பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 29, 2017

மௌலீது_பஜனைக்கு_ஹதீஸில்_ஆதாரமா

#மௌலீது_பஜனைக்கு_ஹதீஸில்_ஆதாரமா

4897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவி பாடிக்கொண்டிருந்தபோது, அங்கு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தார்கள்.
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களைவிடச் சிறந்தவர் (நபியவர்கள்) இருந்தபோது கவிபாடிக்கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, என்னை நோக்கித் திரும்பி, "அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு "ரூஹுல் குதுஸ்" (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்; இறைவா (நீயே சாட்சி)!" என்று பதிலளித்தேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஓர் அவையில் இருந்தார்கள். அதில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்

இன்று மௌலீது ஓதி வயிறுவளர்க்கும் சில சு ஜமாஅத் ஆலிம்கள் அவர்களின் பக்தகோடிகளுக்கு இந்த ஹதீஸை காட்டி பார்த்தீர்கலா கவிபாட நபி ஸல் அவர்களே அனுமதி கொடுத்துள்ளார்கள் அதனால்தான் பாடுகிரோம் என்று கூறுகிரார்கள்

அவர்கள் சொல்லில் அவர்கள் உண்மையாளர்கலாக இருந்தால் நபி ஸல் அவர்கள் எதற்கு அனுமதி கொடுத்தார்கலோ அதர்க்குத்தானே பயன் படுத்தனும் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் வசைபாடியதால் அதற்கு பதிலடி கொடுக்க அதாவது யூத நஜரானி நெருப்பு வணங்கிகளை கவி மூலம் திட்டத்தான் இதில் அனுமதி உண்டு .
சு ஜ வாசிகளே இதில் உள்ளது போல நீங்கள் பள்ளியில் மைக் போட்டு இஸ்லாமிய எதிரிகளை கவிபாடி திட்டுங்கள் பார்ப்போம் அதர்க்கு உங்களுக்கு திராணி இருக்கின்றதா அப்படி செய்தால் நீங்கள் நபிவழி நடப்பவர்கள் அப்படி அல்லாமல் நபி ஸல் அவர்களே வரம்புமீறி புகழ்வதை வெறுத்ததை  நீங்கள் தொடர்ந்து பாடுவதால் நீங்கள் யூதக் கைகூலிகலே

No comments:

Post a Comment