பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, May 5, 2018

பிறை ஓர் அறிவியல் பார்வை

பிறை ஓர் அறிவியல் பார்வை (சென்ற வருடம் எழுதியது, மீள் பதிவு)

இலங்கையில் ஷவ்வால் பிறை 24 ஆம் திகதி சனிக்கிழமை தென்பட வாய்ப்புள்ளதா?
எந்த ஒரு மாதத்தின் 29 ஆம் நாள் பிறை பார்ப்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விடையம். மிகச்சிலபோது பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை நமக்கு ஏற்படவில்லை என்பதால் அறிவியல் பிறை பற்றிய சில தகவல்களை இங்கு பதிகிறேன்.

அறிவியலில் துல்லியமாக சொல்லப்பட்ட நிபந்தனைகள் இவைதான்.
============================

ஒன்று: குறித்த மாதத்தை ஆரம்பிக்கும் தினத்துக்கு முன் சந்திரன் அமாவாசையை அடைந்திருக்க வேண்டும். புதிய மாதத்துக்கான முதல் பிறையை தேடும் அந்த நாளின் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாக இது நிகழ வேண்டும்.

இரண்டு: அந்த சூரிய அஸ்தமனத்துக்கு பின்புதான் சந்திர அஸ்தமனம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

மூன்று: சூரிய அஸ்தமனத்துக்கும் சந்திர அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட "சந்திரன் தங்கும் நேரம்" என்று அறியப்பட்ட இந்த காலப்பகுதி பிறை தென்படும் கால அளவை அடைந்திருக்க வேண்டும்.

துல்லியமில்லாத நிபந்தனைகள் : சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், சந்திரன் உதிக்கும் நேரம், மறையும் நேரம் என்பன மிகவும் துல்லியமான அறிவயல் ஆகும். ஆனால் அது அல்லாத சில நிபந்தனைகள் துல்லியமான அறிவியலில் இல்லாதவை என்பதோடு வானியல் அறிவியலில் கருத்துவேறுபாடும் உள்ளதோடு நடைமுறைக்கும் மாற்றமாக உள்ளது. உதரணமாக சந்திரனின் ( பிறையின்) வயது 15:30 மணிநேரம் இருக்க வேண்டும் என்ற இவர்களின் நிபந்தனை துல்லியமான அறிவியல் கிடையாது. இதில் கருத்துவேறுபாடு உண்டு. அதுபோல இதைவிட குறைந்த வயதைக்கொண்ட சந்திரனில் பிறை தென்பட்ட வரலாறு நமக்குண்டு.

அதாவது புதிய மாதத்தை அடைய சந்திரன் அமாவாசையை தாண்டி வரும் காலப்பகுதி அதன் வயதுக்குரிய காலப்பகுதியாகும். ஆனாலும் இந்த சந்திரன் அடுத்துவரும் புதிய மாதத்தை தேடும் நாளின் சூரிய அஸ்தமனத்தின் பின் அதில் பிறை காட்சி தர வேண்டும் என்றால் 15:30 மணி நேரத்தை குறைந்த பட்சம் அடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ அல்லது அதைவிட கூடிய நேரத்தை அடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ துல்லியமான அறிவியல் கிடையாது. ஏனெனில் இவர்கள் நிர்ணயித்த அந்த நேரத்தைவிட குறைந்த வயதைக்கொண்ட சந்திரனில் கூட பிறை தென்பட்டதட்கான அதிகாரபூர்வ சான்றுகள் உள்ளன. எனவே பிறையின் வயதில் துல்லியமான ஆய்வுகள் இல்லை என்பதும் அதற்கு மாற்றமான நடைமுறை உண்மை இருப்பதும் இந்த நிபந்தனையில் முற்றாக தங்கி நிற்பது அவசியம் இல்லை என்பதே சரியானது.

துல்லியமில்லாத நிபந்தனையில் இரண்டாவது:
==================================

சூரியன் மறைந்த பின்பு ஒரு குறிப்பிட்ட நேரம் சந்திரன் தங்கி இருக்க வேண்டும் என்பதில் எல்லா ஆய்வாளர்களும் ஏகோபித்த கருத்தில் இருந்தபோதும் அந்த சந்திரன் தரித்திருக்கும் கால அளவு எவ்வளவு என்பதில் கருத்து முரண்பாடு கொள்கின்றனர். குறைந்த பட்சம் 7 நிமிடம் தங்கி இருந்தால் பார்க்க முடியும் என்று சிலரும், 15 நிமிடம் தங்கி இருந்தால் பார்க்க முடியும் என்று சிலரும், 30 நிமிடம் தங்கி இருந்தால் பார்க்க முடியும் என்று சிலரும், 40 நிமிடம் தங்கி இருந்தால்தான் பார்க்க முடியும் என்று இன்னும் சிலரும் நிபந்தனை இடுகின்றனர். இப்படியான கருத்துவேறுபாடுகள் துல்லியமான அறிவியலில் வருவதில்லை. உதாரணமாக சூரியன் சந்திரன் உதிக்கும் நேரம், மறையும் நேரம்,சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும் நேரம் என்பனவற்றில் இப்படியான பிரச்சினைகள் இல்லை.

எனவே இவ்விடையத்தில் துல்லியமான நேரம் ஒன்றை நாம் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முடிவுக்கு வர முடியும். அதுதான் நடைமுறையில் கண்ட பிறை சாட்சிகள் ஆகும். 1992 ஆம் ஆண்டு நாசாவால் குறிப்பிட்ட பிரதேசங்களில் பிறை காண முடியாது என்று அறிவித்தபோதும் அவர்கள் நிபந்தனையை தாண்டி முழு சமூகமுமே பிறையைக் கண்டு நாசாவை வியப்பில் ஆழ்த்தினர். எனவே சந்திரன்(பிறை) தங்கும் நேரம் என்பதில் துல்லியமான அறிவியல் இல்லை என்பதை அறிய முடியும். அதுபோலவே 2013 ஆம் ஆண்டு கிண்ணியாவில் கண்ட பிறையை மறுக்க சிலர் அவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தின்படி அந்த பிறை தென்பட வாய்ப்பில்லை என்றனர், ஏனெனில் அவர்கள் கருத்துப்படி அந்தப்பிறை 30 நிமிடங்களோ அல்லது 40 நிமிடங்களோ வானில் தங்கி இருக்கவில்லை என்பதும் அது அல்லாத சில புறக்காரணிகள் அதில் இருக்கவில்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடாக இருந்தது.(வானில் தங்கி இருத்தல் என்பதன் அர்த்தம் சூரிய அஸ்தமனத்துக்குப் சந்திரனின் அஸ்தமனம் நிகழ்ந்து முடியும் அளவுள்ள நேரம்), இதில் ஓரிரு நிமிடங்கள் பிறை தங்கி இருந்தால் தென்படும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்பது உண்மையே. ஏனெனில் சூரியன் மறைந்து ஓரிரு நிமிடங்களில் வானத்தில் சந்திரனின் இருப்பதாக கருதப்படும் இடத்தின் பின்னணித்திரையில் உள்ள அதிக வெளிச்சமானது சந்திர வெளிச்சத்தைப் பார்க்க தடையாக இருக்கும் என்பது தெளிவு.

இவர்கள் கிண்ணியா பிறையை மறுக்க அடிப்படைக்காரணமாக இருந்ததே பிறை விடையத்தில் அடிப்படை அற்ற துல்லியமில்லாத காரணமாக இருந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. அதுபற்றிய தெளிவுகளை பல ஆக்கங்களில் நான் எழுதியும் இருந்தேன். இந்த வகையில் இம்முறை 2017 ஆம் ஆண்டு இலங்கையில் ஷவ்வால் பிறை தென்பட தேவையான அடிப்படை நிபந்தனைகளை இங்கு பதிகிறேன் அதன் அடிப்படையில் பிறை தென்படவோ தென்படாமல் இருக்கவோ வாய்ப்புள்ள நாள் என்பதையே சொல்ல முடியும். மாறாக தென்பட வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது என்பதை அறிய முடியும்.

இலங்கையில் 24 ஆம் திகதி சனிக்கிழமை

சூரிய மறைவு : 6: 38
சந்திர மறைவு: 6: 58
சந்திரன் தங்கும் நேரம் : 20 நிமிடங்கள்
சந்திரனின் வயது : கிட்டத்தட்ட 12 மணித்தியாலமும் 15 நிமிடமும்

இந்த அடிப்படைகளை வைத்து பார்க்கும்போது துல்லியமான அடிப்படை நிபந்தனைகளுக்கு உட்பட்ட அந்த சந்திரனில் எதிர்வரும் 24 ஆம் அதிகதி சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்தின் பின் பிறை பார்க்க வேண்டிய நாள் என்பதை அறிய முடிவதோடு அறிவியலின் துல்லியமில்லாத கருத்துவேருபாடுகளுக்கு உட்பட்ட காரணங்களை வைத்து அத்தினம் பிறை தேட முடியாது என்ற நிலைபாட்டுக்கு வர முடியாது என்பதை உணர முடிகிறது.

குறித்த தினத்தில் பிறை பார்க்க வேண்டுமா இல்லை பார்க்க தேவை இலையா எனும் நிலைபாட்டில் இந்த தினத்தில் பிறை தேட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வருவதே ஏற்றம்.

No comments:

Post a Comment