பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, May 1, 2018

ஷபே_பராத் (ஷஃபான் 15) குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்

#ஷபே_பராத் (ஷஃபான் 15) குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்

#தவறான கருத்து 1:

இந்த இரவில், நம் பாவங்களை மன்னிப்பதற்காக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவான்.

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390

இது #பலகீனமான ஹதீஸ்

Hadith

حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنِ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏

‏ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ ‏"

‏ ‏‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏‏

It was narrated from Abu Musa Al-Ash'ari that the Messenger of Allah (ﷺ) said:

"Allah looks down on the night of the middle of Sha'ban and forgives all His creation, apart from the idolater and the Mushahin." Another chain from Abu Musa, from the Prophet (ﷺ) with similar wording.

Da'if (Darussalam)

Sunnan ibn maja Hadit 1390

இதை இமாம் ‌அல்பானி பலகீனமான தரத்திலேயே பதிவு செய்துள்ளார்கள்

இது சம்பந்தமாக அஹ்மத் தில் வரக்கூடிய ‌செய்தியும் பலகீனமான ஹதீஸ்

#விடை:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“.

(புகாரி 1145, முஸ்லிம் 1386)

#தவறான கருத்து 2:

இந்த இரவில் தான் நம்முடைய விதி, வாழ்நாள் மற்றும் ஜீவனம் ஆகியவை விதிக்கப்படுக்கின்றன.

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் மிஷ்காத் 1305

இது பலகீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட செய்தி

இது நேரடியாக ஸஹீஹானா ஹதீஸிற்கு நேர்மாறாக முரணாக வருகிறது

#விடை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ”இறைவா! இவன் நற்பேறற்றவனா?அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு ”இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது.

அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகிய (விதிகள்அனைத்தும்) எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள்_சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப்_படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை.

(ஸஹீஹ் முஸ்லிம் 5146)

#தவறான கருத்து 3:

ஷஃபான் 15 இல் தான் அல்லாஹ்விடம் அமல்கள் எடுத்துக்காட்டப்படும்.

#விடை

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னிலையில் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்"

[திர்மிதி,747; ஸஹீஹ் என அல்-அல்பானி அவர்களால், ஸஹீஹ் அல்-தர்கீப்பில்,1041 வகைப்படுத்தப்பட்டுள்ளது]

#தவறான_கருத்து 4:

ஷஃபான் 15ஆம் இரவில் சிறப்பு வணக்க வழிபாடுகள்,தொழுகைகள், இன்னும் பல செயல்களில் ஈடுப்பட வேண்டும் மேலும் இதற்கென மேலான நற்கூலி உண்டு.

இதற்கு அதனை ஆதரிப்பவர்கள் ‌ஆதாரமாக காட்டும் ஹதீஸ்

1..
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.

அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822

இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்

Hadith

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏

‏ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا ‏.‏ فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ ‏"

‏ ‏‏

It was narrated that "Ali bin Abu Talib said:

"The Messenger of Allah (ﷺ) said: "When it is the night of the middle of Sha'ban, spend its night in prayer and observe a fast on that day. For Allah descends at sunset on that night to the lowest heaven and says: "Is there no one who will ask Me for forgiveness, that I may forgive him? Is there no one who will ask Me for provision, that I may provide for him? Is there no one who is afflicted by trouble, that I may relieve him?' And so on, until dawn comes.'"

#Maudu' (Darussalam)

English : Vol. 1, Book 5, Hadith 1388
Arabic : Book 5, Hadith 1451

இமாம் அல்பானி இதனை #மவ்தூ #இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று பதிந்துள்ளார்

2..
ஒரு நாள் இரவு நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.

நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299)

இது பலகீனமான ஹதீஸ்

Hadith

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ ‏‏ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ ‏.‏ وَسَمِعْتُ مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ وَقَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏.‏"

Aishah narrated:

"I could not find the Messenger of Allah one night. So I left and found him at Al-Baqi. He said: 'Did you fear that you had been wronged by Allah and His Messenger?' I said: 'O Messenger of Allah! I thought that you had gone to one of your wives.' So he said: 'Indeed Allah, Mighty and Sublime is He, descends to the lowest Heavens during the night of the middle of Sha'ban, to grant forgiveness to more than the number of hairs on the sheep of (Banu) Kalb.'"

Da'if (Darussalam)

Jami` at-Tirmidhi 739
In-book : Book 8, Hadith 58
English translation : Vol. 2, Book 3, Hadith 739

இமாம் அல்பானி இதனை பலகீனமான ஹதீஸ் என்று பதிவு செய்துள்ளார்கள்

விடை:

ஷஃபான் 15ஆம் இரவு குறித்து எந்தவொரு ஸஹீஹ் ஹதீஸும் இல்லை. எனவே இந்த இரவு, மற்ற இரவுகளை போன்றே ஒரு சாதாரண இரவு தான். மேலும் இந்த இரவில் செய்யப்படும் வணக்கவழிபாடுகள், தொழுகைகள் ஆகியவற்றுக்கும் மற்ற இரவுகளில் செய்தால் என்ன நற்கூலி கிடைக்குமோ அது தான் இந்த இரவில் செய்யப்படும் அமல்களுக்கும் கிடைக்கும்.

தவறான கருத்து 5:

ஷஃபான் 15ஆம் நாள் நோன்பு நோற்றால், சிறப்பான மற்றும் மேலான நற்கூலி கிடைக்கும்.

விடை:

நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[திர்மிதி,761; அல்-நஸயீ, 2424; அல்-அல்பானி அவர்களால் ஸஹீஹ் என ஸஹீஹ் அல்-தர்கீபில், 1038 வகைப்படுத்தப்பட்டுள்ளது]

தவறான_கருத்து 6:

இந்த இரவில், இறந்துப்போனவர்களின் ஆன்மா அவர்கள் குடும்பத்தாரிடம் திரும்ப வரும்

விடை:

இந்த விஷயத்திற்கு குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. இறந்துப்போனவர்களின் ஆன்மா இந்த உலகத்திற்கு திரும்பி வரவே முடியாது. இது உண்மையல்ல, மக்களால் இட்டுக்கட்டப்பட்டது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

யாஸின்‌ ஓதுவது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்கள் பலகீனமான ஹதீஸ்கள் தான்

தவறான_கருத்து 7:

இதனை எத்தனை மக்கள் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் அனைவரும் செய்வது எப்படி
பொய்யாக முடியும்?

#விடை:

அல்லாஹ் கூறுகிறான், "பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்."
[அல் குர்ஆன் 6:116]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.

புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும்.

ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.

ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸாயி 1560
ஸஹீஹ் முஸ்லிம் 1573
இப்னுமாஜா 44
முஸ்னத் அஹ்மத் 13815, 14455
இப்னு குஸைமா 1785

7277. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும்.
ஸஹீஹ் புகாரி 7277

2697. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோஅவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 2697

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாத விஷயங்களை அவர்கள் கூறினார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி கூறாதீர்கள்_

_அவ்வாறாக கூறினால் அது கூறுபவரை நரகத்தில் கொண்டபோய் சேர்க்கும் பெரிய பாவமாகும்_

106. 'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள்.
ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அலீ(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 106

எனவே, பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள் அதனால் அது உண்மையாக தான் இருக்கும் என நம்புவது பலவீனமான விவாதமாகும

(ஆக்கம்-முஹம்மத் அஸாருதீன்)

No comments:

Post a Comment