ஆக்கம் -- J. யாஸீன் இம்தாதி
+++++++++++++++++++++++++
இஸ்லாமிய. பெயர்களும், .சட்டங்களும் ஆய்வுப் பார்வை
19-05-14
********************
NB : நாம் இக்கட்டுரையில் தவறான பெயர்கள், அர்த்தமற்ற, பொருத்தமற்ற, சில பெயர்களை பட்டியல் போட்டுள்ளோம் . அது தமிழகத்தில் பலர்களுக்கு பெயராக இன்றும் உள்ளது . அவர்களை குற்ற நோக்கில் நான் எழுதவில்லை அவ்வாறு உங்கள் உள்ளத்தில் தோன்றினால் எனது பெயரும் கூட இக்கட்டுரையில் விமர்சிக்கப் பட்டுள்ளது .அதைப் படித்து லேசாக மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள்.
****************************************
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இருக்கின்ற ஒன்றை குறிப்பதற்க்கும், அதை முறையோடு அழைப்பதற்க்கும், பயன் படுவதே பெயர்கள் ,
மனிதன் அறிந்து வைத்துள்ள எந்த ஒன்றும் பெயர் சூட்டப் படாத நிலையில் இல்லை.
பெயர் சூட்டுதல் அவசியம் என்று உணர்ந்தவர்களில் பலர் . எந்த வார்த்தையை பெயராக சூட்டுவது பொறுத்தமானது, அழகானது என்பதைக்கூட அறியவில்லை.
அதனால் தான்
மதுசூதனன் ---- அதாவது மதுவையும், சூது விளையாடுதலையும் விரும்புகின்ற மனிதன் என்று பெயர் சூட்டுகின்றனர்
.இஸ்லாத்தை பொருத்தவரை பெயர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது , அதை யார் வைப்பது என்பதற்க்கு அழகிய வழிகாட்டுதல்கள் உள்ளது.
அந்த வழிகாட்டுதலை முஸ்லிம்களில் பலர்களே புரிந்து கொள்ளவில்லை
அதனால் தான் பெயர் சூட்டுவதையே பாரமான விசயமாக கருதிக் கொண்டு அதற்க்கு பெயர் சூட்டுத் திருவிழா எனும் பெயரிலே நிகழ்ச்சி எடுப்பதைப் பார்க்கின்றோம்.
இஸ்லாமிய மார்க்கத்திலே பெயர் சூட்டுவதற்க்கு என்று எவ்வித சடங்குககளும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தவறுதலான சில பெயர்களை மாற்றியமைத்தாக ஹதீஸ்களில் காண முடிகின்றதே தவிர.
பெயர் சூட்டுவதற்க்கு என்று சடங்குகள் கற்றுத் தந்ததாக எவ்விதமான செய்தியும் ஹதீஸ்களில் இல்லை.
பெயர் சூட்டுதல் என்றால் என்ன?
***********************************
எந்த பெயரை நீங்கள் உங்கள் சந்ததிக்கு சூட்ட விரும்புகின்றீர்களோ அந்த பெயரைச் சொல்லி அழைப்பதே பெயர் சூட்டுதல் ஆகும்
அதை சூட்ட. மார்க்க அறிஞர்கள் வரவேண்டும் என்றோ, சூராக்களில் சிலவற்றை படிக்க வேண்டும் என்றோ மார்க்கத்தில் வழிகாட்டப் படவில்லை
இன்னும் சொல்வதாக. இருந்தால் கைக் குழந்தையின் தாயே தன் பிள்ளைக்கு பெயர் சூட்டலாம்
(மேலும் இம்ரான் சொன்னார்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அல்குர்ஆன் :03:35
பெயர்கள் அரபியில் தான் சூட்டபட
வேண்டுமா ?
************************************
அரபியில் பெயர் வைப்பதை சுன்னத்து என்று சிலர்கள் விளங்கி வைத்திருப்பதால் தான்
ஒரு பெயர் சூட்ட அதன் பொருள் கேட்டு ஒரு மாதம் அலைவதை பார்க்கின்றோம்.
இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் சூட்ட வேண்டும் என்ற கட்டளையும் இல்லை.
அரபியில் பெயர் வைப்பது குற்றமும் இல்லை.
குர்ஆனில் சொல்லப் பட்டுள்ள நபிமார்களில் முஹம்மத் , இன்னும் சிலரைத் தவிர
இஸ்மாயீல்,இஸ்ஹாக் , இப்ராரஹீம் , போன்ற பல பெயர்களும் கூட அரபு வார்த்தைகள் இல்லை.
சஹாபாக்களில் பிலால் ,ஸல்மான், இது போன்ற பல பெயர்களும் கூட அரபு வார்த்தை இல்லை.
அழகிய பெயரை சூட்டுங்கள் என்பது தான் நபி( ஸல் ) அவர்களின் ஒட்டு மொத்தம் கட்டளையின் சாராம்சம்
தடுக்கப்பட்ட. பெயர்கள்
**************************
ஒரு மனிதன் வைத்துள்ள பெயர்களில் அல்லாஹ்விடத்தில் அருவறுப்பானதும், மோசமானதும் மலிகுல் அம்லாக் என்ற பெயரேயாகும். அல்லாஹ்வைத் தவிர மாலிக் எவருமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்
அபூஹுரைரா.ரலி. புகாரி ,முஸ்லிம்
மலிகுல் அம்லாக் என்பதின் பொருள் அரசனுக்கு மேல் அரசன் என்பதாகும்
இந்த கருத்து கொண்ட எந்த பெயரும் , எம்மொழியில் இருந்தாலும் அது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவையாகும்.
முஸ்லிம் சமூகத்தில் இது போன்ற சில பெயர்கள் வைக்கப் பட்டுள்ளது
1- ஷாஜஹான்: உலகை ஆளும்
எஜமான்
2- அக்பர் : மிகப் பெரியவன்
3- அஜீஸ் : யாவற்றையும்
மிகைத்தவன்
4- சாகுல் ஹமீது : அல்லாஹ்வுக்கே
எஜமானன்
இறை அடிமை என்பதற்க்கு எதிரான
பெயர்கள்
************************************
ஒரு மனிதர் தனக்கு அப்துல் ஹஜர் என்று பெயர் சூட்டியிருப்பதை பார்த்து அந்த பெயரை நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என்று மாற்றி அமைத்தார்கள்
அபுஹீரைரா.ரலி. முஸன்னப் இப்னு அபீஷைபா, முஃஜமுல் கபீர்.
அப்துல் ஹஜர் என்றால் கல்லின் அடிமை என்று பொருள் இந்த கருத்துப் பட உள்ள அனைத்து பெயர்களும் அவசியம் மாற்றப்பட வேண்டியவையாகும்.
இன்றைய பெயர்களில் சில!
1 : அப்துல் முத்தலிப். நபி (ஸல் ) அவர்கள் காலத்தில் காஃபிர்கள் வணங்கிய. சிலையின் பெயரே முத்தலிப் என்பதாகும்
2: அப்துல் மனாஃப். இதுவும்
சிலையின் பெயராகும்
3 : குலாம் இரசூல் : இரசூலுக்கு
அடிமை
4: குலாம் முஹம்மத்: முஹம்மதின்
அடிமை
குலாம் என்ற பதத்திற்க்கு
சிறுவன் என்ற பொருளும் உண்டு. ஆனால் அதுவும் பெயருக்கு தகுந்ததல்ல
5: அப்துஸ் சம்சு - சூரியனுக்கு
அடிமை
இது போன்ற பெயர்கள் தான் கடுமையாக கண்டிக்கத்தக்கது
அர்த்தம் பொருத்தமில்லா பெயர்கள்
***************************************
நபி (ஸல்) அவர்கள் சபையில் ஒரு மனிதர் வருகை தந்தார் அவரிடம் நபியவர்கள் உங்கள் பெயர் என்னவென்று கேட்ட போது
தனது பெயர் ஹுஜ்னு என்று வந்தவர் கூறினார் .
அப்போது நபியவர்கள் அந்த பெயரை மாற்றி சஹ்லு என்று வைக்க உத்தரவு போட்டார்கள்
அந்த மனிதர் தன் தந்தை வைத்த பெயரை மாற்ற மாட்டேன் என்றார்
அவர் வாழ் நாள் வரை ஹீஜ்னாகவே வாழ்ந்து மடிந்ததை நான் பார்த்தேன்.
இப்னுல் முஸைய்யப்.ரலி.பைஹகீ
ஹுஜ்னு என்றால் கவலை உள்ளவன் என்று பொருள்.
இது போல் பல பெயர்களை நபி (ஸல்) அவர்கள் மாற்றியமைத்த சம்பவங்கள் ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது. அதை பிரதிப்பதைப் போல்
இன்று முஸ்லிம்கள் வைத்துள்ள பெயர்களில் சில!
1- சேக் - கிழவன்
2- பீர் - ஆசி கொடுப்பவன்
3- மஸ்தான்- போதைக்கு அடிமை
பட்டவன்
4- நாகூர் பிச்சை
5- முஹ்யத்தீன் பிச்சை
6- பர்ஜானா : பெண்ணுருப்பு
7- ஜின்னா : பைத்தியக்காரன்
8- பீவீ : என் மனைவி
9- பானு: என் காதலி
10- பேகம்- பிடித்தமானவள்
11 - கவுஸ் - பாதுகாவலன்
இன்னும் பல உண்டு புரிந்து கொள்ளவே இவைகள்
பாலின வேறுபாடு பெயர்கள்
*********************************
ஆணுக்கு ஒப்பாக நடக்கும் பெண்
பெண்ணுக்கு ஒப்பாக நடக்கும் ஆண்
சாபத்திற்க்குரியவர்களாவர் என்று நபி (ஸல் ) கண்டித்தனர்
அபூஹீரைரா.ரலி. முஸ்லிம்
இந்த ஹதீஸ் நடத்தைகளுக்கு மட்டுல்ல பெயருக்கும் பொருந்தும்
1- மும்தாஜ் - இது ஆண் பால்
2- தாஜ் - இது பெண் பால்
3- மைமூன் - ஆண் பால்
4- மைமூனா - பெண் பால்
5- தில்சாத்- ஆண் பால்
6- தில்சா - பெண் பால்
7- ஆதிலா- ஆண் பால்
இன்னும் சில
பெயருக்கு பொருத்தமற்றவை
********************************
அரபுக்கள் தன் குழந்தைகளின் பெயரை எழுதி விட்டு அவரின் தந்தை என்று அறிமுகம் செய்வார்கள் உதாரணமாக
அபூ ஷாலிஹ். சாலிஹின் தந்தை
அபூ என்பது தந்தை என்ற பொருள் கொண்டது
உங்கள் பிள்ளைக்கு அபூ ஷாலிஹ் என்று பெயர் வைத்தால்
யாருக்கு அவன் தந்தையாக இருக்க முடியும்? என்ற கேள்வி வரும்
உம்மு என்றால் தாய் என்று பொருள்
உங்கள் பெண் பிள்ளைக்கு உம்மு ஹபீபா என்று நீங்கள் பெயர் வைத்தால் அவள் ஹபீபா என்பவளுக்கு தாய் என்று பொருள்
சில நேரங்களில் காரணங்களோடு அடை மொழியாக பயன் படுதுவது தவறில்லை
அபூஹீரைரா என்றால் பூனையின் தந்தை என்று தான் பொருள்
பூனையின் மீது பாசமுள்ளவராக அந்த சஹாபி இருந்ததால் நபி(ஸல்) அவர்கள் செல்லமாக அவரை அழைத்த பெயரே அபூஹீரைரா என்பதாகும்.
அந்த. சஹாபியின் எதார்த்த பெயர் அப்துர் ரஹ்மானாகும்.
தனி எழுத்துக்கள் பெயருக்கு தகுதியா?
***************************************
ஒருவருக்கு அ .ஆ. இ.சிற
என்று பெயர் சூட்டுதல் எவ்வாறு பெயருக்கு பொறுத்தமில்லையோ அது போலத்தான்
1-யா சீன் - யாசீன்
2-தா சீம் - தாசீம்
3- ஹா மீம்- ஹாமீம்
4- தா ஹா- தாஹா
என்ற பெயர்கள் அமைந்துள்ளது
இது போன்ற எழுத்துப் பெயர்கள் சஹாபாக்களின் பெயரில் இது வரை நாம் பார்த்ததில்லை
மேலும் முஹம்மத் என்பது ஒரு பெயராகும். ஒருவரை அழைக்கவும் அதுவே போதுமானது
நடைமுறையில் ஆண்களுக்கு முஹம்மத் என்ற. பெயருடனே சேர்த்து மற்றொரு பெயர் இணைக்கப் படுகின்றது.
இது அவசியமில்லை அவ்வாறு இரு பெயர் சூட்டினாலும் அந்த இரு பெயர் கொண்டு யாரும் அழைக்கப் படுவதுமில்லை
முஹம்மத் அப்பாஸ் என்று நீங்கள் பெயர் வைத்தால் அவர் அப்பாஸ் என்று மட்டுமே அழைக்கப் படுவார்
இது நபியின் மீது வைத்துள்ள நேசமாக தோன்றினாலும் இது மார்க்கம் கற்றுத் தந்தை நேசத்தின் அடையாளமுமல்ல
அவ்வாறு இருந்தால் சஹாபாக்கள் தனது பெயருடன் முஹம்மத் என்ற பெயரையும் இணைத்திருப்பார்கள்
அப்படி நாம் காண முடியவில்லை
விரும்பினால் முஹம்மத் என்று மட்டும் பெயர் சூட்டுங்கள்
ஒருமைப் பெயர்கள்
---------------------
அம்மாவை அம்மாக்கள் என்று அழைப்பதில்லை அது இலக்கண ரீதியில் சரியானதுமில்லை
ஆனால் சில முஸ்லிம்களின் பெயர்கள் அந்த. பண்மை தோரணையில் உள்ளது
1- ஜவ்ஹருல்லாஹ் ---- சரி
2- ஐவாஹிருல்லாஹ்---- தவறு
3- பக்ரு --- சரி
4- பாக்கர்--- தவறு (அபூபக்கர்)
5- ஜீலானி ---- சரி
6- ஜெய்லானி ----தவறு
7-வலியுல்லாஹ் ---சரி
8-- அவ்லியா--தவறு
சாதி இனப் பெயர் இணைத்தல்
*******************************
ஜாதி ,இன உணர்வு ஏற்றத் தாழ்வுகள், இஸ்லாமிய சமூகத்தில் இல்லையானாலும் அதன் வாடை கூட முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்
பெயருக்கு முன்னால் அடையாளமாகப் போடப்படும் இராவுத்தர்,மரைக்காயர், தக்னீ, லெப்பை, இது போன்ற தவறுகள் நீக்கப் பட வேண்டும்
இறைவனுக்கு பிடித்தமானவை
*********************************
நீங்கள் வைக்கின்ற பெயர்களில் அல்லாஹ்விற்க்கு பிடித்தமானவை அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என்பதாகும் என நபி( ஸல்) சொன்னார்கள்
அபூஹீரைரா.ரலி. திர்மிதி.
இறைவனின் 99 திருநாமங்களிலும் அப்து என்ற வார்த்தையை இணைத்து நீங்கள் விரும்பினால் பெயர் வைக்கலாம்
அப்து என்றால் ஆண் அடிமை என்றே பொருள்
அப்படியானால் பெண்களுக்கு இச் சிறப்பு இல்லையா என்று சிலருக்கு தோன்றலாம்
இறைவனின் திருநாமங்களோடு அமத் என்ற வார்த்தையை இணைத்து பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாம்
அமத் என்றால் அடிமைப் பெண் என்று பொருள்.
அமதுல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் * அடிமைப் பெண் * என்று பொருள்
இந்தப் பெயருக்கு சிறப்பை சொல்லியுள்ளதால் இதை தான் சூட்ட வேண்டும் என்றில்லை
நபி (ஸல்) அவர்களே தன் மகனுக்கும், பேரர்களுக்கும், அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டவில்லை. நீங்கள் விரும்பினால் சூட்டிக் கொள்ளலாம்
லேட்டஸ்டாக பெயர் வைக்க வேண்டும் என்பற்காக மனதில் தோன்றுபவைகளை எல்லாம் பெயராக சூட்டாமல்
இறைவன் தடுக்காத அழகிய பெயரை உங்கள் சந்ததியினர்களுக்கு சூட்டுங்கள்
நட்புடன் : இம்தாதி
No comments:
Post a Comment