பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, January 3, 2021

மறுமை வெற்றிக்காக - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 05 ]*

*🍃சொர்க்கத்தில்*
                   *கிடைக்கும்*
                            *வரவேற்பு!🍃*

*🏮🍂சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும்.* அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும்.

*يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏ فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏ اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏  فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏ فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏ قُطُوْفُهَا دَانِيَةٌ‏ كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏*

_*🍃அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)*_

*📖(திருக்குர்ஆன் 69:18-24)📖*

*🏮🍂பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்;* வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥நரகவாசிகளின்*
                 *புலம்பல்கள் 🔥*

*🏮🍂இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள்.* நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று *அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.*

*كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏ يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏*

_*🍃அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்❓ “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா❓’’ என்று கூறுவான்.*_

*📖(திருக்குர்ஆன் 89:21-24)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment