பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 5, 2018

நபி வழி மருத்துவம்

குர்ஆனும் சுன்னாவும் - முன்சென்ற நல்லோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி

நபி வழி மருத்துவம்

1) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5678.

பேரீச்சம் பழம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445

ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார் 
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர' என்று சொல்வார்கள். 64 
'அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார். ஸஹீஹ் புகாரி 5446

அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.65 ஸஹீஹ் புகாரி 5447

தேன்

2) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது. ஸஹீஹ் புகாரி 5680 

3) ஆயிஷா(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.ஸஹீஹ் புகாரி 5682 

4) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார். ஸஹீஹ் புகாரி 5684

கருஞ்சீரகம்
5) காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் 
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹ் புகாரி 5687

6) அபூ ஹுரைரா(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள். 
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள். ஸஹீஹ் புகாரி 5688.

தல்பீனா (பால் பாயசம்)
7) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் 
(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.ஸஹீஹ் புகாரி 5689

8) உர்வா(ரஹ்) கூறினார் 
ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், 'அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது' என்று சொல்வார்கள்.ஸஹீஹ் புகாரி 5690.

9) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும். 
என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5692.

காளான்
10)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். 
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்: 
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.ஸஹீஹ் புகாரி 5708

அல்குர்ஆனைக் கொண்டு மருத்துவம்
அல்குர்ஆனை அல்லாஹ் நமக்கொரு மருந்தாக ஆக்கியுள்ளான். இதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (يونس : 57

மனிதர்களே உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (யூனுஸ் : 57) 

அல்குர்ஆனிலே மருத்துவம் இருக்கிறது அதை ஓதுவதனால் மறைமுகக் காரணிகளால் ஏற்பட்டுள்ள நோய்கள் குணமடைகின்றன.

மேலும் அல்லாஹ் இது பற்றிக் கூறும் போது

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (الإسراء : 82

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல்இஸ்ரா:82) 

பிரார்த்தனைகள் மூலம் பரிகாரம்

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أُنْزِلَ – أَوْ أُنْزِلَتْ – عَلَىَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ الْمُعَوِّذَتَيْنِ
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டன அவை போன்ற ஒன்றை நான் கணவேயில்லை. குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்பனவே அவையாகும்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

عن عقبة بن عامر قال كنت أمشي مع رسول الله صلى الله عليه و سلم فقال : يا عقبة قل فقلت ماذا أقول يا رسول الله فسكت عني ثم قال يا عقبة قل قلت ماذا أقول يا رسول الله فسكت عني فقلت اللهم أردده علي فقال يا عقبة قل قلت ماذا أقول يا رسول الله فقال قل أعوذ برب الفلق فقرأتها حتى أتيت على آخرها ثم قال قل قلت ماذا أقول يا رسول الله قال قل أعوذ برب الناس فقرأتها حتى أتيت على آخرها ثم قال رسول الله صلى الله عليه و سلم عند ذلك ما سأل سائل بمثلهما ولا استعاذ مستعيذ بمثلهما
நபியவர்களுடன் நான் சென்று கொண்டிருச்த போது உக்பாவே ஓதுவீராக என்று என்னைப்பாhத்து நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும் என்று அவர்களிடம் நான் கேட்டதும் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் உக்பாவே ஓதுவீராக என்றார்கள் இவ்வாறு மூன்று முறை சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும்? என்று நான் கேட்டதும் குல்அஊது பிரப்பில் பலக்கை ஓதச்சொன்னார்கள். அதை முழுமையாக நான் ஓதினேன். பின்னர் ஓதுவீராக என்று என்னைப்பாhத்து நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும் என்று அவர்களிடம் நான் கேட்டதும் குல்அஊது பிரப்பின்னாஸை ஓதச்சொன்னார்கள். அதை முழுமையாக நான் ஓதினேன். அப்போது நபிவர்கள் ஒருவர் துஆச்செய்யும் போது முற்படுத்துவதற்கு இவையிரண்டையும் தவிர வேறொன்றும் கிடையாது. ஒருவர் பாதுகாப்புத் தேடும் போது முற்படுத்துவதற்கு இவையிரண்டையும் தவிர வேறொன்றும் கிடையாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி)
ஆதாரம் : நஸாயீ 

عَنْ أَبِى عَيَّاشٍ – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ قَالَ إِذَا أَصْبَحَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عِدْلُ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِى حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِىَ وَإِنْ قَالَهَا إِذَا أَمْسَى كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ

مَنْ قَالَ إِذَا أَصْبَحَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ காலையில் யார் இந்த துஆவை ஓதுகிறாரோ அவருக்கு இஸ்மாஈலுடைய சந்ததியில் ஓர் அடிமையை விடுதலை செய்த கூலி வழங்கப்படுவதுடன் பத்து நன்மைகள் எழுதப்படுகிறது. அவரின் பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பத்துப் படிகள் அவருக்காக உயர்த்தப்படுகின்றன. மாலை வரும் வரை ஷெய்தானை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார். மாலையில் இதை ஓதினால் காலையாகும் வரை இதே சிறப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூ அய்யாஷ்(ரழி)
ஆதாரம் : அபூதாவூத்

عن أبان بن عثمان قال : سمعت عثمان بن عفان رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه و سلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم يضر بشيء
ஓவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் யார்
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
என்ற துஆவை மூன்று முறை ஓதுகிறாரோ அவரை எதுவும் தீண்டாது
அறிவிப்பவர் : உத்மான் பின் அப்பான் (ரழி)
ஆதாரம் : திர்மிதி 

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِى الْبَارِحَةَ قَالَ « أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرُّكَ
அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு எனக்கு தேள் கொட்டிவிட்டது என்று ஒரு மனிதர் நபியவர்களிடம் கூறினார். ஆதற்கு நபியவர்கள் ‘நீ மாலையில் أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ என்ற துஆவை ஓதியிருந்தால் உன்னை அது தீண்டியிருக்காது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 

عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.
அறிவிப்பவர் : அபுமஸ்ஊத் (ரழி)
ஆதாரம் : புஹாரி 

________________________________________________________________________________________

விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர்

ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார் 
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 'கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது' என்று கூறினார்கள். 
(அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:) 
நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள். என்று கூறினார்கள். 
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், 'இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?' என்று கேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்' என்று எனக்குச் சொல்லப்பட்டது. 28 அப்போது 'அடிவானத்தைப் பாருங்கள்' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், 'அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்' என்று எனக்குச் சொல்லப்பட்டது. 

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். 'நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்' என்று கூறினார்கள்.

ஆதாரம் : புஹாரி 5705
------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment