பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, May 26, 2019

அல்வாபின் தொழுகை?????

மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் 6 ரக்அத் சுன்னத்தான தொழுகை!

December 13, 2017
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி

‘யார் மஃரிப் தொழுகைக்கு பின் 6 ரக்அத்தை அவறிற்கு இடையில் எந்த ஒரு கெட்ட வார்தையையும் பேசாது தொழுகின்றாரோ, அது அவருக்கு 12 வருடம் இபாதாத் செய்த நன்மைக்கு ஈடானதாகும்’

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னு மாஜாவின் 1167 இலக்கத்திலும் இமாம் திர்மிதி அவர்கள் தனது ஜாமிஉ என்ற கிரந்தத்தில் 435 இலக்கத்திலும் இன்னும் சில இமாம்களும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில், உமர் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹஸ்அம் என்பர் இடம் பெருகின்றார். இவர் மிகவும் பலகீனமானவராவார்! இதனை இமாம் திர்மிதி அவர்கள், இந்த ஹதீஸின் இறுதியில், இந்த உமர் இப்னு அப்துல்லாஹ்வை பற்றி நான் இமாம் புகாரியிடம் வினவினேன்! ‘அவர் ஹதீஸ் கலையில் புறக்கனிக்கப்பட்ட மிகவும் பலகீனமானவர்’ என்று சொன்னதாக குறிப்பிடுகின்றார்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள், இந்த உமர் இப்னு அப்துல்லாஹ்வை பற்றி குறிப்பிடும் போது, ‘இவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்’ என்கின்றார்.

இவ்வாறு ஹதீஸ் கலை அறிஞர்களான இமாம் இப்னு அதி போன்ற எல்லா அறிஞர்களும், ‘மேற்படி அறிவிப்பாளர் பலகீனமானவர்’ என்பதில் உடன்படுகின்றனர்.

ஆயினும், பொதுவாக மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் சுன்னத்தான தொழுகைகள் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளதை காணலாம். காரணம், இந்த நேரம் தொழுகைகள் தடை செய்யப்பட்ட நேரம் கிடையாது.

நமக்கு முன் வாழ்ந்த நல்லடியார்கள் இந்த நேரத்தில் சுன்னத்தான தொழுகைகளில் ஈடுபட்டுள்ளதை வரலாற்றில் காணமுடிகின்றது. ஆயினும், நாம் மேலே குறிப்பிட்ட பலகீனமான ஹதீஸில் குறிப்பிடப்பட்ட நன்மை இருப்பாதாக நினைத்து விடுவது தவறாகும்!

No comments:

Post a Comment