*💐அஸ்ஸலாமு அலைக்கும்*
*🌺 மறுமை வெற்றிக்காக*
⤵️
என்ன செய்திறுக்கிறோம்
*✍🏻....தொடர் : [ 03 ]*
*☄️மறுமைக்காக எதைச்*
*செய்துள்ளோம்❓*
*🏮🍂உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்❓* இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
_يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ_
_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.*_
*📖(திருக்குர்ஆன் 59:18)📖*
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، *عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ»*
_*🍃ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்❓’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று (திரும்பக்) கேட்டார்கள்.*_ _அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்._
_*அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!*_
*🎙️அறிவிப்பவர்:*
*அனஸ்(ரலி)*
*📚நூல்: புகாரி (3688)📚*
*🏮🍂மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள். ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா❓ நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment