அவர்கள் வணக்கம் சொன்னால் நீங்கள் சலாம் சொல்லுங்கள். அவர்களின் கலாச்சாரத்தில் மனிதனுக்கு வணக்கம் சொல்வது முகமன். ஆனால், இசுலாத்தில் வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டும் தான்.
எந்த ஒரு சொல்லோ அல்லது செயலோ இறைவனுக்குண்டான வணக்க வழிபாட்டு விடயங்களோடு இனைந்து இருக்குமெனில் அதை தவிர்ப்பது தான் ஏகத்துவம், அதாவது இசுலாம். அது அதன் அடிப்படை கொள்கை.
உங்களுக்கென்று ஒரு வழி முறையை நபி(சல்) அவர்கள் காட்டித் தந்த பின் அதில் மற்றவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது தெளிவான வழிகேடு. இங்கே அதிகமானோர் சருக்கி விடுகிறோம்.
உங்களுக்காக இறைவனிடம் அமைதியையும் சமாதானத்தையும் பிரார்த்திக்கிறேன் என்பதை விட மிக உயர்ந்த முகமன் வணக்கம் அல்ல.
அவர்கள் வழி அவர்களுக்கு! நம் வழி நமக்கு!
லகும் தீனுக்கும் வலியத்தீன்
ஒன்றை முடியாது என எதிர் மறையாகக் கூறுவதை விடவும். அதற்கான மாற்றை நீங்கள் அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் எதை தவிர்க்க நினைக்கிறீர்களோ, அது காலப் போக்கில் தவிர்க்கப்பட்டு விடும்.
இசுலாமியர்களின் பிரட்சினை என்னவெனில், எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல் தான்! மற்றபடி நல்ல கோட்பாடுகளுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் மோசமான விற்பனையாளர்கள், நபி(சல்) காட்டித் தந்த வழி முறை மிகவும் அழகானது!
#வணக்கம்_சலாம்
No comments:
Post a Comment