பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 25, 2009

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்


முஸ்லிம் சகோதரரே! இச்சமுதாயத்தின் தனித் தன்மைகளுள் பெருநாள் தினம் முக்கியமானது. மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று இஸ்லாத்தின் சின்னமும்கூட, அதை நாம் கண்ணியமாகக் கொண்டாட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துகின்றாரோ நிச்சயமாக அது இறையச்சமுள்ள இதயங்களின் வெளிப்பாடாகும். (22:32) எனவே பெருநாள் சம்பந்தமான சட்டங்களையும் ஒழுக்கங்களையும் அறிந்து கொள்வது அவசியம். அவை இதோ:

1. தக்பீர்: துல்ஹஜ் 9 ஆம் நாள் - துல்ஹஜ் 13. அல்லாஹ் கூறுகிறான்: குறிப்பிட்ட அத்தினங்களில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்! (2:203)

2. உள்ஹிய்யா: பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் குர்பானி கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் யார் தொழுகைக்கு முன்பு பலியிட்டு விடுகின்றாரோ அவர் அதற்குப் பகரமாக தொழுகைக்குப் பின் வேறொன்றை அறுக்கட்டும்! யார் தொழுகைக்கு முன்பு அறுக்கவில்லையோ அவர் தொழுகைக்கு பிறகு முறையாகப் பலியிடட்டும் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்) பலியிடுவதற்கான தினங்கள் பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) நான்கு தினங்களாகும்.

3. குளித்தலும் வாசனைத் திரவியம் பூசுதலும்: விரயமில்லாத வகையில் சிறந்த ஆடையை கரண்டைக்குக் கீழ் தொங்கவிடாதவாறு அணிவதுடன் வாசனைத் திரவியமும் பூசிக்கொள்ள வேண்டும். தாடியை சிறைப்பது கூடாது. ஆனால் பெண்களோ தங்களின் அங்கங்களையோ, அலங்காரங்களையோ வெளிப்படுத்தாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் திடலுக்குச் செல்ல வேண்டும். ஒரு பெண் அல்லாஹ்வின் அதிருப்திக்கு ஆளாகும் விதமாக தனது அலங்காரங்களை வெளிப்படுத்தும் வகையில் அரைகுறை ஆடையணிந்து வாசனை பூசி ஆண்களுக்கு மத்தியில் அதுவும் தொழுகைக்காக - அல்லாஹ்வை வழிபடுவதற்காகச் செல்வதை விட கேவலம் வேறில்லை.

4. குர்பானி மாமிசத்தை உண்ணல்: குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உள்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் 'அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்!' (22:28) என்று அல்லாஹ் கூறுகிறான்.

5. தொழுகைத் திடலுக்குச் செல்லல்: பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் - திடலில் நிறைவேற்றுவதுதான் நபிவழி. மழை பெய்தல் போன்ற காரணங்கள் இருந்தால் பள்ளிவாசலில் தொழலாம். மழை பெய்ததன் காரணமாக நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு பள்ளியில் தொழுதிருக்கிறார்கள் என்பதாக அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூற்களில உள்ளது.

6. தொழுதலும் குத்பா உரையைச் செவிமடுப்பதும்: 'உனது இரட்சகனைத் தொழுவீராக! மேலும் அவனுக்கே அறுத்துப் பலியிடுவீராக! (108:2) என்ற வசனத்தின் அடிப்படையில் தகுந்த காரணமின்றி பெருநாள் தொழுகையை விடுவது கூடாது. பெண்களும் திடலுக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும. பருவமடைந்தவர்கள், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் திடலுக்கு வரவேண்டும். மாதவிடாய்ப் பெண்கள் தொழுகையில் பங்கேற்கக் கூடாது. என்றாலும் அதன் பிறகு நடைபெறும் (குத்பா) பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் அவ்வாறு நபி (ஸல்) வலியுறுத்தியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்)

7. வீடு திரும்பும் போது வழியை மாற்றுதல்: தொழுகைத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியையும் திரும்பும் போது வேறு வழியையும் பயன்படுத்துவது நபிவழி. இத்தகவல் புகாரியில் உள்ளது.

தவிர்த்துக் கொள்ள வேண்டிய சில தவறுகள்:

1. கூட்டு தக்பீர்: ஒருவர் தக்பீர் கூற அவரைத் தொடர்ந்து மற்றவர்கள் கூட்டாக தக்பீர் கூறுதல்.

2. தடுக்கப்பட்டவற்றைச் செய்தல்: தவறான பாடல்களை செவிமடுத்தல், முறையற்ற திரைப்படங்களைப் பார்த்தல், ஆண்கள் அந்நிய பெண்களுடன் கூடிக் கும்மாளமடித்தல் மற்றும் வெறுக்கத்தக்க காரியங்களில் ஈடுபடுதல்.

3. முடிகளைக் களைதல்: குர்பானி கொடுக்க நாடியவர் அதை நிறைவேற்றும் முன்பே நகங்களையும் முடிகளையும் களைதல்.

4. விரயம் செய்தல்: (பட்டாசு வெடித்தல் போன்ற) பயனற்ற காரியங்களில் பொருளாதாரத்தை - நேரத்தை விரயம் செய்தல்.

No comments:

Post a Comment