பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 28, 2018

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்�

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?

நீங்கள் ஏன் உங்களை தவ்ஹீத்வாதிகள்என்று கூறிக்கொள்கிறீர்கள்.. இப்படிஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல்முஸ்லிம் என்று ஒன்றாக இருக்கலாமே?  தகுந்த விளக்கம் தரவும்.

அஸதுல்லாஹ்.

பதில்

முஸ்லிம் என்ற வார்த்தை திருக்குர்ஆன்முழுவதும் குறிப்பிட்ட இயக்கத்தையோமக்களையோ குறிப்பதற்கானவார்த்தையாகப்பயன்படுத்தப்படவில்லை. மாறாக அதுஒரு பண்புப் பெயராகவேபயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

சில அதிமேதாவிகள் முஸ்லிம்கள்தங்களுக்குள் இந்த வார்த்தையைத் தவிரவேறு எதையும் சூட்டிக் கொள்ளக் கூடாது. இயக்கத்திற்கு பெயர்கள் வைக்கக்கூடாது என்று உளறி வருகின்றனர்.இவர்கள் இவ்வாறு உளறியகாரணத்தினால் இவர்கள் கூறியது போல் ஒற்றுமை ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம்.

அடையாளப் பெயருக்கும் பண்புப்பெயருக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்விளங்கிக் கொள்ள வேண்டும்.

பண்புப் பெயருடன் இன்னொரு பெயர் இருந்தால் பண்புப் பெயரை மறுப்பதாக ஆகாது.

ஒருவர் மிகவும் பொறுமைத்தன்மைஉடையவராக இருக்கின்றார். இந்தத்தன்மையின் காரணமாக அவரை நாம்பொறுமைசாலி என்று குறிப்பிடுவோம்.இது பொறுமை என்ற பண்பின்அடிப்படையில் உருவான பெயராகும்.

அதே நேரத்தில் ஒருவருக்குவெள்ளையன் என்று பெயர்சூட்டுகின்றோம். அவர் மிகவும் கருப்பாகஇருந்தாலும் அவரை வெள்ளையன்என்றே அழைப்போம். இது அவரைஅடையாளப் படுத்துவதற்காகவைக்கப்பட்ட குறிப்பான பெயராகும்.

திருக்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும்முஸ்லிம் என்ற வார்த்தை அடையாளப்பெயராகப் பயன்படுத்தப்படவில்லை.அது ஒரு பண்புப் பெயராகவேபயன்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் என்பது அடையாளப் பெயராகஇருந்தால் சிலை வணங்கியைக் கூட முஸ்லிம் என்றே குறிப்பிட வேண்டியநிலை ஏற்பட்டு விடும்.

ஆதம் (அலை) அவர்கள் முதல் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் வரைஇறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தஅனைவரையும் முஸ்லிம்கள்(இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்) என்றேஅல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

நூஹ் நபியவர்களை முஸ்லிம் என்றேஅல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72)10

நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றிஎனக்குக் கவலையில்லை.) நான் உங்களிடம் எந்தக் கூலியையும்கேட்கவில்லை. என் கூலிஅல்லாஹ்விடமே உள்ளது. நான்முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்'' (என்றும்கூறினார்.)

 

அல்குர்ஆன் 10 : 72

இபுறாஹிம் நபி முஸ்லிமாக இருந்தார்என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (67)3

இப்ராஹீம், யூதராகவோ,கிறித்தவராகவோ இருந்ததில்லை.மாறாக அவர் உண்மை வழியில் நின்றமுஸ்லிமாக இருந்தார். இணைகற்பித்தவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் (3:67)

இபுராஹிம் நபியவர்களும், இஸ்மாயில்நபியவர்களும் தம்மையும் தம்முடையசந்ததிகளையும் முஸ்லிம்களாக அதாவதுஇறைவனுக்குக் கட்டுப்படும் தன்மைகொண்டவர்களாக ஆக்க வேண்டும் எனஅல்லாஹ்விடம் பிரார்த்தனைசெய்துள்ளார்கள்.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128) [البقرة/128]

''எங்கள் இறைவா! எங்களைஉனக்குக் கட்டுப்பட்டோராகவும்,(முஸ்லிம்களாகவும்) எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டுநடக்கும் சமுதாயமாகவும் (முஸ்லிம் சமுதாயமாகவும்) ஆக்குவாயாக! எங்கள்வழிபாட்டு முறைகளை எங்களுக்குக்காட்டித் தருவாயாக! எங்களைமன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்;நிகரற்ற அன்புடையோன்'' (என்றனர்.)

அல்குர்ஆன் 2:128

யாகூப் நபி தன்னுடைய பிள்ளைகளுக்குமுஸ்லிம்களாக மரணிக்க வேண்டும்என்றே உபதேசம் செய்துள்ளார்கள்.

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (132) 2

''என் மக்களே! அல்லாஹ்உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வுசெய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிரநீங்கள் மரணிக்கக் கூடாது''என்று இப்ராஹீமும், யஃகூபும் தமதுபிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்

அல்குர்ஆன்  2:132

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آَبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (133) 2

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது,நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? ''எனக்குப் பின் எதைவணங்குவீர்கள்?'' என்று தமதுபிள்ளைகளிடம் அவர் கேட்ட போது''உங்கள் இறைவனும், உங்கள்தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல்,இஸ்ஹாக் ஆகியோரின்இறைவனுமாகிய ஒரே இறைவனையேவணங்குவோம். நாங்கள் அவனுக்கேகட்டுப்பட்டவர்கள்'' என்றே(பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் 2 : 133

மூஸா நபியின் சமுதாயத்தையும்முஸ்லிம்கள் என்றே திருக்குர்ஆன்குறிப்பிடுகிறது

وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آَمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ (84)10

''என் சமுதாயமே! நீங்கள்அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாகஇருந்தால் அவனையேசார்ந்திருங்கள்!'' என்று மூஸாகூறினார்.

சூனியக்காரர்கள் தாங்கள் ஈமான்கொண்டவுடன் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம் என்றே கூறினார்கள்.

وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آَمَنَّا بِآَيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (126)7

''எங்கள் இறைவனின்சான்றுகள் எங்களிடம் வந்த போது அதைநம்பினோம் என்பதற்காகவே எங்களை நீதண்டிக்கிறாய்'' (என்றுஃபிர்அவ்னிடம் கூறி விட்டு)''எங்கள் இறைவா! எங்களுக்குப்பொறுமையைத் தருவாயாக! எங்களைமுஸ்லிம்களாக மரணிக்கச்செய்வாயாக!'' என்றனர்

அல்குர்ஆன் 7 : 126

அல்குர்ஆன் 10 : 84

பிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது தான்முஸ்லிம்களில் ஒருவனாகி விட்டேன்என்று கூறினான்.

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آَمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آَمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90)10

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச்செய்தோம். ஃபிர்அவ்னும், அவனதுபடையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.முடிவில் அவன் மூழ்கும் போது''இஸ்ராயீலின் மக்கள்நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை என நம்புகிறேன்; நான்முஸ்லிம்களில் ஒருவன்''என்று கூறினான்.

அல்குர்ஆன் 10 : 90

ஈஸா (அலை) அவர்களின்உதவியாளர்களும் முஸ்லிம்கள் என்றேகுறிப்பிடப்பட்டுள்ளனர்.

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آَمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ (52) 3

அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸாஉணர்ந்த போது''அல்லாஹ்வுக்காக எனக்குஉதவுவோர் யார்?'' என்றுகேட்டார். (அவரது) அந்தரங்கத்தோழர்கள், ''நாங்கள்அல்லாஹ்வின் உதவியாளர்கள்.அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள்முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களேசாட்சியாக இருங்கள்'' என்றனர்.

அல்குர்ஆன் 3 : 52

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்சமுதாயத்தையும் அல்லாஹ் முஸ்லிம்கள்என்றே குறிப்பிட்டு்ள்ளான்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْمُسْلِمُونَ (102)3

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வைஅஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்!நீங்கள் முஸ்லிம்களாகவே தவிரமரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் 3 : 102

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163)6

''எனது தொழுகை, எனதுவணக்க முறை, எனது வாழ்வு, எனதுமரணம் யாவும் அகிலத்தின்இறைவனாகிய அல்லாஹ்வுக்கேஉரியன; அவனுக்கு நிகரானவன்இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான்முதலாமவன்'' என்றும்கூறுவீராக

அல்குர்ஆன் 6 : 162, 163

மேற்கண்ட வசனங்களிலிருந்துஇருந்து அனைத்து நபிமார்களின்சமுதாயமும் முஸ்லிம்களே என்பதைநாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

நபிகள் நாயகம் அவர்களுடையசமுதாயத்திலும் முந்தையநபிமார்களின் சமுதாயத்திலும்இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்தன்மை கொண்ட மக்களைமுஸ்லிம்கள் என்றே குறிப்பிட்டதாகஅல்லாஹ் 22 : 78 வசனத்தில்கூறுகின்றான்.

 

உங்கள் தந்தை இப்ராஹீமின்மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன்உங்களுக்கு எந்தச் சிரமத்தையும்ஏற்படுத்தவில்லைஇதற்குமுன்னரும் இதிலும் அவனேஉங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டான்

அல்குர்ஆன் 22 : 78

முஸ்லிம் என்ற வார்த்தையை தனக்குக்கட்டுப்படும் மக்களுக்கு அல்லாஹ்குறிப்பிட்டுள்ளான். இது பண்பின்அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்தான்.இது ஒரு அடையாளப் பெயராகஇருக்குமென்றால் முஸ்லிம் என்றவார்த்தையை விட ஒரு வார்த்தையைக்கூட்டுவதோ குறைப்பதோ கூடாது.

இது ஒரு பண்புப் பெயராக இருப்பதின்காரணத்தினால் தான் நபியவர்கள்முஸ்லிம் என்ற வார்த்தையுடன் இன்னும்சில வார்த்தைகளைச் சேர்த்து அல்லாஹ்வைத்த பெயர் என்று கூறியுள்ளார்கள்.

 

2790 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ السَّمْعُ وَالطَّاعَةُ وَالْجِهَادُ وَالْهِجْرَةُ وَالْجَمَاعَةُ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ وَمَنْ ادَّعَى دَعْوَى الْجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ قَالَ وَإِنْ صَلَّى وَصَامَ فَادْعُوا بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمْ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ عِبَادَ اللَّهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ   رواه الترمدي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் உங்களுக்கு ஐந்துவிஷயங்களை ஏவுகின்றேன். அல்லாஹ்அவற்றைக் கொண்டு எனக்குகட்டளையிட்டான். அவையாவன:செவிதாழ்த்துதல், கட்டுப்படுதல், ஜிஹாத்செய்தல், ஹிஜ்ரத் செய்தல், அல்ஜமாஅத்எனும் கூட்டமைப்பாக இருத்தல்.ஏனெனில் யார் இஸ்லாமிய (அரசான)கூட்டமைப்பை ஒரு சாண் அளவு பிரிந்துசெல்கிறானோ அவன் தனதுகழுத்திலிருந்து இஸ்லாத்தின்(ஒப்பந்தமான) வளையத்தைக் கழற்றிவிட்டான். அவன் மீண்டும் திரும்பிவந்தாலே தவிர. எவன் அறியாமைக்காலஅழைப்பை அழைக்கின்றானோ அவன்நரகத்தின் கொள்ளிக்கட்டையாவான்என்று கூறினார்கள். அப்போது ஒருமனிதர் அல்லாஹ்வின் தூதரே அவன்தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா?என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்அவன் தொழுதாலும் நோன்புநோற்றாலும்தான் என்று கூறிவிட்டுஅல்லாஹ்வுடைய அழைப்பைக்கொண்டே நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள் அவன் உங்களுக்குஅல்முஸ்லிமீன்அல்முஃமினீன்,இபாதல்லாஹ் என்று பெயர்சூட்டியுள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அல்ஹாரிஸ் (ரலி)

நூல் : திர்மிதி (2790)

அஹ்மத் 21835 வது ஹதீஸில்இபாதல்லாஹ், அல்முஃமினீன், அல்முஸ்லிமீன் என்ற அல்லாஹ் பெயர்சூட்டினான் என நபியவர்கள் கூறியதாகவந்துள்ளது.

அறியாமைக் காலத்தில் பிறப்பினால்உயர்வு தாழ்வு கற்பிக்கும்வார்த்தைகளைப் பயன்படுத்திஅழைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம்அதனை உடைத்தெறிந்தது.

அல்லாஹ்வின் அடியார்கள் மத்தியில்பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது.அனைவரும் இபாதல்லாஹ்(அல்லாஹ்வின் அடியார்கள்)அல்முஸ்லிமீன் (கட்டுப்பட்டவர்கள்)அல்முஃமினீன்(இறைநம்பிக்கையாளர்கள்) என்று தான்முஸ்லிம்கள் தங்களுக்குள் குறிப்பிடவேண்டும் என நபியவர்கள்போதித்தார்கள்.

முஸ்லிம்களாக இருப்பவர்கள்பெயரினால் உயர்வு தாழ்வு கற்பிக்காமல்தங்களுக்குச் சில பண்புகளின்அடிப்படையில்  அடையாளப்பெயர்களைப் பயன்படுத்துவதுமார்க்கத்திற்கு எதிரானது அல்ல.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்தில் நபிமார்கள் வழியில் நடந்தவர்களையும் முஸ்லிம்கள் என்றே அல்லாஹ் கூறியுள்ளதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். யாரை முஸ்லிம் என்று அல்லாஹ் குறிப்பிட்டானோ அவர்களை வேறு பெயர்களிலும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

 

நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும்,  ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் : 2:62

 

நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும்,கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் : 5:69

மேற்கண்ட இரண்டு வசனங்களில் யஹூதிகள் எனும் யூதர்கள், நஸாரா எனும் கிறித்தவர்கள், சாபியீன்கள் ஆகியோரில் அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்தத் தன்மையில் உள்ள அனைவரும் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

சாபியீன்கள் என்ற பெயர் அல்லாஹ் சூட்டிய பெயர் அல்ல. மக்களாகச் சூட்டிக் கொண்ட பெயர் ஆகும். ஆனாலும் அவர்கள் அந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டதால் முஸ்லிம் என்ற பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இவர்கள் சாபியீன்கள் என்று அல்லாஹ் வைக்காத வேறு பெயர் வைத்துக் கொண்ட்தால் அவர்கள் குற்றவாளிகள் என்று கூறாமல் சொர்க்கவாசிகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் அல்லாஹ் அனைத்துநபிமார்களுடைய சமுதாயத்திற்கும்முஸ்லிம்கள் என்று பெயர்சூட்டியிருந்தாலும் அவர்களுக்குரியஅடையாளப் பெயர்களைக் கொண்டும்அல்லாஹ் அழைத்துள்ளான்.

அஹ்லுல் கிதாப், அஸ்ஹாபுல் உஹ்தூத்,யகூதிகள், நஸராக்கள்,பனீஇஸ்ரவேலர்கள் என்றெல்லாம்திருக்குர்ஆனில் முந்தையசமுதாயத்திற்குரிய அடையாளப்பெயர்களை அல்லாஹ்குறிப்பிட்டுள்ளான். இந்தப் பெயர்களில்முந்தைய சமுதாயத்தைச் சார்ந்தமுஸ்லிம்களும் அடக்கம் என்பதை யாரும்மறுக்க முடியாது.

அது போன்று காஃபிர்களையும் அவர்கள்வசித்த இடம், செய்த பாவம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதோப்புவாசிகள், சனிக்கிழமைவாசிகள்என்பது போன்ற அடையாளப்பெயர்களைக் கொண்டு அல்லாஹ்குறிப்பிட்டுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையதோழர்களில் மதீனா ஸஹாபாக்கள்அன்சாரிகள் என்றும் மக்காஸஹாபாக்கள் முஹாஜிர்கள் என்றும்நபியவர்கள் காலத்திலேயேஅழைக்கப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம்கள் என்றுதான் அழைக்கவேண்டும் . அன்சாரிகள், முஹாஜிர்கள்என்ற குறிப்பிடக் கூடாது எனஅல்லாஹ்வும் தடுக்கவில்லை. நபிகள்நாயகமும் தடைவிதிக்கவில்லை.முஹாஜிர் என்று சொன்னதால் முஸ்லிம் என்ற பண்புப் பெயரை மறுத்த்தாக அவர்கள் ஆகவில்லை.

மாறாக அல்லாஹ்வே திருமறைக்குர்ஆனில் அன்சாரிகள் முஹாஜிர்கள்என்று பெயர் வைத்துள்ளான்.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (100)9

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும்முந்திச் சென்ற முதலாமவர்களையும்,நல்ல விஷயத்தில் அவர்களைப்பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ்பொருந்திக் கொண்டான். அவர்களும்அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச்சோலைகளை அவன் தயாரித்துவைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில்அவர்கள் என்றென்றும் நிரந்தரமாகஇருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9 : 100

قَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ (117) 9

இந்த நபியையும், முஹாஜிர்களையும்,அன்ஸார்களையும் அல்லாஹ்மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின்உள்ளங்கள் தடம் புரள முற்பட்டபின்னரும், சிரமமான கால கட்டத்தில்அவரைப் பின்பற்றியவர்களையும்மன்னித் தான். அவன் அவர்களிடம்நிகரற்ற அன்புடையோன்;இரக்கமுடையோன்

அல்குர்ஆன் 9 : 117

அல்லாஹ்வே தங்களுக்கு அன்சாரிகள்என்று பெயர் சூட்டினான் என அனஸ்(ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (அவ்ஸ்மற்றும் கஸ்ரஜ் குலத்தாரானஉங்களுக்கு) அன்சார்-உதவியாளர்கள்' என்னும் பெயர்வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்குமுன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லதுஅல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச்சூட்டினானா? என்று கேட்டேன். அவர்கள்,அல்லாஹ் தான் எங்களுக்கு(அன்சார்' என்று திருக்குர்ஆன்9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான்என்று குறிப்பிட்டார்கள்

நூல்  : புகாரி 3776

முஸ்லிம்களாக இருந்தவர்களுக்குஅல்லாஹ் அன்சாரிகள் என்றும்முஹாஜிர்கள் என்றும் பெயர்சூட்டியதிலிருந்தே முஸ்லிம்கள்தங்களுக்குள் சில பெயர்களைச் சூட்டிக்கொள்வது தவறில்லை என்பதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அது போன்று ஸஹாபாக்களில் ஒருகுறிப்பிட்ட பிரிவினர் அஸ்ஹாபுஸ்சுஃப்ஃபா “திண்ணைஸஹாபாக்கள்“ என்றுஅழைக்கப்பட்டுள்ளார்கள்.

குர்ஆனை நன்றாக ஓதக்கூடியவர்கள்குர்ராக்கள் என்றுஅழைக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் என்று மட்டும்தான் குறிப்பிடவேண்டும் என்று இருந்தால் இவ்வாறுஅழைப்பதற்கு நபியவர்கள்அனுமதித்திருக்க மாட்டார்கள்.

 

இன்றைக்கு முஸ்லிம்களில்பெரும்பான்மையினர் இணைவைப்புக்காரியங்களில் மூழ்கி உள்ளகாரணத்தினால் மக்களுக்கு தவ்ஹீத்கொள்கையை எடுத்துரைக்க வேண்டும்,ஓரிறைக் கொள்கை உடைய மக்களைஒன்றிணைத்து செயல்படுவதின் மூலம்மார்க்க ரீதியிலான சில பலன்களைஅடைய முடியும் என்ற அடிப்படையிலேயேதவ்ஹீத் வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத்என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூடஹதீஸ் நூல்களில் உள்ளது தான்.

வாதி என்பதற்கு அஹ்ல் என்ற சொல்அரபு மொழியில் பயன்படுத்தப்படும்.அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி,அஹ்ல் அல்கிதாப் என்றால்வேதமுடையோர் அஹ்ல் அத்தவ்ஹீத்என்றால் தவ்ஹீத்வாதி எனப் பொருள்.

அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر

(அஹ்ல் அத்தவ்ஹீத்களில்)தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறுபாவங்கள் காரணமாக) நரகில் வேதனைசெய்யப்படுவார்கள். அவர்கள்கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர்அவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.நரகில் இருந்து வெளியேற்றப்பட்டுசொர்க்கத்தின் வாசலில்போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள்அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள்.இதனால் அவர்கள் கரையோரத்தில் புல்முளைப்பது போல் பசுமையாவர்கள்.பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)

நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665

தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனதுபாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால்கூட அவர் கடைசியில் சொர்க்கம்செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும்தவ்ஹீத்வாதி என்பதும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பயன்படுத்தியசொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை உள்ளடக்கியசொல்லாகும்.

பெயரினால் ஒற்றுமை ஏற்படும் என்பதும்தவறான வாதமாகும். ஒரு தாய்வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளாகஇருந்தாலும் பகைமை ஏற்படத்தான்செய்யம்.

எத்தனை பெயர்களில் இருந்தாலும்அனைவரும் அல்லாஹ்வின்சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றகொள்கைக்கு வந்துவிட்டால் தான்ஒற்றுமை ஏற்பட்டுவிடும்.

அதைத்தான் நபியவர்கள்அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும்மத்தியில் அவர்களின் பெயர்களை ஒரே பெயராக ஆக்காமல் ஒற்றுமைப்படுத்திக்காட்டினார்கள்.

ஒரே பெயரில் இருந்தாலும் கொள்கைகள்மாறுபட்டிருந்தால் நிச்சயமாக அங்குஒற்றுமை ஏற்படாது. இதனைப் பல்வேறுவரலாறுகளும், நடைமுறைகளும் நமக்குபாடம் படித்துத் தருகின்றன.

சில அதிமேதாவிகள் பெயரினால்ஒற்றுமை குலைகிறது என்று கூறி வருவது அவர்களின்முதிர்ச்சியின்மையையே படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/thavheedvathi_enra_sol_hatheesil_ullatha/
******************************************
தவ்ஹீத்வாதி என்ற சொல் ஹதீஸில் உள்ளதா

தவ்ஹீத்வாதி என்ற சொல் ஹதீஸில் உள்ளதா

கேள்வி தவ்ஹீத்வாதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?

அபூபக்கர் சித்தீக்

பதில்

தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது என்று சிலர் சமுதாயத்தில் உளறி வருகின்றனர். அரபு மொழியைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸைப் பற்றியும் ஞானம் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான வாதத்தை வைத்து வருகின்றனர்.

குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்) என்றும் பல இடங்களில் கூறுகின்றான்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ(31)9

ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன் (9 : 31)

இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத் என்ற வார்த்தைகள்.

தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால் ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும் இஸ்லாம் என்ற வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

7372 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம், "நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

புகாரி (7372)

19 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ لَا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

"இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. (இறைவன் ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கை. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (19)

கோபித்துக் கொண்டான் என்று ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் கோபம் என்பது அந்த நுலில் இல்லை எனக் கூற முடியாது. கோபித்துக் கொண்டான் என்பதில் கோப்ம அடக்கமாக உள்ளது. அது போல் தான் யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து கொள்வார்கள்.

தவ்ஹீத் என்ற சொல் நேரடியாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

2137 وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ فَأَهَلَّ بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ بِهِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன் தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2334)

3597 حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ مِنْ الْخَيْرِ شَيْئًا قَطُّ إِلَّا التَّوْحِيدَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِأَهْلِهِ إِذَا أَنَا مِتُّ فَخُذُونِي وَاحْرُقُونِي حَتَّى تَدَعُونِي حُمَمَةً ثُمَّ اطْحَنُونِي ثُمَّ اذْرُونِي فِي الْبَحْرِ فِي يَوْمٍ رَاحٍ قَالَ فَفَعَلُوا بِهِ ذَلِكَ قَالَ فَإِذَا هُوَ فِي قَبْضَةِ اللَّهِ قَالَ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ مَخَافَتُكَ قَالَ فَغَفَرَ اللَّهُ لَهُ رواه أحمد 

தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூட ஹதீஸ் நூல்களில் உள்ளது. வாதி என்பதற்கு அஹ்ல் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி அஹ்ல் அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப் பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)

நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665

தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர் கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் தவ்ஹீத் வாதி என்பதும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.

******************************************