பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 5, 2010

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.
எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத்  தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4320

இறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்)  "மன்னாதி மன்னன்' எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் "அஸீஸ்'' (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் "அப்துர் ரஹ்மான்'' (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள்.  அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி)
நூல்: அஹ்மத் 16944

ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் "அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் "ஹகம்'' (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் "தீர்ப்பு'' உள்ளது. நீர் ஏன் "அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்?'' என்று கேட்டார்கள்.  
அதற்கவர், "என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), "இது அழகானதல்ல'' எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி "அபு ஷுரைஹ்'' (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள். 
நூல்: அபூதாவூத் 4304

நபியவர்களின் புனைப் பெயர்

நபியவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற "அபுல் காசிம்' ஆவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), 
நூல்: முஸ்லிம் 4323

ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப்  பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே "அபுல் காசிம்' ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9226

மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள். 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் "அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) "நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)' என்றார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்'' என்றார்கள்.
நூல்: புகாரி 2120

இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது. 
எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.
ஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.

என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்கள் பெயரென்ன?'' என்று கேட்டார்கள். அவர்கள், "ஹஸ்ன்'' (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இல்லை) நீங்கள் (இனிமேல்) "சஹ்ல்' (மென்மை)'' என்று சொன்னார்கள். அவர், "என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்'' என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்) முரட்டுத்தனம் நீடித்தது. அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி)
நூல்: புகாரி 6190

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆஸியா' (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, "நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4332

இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.
அலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களின் பெயராகும்

நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் "அஸ்ரம்' (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் "அஸ்ரம்' (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ "சுர்ஆ'' (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்)
அறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் (ரலி)
நூல்: அபூதாவூத் 4303
மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள்.  அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 

மக்கா வெற்றி நாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள் செவியேற்றார்கள்: (நபியவர்கள் கூறினார்கள்)  இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை "(முதீவு)'' தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.
அவரின் பெயர் "ஆஸி'' (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் "முதீவு'' (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள். 
நூல்: அஹ்மத் 15446

பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர்: பஷீர் (ரலி)
நூல்: அஹ்மத் 20950

தன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா' (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 4335
நான் என் புதல்விக்கு "பர்ரா' (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு "பர்ரா' என்ற பெயரே சூட்டப் பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்'' என்று சொன்னார்கள். மக்கள், "அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு "ஸைனப்' எனப் பெயர் சூட்டுங்கள்'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 4337

சில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள். 

(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா' என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜுவைரியா' (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பர்ரா'விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்' என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4334

சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல்: முஸ்லிம் 4328

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
"இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை'' என்று கூறிவிட்டு, "உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) "அவன் அங்கு இருக்கிறானா' என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் "இல்லை' என்று பதில் வரும்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை விடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல்: முஸ்லிம் 4330

நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.
அறிவிப்பவர்: ஸலாமா (ரலி)
நூல்: அஹ்மத் 16542

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 4331

நம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும். 
ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.

மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

ஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது தவறாகும்.

கே.எம். அப்துந் நாசிர்


Saturday, December 4, 2010

நாமும் நமது மரணமும்

நாமும் நமது மரணமும் 

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம் 

 இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை!  ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன.


நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன.  இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  (அல்குர்ஆன் 7:200, 201)

தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் திக்ர் மழையில் நமது நாவுகள் நனைய வேண்டும்.  தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழ­ல் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.


''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழ­ன் மூலம் நிழலளிப்பான்.  1. நீதி மிக்க ஆட்சியாளர்.  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.  3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.  4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர்.  5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.  6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர்.  7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி),  நூல் : புகாரி 6806

பாதுகாப்புக் கேடயம்

''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்­ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது.  அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது.  அவன் எல்லாவற்றின் மீதும் வ­மையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.  மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.  அவரது கணக்கி­ருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும்.  மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.  மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது.  ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி).  நூல் : புகாரி 6403

அல்லாஹ்வை நினைத்தால் அவன் நம்மை நினைப்பான்

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன் 2:152)

நாம் நடந்து சென்றால் அல்லாஹ் ஓடி வருவான்

''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன்.  அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன்.  அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன்.  அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி). நூல் : புகாரி 7405

சுவனத்தின் புதையல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை.  நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.  அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்தி­ருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ''அப்துல்லாஹ் பின் கைஸ்!'' என்று அழைத்தார்கள்.  ''கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன். ''உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள்.  ''சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன்.  ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ர­லி). நூல் : புகாரி 4202
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.  அவர்கள் ஜும்தான் என்ற மலையைக் கடந்து சென்ற போது. ''செல்லுங்கள்! இது தான் ஜும்தான் மலையாகும்.  முஃப்ரிதூன் முந்தி விட்டனர்'' என்று சொன்னார்கள்.  ''முஃப்ரிதூன் என்றால் யார்?'' என்று நபித்தோழர்கள் வினவிய போது. ''அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்கள், பெண்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : முஸ்­லிம் 4834

சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும் திக்ர்

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : புகாரி 1142

ஆயிரம் நன்மைகள்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம்.  அப்போது. ''உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?'' என்று கேட்டார்கள்.  எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள். ''ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ர­லி), நூல் : முஸ்­லிம் 4866

பாவத்திற்குப் பரிகாரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையி­ருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன்.  உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)'' என்று சொல்பவர்களாக இருந்தனர்.  அப்போது ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?'' என்று கேட்ட போது, ''அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ர­லி), நூல் : அபூதாவூத் 4217

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) 

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.  அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். ''உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். ''எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)'' என்று அவர் கேட்டார். ''என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை! இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப்பட்டது தான்.  ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும்.  ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.

பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்!  இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.

அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான்.  அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை லி அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான்.  இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

''(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

''உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. ''உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)       (அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதி­ருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான்.  ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.  முஸ்­ம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர்.  முஸ்­ம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.  இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு - நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.  (அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள்.  ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான்.  இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்.  எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.  ''நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?'' என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார்.  அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. ஆதாரம் : திர்மிதி - 3452, 3328, முஸ்னத் அபூயஃலா - 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வ­யச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  (அல்குர்ஆன் 80:1-10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.  ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது.  ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.  இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை.  இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.  இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான்.  அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. 

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளி­ருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களி­ருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.  அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.   (அல்குர்ஆன் 60:8,9)
 
இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை.  ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.