பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 15, 2018

பொய்யான தகவல்களை பரப்ப கூடியவர்களுக்கு கடும் எச்சரிக்கை

பொய்யான தகவல்களை பரப்ப கூடியவர்களுக்கு கடும் எச்சரிக்கை*

ஒரு செய்தியை மற்ற குருப்களுக்கு பரப்ப சொன்னாலே அது அப்பட்டமான  பொய் செய்தி என்பதை எம் மக்கள். எப்போது உணரும் ??

அல்லாஹ் நம அனைவரையும் காப்பாற்றுவானாக இது போன்ற மடத்தனமான செயலில் யாரும் இறங்க வேண்டாம் மற்ற தளங்களுக்கும் பகிர வேண்டாம் பாவத்தை சுமக்கவும் வேண்டாம்

பொய்யனை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ??

*வதந்திகளை பரப்புவோருக்கு வதைக்கும் வேதனை*

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (القرآن 24:19)  
விசுவாசங்கொண்டோர்கிடையில் இவ்வாறான மானக்கேடான விஷயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோர்களுக்கு இம்மை, மறுமையில் இழிவான வேதனை அவர்களுக்கு உண்டு.

(அல்குர்ஆன் 24:19)

*வீண் வதந்திகளை பரப்பவும் வேண்டாம்! நம்பவும் வேண்டாம்!!*

வதந்தியை நம்புபவர், அதைப் பரப்புபவர் பற்றி நபி (ஸல்) அவர்களின் தெளிவான தீர்ப்பைப் பாருங்கள். "பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5143)

இது வதந்தியினால் ஏற்படும் இரண்டாவது தீய விளைவாகும். எனவே ஊகத்தின் அடிப்படையில் நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் பொய்யனாகலாமா? இதற்காகவா நாம் இந்தக் கொள்கையை ஏற்றோம்?

அவனுடைய அடியார்கள் அவனுக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருந்தாலும் அந்தப் பாவத்தை அவன் நினைத்தால் மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். ஆனால் ஓர் அடியான் மற்றோர் அடியானுக்குத் தீங்கிழைத்தால் சம்பந்தப்பட்ட அந்த அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.
"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 3498)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்குக்கூட கடன் இருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. ஏனெனில் அது அவர் மற்றொரு அடியாருக்குச் செய்த பாவம் என்பதால்தான். ஷஹீதுக்கே இந்த நிலை என்றால், வதந்தியைப் பரப்பி அதன் மூலம் சாபத்தைப் பெறுபவர்களின் நிலை என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். இது வதந்தியால் ஏற்படும் மூன்றாவது விளைவாகும்.
மறுமையில் பணம், பந்தம், பாசம் எதுவும் இருக்காது. அந்த நாளில் உதவுகின்ற மதிப்பு மிக்க ஒரேயொரு செலவாணி அமல்கள் தான். அந்த அமல்களை அந்நாளில் யாருமே இழக்க முன்வர மாட்டார்கள். அமல்களை இழப்பவர் ஒருவர் உண்டெனில் அவர் அடுத்தவரின் விவகாரங்களில் தவறான முறையில் தலையிட்டவர் தான்.

*திவாலான மனிதன் யார்?*

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக் கின்றீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும், பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.

(அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4678)

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

(அல்குர்ஆன் 104-1)

இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.

(அல்குர்ஆன் 33-69)

அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீதுமாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).

(அல்குர்ஆன் 4-156)

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment