சூனியம்,ஜோசியம்,நாள் நட்சத்திரம்,தாயத்து,சகுனம் பார்ப்பது
சூனியம் இறை நிராகரிப்புசசெயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் எந்த பயனையும் பெற்றுத்தராது தீமையை விளைவிக்கும் பாவச்செயலாகும்.
”அவர்களுக்கு எந்தப்பயனையும் தராத துன்பம் தரும் ஒன்றை -சூனியத்தைக்- கற்றுக்கொண்டார்கள். அல்குர்ஆன் 2:102
”சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெறமாட்டான். அல்-குர்ஆன் 20:69
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தர்ர்கள்:-
சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்புபவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்துவிட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.
‘யாரேனும் குறிகாரனிடம் வந்து ஏதேனும் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம்.
கிளி ஜோஸியம்,பறவை சகுனம் பார்ப்பதும் இணைவைத்தலாகும்.
பறவைகள் போடும் சப்தத்தையும்,செயலையும் வைத்து நல்ல சகுகுனம்,அபசகுனம் பார்ப்பது, நல்லது கெட்டதை தீர்மானிப்பது அன்றைய அரபிகளின் வழக்கமாக இருந்தது.
கூண்டிலிரந்து பறவை வலது பக்கம் பறந்தால் நல்லது நடக்கும். வெற்றி ஏற்படும் எனவும், இடப்பக்கம் பறந்தால் தீமை ஏற்படும்,தோலவி ஏற்படும் என்நும் நம்பினார்கள். இன்றும் நம்மிடையே பறவைகளை வைத்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பதையும் பார்க்கிறோம்.
காக்கை கரைந்தால் விருந்தினா வருவர்.ஆந்தை சப்தமிட்டால் யாராவது மரணமடைவர்.பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுப்போகும் என்றெல்லாம் நம்புகின்றனர்.
பறவைகள் பறப்பதற்கும், சப்தமிடுவதற்கும் மனிதர்களின் வாழ்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக ‘ பறவை சகுனம் கிடையாது.’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). ஆதாரம் : புகாரி எண்கள்: 5753, 5754, 5755, 5756, 5757
மேலும் ‘ சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி)
நாள்,நட்சத்திரம், ராவு காலம் பார்ப்பதும் ஷிர்க் இணை வைத்தலாகும்.
இன்று இந்தக்கள் மார்கழி மாதத்தை பீடையாகக் கருதுவதைப் போல அன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக்கருதி அதில் எந்த லேலை செய்தாலும் பீடையே சூழும் என்றும் அரேபியர்களின் நம்பினர்.செவ்வாய் புதன் கிழமைகளைப் பீடையாகக் கருதினர்.
எனவே நாள், மாதத்திற்கு நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது என்பது நமது நம்பிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள்
” ஸஃபர் மாதம் பீடை என்பது கிடையாது” என்றார்கள் (அறிவிப்பவர்:அபூஹ~ரைரா (ரலி), நூல் : புகாரி)
காலத்தை குறை கூறுவதும் ஷிர்க் அகும்
.இது கெட்ட காலம்!இது கெட்ட நேரம்! காலம் என்னை வஞ்சித்து விட்டது! இயற்கை சதி செய்த விட்டது! என்று மக்கள் குறைபடுவதைக் காணுகிறோம். காலத்தையும் நாளையும் எசுவது இறைலனை ஏசுவது போலாகும். நபி (ஸல்) அருளியதாக அபூ ஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான், ஆதமின் மகன் என்னை செய்கிறான்.அவன் காலத்தை திட்டுகிறான். நானெ காலத்தைப் படைத்தவன்.எனத கையில் தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே இரவு பகலை இயக்ககிறேன். (அதாரம்: புகாரி,முஸ்லிம்)
நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள் நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என நம்புவது குஃப்ரு இறை நிராகரிப்பாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘அல்லாஹ்வின் கிருபையாலும் அருளாலும் மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார்.இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது எனக்கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ்களில் வெயியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவதும் ஷிர்க் ஆகும்.தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் ராசிபலன்கள் பற்றிய நிகழ்சிசிகள் இடம்பெறாத நாட்களே இல்லை.இவற்றைப்படிப்பதும்,பார்ப்பதும் பெரும் கற்றமாகும்.ஏனெனில் இவை ஷிர்கிற்கு வழி வகுத்துவிடும்.
தாயத்து தகடுகளில் பலன் இருப்பதாக நம்புவதும் இணைவைத்தலாகும்.
சூனியக்காரன், ஜோஸ்யக்காரனின் ஆலோசனைப்படி கழுத்தில்,கையில்,இடுப்பில், தாயத்துகளையும் வீடுகளில் கடைகளில் தகடுகளையும் நம்மில் பலர் தொங்க விடுகிறார்கள். இதனால் சோதனைகளிலிருந்தும் திருஷ்டிகளிலிருந்தும் பாதுகாப்புப்பெற முடியும் என நம்புகிறாாகள். இதைப்போன்றே செல்வம் பெருகவும்,வளவாழ்வு அமையவும் பலவடிவங்களில் ராசியான கற்களில் மோதிரங்களும் அணிந்து கொள்கின்றனர். இவையனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு எதிரான கொள்கைகளாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’ (அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்)
தாயத்து, தகடு, தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகிறவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மன்னிக்க முடியாத பெரும் பாவியாகிறான்.
புதுமனை,கட்டிடங்கள் கட்டும்போது அங்கே திருஷ்டிக் காப்பிற்காக பூசணிக்காய், கொலுக்கள், பொம்மை உருவங்கள் போன்றவற்றை தொங்கவிடுகிறார்கள்.இவையும் ஷிர்க் ஆகும்
கப்ருகளை வணங்குவதும் ஷிர்க் ஆகும்
இறந்துவிட்ட நபிமார்கள், அவ்லியாக்கள், பெரியார்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.துன்பங்களை போக்குவார்கள்.பிள்ளை வரம் தருவார்கள், பரிந்துரை செய்வார்கள்; என எண்ணி உதவி தேடுவது, பிரார்த்திப்து போன்ற செயல்கள் அனைத்தும் ஷிர்க் ஆகும்.
‘அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை அழைக்காதீர். அவ்வாறு அழைத்தால் நீர் வேதனை செய்யப்படுவோரில் ஆகிவிடுவீர்.’ (அல்-குர்ஆன் 26:213)
‘அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாகக் கருதி அதே நிலையில் மரணித்தவன் நிச்சயமாக நரகில் புகுந்துவிட்டான்.’ என நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)நூல் : புகாரி)
கப்ருகளை கட்டுவது, விளக்கேற்றுவது, பட்டுவிரிப்பது, பூமாலை போடுவது,விழா எடுப்பது ஆகிய அனைத்தும் ஷிர்க் மன்னிக்க முடியாத இணைவைத்தல் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் ‘ கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும்.அவற்றை வணக்கஸ்தலமாக ஆக்குபவர்களையும், அங்கே விளக்கேற்பவாகளையும் சபிப்பானாக” என கடுமையாக எச்செரித்துள்ளார்கள்.
சிலர் கப்ரை வணங்குகிறார்கள். அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள சுவர்களையும், தூண்களையும் தொட்டுத்தடவி முத்தமிடுகிறார்கள். அதன் மண்ணை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள்.ஸஜ்தா செய்கிறார்கள்.பணிவுடன் நின்று மரியாதை செய்கிறார்கள். மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். ஹஜ்ஜிற்கு வரும் ஹாஜைிகளில் சிலர் மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பகீஹ் அடக்கஸ்தலத்திலள்ள மண்ணையும்,கற்களையும் பரக்கத்திற்காக சுமந்து வருகிறார்கள்.இவையெல்லாம் அல்லாஹ்வுக்கெதிராகச் செய்யும் இணைவைக்கும் பாவச்செயலகளாகும்.
அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தலும் இணைவைக்கும் பெரும் பாவமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
‘அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான்.’ (அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: அபூ தாவூது.)
கஃபத்துல்லாஹ், மஸ்ஜிதுந்நபவீ, இதரபள்ளிவாசல்கள், கப்ருகள்,அவ்லியாக்கள், பெற்றோர், பெரியார், குழந்தைகள் மீது சத்தியம் செய்வது அனைத்தும் அல்லாஹ் அல்லாதவற்றைச் சாரும். இவற்றுள் எதன் மீது சத்தியம் செய்தாலும் ஷிர்க் – இணைவைத்த பாவத்தைப் புரிந்ததாகும்
.
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவதும், ஆகுமாக்கியதை விலக்கிக்கொள்வதும் ஷிர்க் ஆகும்.
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது, அல்லாஹ்வைத்தவிர பிறருக்கும் அவனது செயலில் பங்கு உண்டு என நம்புவது, ஷரீஅத்தின் தீர்ப்பை விட்டுவிட்டு ஏனையத்தீர்ப்புகளை சரியெனக்கொள்வது இவையனைத்தும் சமுதாயத்தில் பரவி நிற்கும்’ஷிர்”கான காரியங்களாகும்.
இவையனைத்தும், “ஷிர்க்” என்பதற்குரிய ஆதாரம்:-
இவையனைத்தும், ”ஷிர்க் என்பதற்கு பின்வரும் இறை வசனம் சான்றாகும்.
‘இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும்,மதகுருமார்களையும் , மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டி ருக்கின்றனர்’. (அல்குர்ஆன்-9:31)
அதீ இப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டிய போது, ‘ கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும் வணங்கவில்லையே!’ என்று நான் கேட்டேன்.அதற்கு நபி(ஸல்) ‘ஆம்!’ எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்கி றார்கள். எனவே இதுதான் கிறித்தவர்கள் ‘தங்களின் பாதிரிகளுக்கும் துறவி களுக்கும் செய்யும் ‘இபாதத்’ வணக்கமாகும்” என்றும் கூறினார்கள்.’ (திர்மிதி)
No comments:
Post a Comment