பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 14, 2021

பாவிகளாக்கும் பராஅத் இரவு

*ஏக இறைவனின் திருப்பெயரால்*


*பாவிகளாக்கும் பராஅத் இரவு*

📖‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்)📖

👇அவசியம்  படியுங்கள் 👇

💙 செய்ய கூடாதாவைகள் :

❤️ குறிப்பிட்ட நாளில் மட்டும் நோன்பு வைத்தல் : 

• நபி (ஸல்) அவர்களும் சரி, சஹாபாக்களும் சரி யாரும் ஷாபானில் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து நோன்பு வைத்தது கிடையாது அந்த நாளில் நோன்பு வைத்தால் இவ்வளவு சிறப்பு உண்டு என்று கூறியதும் கிடையாது!

❤️ குறிப்பிட்ட இரவில் மட்டும் நின்று வணங்குதல் :

• நபி அவர்கள் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள் இதை தவிர்த்து நபி அவர்கள் வாழ்விலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ ஒரு செய்தி கூட கிடையாது! ஷாபான் இரவில் நின்று தொழுதார்கள் சிறப்பு திக்ர் செய்தார்கள் என்று! 

• ஷாபான் 15 ம் இரவு அதிகம் நன்மை தர கூடியது அதிக அமல் செய்ய வேண்டும் என்றால் நமக்கு முன் மாதிரியாக நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் அமல் செய்து காட்டி இருப்பார்கள்!

❤️ மூன்று யாஸீன் ஓதுதல் :

• முதலில் சூரா யாஸீன் பற்றி வர கூடிய அனைத்து ஹதீஸ்களுமே பலகீனம்!

• இரண்டாவது நாம் ஒரு வாதத்திற்கு அந்த ஹதீஸ்யை எற்றாலும் எந்த இடத்திலும் மூன்று யாஸீன் ஓதினால் இந்த சிறப்பு என்று நபி அவர்கள் கூற வில்லையே?????

• இவர்களே ஒரு செய்தியை கூறி இவர்களே அதற்கு இவ்வளவு சிறப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்!!!

• இவ்வாறு ஒரு பொய்யான செய்தியை கூறி அமல் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைத்து விட போகிறது???

💟 பராஆத் இரவு கொண்டாட கூடியவர்கள் காட்டும் ஆதாரங்கள் :

🖤 ஷாபான் 15 ம் இரவில் தான் அல் குர்ஆன் இறங்கியதாம் : 

 தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

(அல் குர்ஆன் : 44:2-4)

• இந்த வசனத்தை ஆதாரம் ஆக வைத்து பராஆத் இரவு என்று சிறப்பு கொண்டாடுகிறார்கள்!

• இந்த வசனத்தில் வரும் பாக்கியம் பெற்ற இரவு என்பது பராஆத் இரவை குறிக்குமாம் இதை ஆதாரம் ஆக வைத்து இவர்கள் அந்த அந்த இரவை சிறப்பு கொண்டாடுகிறார்கள்!

• ஆனால் அல் குர்ஆன் எப்போது இறக்கியது - பாக்கியம் பெற்ற இரவு எப்போது என்று அல்லாஹ்வே தெளிவாக கூறி உள்ளான் : 👇

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
 
(அல்குர்ஆன் : 2:185)

• பாக்கியம் பெற்ற இரவு மற்றும் அல் குர்ஆன் இறக்கிய இரவு என்பது ரமலான் மாதத்தின் லைலத்துல் கத்ர் இரவை மட்டுமே குறிக்கும் என்று எல்லா மார்க்க அறிஞர்களுக்கும் கூறி உள்ளார்கள்!


🖤 பராஆத் இரவும் - அமல்களும் : 

ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.

அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : இப்னுமாஜா : 1378)

• இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

• இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

• மேலும் இமாம் புஹாரி (ரஹ்) மற்றும் இமாம் நஸயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ்யை ஏற்று கொள்ள கூடாது என்று கூறி உள்ளார்கள்! 

(நூல் : அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் )

🖤 ஷாபான் 15ம் இரவில் கபூர் ஜியாரத் செய்தல் : 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( நூல்: திர்மிதி) 

• இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே ஹதீஸ் கீழ் குறிப்பிட்டு உள்ளார்கள்! இவர்கள் மட்டும் அல்லாமல் இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ்யை மறுக்கிறார்கள்! இந்த ஹதீஸ் பற்றி திர்மிதி இமாம் அவர்களே விளக்கமாக கூறி உள்ளார்கள்! 

• ஆனால் இந்த ஹதீஸ்யை ஆதாரம் ஆக காட்ட கூடியவர்கள் கிழே திர்மிதி இமாம் குறிப்பிட்டத்தை காட்ட மாட்டார்கள்! 

🖤 சிறப்பு தொழுகை :

ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளார் : முஹம்மத் பின் அலீ

(நூல் : ஃபலாயிலு ரமலான்- இப்னு அபித் துன்யா)

• இந்த ஹதீஸ்யை அறிவிக்க கூடியவர் நபி ஸல் அவர்களிடம் தாம் கேட்டதாக அறிவிக்கிறார் ஆனால் முஹம்மத் பின் அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழவே இல்லை!

• இது இட்டகட்டப்பட்ட செய்தியாகும்!


❤️ இது போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உள்ளன அவைகளும் ஆதாரம் அற்றவையே! அவைகளை எல்லாம் கூறினால் பதிவு கட்டுரை போன்று சென்று விடும் என்பதால் சுருக்கி கூறி உள்ளோம்! 


💟 பராஆத் இரவும் கட்டுக்கதைகளும் :


🖤 மறுமை நாளில் நிழல் பெற : 

• அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள்.

• ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு,

• இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு,

• மூன்றாவது கப்ரில் வேதனை நீங்க,

• மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள்.

• இதற்காக அவர்கள் கூறும் கதை :

“யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வரும் 😱


• இதை யார் கூறினார்கள்? இந்த செய்தி அல் குர்ஆனிலும் இல்லை நபி அவர்களும் கூற வில்லை! ஸஹாபாக்கள் வாழ்விலும் இப்படி ஒரு செய்தி காண முடியவில்லை!

• மறுமை நாளில் எல்லோருக்கும் அல்லாஹ் உடைய அர்ஷ் நிழல் கிடைக்காது!

• மறுமை நாளில் அல்லாஹ் உடைய அர்ஷை தவிர வேறு எந்த நிழலும் இருக்காது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.

(நூல் : புகாரி : 660)

• நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக 7 கூட்டத்தாரை மட்டும் கூறி உள்ளார்கள்! அவர்கள் மட்டுமே மறுமை நாளில் அர்ஷ் நிழல் கிடைக்கும்! இவர்களை தவிர வேறு யாருக்கும் அர்ஷ் நிழல் கிடைக்காது! 


🖤  கபூரில் கேடயம் : 

யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வந்து உங்களை பாதுகாக்கும்!  😱

• அல்லாஹ் பாதுகாக்கணும் அல்லாஹ் உடைய தூய மார்க்கத்தை எப்படி எல்லாம் இழிவுகளை ஏற்படுத்தி கொண்டார்கள்!

• கேவலம் இவர்கள் இலவசமாக உண்பதற்கு அல்லாஹ் உடைய மார்க்கத்தை பயன் படுத்தி கொள்ளுகிறார்கள்! 

• இதற்க்கு எல்லாம் என்ன ஆதாரம்??? ஓரு பலகீனமான ஹதீஸ் ஆவது உண்டா??? ஒன்றுமே கிடையாது!

• பிறருக்கு உணவு கொடுத்தால் நன்மை தானே என்று இந்த செயலை செய்கிறார்கள்! பிறருக்கு உணவு கொடுத்தால் நன்மை தான் ஆனால் எண்ணம் மிக முக்கியம் நீங்கள் கொடுக்கும் போதே உள்ளத்தில் பராஆத் சிறப்பு வைத்து கொண்டு இந்த காரியத்தை செய்தால் பாவம் தான் சேரும்!

🖤 மரணம் தள்ளி போகும் :

பராத் இரவில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் ஓதப்படும் துஆப் பிராத்தனைக்கும் சிறப்பு தொழுகைக்கும் யார் சமூகம் இடம் தருகின்றாதோ அவர் இந்த வருடத்தில் மரணிக்க மாட்டார். அவருடைய காலக்கெடு திருத்தப்படுகிறது. அவ்வாறு சமூகம் தர தவறும் போது அவர்கள் துர்ப்பாக்கியசாலிகளாக
கருதப்படுவர். 

• யாராக இருந்தாலும் சரி ஒரு போதும் மரணம் தள்ளி போகாது!

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 63:11)

• மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று நாம் என்ன தான் அமல் செய்தாலும் சரி நமக்கு மரணம் தள்ளி போகாது!

• மேலே உள்ள செய்தி இவர்கள் செய்யும் பித்ஆத்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்! கேட்டால் தர மாட்டார்கள் உடனே இடம் கொடுத்தால் இவ்வளவு சிறப்பு நபி அவர்கள் கூறி உள்ளார்கள் என்றால் இடம் கொடுப்பார்கள்!

🖤 சிறப்பு தொழுகை : 

பராஅத் இரவில் ஸலாதுல் கைர் என்ற பெயரில் சிறப்பு தொழுகை மக்கள் தொழுவார்கள் அது நூறு
ரக்அத் கொண்ட தொழுகை.

ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாஃத்தியா பிறகு சூரா இக்லாஸ்
பதினொரு தடவை ஓதவேண்டும்.

• நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு நாளாவது இவ்வாறு தொழுது உள்ளார்களா ? சஹபாக்கள் யாரேனும் இவ்வாறு செய்து உள்ளார்களா??? ஒன்றுமே கிடையாது!

🖤 பராஆத் இரவு சிறப்பு துஆ : 

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் துன்பம், துயரங்கள் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் மூன்று 'யாசீன்' ஓதி துஆ செய்வார்கள் :

. @அல்லாஹ் போதுமானவன் 💞

✍️இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ்  நாளை தொடரும் ..✍️

*நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.. அல்குர்ஆன்(51; 55  )📖*
*✍️தங்களின் இஸ்லாமிய ஊழியன்(அப்துல் வாஜித்)✍️*

No comments:

Post a Comment