பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 5, 2010

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்! - Part 1

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள் ! - Part 1

அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.


அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?


1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !

2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !

3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!

4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!

5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!

6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!

7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)

8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!

9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!

10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !

11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!

12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக

நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.
மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)   
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!  இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?
சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ? இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?

என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.              இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன?
என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?
இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

இதோ பாருங்கள் !
நம் மக்களின் அறியாமையை
!

யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!

வியப்பாக இருக்கிறதா ? 

ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!

கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!

திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!

கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா!

என்னே மக்களின் மதியீனம்.

இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?
 

No comments:

Post a Comment