சிறந்த இஸ்லாமிய கல்வியாளரின் மறைவு பற்றி ;
********************************************************************
அஷ்ஷெய்க் சயீத் பின் வஹ்ஃப் அல்கஹ்தானீ அவர்கள் இன்று (01.10. 2018) படைத்தவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் ; கருணையாளன் அல்லாஹ் ; அன்னார் இம்மையில் செய்த நல்லறங்களை ஏற்று மறுமையில் பரிபூரணமான நன்மைகளை வழங்கி ஈடேற்றம் பெற துஆச் செய்வோம் ;
இவர்கள் அரபி மொழியில் பல நூல்களை தொகுத்த மிகச்சிறந்த அறிஞர் ; இவர்கள் தொகுத்த நூல்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நூல் “ ஹிஸ்னுல் முஸ்லிம் ” எனும் (துஆக்களின் தொகுப்பு) நூலாகும் .
இந்நூலை ஹிஜ்ரீ - 1409 ஆம் வருடம் ஸபர் மாதம் தொகுத்தளித்தார்கள் ;
இந்நூலில் 133 தலைப்புகளில் (ஒரு இறைவிசுவாசி காலை படுக்கையில் இருந்து எழுந்தது முதல் மீண்டும் இரவு படுக்கைக்கு செல்லும்வரை ; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஓதிய ஆதாரப்பூர்வமான) 267 துஆக்களை வரிசைபடுத்தியுள்ளார்கள் ; இந்நூல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது ;
இந்நூலை மறைந்த எனது ஆசான் K . முஹம்மத் இக்பால் " மதனீ " அவர்கள் " முஸ்லிமின் அரண் " எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்து பல நல்லோர்களின் பொருளாதார உதவியுடன் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு தமிழ் மொழி பேசும் மக்கள் உலகில் வாழும் (இந்தியா - இலங்கை - ஐக்கிய அமீரகம் - சவூதி அரேபியா - குவைத் - கத்தார் - ஓமான் - பஹ்ரைன் - சிங்கப்பூர் - மலேசியா) பல நாடுகளில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது ; குறிப்பாக இந்நூல் அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டு மையங்களில் அச்சிட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது ;
உங்கள் இல்ல திருமண நிகழ்வுகளில் அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூல் இது ; தேவையுள்ளோர் என்னுடனோ (அலைபேசி எண் - 90 477 83 649) அல்லது எனது ஆசானின் அருமை மகன்கள் முஹம்மத் ஸஆத் மற்றும் முஹம்மத் அஸ்அத் " உமரீ " (அலைபேசி எண்கள் - 88701 00370 - 95788 96611) உடன் தொடர்பு கொள்ளவும் ; 1000 பிரதிகள் அச்சிட்டுதர ரூபாய் - 22,000 (இருபத்தி இரண்டாயிரம் மட்டும்)
பின் குறிப்பு : இந்நூலின் மூல மொழி ஆசிரியருக்கு துஆச்செய்யும் நல்லோர்கள் இதை தமிழில் மொழிபெயர்த்த எனதருமை ஆசானின் மறுமை ஈடேற்றத்திற்காக துஆச்செய்யவும் .
-------AG Muhammad . JAQH TRICHY
Ayyampet ALEEM
Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Monday, October 1, 2018
Hisnul Muslim - Author
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment