*நோன்பை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💕*
• நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமையாகும்! அரபி மொழியில் நோன்பு ‘ஸவ்மு’ எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும்.
• நோன்பைத் தவிர்த்து அமல்களும் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையாக தெரியும்!
• நோன்பு ஓர் ரகசியமான அமலாகும்! நோன்பை நிறைவேற்றுகின்ற மனிதனையும் அல்லாஹ்வையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது.
• தனக்கு முன்னால் தனது ஆசைகளை, பசியை, தாகத்தை போக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அவன் அல்லாஹ்வின் பொருத்தம் நாடியவனாக அவற்றை விட்டும் நீங்கி இருக்கின்றான்!
• அல்லாஹ் நோன்பை பற்றி கூறும் போது : நோன்பு வைப்பத்தன் மூலம் நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையவர்களாக ஆகலாம்! என்று இறையச்சம் என்பது அல்லாஹ் கூறியவற்றை செய்வது தடுத்த வற்றை விட்டு விலகி நிற்பதுமாகும்!
*💟 யார்? யார்? மீது நோன்பு கடமை :*
• முஸ்லீம் அல்லாதவர்!
• பருவமடையாத சிறுவர், சிறுமி!
• புத்தி சுவாதினம் இல்லாதவர்!
• நிரந்தர நோயாளி!
• தள்ளாத வயதை அடைந்த முதியவர்கள்!
ஆகியோரின் மீது நோன்பு கடமை கிடையாது!
• இவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நோன்பு நோற்கலாம்!
*💟 நிய்யத் :*
• எந்த அமலாக இருந்தாலும் நிய்யத் அவசியம் வைக்க வேண்டும்!
• ஆனால் இன்று பெரும்பாலான ஊருகளில் நிய்யத் என்று ஏதோ ஒரு துஆவை ஓதி கொண்டு உள்ளார்கள்! ஆனால் நபி அவர்கள் அவ்வாறு எந்த துஆவையும் கற்று தரவில்லை!
நபி அவர்கள் கூறினார்கள் :
*யார் ஃபஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைக்க வில்லையோ
அவருக்கு நோன்பு இல்லை.*
(நூல்: திர்மதி : 730)
• நிய்யத்திற்கு என்று நபி அவர்கள் எந்த துஆவையும் அல்லது சிறப்பு சொற்களையும் கற்று தரவில்லை!
• நாம் உள்ளத்தில் நோன்பு வைக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! வாய் வழியாக சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது!
• நாம் தூங்கும் போதே நாளைக்கு இன்ஷாஅல்லாஹ் நோன்பு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறங்க வேண்டும் ஒரு வேலை நாம் தூங்கி எழும் போது பாங்கு கூறி விட்டாலும் நாம் அப்படியே நோன்பை தொடரலாம்!
*💟 ஸஹர் நேரம் :*
*ஸஹரை நாம் பாங்கு கூறுவதற்கு முன் வரை செய்யலாம்! அதற்கு மேல் செய்ய கூடாது*
(நூல்: புகாரி : 576)
• சில ஊருகளில் இரவே ஸஹர் செய்து விடுவார்கள் இன்னும் சிலர் 1 மணிக்கே ஸஹர் செய்து விடுவார்கள் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது!
• இரவின் கடைசி பகுதி பாங்கு கூறுவதற்கு முன்னாள் தான் நாம் ஸஹர் செய்ய வேண்டும்!
• பாங்கு கூறுவதற்கு 10 அல்லது 15 நிமிடங்கள் முன்னால் ஸஹர் செய்து முடித்து விட வேண்டும்!
*💟 ஸஹர் முக்கியமாக செய்ய வேண்டும் :*
• ஸஹர் செய்வது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகும்! நோன்பு வைக்க கூடியவர்கள் அவசியம் ஸஹர் செய்ய வேண்டும்!
• ஸஹர் செய்ய உணவு பொருட்கள் இல்லை என்றால் பேரிச்சப்பழம் கொண்டாவது ஸஹர் செய்ய வேண்டும்!
*'நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'*
(நூல் : புகாரி : 1923)
*💟 விடி ஸஹர் :*
• இன்று பல ஊர்களில் அறியாமையின் காரணமாக விடி ஸஹர் என்று ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள்!
• நீண்ட நேரம் தூங்கி விடுவதால் ஸஹர் செய்ய முடியாமல் சென்று விடும் அதனால் இவர்கள் பாங்கு கூறிய பின்பும் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு நோன்பு வைக்கிறார்கள்! இதற்க்கு விடி ஸஹர் என்று கூறுவார்கள்!
• ஆனால் இதற்க்கு அல் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது சஹபாக்கள் வாழ்கைலோ எந்த ஆதாரம் கிடையாது!
• இவ்வாறு விடி ஸஹர் செய்து நோன்பு வைத்தால் அந்த நோன்பு கூடாது!
• ஸஹர் செய்ய முடியாமல் தவறி விடும் என்று அஞ்சினால் நாம் உறங்கும் போதே நிய்யத் உடன் உறங்கலாம்! அதனால் ஸஹர் தவறினாலும் நாம் அப்படியே நோன்பை தொடரலாம்!
*💟 நோன்பை விரைவாக திறக்க வேண்டும் :*
• சூரியன் உறுதியாக மறைந்து விட்டது என்று தெரிந்து விட்டால் நோன்பு திறப்பதை தாமதம் படுத்த கூடாது முடிந்த அளவுக்கு விரைவாக நோன்பு திறக்க வேண்டும்!
*நோன்பை பேரீத்தம் பழம் கொண்டு திறப்பது சுன்னாஹ்வாகும்!*
(நூல்: திர்மிதீ)
*💟 நோன்பின் வகைகள் :*
*❤️ பர்ளான நோன்பு :*
• பர்ளான நோன்பை கட்டாயம் வைக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!
*💜 ரமலான் மாத நோன்பு :*
• ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது ஒரு முஸ்லீம் மீது கட்டாய கடமையாகும்!
• மார்க்கம் சலுகை அளித்தவர்களை தவிர மற்ற அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு அவசியம் வைக்க வேண்டும்! விட்டால் குற்றம் ஆகும்!
(அல்குர்ஆன் 2:183)
*💜 நேர்ச்சை நோன்புகள் :*
• ஒரு மனிதர் தன்னுடைய ஏதேனும் ஒரு தேவையை குறித்து, இந்த தேவையை அல்லாஹ் நிறைவேற்றி விட்டால் நான் இத்தனை நாட்கள் நோன்பு நோற்பேன் என்று அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்யும் நோன்புகளாகும்!
• அவ்வாறு அவர் நேர்ச்சை செய்வது போன்று நிறைவேறி விட்டால் அப்போதில் இருந்து அவர் மீது நோன்பு வைப்பது கட்டாய கடமையாகும்!
• ஆனால் அவர் நேர்ச்சை செய்வது போன்று நிறைவேற வில்லை என்றால் அவர் மீது நோன்பு வைப்பது கடமை கிடையாது!
*💜 குற்ற பரிகார நோன்பு :*
• இஸ்லாத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குறித்த சில பாவங்களை செய்யும்போது அதற்கு பரிகாரமாக நோன்பு நோற்பதை கடமையாக்கி உள்ளது!
*💙 சத்தியத்தை முறித்தல் :*
• ஒருவர் உறுதியான சத்தியம் செய்து விட்டு பின்னர் அச்சத்தியத்தை முறித்து விட்டால் அவர் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு உடையளிக்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் இதற்க்கு சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்கள் நோன்பு நோற்க்க வேண்டும்.
(அல் குர்ஆன் : 5 : 89)
*💙 கணவன் மனைவி சேருதல் :*
• நோன்பு வைத்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விட்டால் நோன்பு முறிந்து விடும்! இவ்வாறு செய்வது குற்றம் ஆகும்!
• இதற்க்கு பரிகாரம் :
ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்! (அல்லது) 2 மாதங்கள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும் (அல்லது) 60 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்!
(நூல் :புஹாரி :1936)
*❤️ சுன்னத்தான நோன்புகள் :*
• சுன்னத்தான நோன்புகள் ரமலான் மாதம் அல்லாத மற்ற நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தது அல்லது பிறரை நோன்பு வைக்கும் படி ஏவியது இவைகள் தான் சுன்னத்தான நோன்புகள் ஆகும்!
• சுன்னத்தான நோன்புகளை வைப்பவு கட்டாய கடமை அல்ல! வைத்தால் நன்மை கிடைக்கும் நபி அவர்களின் சுன்னாஹ் பேணிய நன்மை கிடைக்கும்! விட்டால் குற்றம் கிடையாது!
*💜 ஆறு நோன்பு :*
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர்காலமெல்லாம் நோற்றவராவார்” என நபி (ஸல்) கூறினார்கள்!
(நூல் : அபூதாவூத் : 2078)
• ரமலான் மாதம் முடிந்த பிறகு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் 6 நோன்புகள் வைப்பது சுன்னாஹ்!
• தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்று அல்ல விட்டு விட்டும் வைக்கலாம் ஆனால் அந்த மாதத்திற்குள் வைக்க வேண்டும்!
*💜 ஷஅபான் மாதம் :*
• ஷஅபான் மாதத்தில் நபி அவர்கள் அதிகம் நோன்புகள் வைத்து உள்ளார்கள்! நாமும் இந்த மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்புகள் வைக்கலாம்!
• குறிப்பிட்ட நாள் என்று எல்லாம் ஷஅபான் உடைய அதிகமான நாட்களில் நபி அவர்கள் நோன்பு வைத்து உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 1969)
*நோன்பின் சிறப்பு :*
• ஷஅபான் மாதத்தில் தான் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்!
(நூல் : நஸாஈ : 2357)
*💜 ஆஷுரா நோன்பு :*
• நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் பிரஹவ்ன் இடம் இருந்து காப்பாற்றிய நாளை யூதர்கள் நோன்பு நேற்று கொண்டாடினர்கள்!
• நபி (ஸல்) அவர்கள் உங்களை விட நானே மூஸா (அலை) அவர்களுக்கு நெருக்கமானவன் என்று கூறி தானும் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு வைக்க சொன்னார்கள்!
• முஹர்ரம் மாதத்தில் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் நோன்புகள் நோற்க்க வேண்டும் இது சுன்னாஹ்வாகும்!
(நூல் : முஸ்லிம் : 2088)
*நோன்பின் சிறப்பு :*
• கடந்து சென்ற ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பு கிடைக்கும்!
*💜 அராபஃ நோன்பு :*
• துல் ஹஜ் உடைய 9 வது நாளில் ஒரு நோன்பு வைப்பது சுன்னாஹ்வாகும்!
• அரஃபாவில் தங்கும் ஹாஜிகள் மட்டும் நோன்பு நோற்க்க கூடாது! நபி அவர்கள் தடை செய்து உள்ளார்கள்!
(நூல் : அபூதாவூத் : 2084)
• அரஃபாவில் தங்கும் ஹாஜிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் நோன்பு நேர்க்கலாம்!
*நோன்பின் சிறப்பு :*
• முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாகும்!
(நூல் : முஸ்லிம் : 2151)
*💜 வாரத்தில் இரண்டு நோன்புகள் :*
• வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு வைப்பது சுன்னாஹ்வாகும்!
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத்தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்!
(நூல்: நஸயீ : 2321)
*💜 மாதம் மூன்று நோன்புகள் :*
• ஒவ்வொரு மாதமும் 13-14-15 ஆகிய நாட்களில் நோன்பு வைப்பது சுன்னாஹ்வாகும்!
*நோன்பின் சிறப்பு :*
• வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்!
(நூல் : முஸ்லிம் : 2136)
*💟 நோன்பு வைக்க கூடாதா நாட்கள் :*
*💝 தொடர்ந்து நோன்பு நோற்க்க கூடாது :*
நபி(ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.
(நூல் : புகாரி : 1922)
• ரமலான் மாதத்தை தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து நோன்பு நோற்க்க கூடாது!
*💝 இரண்டு பெருநாட்களில் நோன்பு நோற்க்க கூடாது :*
• ரம்ஜான் (நோன்பு பெருநாள்) மற்றும் ஹஜ் பெருநாளில் நோன்பு நோற்பதை நபி அவர்கள் தடை செய்து உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 1990)
*💝 அய்யாமுத் தஷ்ரீக்குடைய மூன்று நாட்கள் :*
• அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்த நாட்களில் நோன்பு நோற்க்க கூடாது!
(நூல்: அஹ்மத்)
*💝 வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :*
• நபி அவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க தடை செய்து உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 1985)
• யாரேனும் வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும் என்றால் அவர் வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி, சனிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும்!
• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்!
*💝 சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :*
• உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்!
(நூல் : திர்மிதி)
• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்!
*💝 ஷாஅபான் மாதத்தின் இறுதி இரண்டு நாட்கள் நோன்பு நோற்க கூடாது :*
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்குமுந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்.
(நூல் : முஸ்லிம் : 1976)
*அல்லாஹ் போதுமானவன் 💞*
No comments:
Post a Comment