💞 சுவனத்தின் அழகிய கன்னிப் பெண் உம்மு ரூமான் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• உம்மு ரூமான் பின்த் ஆமிர் (ரலி) என்பது இவர்களின் முழுப்பெயராகும். இவர்களின் இயற்பெயர் ஸைனப் என்பதாகும். இருப்பினும் இவரின் குடும்ப பெயரை கொண்டே இவர் அறியப்படுகிறார். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே நல்லோழுக்கமும், நற்குணம் கொண்டவராக திகழ்ந்தார்கள்.
• இவர் அரேபிய தீபகற்பத்தில் உள்ள சராத் என்ற இடத்தில் தங்களது இளமை பருவத்தில் வாழ்ந்தார்கள். இவர்களை அப்துல்லா பின் ஹாரித் ஸக்பரா அஸ்தி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இதன் பின்பு இருவரும் மக்காவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.
• கணவர் குறுகிய காலத்திலேயே இறந்து விட, சிறிது காலத்திற்கு பின்பு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை மறுமணம் செய்து கொண்டார்கள்.
• இவருக்கு அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் மூலம் உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரழி) மற்றும் அப்துர்ரஹ்மான் (ரழி) என்ற இரண்டு பிள்ளைகள் உண்டு. ஆயிஷா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நிக்காஹ் செய்து கொண்டார்கள். அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் சிறந்த குதிரை வீரராக வரலாற்றில் திகழ்ந்தார்கள்.
• உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களில் இவரும் ஒருவர்.
• அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து சிறிது காலத்திற்கு பின்பு இவர்களும், ஆயிஷா (ரழி) அவர்களும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து அங்கயே வாழ்ந்தார்கள்.
• உம்மு ரூமான் (ரலி) அவர்கள் அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுப்பட கூடியவர்களாகவும், தன்னுடைய கணவனுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய கூடியவர்களாகவும் மேலும் பொறுமை மற்றும் சகிப்பு தன்மை கொண்டவராகவும் இருந்தார்கள்!
• ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உம்மு ரூமான் (ரலி) அவர்களை இவ்வாறு குறிப்பிட்டார்கள்! உங்களில் எவராவது சுவனத்தின் அழகிய கன்னிப் பெண்ணொருத்தியைக் காண விரும்புவீர்களென்றால், (அவர்கள்) உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் காணட்டும்!
(நூல் : அல் ஜாமி : 5628)
• ஹிஜ்ரி 6ம் ஆண்டு மதினாவில் உம்மு ரூமான் (ரழி) அவர்கள் மரணம் அடைந்தார்கள். இவர்களின் பாவத்தை மன்னிக்கும் படி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தும் உள்ளார்கள்.
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَـتُوْۤا اِلٰى رَبِّهِمْۙ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்!
(அல்குர்ஆன் : 11:23)
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment