பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, October 31, 2018

சில திக்ருகள்

*ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்*

இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._

1) *சுப்ஹானல்லாஹ்* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன்.

சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.

     - முஸ்லிம் 5230

2) *அல்ஹம்துலில்லாஹ்*

பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

     - முஸ்லிம் 381

3) *சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி* 

பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

     - முஸ்லிம் 381

சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.

4) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.

சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.

     - புஹாரி 6405

5) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்*

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.

சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப்  பிரியமானவை.

     - புஹாரி 7563

6) *அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா*

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.

     - முஸ்லிம் 1052

7) *லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்* (100 முறை)

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.

சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.

     - புஹாரி 3293

8) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை.

சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

     - முஸ்லிம் 1302

➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)

*சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி*

பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

     - முஸ்லிம் 5272

Thursday, October 25, 2018

ஜூம்ஆ வின் ஒழுங்குகள

_*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..*_

*_ஜூம்ஆ வின் ஒழுங்குகள்_*

1. ஜூம்ஆ நேரத்தில் கொடுக்கல் வாங்கலை  விட்டு விட வேண்டும்
(அல்குர்ஆன் 62:9)

2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1530)

3. பல் துலக்க வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1537)

4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1538)

5. நறுமணம் பூச வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1537)

6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1540)

7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு

(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(சூனன் நஸயீ 1364)

8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்
( ஸஹீஹ் புகாரி 929)

9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது
( ஸஹீஹ் புகாரி 910, 911, ஸஹீஹ் முஸ்லிம் 1585)

10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும்
(ஸஹீஹ் முஸ்லிம் 1556)

11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)
(ஸஹீஹ் முஸ்லிம் 1542)

12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)
(ஸஹீஹ் முஸ்லிம் 1557)

13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்..
(ஸஹீஹ் முஸ்லிம் 1556)

*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*

*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*

*(ஸஹீஹ் முஸ்லிம் 1556)*

Monday, October 22, 2018

குழந்தை வேண்டி துவா

*குழந்தை வேண்டி துவா*

குழந்தை வேண்டி நம் நபிமார்கள் அல்லாஹ்விடம் கேட்ட குர்ஆனிலுள்ள துஆக்கள். இன்ஷா அல்லாஹ் நம்முடைய துஆக்களையும் அல்லாஹ் நிறைவேற்றித்
தருவானாக !

ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

3:38   هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

*3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”*

ஸூரத்து மர்யம்

19:5   وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا

*19:5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!*

ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)

21:89   وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

*21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது.*

71:12   وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا

*71:12. “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.*

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

37:100   رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

*37:100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”*

Thursday, October 11, 2018

கியாமத் நாளின் அடையாளங்கள்

Received on WhatsApp

®  கியாமத் நாளின் அடையாளங்கள் ®


♣ மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

♣ பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

♣ ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி

வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.

• நூல்: புகாரி 50

♣ குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

• நூல் : புகாரி 7121

♣ விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

♣ தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.

• நூல் : புகாரி 59, 6496

♣ பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக

மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

• நூல் : முஸ்லிம் 1681

♣ காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

• நூல் : திர்மிதீ 2254)

♣ கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

♣ நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல்: புகாரி 1036, 7121

♣ பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,

12079, 12925, 13509.

♣ நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: அஹ்மத் 10306

♣ பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

♣ ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

• நூல் : முஸ்லிம் 3971, 5098

♣ உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 11365

♣ பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 1511

♣ தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

♣ பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

♣ சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 7115, 7121

♣ இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 3609, 7121

♣ முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

• நூல்: புகாரி 3456, 7319

♣ யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

• நூல்: புகாரி 2926

♣ கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 5179

♣ யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 7119

♣ கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 3517, 7117

♣ அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5183

♣ எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5191

♣ செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 1036, 1412, 7121

♣ ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்

கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 1424

♣ மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்

ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

• நூல் : புகாரி 3609, 7121, 6936

♣ பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

• நூல் : புகாரி 3176

♣ மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 2451

♣ அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 3546

♣ மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

♣ புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.

• (அல்குர்ஆன் 44:10,11)

♣ உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்

பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

♣ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

• (அல்குர்ஆன் 21:96)

♣ ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

• (அல்குர்ஆன் 43:61)

♣ மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

♣ பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்:  முஸ்லிம் .  

Saturday, October 6, 2018

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி...

* WhatsApp*

தெரிந்து கொள்வோம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி...

*1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை?*

*சொர்க்கங்களின் பெயர்கள் :*

*1. தாருஸ் ஸலாம் -
அமைதியான இல்லம்
( 10:25 )*

*2. தாருல் கரார் -
நிலையான உலகம்
( 40:39 )*

*3. ஜன்னத்துல் ஹுல்த் -
நிலையான சொர்க்கம்
( 25:15 )*

*4. ஜன்னத்துல் மாஃவா -
சொர்க்கச்சோலைகள்
( 53:15,  32:19 )*

*5. ஜன்னத்துன் நயீம் -
இன்பகரமான சொர்க்கம்
( 5:65,  56:12 )*

*6. ஜன்னத்து அத்ன் -
நிலையான சொர்க்கம்
( 9;27, 19:61,  38:50 )*

*7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் -
சொர்க்கத்துச் சோலைகள்
( 18:107,  23:11 )*

*சொர்க்க வாசல்களின் பெயர்கள் :*

*1. சலா
( ஸஹிஹீல் புகாரி
# 1897*

*2. ஜிஹாத்
( ஸஹிஹீல் புகாரி
# 1897*

*3. ஸதகா
( ஸஹிஹீல் புகாரி
# 1897*

*4. ரய்யான்
( ஸஹிஹீல் புகாரி
# 1897*

*5. ஹஜ்
*6. கஸ்மன்
*7. ஈமான்
*8. திக்ரு

*2. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள் யாவை?*

*1. ஜஹன்னம்
(52:13)*

*2. ளலா
(70:15)*

*3. ஹுதமா
(104:4,5 )*

*4. ஸகர்
( 54:48,  74:26, 27, 42)*

*5.ஜஹீம்
( 69:31)*

*6. ஹாவியா
(101:9)*

*3. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள் யாவை?*

*1. கற்பூர பானம்
(76;5)*

*2. இஞ்சி பானம்
(76:17)*

*3. ஸல்ஸபீல்
(76:18)*

*4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் யாவை?*

*1. ஸிந்துஸ்
( 18:31,  44:53,  76:21 )*

*2. இஸ்தப்ரக்
( 18:31,  44:53,  76:21 )*

*5. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் கன்னி (மனைவி) களின் பெயர் என்ன?*

*" ஹுருல்ஈன் "(கண்ணழகிகள்)
*44:54,  56:22

*6. சொர்க்கத்தில் வழங்கப்படும் ( போதையற்ற) முத்திரையிடப்பட்ட மதுவின் பெயர் என்ன?*

*" ரஹிகிம் மஹ்தூம்
" ( 83:25 )*

*7. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே இருக்கும் அகலமான தடுப்புச்சுவரின்பெயர் என்னா?*

*" அல் அஃராப் "
( 7:46 to 49 )*

*8. மனிதன் சோதனைக்குள்ளாக்கப் படாமல் எளிதாக சொர்க்கம் செல்லமுடியாது என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*

*2:214*

*9. நல்லடியார்கள் தங்கும் சொர்க்கம் எங்கே உள்ளது?*

*" ஸித்ரதுல் முன்தஹா "
என்ற இலந்தை மரத்தின் கீழ் உள்ளது (53:13,14,15 )*

*10. நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் யாவை?*

*1. கொதிக்கும் :
( 6:70, 10:4, 37:67, 38:57)*

*2. சீழ் ( சலம்)
( 14:16,17, 38:57, 69:36, 78:25 )*

*3. ஸக்கூம் மரம்
( 37:62, 44:43 to 46, 56:52,53 )*

*4. முள்மரம்
( 88:6 )*

*11. நரகத்தில் இருக்கும் ஸக்கும் மரத்தின் பாளை எதனுடைய வடிவில் இருக்கும்?*

*ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும்!
( 37:65 )*

*12. நகரவாசிகளை வானவர்கள் எதைக்கொண்டு அடிப்பார்கள்?*

*இரும்பு சம்மட்டியால் அடிப்பார்கள்!
(22:21)*

*13. நரகவாசிகளின் ஆடைகள் யாவை?*

*1. நெருப்பினால் ஆன ஆடை
( 22:19)*

*2. நெருப்பினால் ஆன விரிப்பு
( 7:41)*

*3. நெருப்பினால் ஆன போர்வை
( 7:41)*

*14. நரகத்திற்கு எத்தனை*
*வாசல்கள் இருக்கும்?*

*7 வாசல்கள் இருக்கும்
( 15:44 )*

*15. நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்?*

*70 முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்
( 69:32 )*

*16. சபிக்கப்பட்ட மரம் எது?*

*கள்ளி மரம
் ( 17:60 )*

*ஸஹிஹீல் புகாரி :
4716*

*17. நரகத்தின் எரிபொருட்கள் யாவை?*

*1. மனிதர்களும், கற்களும
் ( 2:24 )*

*2. மனிதர்களும்,  ஜின்களும்
( 22:98,  72:15 )*

*18. நரகத்தின் பொறுப்புதாரியான வானவரின் பெயர் என்ன ?*

*மாலிக்
( 43:77 )*

*19. பெருமையடிப்போர் நரகம் செல்வார்கள் என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*

*( 16:29,  39:72,  40:75,76 46:20 )*

*20. ஸகர் எனும் நரகத்திற்கு எத்தனை வானவர்கள் காவல் இருப்பார்கள்?*

*19 வானவர்கள்
( 74:30 )*

*21. நரகத்தை யாரைக்கொண்டு நிரப்புவதாக அல்லாஹ் கூறுகிறான்?*

*மனிதர்களைக் கொண்டும், ஜின்களைக்கொண்டும்
( 32:13 )*

*22. " ஜன்னத்துல் ஃபிர்தௌஸிற்கு " தகுதியானவர்களின் பண்புகள் யாவை?*

*1. உள்ளச்சத்துடன் தொழுவார்கள்

*2. வீணானவற்றை புறக்கனிப்பார்கள்.

*3. ஸகாத்தை முறைப்படி நிறைவேற்றுவார்கள்

*4.தங்களது வெட்கஸ்தலங்களை பாதுகாப்பார்கள்

*5. ஹலாலான தங்களது மனைவிகள்,
தனது அடிமைப்பெண் இவர்களிடம் மட்டுமே உறவு கொள்வார்கள்

*6. அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் பேணுவார்கள்

*7. தொழுகைகளை பேணித் தொழுவார்கர்
( 23:2 to 11 )*

*23. உங்கள் மனைவிகளுடன் சொர்க்கம் செல்லுங்கள் என்ற நற்செய்திக்கு உரியவர்கள் யார்?*

*குர்ஆன் வசனங்களை விசுவாசித்து அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்து நடப்பவர்கள்!
( 43:69, 70 )*

*24. ஸகர் என்ற நரகத்தின் தன்மை யாது?

*தொழாதவன்,  ஏழைகளுக்கு உணவளிக்காதவன் இவர்களின் உடல்களில் பட்டு அவர்களின் உருவத்தை மாற்றிவிடும்!
( 74:26 to 29,  74:42 to 44 )*

*25. ஹாவியா என்ற நரகத்தின் தன்மை யாது?

*கடுமையான சூடேற்றப்பட்ட நரக நெருப்பாகும்
( 101:9 to 11 )*

*26. " ஹுதமா " என்ற நரகத்தின் தன்மை யாது?

*உடலில்பட்டவுடன் நேராகச்சென்று இதயத்தை தாக்கும்!
( 104.5.6.7)*

இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்...```