பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, January 19, 2019

திருக்குர்ஆன்:- கேள்வி? பதில்!

திருக்குர்ஆன்:- கேள்வி? பதில்!
------------------------------------------------
அன்புடையீர்!: அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}
அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே!...
சும்மா வாங்க சகோ,ஸ் தெரிஞ்சிக்குவோம்..

கேள்வி : ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக
அனுப்பப்பட்டவர் யார்?

பதில் ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)

கேள்வி : ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர்
எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்?

பதில் ! பெரும் சப்தத்தால் (அல்குர்ஆன் 11:67)

கேள்வி : உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும்
கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

பதில் ! ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)

கேள்வி : தம்மிடம் வந்த வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?

பதில் ! பொரித்தக் கன்றை கொடுத்தார்கள் (அல்குர்ஆன் 11:69)

கேள்வி : பணியாளன் எதற்கு பொறுப்பாளி?

பதில் ! தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். (ஆதாரம் : புகாரி 2751)

கேள்வி : வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட
நபி இப்ராஹீம் (அலை) என்ன ஆனார்கள்?

பதில் ! பயந்துவிட்டார்கள் (அல்குர்ஆன் 11:70)

கேள்வி : தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின்
நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?

பதில் ! ஸஅத் பின் உபாதா (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)

கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள் என்ன சொன்னார்கள்?

பதில் ! நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை
பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)

கேள்வி : தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா
எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

பதில் ! அபூதல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி என்ன கூறினார்கள்?

பதில் ! "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர்

கேள்வி : கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா?

பதில் ! இது வியப்பான செய்திதான்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:72)

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?

பதில் ! பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?

பதில் ! சகிப்புத் தன்மை மிக்கவராகவும்,
இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள்.
(அல்குர்ஆன் 11:75)

கேள்வி : அனஸ் (ரலி) அவர்கள், நபிகளாருக்கு
பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

பதில் ! அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)

கேள்வி : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம்
நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?

பதில் ! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா?
என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 11:78)

கேள்வி : மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த
குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?

பதில் ! பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)

கேள்வி : லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர்
எவ்வாறு அழிக்கப்பட்டனர்?

பதில் ! சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து,
அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது.
(அல்குர்ஆன் 11:82)

கேள்வி : ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி
தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?

பதில் ! உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?

பதில் ! மத்யன் (அல்குர்ஆன் 11:84)

கேள்வி : பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?

பதில் ! பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர்
வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?

பதில் ! அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)

கேள்வி : ஜிஹாத்திற்கு நிகரான நற்செயல் எது?

பதில் ! எதுவும் இல்லை (ஆதாரம் : புகாரி 2785)

கேள்வி : தொழுகை எதை கட்டளையிடுவதாக ஷுஐப்
(அலை) அவர்களின் கூட்டத்தினர் கூறினர்?

பதில் ! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும்,
எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட கட்டளையிடுகிறதா? (அல்குர்ஆன் 11:87)

கேள்வி : வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் எது?

பதில் ! பைத்துல் மஃமூர் (ஆதாரம் : புகாரி 3207)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்களின் போதனைப் பற்றி அவர்களின் கூட்டத்தினர் என்ன கருத்து கூறினர்?

பதில் ! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை
நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11:91)

கேள்வி : சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

பதில் ! பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)

கேள்வி : உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம் என்று கூறியதற்கு
ஷுஐப் (அலை) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?

பதில் ! "என் சமுதாயமே! என் குலத்தவர்
அல்லாஹ்வைவிட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா? (அல்குர்ஆன் 11:92)

கேள்வி : சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான
இடம் கிடைப்பது?

பதில் ! உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)

No comments:

Post a Comment