பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 8, 2016

மௌலிதில் உள்ள ஷிர்க் கான வாசகங்கள்

இறைவனுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கூறுவது இறைவன் மன்னிக்காத இணை கற்பிக்கும் பாவமாகும். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் அவ்வாறு பாடிய சிறுமிகளைத் தடுக்கின்றார்கள்.

ஆனால் மௌலிதில் உள்ளதைப் பாருங்கள் :

عَالِمُ سِرٍّ وَأَخْفى مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ

அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.

َلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்

மௌ­லித் நபியவர்களுக்குத் தேவையில்லை

”இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை” (அல்குர்ஆன் 36:69)

என்ற திருமறை வசனத்தின் பிரகாரம், நல்ல கவிதையாக இருந்தால் அதை ஒரு பொழுது போக்கிற்காக ரசிக்கலாமே தவிர அது ஒரு போதும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment