பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, June 29, 2014

நோன்பு கஞ்சி செய்வது எப்படி ??

நோன்பு கஞ்சி செய்வது எப்படி ??
புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு முக்கியமாக பயன்படுத்துவது நோன்பு கஞ்சியாகும்.
நோன்பு கஞ்சி அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியதுமாகும்.
நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் = பாதி
தக்காளி = 2
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.
சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

Friday, June 27, 2014

நன்மையின் பக்கம் விரையுங்கள்

நன்மையின் பக்கம் விரையுங்கள்

ரஹ்மத்தின் வாசல்கள் திறந்திருக்கும் அருள்மிக இம்மாதத்தில் நற்காரியங்கள் அதிகம் செய்வோம். குறிப்பாக ரமலான் மாதத்தின் கடைசி பத்துநாட்கள் நல்லறங்கள் கூடுதலாக ஈடுபடுவோம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாளாக்க் கருதப்படும் லைலத்துல் கத்ர் அன்று அதிகமதிகம் இறைதிருப்தியை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபட முயற்சிப்போம்.
நமது பாவங்கள் அழிக்கப்பட படைத்தவனிடம் நமது பாவங்களை முறையிட்டு நம்மை தூய்மைபடுத்திக் கொள்வோம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர்.
(அல்குர்ஆன் 66:8)
முழு மனதோடு நாம் செய்த பாவங்களை படைத்தவனிடம் முறையிட்டால் கண்டிப்பாக வல்ல அல்லாஹ் மன்னிப்பான். எனவே கடைசி பத்து இரவுகளில் அதிகமதிகம் நாம் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்.
பாவமன்னிப்பை தேடித்தரும் தர்மத்தையும் அதிகமதிகம் செய்வோம்.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:271)
வசதிபடைத்தவர்கள் அவர்கள் தகுதிக்கேற்பவும் வசதி குறைந்தவர்கள் அவர்களின் வசதிக்கேற்பவும் தர்மங்கள் செய்ய வேண்டும். மனத்தூய்மையோடு நாம் செய்யும் சிறிய தர்மம்கூட மலையளவு நன்மை பெற்றுத்தந்துவிடும்.
                யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி 1410)
இதைப்போன்று இரவு நேரங்களில் நம் குடும்பத்தினர் அனைவரும் தொழுகையில் ஈடுபடுத்த வேண்டும்.
 (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்;  (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
(புகாரி 2024)
மொத்தத்தில் கடைசி பத்துநாட்களும் நல்லறங்களில் மூழ்கியிருக்க வல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்

நோன்பு துறக்கும் போது ஓத வேண்டிய சரியான துஆ எது?

நோன்பு துறக்கும் போது ஓத வேண்டிய சரியான துஆ எது?




தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக "அல்லாஹும்ம லக்க சும்த்து..''. என்றுதுவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்றுமத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ர-லி), இப்னு அப்பாஸ் (ர-லி), அனஸ் (ர-லி), அலீ (ர-லி) ஆகிய நான்குநபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமானசெய்திகளாகும்.

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து
இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி அபூதாவூத் (2011),முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல்ஈமான்-பைஹகீ (3747), அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்-இப்னுல்முபாரக் (1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141),அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை  இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் "முஆத் பின் ஸஹ்ரா' என்பவர், நபி (ஸல்)அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார்.

இவர் நபித்தோழர் அல்ல. நபி (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபி (ஸல்)அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக்கூடாது. எனவே இந்தச் செய்திபலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் "முஆத் பின் ஸஹ்ரா' என்பவரின்நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறுஎவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்றுதெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னுஹிப்பான் மட்டும் நம்பகமானவர்

என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின்ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூஹுரைரா (ர-லி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2,பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுமீஎன்பவர் அறிவித்துள்ளார்.

இவர், அபூஜுஹைஃபா (ர-லி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி-), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம்அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்முதாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களைஅறிவித்துள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்) அபூஹுரைரா (ரலி)

அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் அறிவித்தாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச்செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வ அஃப்தர்த்து

இந்த வாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியையும் "முஆத் பின் ஸஹ்ரா' என்பவரே அறிவிக்கிறார்.

நாம் முன்னர் "முஆத் பின் ஸஹ்ரா' என்பவர் தொடர்பாக கூறிய  அனைத்துவிமர்சனங்களும் இந்த செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும்பலவீனமடைகிறது.

லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல்அளீம்”

இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி-) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர்பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் "அப்துல் மலி-க் பின் ஹாரூன்' என்பவர்பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம்செய்துள்ளனர்.

இவரும் இவருடைய தந்தையும் "பலவீனமானவர்' என்று இமாம் தாரகுத்னீ அவர்களும்,இவர் "பொய்யர்' என்று யஹ்யா பின் மயீன்,

அபூஹாத்தம் அவர்களும், "ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர்' என்று இப்னுஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர்அவர்களுக்குரிய "லி-ஸானுல் மீஸான்' என்ற நூ-லில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவேஇந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து”

இந்தச் செய்தி அனஸ் (ர-லி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல்அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும், அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும்,கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களுக்குரிய அஹ்பார்உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் "தாவூத் பின் ஸிப்ரிகான்' என்பவர்இடம் பெற்றுள்ளார்.

ஜவ்ஸஜானீ அவர்கள், "இவர் ஒரு பொய்யர்' என்றும் "ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்'என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும். "இவர் நம்பகமானவர் இல்லை'என்று இமாம் நஸயீ அவர்களும் "பலவீனமானவர்' என்று அபூதாவூத் அவர்களும்மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து  வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர்

அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ்பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் "ஹம்மாத் பின் அம்ர்அந்நஸீபி' என்பவர் "ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர்' என்றுகடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

"இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர்' என்று இமாம் புகாரீ அவர்களும், "இவர்ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்' என்று இமாம் நஸயீ அவர்களும், "ஹதீஸ்களைஇட்டுக் கட்டுபவர்' என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், "முற்றிலும்பலவீனமானவர்' என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், "பொய்யர் என்றும்இட்டுக்கட்டிச்சொல்பவர் என்றும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்' என்று இப்னுமயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்)

இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் "அஸ்ஸரிய்யு பின் காலி-த்' என்பவர் யாரெனஅறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது "மீஸானுல் இஃதிதால்' என்ற நூலில்குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஆக மொத்தத்தில் "அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும்ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ

இந்த நிலையில் நோன்பு துறக்கும் போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முத-லில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களைபுகாரி, முஸ்-லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலி-ம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலி-ம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மைஉறுதிப் படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸா-லிம் என்பவர் அறிவிக்கும்எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லி-மிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி,  முஸ்-லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸா-லிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்-லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸா-லிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர்தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸா-லிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மைபற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

(இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், "இவர் நம்பகமானவர்என்று கூறிப்பிட்டுள்ளார்'' என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்றுகுறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால்

யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களையாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும்இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டிய-லில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின்ஸாலி-ம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையைஉறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப் படுவதால் இதுநிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லைஎன்பது உறுதியாகின்றது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்பபிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.

நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது நல்லது

இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது என்று கூறப்படுகிறது.
National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்றும் மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய், பார்கின்சன் நோய், மற்றும் மூளை தேய்மான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.
கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers தூண்டப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்கள்.
The Daily Telegraph’ என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது.
"உணவைக் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நடத்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த அதே விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும் ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் செய்முறை மூலம் உறுதிப்படுத்தி விட்டனர்.
neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மார்க் மாட்சொன் இவ்வாறு கூறுகிறார்:
"கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும். ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. இடைவெளி விட்ட விரதம், அதாவது, எல்லா உணவையும் அறவே தவிர்ப்பது, பிறகு தனக்கு வேண்டியதை, தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.
இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற மதத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்டதாக இருப்பதில்லை. திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான கலோரிகள் கிடைத்து விடும்.
சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதைத் தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று உள்ளது. எனவே இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. சில விரதங்களில் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது.
இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நன்மையை அடைய முடியாது.
முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ, சைஅவமோ, திடமோ, திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. உணவாகக் கருதப்படாத தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் நீண்ட நேரம் கொண்டதாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாகப் பெற முடிகிறது.

Fasting hours around the globe


Tuesday, June 24, 2014

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்
ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீ

படைத்தவன் தரும் மிகப்பெரிய சலுகை ரமலான் மாதமாகும். இந்த மாதத்தில் செய்யும் நல்லறங்கள் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற்று சொர்க்கவாதியாக மாறுவதற்கு தகுந்த காலமாக அல்லாஹ் அமைத்துள்ளான்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் நின்று வணங்குவதும் மிகப்பெரிய நன்மையை ஈட்டித் தரும்.

யார் ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என்ற நபிமொழிகள் ரமலான் மாதத்தின் சிறப்பையும் அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டி நல்லறங்களையும் நினைவூட்டகின்றன.

இதைப் போன்று இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு உண்டு. அந்த இரவில் நாம் செய்யும் நல்லறங்கள் ஆயிரம் மாதங்கள் செய்யும் நல்லறங்களுக்கு ஈடானதாகும் என்ற அழகிய செய்தியை திருக்குர்ஆன் நமக்கு உணர்த்தியுள்ளது.

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் நபி (ஸல்) இந்த இரவை அடைவதற்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்கள். தம் மனைவியர்களையும் இரவில் எழுப்பி இறைவணக்கங்களில் ஈடுபட செய்வார்கள். எனவே குறைந்த அமல்களில் நிறைந்த நன்மைகளை பெற இம்மாதத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இம்மாதத்தில் அதிகமதிகம் தொழுதல், தர்மம் செய்தல், திருக்குர்ஆனை ஓதுதல், திக்ர் செய்தல் உட்பட நல்லறங்கள் அனைத்தம் கூடுதலாக செய்து கணக்கில்லா நன்மைகள் பெற வேண்டும்.

நோன்பு வைத்துக் கொண்டு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல் போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியத்தைச் செய்தால் நாம் வைத்த நோன்பிற்கு எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source ; தீன்குல பெண்மணி