பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 24, 2017

முஹைதீனும் முட்டாள்களும்

முஹைதீனும் முட்டாள்களும்
---ஆசிரியைகள், தவ்ஹீத் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, மதுரை.
அகில உலகத்தை ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் நித்தியஜீவன் பெருமைக்குச் சொந்தக்காரன் பேரறிவாளனாகிய அல்லாஹ்வுக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ, துக்கமோ, சோர்வோ, மறதியோ, நோயோ, முதுமையோ உள்ளிட்ட எந்தப் பலகீனமும் இல்லை. தாய், மனைவி, மக்கள், அண்ணன், தம்பி என்ற எந்த உறவும் இல்லை என்பன உள்ளிட்ட கடவுளின் தகுதிகளையும் இலக்கணங்களையும் வகுத்து வைத்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பிறமத சகோதரர்கள் கூட ஒப்பு கொள்கின்றனர்.
ஆனால் இஸ்லாமியனாகப் பிறந்த, அல்லாஹ்வின் அடிமை (அப்துல்லாஹ்) என்று பெயர் சூட்டிக் கொண்டு முஹைதீன் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி அடையும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை எள்ளளவும் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் கணக்கிலடங்காதவை.
முஹைதீனின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார். யாருடைய ஆப்பிள் என்று தெரியவில்லை என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஓடி வரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்தாராம்.
அந்த மரத்தின் உரிமையாளரிடம் அதைச் சப்பிட்டதை ஹலாலாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார். அவர் என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் ஆக்குகிறேன். ஆனால் அவள் குருடி, ஊமை, நொண்டி, இரண்டு கையும் சூகை என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக் கூடாது. அதை ஹலாலாக்கி விடுங்கள்; அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார் எள்றார்களாம்.
திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தார். ஏனெனில் அழகென்றால் அழகு! அவ்வளவு அழகு!! ஒரு குறையும் இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படிச் சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார். என் தந்தை சொன்னது உண்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.
இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்காதிர் ஜிலானியாம். கடும் பசி நேரத்திலும் ஹராமான உணவை உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய் இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்? என்று கதை விடுகின்றனர் கப்ரு வணங்கிகள்.
சிந்தனையாளர்களே சிந்தித்துப் பாருங்கள் ஓர் ஆப்பிலுக்காக ஆற்றைக் கடந்தாராம் நம்பமுடிகிறதா? நம்பிக்கைக்குரிய நபிகளார் கூறுகிறார்கள்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 164(
2431- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ لَوْلاَ أَنِّيأَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள் . இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.
(நூல் புகாரி (2431)
மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக தெருவில் கிடக்கும் அற்பமான பொருளைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது நபிவழிக்கு மாற்றம் செய்கிறார் முஹைதீனின் தந்தை. இவர் எப்படி பரிசுத்த தந்தையாக இருப்பார்?
முஹைதீனைப் பற்றி முட்டாள் தனமான முன்னறிவிப்பு
ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை என் அன்பரும் அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுபசோபனம் கூறினார்கள் என்று கட்டுக் கதையை கட்டவிழ்த்து உள்ளனர்.
கேட்பவன் கேனயனாக இருந்தால் கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல் கேலியாக உள்ளது இந்தச் செய்தி.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.
நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பதாக இருந்தால் அண்ணலாரை, அவர் நேரில் கண்டிருக்க வேண்டும். அவர்களின் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் முஹைதீன் தந்தை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்ததுமில்லை. நபியவர்களை நேரில் கண்டதுமில்லை. பிறகு எப்படி அவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டிருப்பது சாத்தியமாகும். இது முற்றிலும் அப்பட்டமான பொய்யே!
எளிய மார்க்கத்தை ஏளனப்படுத்தியவர்
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கிச் சென்றார். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றைக் கொடுப்பார். அதை அணிந்து கொண்டே நாட்களைப் போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும். முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள்.
ஒரு வருடம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல் எதுவும் சாப்பிடாமல் தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் உளூவுடன் சுப்ஹ் தொழுகையையும் தொழுவார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு அருகிலுள்ள ஒரு துணியில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படிச் செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்போது  பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபுஹ் தொழுகையையும் தொழுவார்கள் என்று அடுக்கடுக்கான அபத்தங்களைப் மொழிகின்றனர்.
மேற்கண்ட செய்தியில் முஹைதீன் அப்துல் காதிர் ஜிலானி துறவறம் மேற்கொண்டதாக உள்ளது. ஆனால் இஸ்லாம் துறவறத்தை அணுவளவும் அனுமதிக்கவே இல்லை.
ஏனெனில் இதனால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் பாழ்படுத்தப்படுகின்றன.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (4 / 129)
3470 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِبْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ قَالَ رَدَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلمعَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;
துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்கு) அனுமதி அளித்திருந்தால் நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
(முஸ்லிம் 2716)
நபி (ஸல்) அவர்களின் கூற்று மூலம் துறவறத்தை இஸ்லாம் தூர வீசுகின்றது எனப் புரியலாம்.
மேலும் முஹைதீன் ஆண்டவர் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதாகவும், ஓர் இரவு முழுவதும் ஒற்றைக் காலில் நின்று வணங்கியதாகவும் உள்ளது. இவரின் செயல் இறைத்தூதரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதைப் பின்வரும் பொன்மொழியில் காணலாம்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (6 / 242)
5052- حَدَّثَنَا مُوسَى ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ مُجَاهِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا فَتَقُولُنِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُذْ أَتَيْنَاهُ فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الْقَنِي بِهِ فَلَقِيتُهُ بَعْدُ فَقَالَ كَيْفَ تَصُومُ قَالَ كُلَّ يَوْمٍقَالَ وَكَيْفَ تَخْتِمُ قَالَ كُلَّ لَيْلَةً قَالَ صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً وَاقْرَإِ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْجُمُعَةِ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَقَالَ أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمِ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَرَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ الْقُرْآنِ بِالنَّهَارِ وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ ،وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيةَ أَنْ يَتْرُكَ شَيْئًا فَارَقَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَيْهِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவர் “நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்” என்றார்.
இன்னொருவர் நான் புலால் உண்ண மாட்டேன் என்றார் இன்னொருவர் நான் படுக்கையில் உறங்க மாட்டேன்“ என்றார். இதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றி விட்டு சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால் நான் {இரவில்} தொழுகிறேன்: உறங்கவும் செய்கிறேன் : நோன்பும் நோற்கிறேன்:நோன்பை விடவும் செய்கிறேன், பெண்களை மணந்தும் கொள்கிறேன். என்வழியை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.
(புகாரி 5052)
ஒருவர் அயராது தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டோ, தொழுது கொண்டோ இருப்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் பக்தி பரவசமாகத் தெரியலாம். ஆனால் இது இஸ்லாத்தின் பார்வையில் நபிவழியை விட்டு துரத்தி அடிக்கும் பாரதூரமான காரியம்.
அரபி அல்லாத அஜமி
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ஆம் இரவன்று முஹைதீனின் கனவில் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தோன்றி “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்.“ எனக் கேட்டார்கள். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அப்துல் காதிர் {முஹைதீன்} “யா ரசூலல்லாஹ்!! நான் அரபி இல்லையே! அஜமிதானே “ எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபி மொழியில் பேசத் தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அண்ணல் நபி {ஸல்} அவர்கள் சிரித்த முகத்துடன் முஹைதீன் ஆண்டவரின் வாயை திறக்கச் சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலைத் துப்பினார்கள். அதற்குப் பிறகு முஹைதீன் ஆண்டவரின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத் தொடங்கியது என்று கதை அள்ளி வீசுகின்றனர்.
நபிகளாரிடம் நேரடியாகப் பாடம் பெற்ற நபித்தோழர்களுக்கு திருக்குர்ஆனை ஒதி அதில் உள்ள சட்டங்களை விளக்கி மார்க்கத்தைச் சொன்னார்களே தவிர, அவர்களின் வாய்களில் எச்சிலைத் துப்பி மார்க்க போதனைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. நபித்தோழர்களுக்கு இவ்வாறு செய்யாதவர்கள் கனவில் வந்து எச்சில் துப்பி மார்க்கத்தைப் போதிப்பார்களா?
மரணம்
முஹைதீன் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு குளித்துவிட்டு இஷா தொழுகையைத் தொழுதார்கள். நீண்ட நேரம் ஸுஜுதிலிருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தகாரர்களுக்கும், தன் முரீதுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள்.
ஸுஜுதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக, என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக“ என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது.
கடைசி நேரம் வந்து விட்டதை உணர்ந்த அவர் தன் வாயால் திருக்கலிமாவைக் கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோட தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள் என்று கதை நீண்டு செல்கிறது.
இவ்வுலகத்தில் மிகச் சிறந்தவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள்.  இந்த இறைத்தூதர்கள் இறந்த போது இது போன்று மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தனவா?. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தனவா?
இறைத்தூதர்களுக்கும் நபித்தோழர்களுக்கு இல்லாத சிறப்பு அப்துல் காதிர் ஜீலானிக்கு எப்படி வந்தது? இந்தக் கதைகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.
ஆலிம் பெருமக்கள்,
அவ்லியாக்களின் நேசகர்கள்,
போலி ஆசாமிகள்,
இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டாண்டாய் வழிபடும் கப்ர் வணக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்..!!
இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment