பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 5, 2018

தொழுகையின்_முக்கியத்துவம்

#தொழுகையின்_முக்கியத்துவம்.

தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமான
ஒன்றாகும். கியாமத் நாளில் முதலில் கலிமாவைப்பற்றி விசாரிக்கப்படும். அதன் பின் பர்ளான  ஐவேளைத் தொழுகைகளைப் பற்றியே
வினவப்படும், ஆராயப்படும்.

தொழும் விடயத்தில் எதுவித காரணமும் சொல்லித் தப்பித்து விட முடியாது.
நோன்புக்கு சலுகைகள் இருந்தாலும் தொழும் ஒருவருக்கு அதனை விட்டு விடுவதற்கு எதுவித சலுகையும் இல்லை. வருத்தம், முதுமை உட்பட.

இன்று நாம் எத்தனையோ சகோதரர்கள் இந்தத் தொழுகையில் பொடுபோக்கு
உடையவர்களாகவும், அலட்சியப் போக்கு உடையவர்களாகவும் இருக்கக் காணுகின்றோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பற்றி மார்பு தட்டி வாய்க்கு வாய், சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி ஆழமான கருத்துக்களை பேசும் நாம் அறிந்த  சகோதரர்கள் கூட இதில் பேணுதல் இல்லாதவர்களாக
இருக்கின்றார்கள்.

மனவேதனையின் வீக்கத்தினால்தான் இந்த சுருக்கமான கருத்தைச் சுட்டிக்காட்டினேன். கீழ் வருகின்ற புனித அல்குர்ஆன்
வசனங்கள் நபி மொழிகளை படிக்கும் என் அன்புள்ள சகோதரர்கள் தெளிவான மனதுடன் சிந்தித்து அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் கட்டுப்பட்டு
பேணுதலாகத் தொழுமாறு பணிவன்புடன் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

நாம் செய்யும் நல் வணக்கங்களைப் பார்த்து, அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பார்த்து மகிழ்ச்சியடைவதாகவும்,
எம்மில் நின்றும் மார்க்கம் இகழும் நடத்தைகள் வெளிப்படும் போது அவர்கள் மனவேதனை கொள்கின்றார்கள்
என்றும் வந்திருக்கின்றது..

தொழுகை பற்றிய திருமறை வசனங்கள் சில:

قَدْ
أَفْلَحَ الْمُؤْمِنُونَ  الَّذِينَ هُمْ
فِي صَلَاتِهِمْ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُون

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.

அல்குர்ஆன் -23:1,2,9

وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ
اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ۚ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.                                                
அல்குர்ஆன்-5:58

وأن
أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள்
அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.                                               
அல்குர்ஆன் 6:72

وَالَّذِينَ يُمَسِّكُونَ
بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِين

எவர்கள் வேதத்தை உறுதியாகப்
பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலை நிறுத்துகிறார்களோ
(அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
அல்குர்ஆன் 7:170

إنني
أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري

“நிச்சயமாக நான் தான்
அல்லாஹ் ! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர்
வணங்கும்,! என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை
நிலைநிறுத்துவீராக !
அல்குர்ஆன் 20:14

ما سلككم في سقر قالوا لم نك من المصلين

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று
கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில்
நின்றும் நாங்கள் இருக்கவில்லை”.       
அல்குர்ஆன்74:42,43.

தொழகை பற்றிய ஹதீதுகள் சில :

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ
، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ : ” مُرُوا أَبْنَاءَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ ،
وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرِ سِنِينَ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ
” . هَذَا حَدِيثٌ حَسَنٌ ، أَخْرَجَهُ أَبُو دَاوُدَ ، .

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத்
தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி   (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அறிவிப்பாளர். அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்:அஹ்மத்,அபூதாவூத்.

عَنْ عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلاةَ يَوْمَا
فَقَالَ :

« مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورَاً وَبُرْهَانَاً وَنَجَاةً
يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ
وَلا بُرْهَانٌ وَلا نَجَاةٌ ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ
وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيٍّ ابْنِ خَلَفٍ

(أخرجه أحمد بإسناد جيد)

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ
அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும்,
மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக்
கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ,
ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின்
கஃப் ஆகியோருடன் இருப்பான். என நபி   (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.

                       அறிவிப்பாளர்:

அப்துல்லாஹ்இப்னு,உமர(ரழி)
                                            நூல்
: அஹ்மத்

சிறந்த அமல் :

عن أم فروة قالت : سئل رسول الله صلى الله عليه وسلم أي
الأعمال أفضل قال الصلاة في أول وقتها

அமல்களில் சிறந்தது எது என்று நபி
(ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.
                          

அறிவிப்பாளர்:
உம்முஃபர்வா (ரழி)

நூல்கள் : திர்மிதி, ஹாகிம்,
அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின்
சிறப்புகள்:

وعن زهير عمارة بن وبيه (رضى الله عنه) قال:
سمعت رسول الله ( صلى الله عليه وسلم)

  يقول لن يلج النار أحد صلى قبل طلوع
الشمس وقبل غروبها) يعنى الفجر والعصر

رواه مسلم (1/ مساجد/440/ح213) وأبو داود (1/ح427)
والنسائى (1/ح470) وأحمد فى مسنده (4/136)]

(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு
முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில்
நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:

عن ابن عمر (رضى الله عنه) عن النبى (صلى
الله عليه وسلم) أنه قال: ( صلاة الجماعة

أفضل من صلاة الفذ بسبع وعشرين درجة)

ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

                                அறிவிப்பாளர்:
இப்னு உமார்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:

وعن بريدة بن الحصيب رضي الله عنه رضي الله عنه قال :سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :
” العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر
” رواه احمد وابو داود والترمذي والنسائي وابن ماجه .والمراد بالكفر هنا الكفر المخرج عن الملة لأن النبي صلىالله عليه وسلم جعل الصلاة فصلا بين المؤمنين والكافرينومن المعلوم أن ملة الكفر غير ملة الإسلام فمن لم يأتبهذا العهد فهو من الكافرين .

நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே)
இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர்
காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்:புரைதா(ரழி)

நூல்கள்:
திர்மிதி, அபுதாவுத்,

அஹமத், இப்னுமாஜா

أَقِمِ الصَّلاَةَ
لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ
الْفَجْرِ كَانَ مَشْهُودًا

(நபியே!) சூரியன் (உச்சியில்)
சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு,
மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக.
இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை
சான்று கூறுவதாகயிருக்கிறது.

அல்குர்ஆன் 17:78

وعن
أبى هريرة (رضى الله عنه) قال: قال النبى (صلى الله عليه وسلم): ( ليس صلاة أثقل
على المنافقين من صلاة الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا) [
رواه البخارى (2/ح657) ومسلم (1/ مساجد /451-452/ح252)].

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது.
ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும்,
இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.

அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரழி)

நூல்கள்:புகாரி, முஅத்தா,
அபூதாவூத்,

திர்மித், நஸயீ

مصداق ذلك ما رواه أبو هريرة -رضي الله عنه-
أن رسول الله صلى الله عليه وسلم قال: «يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو
نام ثلاث عقد يضرب على كل عقدة عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله تعالى
انحلت عقدة فإن توضأ انحلت عقدة فإن صلى انحلت عقده كلها فأصبح نشيطا طيب النفس
وإلا أصبح خبيث النفس كسلان»

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்
கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர்
உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு
இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த
அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு
செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது
விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது.
எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால்
கெட்ட எண்ணங்களோடு   சோம்பல்கொண்டவராகஇருக்கிறார்.

அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரழி)

நூல்கள் : புகாரி,
முஸ்லிம், முஅத்தா,

அபூதாவூத்,
நஸயீ

வணங்குவோம்
உறுதி மொழி எடுப்போம்

எமக்கு
முன் வாழ்ந்த  உத்தம சஹாபாக்கள் இறைவணை
வணங்கியது போலும், அதன் பின்னால் வந்த பெரும் பெரும் முத்தகீன்கள் , நல்லடியார்கள்
வழிபட்டது போல் எங்களால் முடியாது போனாலும் ஐந்து நேரத்தொழுகைகளையும், அதன் முன்
பின் சுன்னத்தான தொழுகைகளைப் பேணித்தொழுவோம்.

எமது  குடும்பம், எமது மக்கள், முஸ்லிம்கள்  சகோதரர்கள் போன்றோர்களுக்கு தொழுகையின்
முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கும் நன்மையை நாடுவோம்.

இதனையே  அல்லாஹ் , றசூல் நாயகம் ஸல் அவர்கள்
விரும்யிருக்கின்றனர். இவ்வாறான  நற்
போதனைகளை சகாபாக்கள் அதிகமதிகம் மேற் கொண்டுள்ளனர். நன்மைகளை ஏவுதல், தீமைகளை
விட்டும் தடுத்தல் போன்ற விடயத்தில்   நாயகம்
ஸல் அவர்களிடம் உறுதி மொழியும் எடுத்திருக்கின்றனர்.

حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس بن
أبي حازم عن جرير بن عبد الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام
الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم

‘நான் நபி(ஸல்)
அவர்களிடம் தொழுகையை நிலை
நிறுத்துவதாகவும்,
ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்” என ஜரீர் இப்னு
அப்தில்லாஹ் (ரலி) அறிவித்திருக்கின்றார்கள்.

           நூல்:புகாரீ.

எனவே, வள்ள அல்லாஹ்
அவனை ஐந்து நேரம் தவறாமல் தொழுத நல்லடியார் கூட்டத்தில் என்னையும், உங்களையும்
ஆக்கி, நன்மையை ஏவும், தீமைகளைத் தடுக்கும் நல்லொலுக்க சீலர்கள் கூட்டத்தில்
ஆக்கியருள்வானாக!

ஆமீன்.

அல்லாஹ் அருள் புரிவானாக

No comments:

Post a Comment