். இவ்வாறு சிந்திக்காதவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். எனவே இறை நம்பிக்கை என்பது சிந்தனை அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் உள்ள விஷயம்.🕋🕋🕋
*✍✍ஆனால் விஷத்தை முறிக்கும் தன்மையாகிறது அது மறைவான நம்பிக்கை தொடர்பானதாகவோ சிந்தித்து நம்ப வேண்டிய விஷயமாகவோ இல்லை. நேரடியாக்க் கண்ணால் பார்த்து சோதித்துப் பார்த்து நம்ப வேண்டிய விஷயம்✍✍* .
📚📚📚எனவே அல்லாஹ்வின் தன்மை எனக்கு உள்ளது என்று சொல்பவனை விட அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று கூறக்கூடியவர்கள் அதை நிரூபித்துக்காட்ட அதிகக் கடமைபட்டிருக்கின்றார்கள்.📚📚📚
*🌭🌭🌭அஜ்வா அல்லாஹ்வைப் போன்று பகுத்தறியும் சக்தி கொண்டதா❓🌭🌭🌭*
📗📗📗விஷத்தை வேண்டுமென்றே குடித்தால் அஜ்வா விஷத்தை முறிக்காது. பாம்பு போன்ற விஷப் பிராணிகளால் நாம் விரும்பாமல் விஷம் உடம்பில் ஏறிவிட்டால் அப்போது தான் அஜ்வா வேலை செய்யும் என்று இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் கூறுகின்றனர்.📗📗📗
*✍✍✍ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து முள் தானாக நமக்குக் குத்தினால், அதற்காக அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுப்போமா? ஒருவன் ஒரு முள்ளை எடுத்து வேண்டுமென்றே தனது காலில் குத்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுக்க முடியுமா? அதுபோல் தான் விஷப்பாம்பு தானாக நம்மைத் தீண்டினால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அஜ்வா நம்மைக் காக்கும். நாமாக திமிர் எடுத்துப்போய் விஷப்பாம்பை கடிக்க விட்டால் அல்ல.✍✍✍*
📙📙📙இப்படி வாதிடுவதன் மூலம் இவர்களுக்கும் சிந்தனைக்கும் கடுகளவும் சம்மந்தம் இல்லை என்பது உறுதியாகிறது. இதில் முள் குத்தினால் வலிக்காது என்று கூறப்படவில்லை. அப்படி கூறப்பட்டால் அதையும் நிரூபிக்குமாறு நாம் கேட்போம். அதுவும் பொய்யானது என்று நாம் மறுப்போம். இந்த ஹதீஸில் மறுமையில் கிடைக்கும் நன்மை பற்றி பேசப்படுகிறது. அதை நிரூபிக்குமாறு கேட்க முடியாது. அது உலகில் நிரூபித்துக் காட்டும் விஷயமே அல்ல. உதாரணம் காட்டுவது என்றால் இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த அறிவு கூட இவர்களுக்கு இல்லை.📙📙📙
*✍துன்பத்தை நாமாக வரவழைத்துக் கொண்டால் நன்மை கிடைக்காது என்பது சரிதான். ஏனென்றால் தன்னைத் தானே நோவினைப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்த காரியத்தைச் செய்து நன்மையை அடைய முடியாது✍.*
📘📘📘ஆனால் அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கின்றது என நம்பக்கூடியவர்களுக்கு விஷம் சாப்பிடுவது நோவினையான ஒன்றல்ல. ஏனென்றால் அஜ்வா விஷத்தினால் வரும் நோவினைகளைத் தடுத்துவிடும் வல்லமையுடையது என்று நம்புகிறார்கள். அதாவது அஜ்வா சாப்பிட்ட பின்னர் விஷம் சாதாரண உணவு என்ற நிலைமைக்கு வந்து விடுகிறது. எனவே இதைச் சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவர்கள் நம்பினால் இதை உதாரணமாகக் காட்ட முடியாது. அஜ்வாவுக்குப் பின்னர் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பினால் இவர்களும் இந்த ஹதிஸை நம்ப மறுக்கிறார்கள் என்றே பொருள்.📘📘📘
*✍✍எனவே இவர்களின் நம்பிக்கைப்படி பார்த்தால் அஜ்வா பேரீச்சம் பழத்தை உண்டுவிட்டு பிறகு விஷம் குடித்துக் காட்டுவது இஸ்லாத்தில் பாவமான காரியமல்ல. எனவே இதைச் செய்துகாட்ட இவர்களுக்கு எந்தத் தடையுமில்லை.✍✍*
📕📕📕முள் எதார்த்தமாக்க் குத்தியதா? அல்லது வேண்டுமென்றே குத்திக் கொண்டானா? என்பதை அல்லாஹ் பிரித்து அறியக்கூடியவன். எனவே வேண்டுமென்று குத்திக் கொண்டவனுக்கு அவன் நன்மை கொடுக்க மாட்டான்.📕📕📕
*✍✍✍🌭அஜ்வா பேரீச்சம் பழம் அல்லாஹ்வைப் போன்று பிரித்து அறியும் தன்மை கொண்டதா? விஷம் உடலுக்குள் சென்றால் இந்த விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டதா? அல்லது இவன் விரும்பாமல் விஷ ஜந்துக்களால் ஏற்றப்பட்டதா? என்று அஜ்வா பழம் சிந்திக்குமா❓🌭✍✍✍*
⏳⏳⏳விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டிருந்தால் அஜ்வா வேலை செய்யாதாம். இல்லாவிட்டால் வேலை செய்யுமாம். என்ன அறிவிப்பூர்வமான விளக்கம்❓⏳⏳⏳
*✍ஒருவன் விஷத்தை குடிபானம் என்று நினைத்து தவறுதலாக குடித்துவிட்டால் அப்போது அஜ்வா இவனைக் காக்கும். விஷம் என்று தெரிந்தே குடித்தால் அஜ்வா காக்காது என்று கூறுகிறார்கள். இப்போது அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மையுடன் விஷம் குடிப்பவனின் எண்ணத்தை அறிந்துகொள்ளும் சக்தியும் வந்துவிட்டது❓✍*
🕋இப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் தான் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.🕋
*✍✍ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அஜ்வா ஹதீஸ் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய நாட்டத்தைப் பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க அஜ்வாவைப் பற்றியே பேசுகின்றது. அஜ்வா செய்தி ஆன்மிக அடிப்படையில் சொல்லப்படவில்லை. மருத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கின்றது.✍✍*
📚நாம் அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை. அஜ்வாவின் ஆற்றலைப் பற்றியே சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றோம்📚.
*✍✍✍அல்லாஹ் நாடினால் நெருப்பு குளிராகும். கடல் பிளக்கும். மலை தூள்தூளாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்பது உண்மை. இதனால் நெருப்பு எப்போதும் குளிராக இருக்கும் என்றோ கடலை எப்போதும் யார் வேண்டுமானாலும் பிளக்கச் செய்யலாம் என்று கூறுவது அறிவீனம்.✍✍✍*
📗அல்லாஹ் நாடினால் வெண்டக்காய் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்று நான் சொல்லக்கூடாது. அதே நேரத்தில் வெண்டக்காயில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இருக்கிறது என்பதை அறிவிப்பூர்வமாக நிரூபித்து விட்ட பின் அல்லாஹ் நாடினால் குணமாகும் என்று கூறலாம்.📗
*✍🌭அஜ்வா ஹதீஸை சரிகாணக்கூடியவர்கள் அதை நிரூபித்துக் காட்டாத வரை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பற்றி பேசக்கூடாது. அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்பதை நிரூபித்த பின்பே அல்லாஹ்வின் நாட்டத்தால் அது விஷத்தை முறிக்கும் என்று கூறலாம்.🌭✍*
🌭🌭அஜ்வா செய்தியில் விஷம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூறுவது போல் நம் நாட்டம் இல்லாமல் உடலில் விஷம் ஏறினால் தான் அஜ்வா பாதுகாக்கும் என்பது ஹதீஸில் இல்லாத இவர்களின் சொந்தச் சரக்காகும்.🌭🌭
*✍✍🌭🌭அஜ்வாவை நிலைநாட்ட வந்து விஷத்தைக் குடித்து மரணித்துவிடக்கூடாது என்ற பயத்தில் இவர்களாக கூறிய கற்பனை விளக்கமாகும்.🌭🌭✍✍*
📙ஒரு பொருளுக்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்குமானால் விஷம் எந்த முறையில் ஏற்றப்பட்டாலும் அப்பொருள் விஷத்தை முறிக்க வேண்டும். இதற்கு தற்காலத்தில் உள்ள விஷ முறிவு மருந்துகளை உதாரணமாகக் கூறலாம்.📙
*✍✍✍ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறினாலும் அவர் வேண்டுமென்றே விஷத்தைக் குடித்தாலும் இந்த விஷ முறிவு மருந்தை அவருக்குக் கொடுத்தால் இந்த மருத்து விஷத்தை முறித்துவிடும்✍✍✍.*
🌭🌭🌭அஜ்வா என்பது இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று தானே. அஜ்வா விஷத்தை முறிக்கும் என்றால் மற்ற விஷ முறிவு மருந்துகள் வேலை செய்வது போல் அஜ்வாவும் வேலை செய்ய வேண்டும். மற்ற மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பது போல் அஜ்வாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.🌭🌭🌭
*✍🌭எனவே அஜ்வா ஹதீஸை சரிகாணக் கூடியவர்கள் கூறும் விளக்கங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. விளக்கம் என்ற பெயரில் இந்த ஹதீஸை மெம்மேலும் பலவீனப்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை🌭✍.*
📘வேண்டுமானால் இவர்களுக்காக நாம் சவாலை மாற்றி இவர்கள் ஆசைப்படக் கூடிய வகையில் கேட்கிறோம். இவர்கள் அஜ்வாவை மட்டும் சாபிடட்டும். விஷத்தைச் சாப்பிட வேண்டாம். இவர்கள் அஜ்வாவைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் மீது நாம் விஷ ஊசியை ஏற்றுகிறோம். இவர்கள் தமாக விரும்பி விஷத்தை ஏற்றிக் கொள்ளாத்தால் இந்த சவாலுக்கு இவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. இதையாவது ஏற்பார்களா❓📘
*✍✍மொத்த்தில் அஜ்வாவுக்கு வாக்காலத்து வாங்கும் ஒருவனுக்குக் கூட அதில் கடுகளவு நம்பிக்கை கூட இல்லை. எவனுமே அஜ்வா சாப்பிட்டால் விஷம் ஒன்றும் பண்ணாது என்றும் சொல்கிறான். விஷம் வேலையைக் காட்டும் என்றும் நம்புகிறான். எனவே எவனுமே நம்பவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை✍✍.*
📕நாம் மனதாலும் வாயாலும் அது பொய் என்கிறோம். ஆனால் இவர்களோ வாயால் நம்பி மனதாலும் நடவடிக்கையாலும் பொய்யாக்கிக் கொண்டு உள்ளனர். இது தான் வித்தியாசம்.📕
*🕋சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா❓*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 6*
No comments:
Post a Comment