பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 5, 2010

பாத்திஹாக்கள் பலவிதம் ? (1)

பாத்திஹாக்கள் பலவிதம் ? (1)


நெஞ்சு பொறுக்குதில்லையே!
‘ரொட்டி’ அடுக்க வாருங்கள்!

தலைப்பார ரொட்டி பாத்திஹா – இது ஒன்றும் நவீன பாத்திஹா அன்று.
 மிகப்பழமையான பாத்திஹாதான். குடும்பத்தில் மூத்தவர்களுக்கு, அதுவும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே ஓதும் ஓர வஞ்சனையான பாத்திஹா இது. ஒரு நபரின் திருமண நாளுக்கு முந்திய நாள், அல்லது சுன்னத் (விருத்தசேதனம்) செய்வதற்கு முந்திய நாள் இந்நிகழ்ச்சியைச் செய்யும் பழக்கம் இன்று வரை நெல்லை மாவட்டத்தில் வழக்கத்திலுள்ளது. ரொட்டி அடுக்க வாருங்களென வீட்டுக்கு வீடு அழைப்பு வரும். ஊரில் மாண்புமிகு பேஷ் இமாம் அவர்களும் மரியாதைக்குரிய மோதினார்(முஅத்தின்) அவர்களும் ஊர்த்தலைவர் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் புதுப் பொலிவுடனும் பூரிப்புடனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இதன் சிறப்பு அம்சம் யாதெனில் குடும்பச் சுமையை (திருமணம்) ஏற்கப் போகும் நபரின் உயரத்திற்கு அரிசி மாவு ரொட்டி 25 சதவீதமும், மெதுவான பேக்கரி பன் ரொட்டி 75 சதவீதமும் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவார்கள். இந்த அடுக்கின் மேற்புறமும் தரையிலும் பல்சக்கர வடிவில் தயாரித்த அரிசி மாவு ரொட்டியை அடுக்குவது அழகுக்கு அழகு ஊட்டுவதாக அமைகிறது.
பின்பு நாரிலே தொடுத்த மல்லிகைப் பூவின் ஒரு முனையை ரொட்டி அடுக்குகளின் முன்பாக, கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மாப்பிள்ளையின் தொப்பியில் சுற்றுவார்கள். மற்றோர் முனையை மேற்புறமுள்ள சக்கர ரொட்டியுடன் ‘கணெக்ஷன்’(இணைப்பு) கொடுத்து விடுவார்கள். அடுக்கப்படும் ரொட்டிகள் கீழே விழாதா? பெரிய ‘கராமத்தாக இருக்கிறதே? என்று நீங்கள் பார்க்க ஆசைப்படலாம்.

ஆனால் நமது மரியாதைக்குரிய மோதினார் அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கராமத் நிகழ்வதைத் தடுத்து விடுகிறார். ஆம், மூன்று ஆள் உயர குச்சிகளை, அடுக்கும் ரொட்டிகள் விழாதவாறு பயபக்தியுடன் முக்கோண வடிவத்தில் பிடித்துக் கொள்வார். மெய் மறந்த நிலையில் அனைவரும் இந்த அதிசய நிகழ்ச்சியை, பயபக்தியுடனும் ரொட்டியைச் சிறிது நேரத்தில் சுவைக்கப் போகிறோம் என்ற ஆவலிலும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உரத்த குரலில் ஒரு சப்தம் வரும், நடுங்கி விடாதீர்கள்!

வழக்கமாக நாம் கேட்கும் ‘அல் பாத்திஹா’ தான். சப்தத்தைக் கேட்டவுடன், தெரிந்த சிலர் சூராக்களை முணுமுணுப்பர். தெரியாத பலர், ரொட்டியைப் பார்த்து வாயைச் சப்புவர். பின்பு ஓரவஞ்சனையாக நடந்து கொள்வதைப் பாருங்கள். மாண்புமிகு பேஷ் இமாம் , மோதினார், ஊர் முக்கியஸ்தர்களுக்கு பல் சக்கர வடிவமுள்ள அரிசி மாவு ரொட்டி. மற்றவர்களுக்கு ஜுரம் கண்டவர்களை டாக்டர்கள் சாப்பிடச் சொல்லும் ‘பன் ரொட்டி’, சிரிக்காதீர்கள்!
சிந்தியுங்கள்!

வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமன்று, வேதனையான நிகழ்ச்சியும்கூட. மூடப்பழக்க வழக்கத்தைப் போக்க வந்த நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நம்மவர்களிடத்தில் இவ்வளவு பெரிய அறியாமையா?
நம்முடைய மாண்புமிகு லெப்பைமார்கள் ரொட்டி சாப்பிடுவதற்காகச் செய்த திட்டமிட்ட சதி இது என்று புரியவில்லையா?

No comments:

Post a Comment