பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 10, 2024

மிஃஹ்ராஜ் இரவும் சிறப்பு அமல்களும்

 இஸ்லாத்தில் மிஃஹ்ராஜ் இரவும் சிறப்பு அமல்களும் பற்றி அறிந்து கொள்ளுவோம்

💞*

• இஸ்லாத்தில் மிஃஹ்ராஜ் பயணம் மிகவும் சிறப்பு மிக்க ஒன்றாகும் ஆனால் இந்த எப்போது எந்த ஆண்டு எந்த மாதம் எந்த நாளில் நடைபெற்றது என்று ஒரு ஸஹீஹான செய்தியும் கிடையாது!
*• ஏன் என்றால் இந்த மிஃஹ்ராஜ் பயணம் மக்காவில் இஸ்லாம் ஆரம்பிக்கும் போது நடைபெற்றது அப்போது முஸ்லீம்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே இருந்தார்கள்!*
*• சிறப்பு மிக்க மிஃஹ்ராஜ் பயணம் இருந்தாலும் இது எந்த நாளில் நடைபெற்றது என்று யாருமே நியாபகமும் வைத்து இருக்க வில்லை குறிப்பும் எழுதி வைத்து கொள்ள வில்லை! நபி (ஸல்) அவர்கள் உட்பட...!*
*• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று மார்க்க விளக்கம் இல்லாத மக்களிடைய ரஜப் 27 தான் மிஃஹ்ராஜ் இரவு என்று பொய்யான செய்திகளை எல்லாம் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்!*
• இந்த நாளில் சிறப்பு தொழுகை நோன்பு திக்ர் துஆ என்று அல்லாஹ் பாதுகாக்கணும் இஸ்லாம் சொல்லி தராத அனைத்தும் இவர்களே சுயமாக உருவாக்கி கொண்டு அமல் செய்கிறார்கள் ஆனால் இது தெளிவான பித்அத் ஆகும்! இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
*💟 மிஃஹ்ராஜ் நோன்பு 😘
• மிஃஹ்ராஜ் அன்று ஒரு நாள் நோன்பு வைக்கிறார்கள் சில ஊர்களில் இதற்கு கிழே உள்ள ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகிறார்கள்!
*ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்!*
(நூல் : பைஹகீ)
• இந்த ஹதீஸ் மிகவும் பலகீனமானது ஆகும் இந்த ஹதீசை பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே இந்த ஹதீஸ் மிகவும் பலகீனமானது ஆகும் இந்த ஹதீசை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் சந்தேகம் உள்ளது என்று கூறி உள்ளார்கள்!
*• மிஃஹ்ராஜ் இரவு நோன்பு சம்பந்தமாக வரும் ஹதீஸ் பொறுத்த வரை இது இட்டுக்கட்டபட்ட செய்தியாகும் என இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!*
(நூல் : மவ்லூஆத் : 2 : 206)
*நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்!*
*இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் இட்டுக்கட்டப்பட்டது பொய்யான செய்தி என கூறி உள்ளார்கள்!*
(நூல் : மவ்லூஆத் : 2 : 207)
*• மார்க்கம் பொறுத்த வரை சட்டம் அமல் அனைத்துமே நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இருக்க வேண்டும் ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி அவர்களுக்கு பின்னால் வந்த ஸஹாபாக்கள் காலத்திலும் சரி இப்படி யாரும் மிஃஹ்ராஜ் இரவு என்று அந்த நாளை சிறப்பித்து ஒரு நோன்பு வைத்தது கிடையாது!*
• மாறாக ஸஹாபாக்கள் இந்த நாளை அறியாமை நாளாகவே கருதினார்கள்!
*‘ ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள், மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும் ’*
(முஸன்னப் : 3 : 203 | ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் | இர்வாஉல் அலீல் : 4 : 113)
• இது நன்மையான காரியம் என்றால் நபி (ஸல்) அவர்களும் செய்து இருப்பார்கள் அல்லது ஸஹாபாக்களுக்கு சொல்லி இருப்பார்கள் ஆனால் மிஃஹ்ராஜ் இரவு நோன்பு பற்றி ஒரே ஒரு ஸஹீஹான ஆதாரம் கிடையாது!
*• அமல் மற்றும் சட்டம் பொறுத்த வரை ஒரு ஸஹீஹான ஆதாரம் இருந்தால் மட்டுமே அதை நாம் செயல் படுத்த வேண்டும்!*
• மிஃஹ்ராஜ் அன்று நோன்பு வைத்தால் நன்மை கிடைக்குமோ கிடைக்காதோ ஆனால் பித்அத் செய்தற்கு பாவம் வந்த சேரும் நமக்கு - அல்லாஹ் பாதுகாக்கணும்!
*💟 மிஃஹ்ராஜ் தொழுகை 😘
• அல்லாஹ் பாதுகாக்கணும் மிஃஹ்ராஜ் இரவு என்று சில ஊர்களில் *ஸலாதுர் ரகாயிப் என்று ஒரு சிறப்பு தொழுகை* தொழுகின்றார்கள் ஆனால் இதற்கு ஒரு ஸஹீஹான ஆதாரம் கிடையாது!
*ரஜப் இரவில் 6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழுவார்கள் அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓதுவார்கள்! 3ம் கலிமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓதுவார்கள்!*
*3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்!*
• இப்படி ஒரு தொழுகை சில ஊர்களில் தொழுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த அடிப்படை ஒரு ஸஹீஹான ஆதாரமும் கிடையாது!
*• நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் இப்படி ஒரு தொழுகை இருக்க வில்லை இவர்களுக்கு பின்னால் வந்த ஸஹாபாக்கள் தாபியீன்கள் தபா தாபியீன்கள் அவர்கள காலத்திலும் இப்படி ஒரு தொழுகை இருக்க வில்லை!*
• பின்னால் வந்த சில வழிகேட்டு கொள்கை உடையவர்கள் தான் இது போன்ற தொழுகை முறைகளை உருவாக்கி கொண்டார்கள் ஆனால் இது பெரும் பாவமாகும்!
*• ரஜபு மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் யாருக்கும் எந்த தொழுகை முறையும் கற்று கொடுக்க வில்லை! இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது! இன்னும் கூற வேண்டும் என்றால் இந்த ஸலாதுர் ரகாயிப் என்ற தொழுகை முறைக்கும் அல்லது இந்த சிறப்பு தொழுகைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!*
*💟 இது போன்று ஸஹீஹான ஆதாரம் இல்லாமல் பித்அத் (புதுமை) ஆக செய்யும் அமலை அல்லாஹ் ஏற்று கொள்ளுவானா?*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!*
*இது ஒரு கடுமையான எச்சரிக்கை அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்!*
(நூல் : முஸ்லிம் : 2650)
• நாம் என்ன தான் விடிய விடிய மிஹ்ராஜ் சிறப்பு என்று அமல் செய்தாலும் அதை எதையும் ஏற்க மாட்டான்! மாறாக பாவம் தான் நமக்கு சேரும்! அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மை....
*💟 இஸ்லாம் என்ற பெயரில் இன்றும் பலர் புதிய புதிய செயல்களை செய்கிறார்கள் இதில் எது சரி தவறு என்று நாம் எப்படி அறிந்து கொள்ளுவது 😘
• இஸ்லாம் என்பது அல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஆன ஹதீஸ்களை மட்டும் அடிப்படையாக கொண்டது ஆகும்!
*• இஸ்லாத்தில் ஒன்றை செய்ய வேண்டும் அல்லது செய்ய கூடாது! ஒரு செயலை செய்தால் இவ்வளவு நன்மை கிடைக்கும் அல்லது பாவம் செய்தால் இவ்வளவு தண்டனை கிடைக்கும் என்று கூற அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே அனுமதி உண்டு! இதை தவிர்த்து வேறு யாருக்கும் உரிமை கிடையாது!*
• அல்லாஹ்வும் ரசூலும் காட்டி தராத ஒன்றை நாமாக பேணுதல் அல்லது நண்மையான காரியம் என்று ஒரு போதும் செய்ய கூடாது இது பித்அத் ஆகும்!
*• பித்அத் என்றால் இஸ்லாம் கூறாத ஒன்றை நாமாக உருவாக்கி கொள்ளுவது ஆகும்! இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது!*
• இதற்கு பின்பு இஸ்லாத்தில் நன்மையான காரியம் அல்லது பேணுதலுக்கு என்று கூட நாமாக ஒன்றை செய்ய கூடாது!
*இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்!*
(அல்குர்ஆன் : 5 : 3)
*• நாமாக ஒன்றை இஸ்லாத்தில் நன்மையான காரியம் என்று செய்வது அல்லாஹ்வின் பரிசுத்த மார்க்கத்தில் கலப்படம் செய்வது போன்று ஆகும்!* நவதுபில்லாஹ்!
• சட்டமோ அல்லது அமலோ எதுவாக இருந்தாலும் அல் குர்ஆன் அல்லது ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்தால் அதை ஏற்று கொள்ளுங்கள் இல்லை என்றால் நிராகரித்து விடுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
*செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்!*
*காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்!*
(நூல் : நஸயீ : 1560)
*💟 மிஃஹ்ராஜ் உணவும் - இடமும் 😘
• மிஃஹ்ராஜ் இரவு என்று அல்லது அந்த நாளை சிறப்பித்து கொடுக்கும் உணவுகளை நாம் உண்ண கூடாது! ஏன் என்றால் பித்அத் சார்ந்த செயல்களுக்கு நாம் எந்த விதத்திலும் ஆதரவு கொடுக்க கூடாது!
*• மிஃஹ்ராஜ் இரவு என்று சில ஊர்களில் வீடு பள்ளி வாசல்களில் அன்று வீட்டை அழங்கரிப்பது அன்று வீட்டில் விஷேச உணவுகள் சமைப்பது இவை அனைத்துமே பித்அத் ஆகும்!*
• அதே போன்று மிஃஹ்ராஜ் இரவை சிறப்பித்து கொண்டாடும் இடங்களுக்கும் செல்லுவதை தவிர்த்து கொள்ளுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் :
*உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலகீனமான நிலையாகும்!*
(நூல் : முஸ்லிம் : 78)
*💟 மிஃராஜ் இரவும் - கட்டு கதைகளும் 😘
• மிஃராஜ் இரவை சிறப்பித்து கூற நிறைய் பொய்யான செய்திகளை கூறுவார்கள் இதற்கு ஆதாரமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகள் உள்ள கிதாப்களையும் ஆதாரமாக காட்டுவார்கள்! அவற்றில் சிலதை கிழே குறிப்பிட்டு உள்ளோம்!
*1)* மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்! பொய்யான செய்தி!!!
*2)* சுவனத்தில் ரஜப் என அழைக்கப்படும் ஒரு ஆறு உண்டு!
*3)* ரஜப் மாதம் வந்துவிட்டால் *‘யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஸஃபானில் எமக்கு அருள் புரிவாயாக! எம்மை ரமழானை அடையச் செய்வாயாக!* எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் (மிகவும் பலவீனமான செய்தி)
*• இப்படி நிறைய பொய்யான செய்திகள் அல்லது மிகவும் பலகீனமான ஹதீஸ்களை வைத்து மிஃராஜ் இரவை சிறப்பித்து கூறுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த வித அடிப்படையானா ஸஹீஹான ஒரு ஆதாரம் கிடையாது!*
*@ *DOORS OF JANNAH*

No comments:

Post a Comment