பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 5, 2010

பாத்திஹாக்கள் பலவிதம் ? (2)

பாத்திஹாக்கள் பலவிதம் ? (2)

பந்தக்கால் பாத்தி(ஹா) யா? 

 கிழக்கு இராமனாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தக்கால் ஊன்றுதல்’  பக்தி சிரத்தையோடு நடைபெறுகிறது! அதாவது திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக திருமணவீட்டார், ஊர்த்தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம்’ இத்தனை மணிக்கு பந்தக்கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்’ என்று அழைப்பு விடுப்பார்கள்.
 குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை கம்பீரமான தலைப்பாகைத் தோற்றததில் காணலாம்.

 மேதகு ஆலிம்சா அவர்கள் அவசியம் போயாகவேண்டும். வந்தவர்களுக்கெல்லாம் தேனீர் அளித்துமுடித்தபின் வீட்டுக்காரர் ஆலிம்சா வைப்பார்க்க,ஆலிம்சா நாட்டாண்மையைப் பார்க்க, நாட்டாண்மையின் சிக்னல் கிடைத்ததும், ஆலிம்சா வழக்கமான ‘அல்பாத்திஹாவை‘ உரத்த குரலில் சொல்ல, துஆ ஓதிமுடித்த பிறகு வீட்டு தலைவாசலின் முன்புறம் ஒரு குழியை வெட்டி அதில் சட்டத்தை ஊன்றுவார்கள்.ஊர் பெரியவர்களெல்லாம் மிகுந்த பக்தியோடு அந்தச் சட்டத்தை (அல்லது மூங்கிலை) ஆளுக்கொரு கைகொடுத்து குழியில் இறக்கி மண் போட்டு ஊன்றி முடித்ததும், அங்கு தயாராக அரைத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சளை ஒவ்வொருவராக எடுத்து சட்டத்துக்குத் தடவுவார்கள். அதிலும் கீழிருந்து மேல் நோக்கித்தான் தடவவேண்டும் என்பது கட்டாய விதிகளில் ஒன்றாகும்..

 பின்னர் வீட்டுக்காரர் ஒரு தட்டு கொண்டு வருவார்.அதில் நூலில் கோர்க்கப்பட்ட மஞ்சள் துண்டுகளும் வெற்றிலைகளும் இருக்கும். அந்த மஞ்சள் வெற்றிலை மாலையை ஒரு பெரியவர் எடுத்து அந்த சட்டத்துக்குச் சூட்டுவார்.பின்னர் ஒரு தங்கச்சங்கிலியும் அந்த பந்தல் காலுக்கு அணிவிக்கப்படும! பின்னர் சலாம் சொல்லி அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். ஓதிய பாத்திஹாவுக்குரிய ‘பலனோடு’ மாண்புமிகு ஆலிம்சாஅவர்களும் கிளம்பிவிடுவார்கள்.

 இத்தனை கூத்துகளும் எதற்காக என்று நினைக்கிறீர்கள்?  வெயிலுக்கு இளைப்பாற ஒரு பந்தல் போடத்தான்! அதற்கென ஒரு வைபவம்! ஒரு பாத்திஹா!! ” பாத்திஹா இதற்காகவா அருளப்பட்டது ?”

 இதைவிட அசிங்கம் சில ஊர்களில் திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு ‘சேவிங்’ முகத்தைச் சிரைப்பதற்குக்குக் கூட ஆலிம்சாவைக் கூப்பிட்டு பாத்திஹா ஓதித்தான் சிரைக்கிறார்கள். அல்லாஹ்வும்,அவனது சத்தியத் தூதரும் காட்டிய உண்மையான இஸ்லாத்தின் தூய வடிவத்தை மறந்து நாசகார ‘பித்அத்’களில் ஆழ்ந்திருக்கும் நமது சமுதாயம் விழத்தெழுவது என்றோ ?

 ஆனால், அல்லாஹ்வின் அளப்பரிய அருளால் இன்று படிப்டியாக விழித்து விட்டது நமது சமுதாயம். . இளைய சமுதாயத்துடன் போட்டி போட்டுக் கொண்டு மூத்த சமுதாயமும் பீடுநடைபோட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு மறுமலர்ச்சியைக் காண்போம்!

பீடி பாத்திஹா

எனது தந்தையார் இறந்தபோது அவர்களின் அடக்கத்தில் பங்கேற்க முடியாது போயிற்று. காரணம் தகவல் கிடைத்தவேளை என் கணவர் கர்னாடகாவில் அலுவலக வேலையாக டூரில் இருந்தார்.

ஆகவே,அடக்கம் செய்த ஒருவாரத்திற்குப் பிறகே சென்னையிலிருந்து ஊர் செல்லமுடிந்தது.எங்கள் பகுதியில் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்த அன்றிலிருந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் மஃரிபு நேரத்திற்குப் பிறகு பாத்திஹா ஓதுவார்கள். (தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களிலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது)
இங்கெல்லாம் பெரும்பாலும் ஏதாவது தின்பண்டங்களை வைத்தே பாத்திஹா ஓதுவார்கள். பண்டத்தின் ஒரு பகுதி பாத்திஹா ஓதும் ஆலிம்சாவுக்குக் கொடுக்கப்படும். மீதியைத்தான் உறவினர்ளுக்கும் அண்டை அயலாருக்கும் பங்கு வைத்துக் கொடுப்போம். ஒருசில உறவினர்கள் தங்கள் பங்காக பாத்திஹாவிற்கு சில தின்பண்டங்களை அனுப்பி வைப்பார்கள்.
என் தந்தை பீடி குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தார்.ஆகவே ஒருநாள் என் அக்கா பாத்திஹா நேர்ச்சைக்கு சில தின்பண்டங்களுடன் தனியாக ஒரு சிறு தட்டில் எங்கள் தந்தை விரும்பி புகைக்கும் “பீடி பிராண்ட்” ஒரு கட்டும் ” ஒரு தீப்பெட்டியும்” வைத்து பாத்திஹா ஓதச் சொன்னாள்.
இந்த பாத்திஹா சடங்கே தேவையற்றது, அறிவீனமானது என நினைனப்பவள் நான்.பீடியை வைத்து பாத்திஹா ஓதுவது என்பது … நினைக்கவே மனதிற்கு மிகவும் கஷ;டமாக இருந்தது. அந்த மௌலவியிடம், ஏங்க, இப்படி பாத்திஹா ஓதலாமா? ” ஏன் தாராளமாக செய்யலாம். இறந்தவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை வைத்து தாராளமாக ஓதலாம்” என உடனே ஃபத்துவாவும் கொடுத்துவிட்டார். அடப்பாவமே! இப்படிப்பட்ட அனாச்சாரங்களுக்கெல்லாம் சாவு மணிஅடிக்க வேண்டிய மார்க்கம் தெரிந்தவர்கள் வயிறு வளர்ப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஃபத்துவாக்களை வீசுகிறார்களே!
என் அக்கா தான் மார்க்கம் தெரியாதவள். இந்த முல்லாக்களும் வழிகெடுப்பதில் சைத்தானை மிஞ்சுமளவிற்குக் போய் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் எங்கே உருப்படப் போகிறார்கள்? இறந்து போன ஒரு ஜீவன் பெயரால் என்னென்ன சடங்ககுள், சம்பிரதாயங்கள!; சொல்வதற்கே நாவு கூசுகிறது.
அக்காவின் அறியாமையை நினைத்துப் பரிதாபப் படுவதா? இந்த வழிகாட்டியான ஆலிம்சாவின் முட்டாள் தனத்தைப் பார்த்து ஆத்திரப்படுவதா?  என எனக்குத் தெரியவில்லை. அவரிடம் முடிந்தவரை மண்டையில் படுமளவிற்கு விளக்கிவிட்டு “இந்த அறிவிலிகளுக்கு சத்தியப் பாதையைக் காட்டுமாறு” துஆ செய்துவிட்டு சென்ளைனக்குக் கிளம்பிவிட்டோம்.

சமுதாயமே! நினைவில் வைத்துக்கொள்!

ஒருமனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர அவனது மற்றையக் கிரியைகள் யாவும் முடிவடைந்துவிடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. அவன் விட்டுச் செல்லும் பயனுள்ள கல்வி. 3. அவனின் நன்மைக்காக அல்லாஹ்விட்ம் பிரார்த்திக்கும் அவனது சந்ததி.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூலகள்: புகாரி,முஸ்லிம்)
தகவல்: மும்தாஜ் பேகம்,சென்னை.(http://albaqavi.com)





No comments:

Post a Comment