பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 24, 2019

இறை வேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகள:

இறை வேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகள:

1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். அது போன்ற வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.

.
அறிவியல் சான்றுகள்

1.பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது – [அல்குர்ஆன் 2:22, 21:32, 40:64, 52:5]

2.பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு
[அல்குர்ஆன் – 86:11]

3.மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன
[அல்குர்ஆன் – 4:56]

4.விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது மனித இதயம் சுருங்கும்
[அல்குர்ஆன் – 6:125]

5.பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்
[அல்குர்ஆன் – 2:36, 7:24, 7:25]

6.ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம்
[அல்குர்ஆன் – 16:79, 67:19]

7.விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது
[அல்குர்ஆன் – 17:37]

8.பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம்
[அல்குர்ஆன் – 18:90]

9.பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்
[அல்குர்ஆன் – 20:53, 43:10, 78:6]

10.பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு
[அல்குர்ஆன் – 21:30 ]

11.கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் – [அல்குர்ஆன் 23:14]

12.நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது
[அல்குர்ஆன் – 23:18]

13.கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது
[அல்குர்ஆன் – 25:53, 27:61, 35:12 55:19,20]

14.காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம்
[அல்குர்ஆன் – 34:12]

15.வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி
[அல்குர்ஆன் – 35:41, 13:2, 31:10, 22:65]

16.பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல்
[அல்குர்ஆன் – 37:5, 55:17, 70:40]

17.பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின
[அல்குர்ஆன் – 41:11]

18.மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடைகளை எடுத்துக் கொள்கின்றன
[அல்குர்ஆன் – 6:98, 50:4, 71:17]

19.விண்வெளிப் பயணம் சாத்தியமே
[அல்குர்ஆன் – 55:33-35]

20.விரல்ரேகை மனிதனின் முக்கிய அடையாளம்
[அல்குர்ஆன் – 75:4]

21.உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு
[அல்குர்ஆன் – 76:2]

22.தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, தேனீக்களின் வயிற்றிலிருந்து தான் வெளியாகின்றது
[அல்குர்ஆன் – 16:69]

23.கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன [அல்குர்ஆன் – 24:40]

24.அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும்
[அல்குர்ஆன் – 13:8]

25.பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன
[அல்குர்ஆன் – 96:15]

26.காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும்
[அல்குர்ஆன் – 51:41,42]

27.கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை
[அல்குர்ஆன் – 28:32]

28.விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை
[அல்குர்ஆன் – 86:7]

29.வான்வெளியிலும் பாதைகள் உண்டு
[அல்குர்ஆன் – 51:7]

30.பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது
[அல்குர்ஆன் – 13:2, 31:10]

31.சூரியனும் கோள்களும் ஓடுகின்றன
[அல்குர்ஆன் – 13:2, 31:29, 35:13, 36:38, 39:5]

32.சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது
[அல்குர்ஆன் – 54:1]

33.வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது
[அல்குர்ஆன் – 51:47]

34.உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு
[அல்குர்ஆன் – 13:3, 20:53, 36:36, 43:12, 51:49]

35.உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும்
[அல்குர்ஆன் – 13:41, 21:44]

36.வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம்
[அல்குர்ஆன் – 24:43]

37.அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும்
[அல்குர்ஆன் – 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32]

38.இருள்கள்’ என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது.
[அல்குர்ஆன் – 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11]

39.பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றி ஆராயத் தூண்டுதல்
[அல்குர்ஆன் – 2:259]

40.குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறி ஆராயத் தூண்டுதல்
[அல்குர்ஆன் – 19:21, 19:29,30, 21:91, 23:50]

41.ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம்
[அல்குர்ஆன் – 88:17, 36:41,42]

42.இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது
[அல்குர்ஆன் – 57:25]

43.படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன
[அல்குர்ஆன் – 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32]

44.பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல்.
[அல்குர்ஆன் – 41:9,10]

45.நவீனக் கருவிகளும், ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை
[அல்குர்ஆன் – 16:66]

46.மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை
[அல்குர்ஆன் – 22:31]

47.வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள்தான் என்று அறிவித்தது
[அல்குர்ஆன் – 9:36]

48.கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம்
[அல்குர்ஆன் – 3:153]

49.மரபணுக்கள் வழிவழியாக தொடரும்
[அல்குர்ஆன் – 7:172]

50.சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (Relativity) எனும் சார்பியல் கோட்பாடு
[அல்குர்ஆன் – 22:47, 32:5]

51.மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை
[அல்குர்ஆன் – 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14]

52.மனிதர்களை மூக்கு சரியாக அடையாளம் காட்டும்
[அல்குர்ஆன் – 68:16]

53.பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன்
[அல்குர்ஆன் – 65:12]

54.தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது
[அல்குர்ஆன் – 19:24]

55.குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே
[அல்குர்ஆன் – 75:39]

56.மன அழுத்தம் நீக்கும் மருந்தை அன்றே சொன்னது
[அல்குர்ஆன் – 13:28]

57.தேனீக்களின் வழி அறியும் திறன்
[அல்குர்ஆன் – 16:68]

58.அதிர்வுகளை அறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளது
[அல் குர்ஆண் -27:18]

59.நோன்பின் நன்மைகள்
[அல் குர்ஆண் – 2:184]

60.தாய்ப்பால் ஊட்டுவதன் நன்மை
[அல் குர்ஆண் – 2:233]

61.யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இருந்ததில்லை என்ற பிரகடனம் மூலம் இறைவேதம் என நிரூபித்தல்
அல் குர்ஆண்
[அல்குர்ஆன் – 19:7]

இவை அனைத்தும் நமக்கு தெரிந்த அறிவியலில் இருப்பவை மட்டுமே இன்னும் அறிவியல் நிபுணராக இருந்தால் இன்னும் ஏராளமான அறிவியல் உண்மைகளை கண்டு அறிய முடியும் …

Saturday, January 19, 2019

திருக்குர்ஆன்:- கேள்வி? பதில்!

திருக்குர்ஆன்:- கேள்வி? பதில்!
------------------------------------------------
அன்புடையீர்!: அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}
அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே!...
சும்மா வாங்க சகோ,ஸ் தெரிஞ்சிக்குவோம்..

கேள்வி : ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக
அனுப்பப்பட்டவர் யார்?

பதில் ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)

கேள்வி : ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர்
எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்?

பதில் ! பெரும் சப்தத்தால் (அல்குர்ஆன் 11:67)

கேள்வி : உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும்
கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

பதில் ! ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)

கேள்வி : தம்மிடம் வந்த வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?

பதில் ! பொரித்தக் கன்றை கொடுத்தார்கள் (அல்குர்ஆன் 11:69)

கேள்வி : பணியாளன் எதற்கு பொறுப்பாளி?

பதில் ! தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். (ஆதாரம் : புகாரி 2751)

கேள்வி : வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட
நபி இப்ராஹீம் (அலை) என்ன ஆனார்கள்?

பதில் ! பயந்துவிட்டார்கள் (அல்குர்ஆன் 11:70)

கேள்வி : தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின்
நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?

பதில் ! ஸஅத் பின் உபாதா (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)

கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள் என்ன சொன்னார்கள்?

பதில் ! நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை
பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)

கேள்வி : தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா
எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

பதில் ! அபூதல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி என்ன கூறினார்கள்?

பதில் ! "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர்

கேள்வி : கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா?

பதில் ! இது வியப்பான செய்திதான்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:72)

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?

பதில் ! பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)

கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?

பதில் ! சகிப்புத் தன்மை மிக்கவராகவும்,
இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள்.
(அல்குர்ஆன் 11:75)

கேள்வி : அனஸ் (ரலி) அவர்கள், நபிகளாருக்கு
பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

பதில் ! அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)

கேள்வி : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம்
நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?

பதில் ! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா?
என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 11:78)

கேள்வி : மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த
குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?

பதில் ! பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)

கேள்வி : லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர்
எவ்வாறு அழிக்கப்பட்டனர்?

பதில் ! சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து,
அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது.
(அல்குர்ஆன் 11:82)

கேள்வி : ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி
தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?

பதில் ! உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?

பதில் ! மத்யன் (அல்குர்ஆன் 11:84)

கேள்வி : பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?

பதில் ! பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர்
வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?

பதில் ! அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)

கேள்வி : ஜிஹாத்திற்கு நிகரான நற்செயல் எது?

பதில் ! எதுவும் இல்லை (ஆதாரம் : புகாரி 2785)

கேள்வி : தொழுகை எதை கட்டளையிடுவதாக ஷுஐப்
(அலை) அவர்களின் கூட்டத்தினர் கூறினர்?

பதில் ! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும்,
எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட கட்டளையிடுகிறதா? (அல்குர்ஆன் 11:87)

கேள்வி : வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் எது?

பதில் ! பைத்துல் மஃமூர் (ஆதாரம் : புகாரி 3207)

கேள்வி : ஷுஐப் (அலை) அவர்களின் போதனைப் பற்றி அவர்களின் கூட்டத்தினர் என்ன கருத்து கூறினர்?

பதில் ! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை
நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11:91)

கேள்வி : சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

பதில் ! பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)

கேள்வி : உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம் என்று கூறியதற்கு
ஷுஐப் (அலை) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?

பதில் ! "என் சமுதாயமே! என் குலத்தவர்
அல்லாஹ்வைவிட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா? (அல்குர்ஆன் 11:92)

கேள்வி : சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான
இடம் கிடைப்பது?

பதில் ! உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)