பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, May 30, 2010

ஒவ்வொரு செய­லும் தூய்மை

ஒவ்வொரு செய­லும் தூய்மை

ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தூய்மையைப் பேண வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளார்கள். விஞ்ஞானம் வளர்ந்த இக்கால கட்டத்தில் கூட இவ்வழிமுறைகள் பேணப்படுவதில்லை. இன்று தூங்கி எழுந்த உடன் கை கழுவாமல் பல் துலக்காமல் பெட் காஃபி என்று சொல்­க் கொண்டு அதைப் பருகுகின்றார்கள். இந்த (நாகரீக மேதைகளுக்கு) நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்ற சுத்தத்தைப் பாருங்கள்.


''உங்களில் ஒருவர் தன் உறக்கத்தி­ருந்து விழித்துவிட்டால் அவர் தன்னுடைய கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தில் அதை விட வேண்டாம். ஏனென்றால் அவருடைய கை இரவில் எங்கு இருந்தது என்பதை அவர் அறிய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி­)  நூல்: முஸ்­லிம் 467

 
நாம் உறங்கும் போது சுய நினைவையே இழந்து விடுகிறோம். எனவே நம்மையறியாமல் கொசுக்கள் நம் மூக்கிற்குள் நுழைந்து விடுகின்றது. சில நேரங்களில் தூங்கி விட்டு சளியைச் சிந்தும் போது இதை நம்மால் உணர முடியும். அசுத்தங்களில் உழலக் கூடிய, பல வகையான இரத்தங்களை உறிஞ்சி வாழும் கொசு நம் மூக்கிற்குள் இருப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி அழுக்குகள் அங்கு திரண்டு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தருகின்ற வழி இதோ: 


நீங்கள் தூக்கத்தி­ருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருந்தான்.   அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரீ 3295

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிடுவது இப்லீஸை அல்ல. மாறாக தீங்கு தரக் கூடிய அசுத்தங்களாகும். ஷைத்தான் தீங்கு தருவதைப் போன்று இவைகளும் தீங்கு தருவதினால் பெருமானார் (ஸல்) அவர்கள் இதை ஷைத்தானுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள். 

தூங்கி எழுந்தவுடன் முகத்தைக் கழுவுவதும் பல்லைத் துலக்குவதும் தான் நம் வழக்கில் உள்ளது. ஆனால் மூக்கிற்குள் நீர் செலுத்திக் கழுவ வேண்டும் என்பதை பெருமானார் கூறியதின் மூலமே அறிந்து கொண்டோம். இல்லையென்றால் அழகான இந்த நடைமுறையை இழந்திருப்போம். பெரும்பாலும் இந்த சுன்னத்தை யாரும் கடைப்பிடிப்பதில்லை. நாம் இதை அவசியம் கடைப்பிடித்து நம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.


இன்றைய விஞ்ஞானம் பல் துலக்குவதை அதிகம் வ­யுறுத்துகிறது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உறங்கச் செல்வதற்கு முன்னும் பின்னும் துலக்க வேண்டும் என்று கூறுகிறது. இக்கருத்தை வ­யுறுத்தி நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அற்புதமாகச் சொன்னார்கள் என்பதைப் பாருங்கள்.


என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளை இட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரீ 887
நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்புளித்து விட்டு, அதில் கொழுப்பு உள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ர­லி)  நூல்: புகாரீ 211

 
தன்னுடைய உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமில்லாமல் இறைவனுடைய பொருத்தத்தைப் பெறுவதற்காகவும் பல் துலக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. தூய்மை இறைவனது திருப்திக்கும் தூய்மையின்மை அவனது அதிருப்திக்கும் காரணம் என பின்வரும் ஹதீஸ் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பல் துலக்குவது வாயைத் தூய்மைப்படுத்தும். இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ர­லி)  நூல்: நஸயீ 5

 
சூடான பானம் ஏதும் அருந்தும் போது அதை நாம் ஊதிப் பருகுகிறோம். தண்ணீர் குடிக்கும் போது பாத்திரத்திற்குள்ளே மூச்சை விடுகிறோம். இது தவிர்க்க வேண்டிய செயலாகும். ஏனென்றால் நாம் சுவாசிக்கும் போது பல வகையான காற்றுக்கள் உள்ளே செல்கிறது. நுரையீரல் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கரியமில வாயுக்களை வெளியே அனுப்புகிறது. இப்படி வெளிவரும் காற்று கழிவுக் காற்றாகும்.
இதனால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நாம் பானத்தில் செலுத்தினால் பானம் அசுத்தமாகும் நிலை ஏற்படும்.


அது மட்டுமல்லாமல் நாம் உள்ளிழுத்தக் காற்று வெளியேறக் கூடிய பாதையான மூக்கும் அசுத்தமானதாகும். இதன் வழியே கடந்து வந்த காற்றை பானத்தில் விடுவது அருவருக்கத்தக்க செயலாகும். இது போன்ற காரணங்களால் மார்க்கம் பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடை செய்கிறது.


உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண் குறியை தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப்படுத்தவோ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலி­)  நூல்: புகாரீ 153

 
நாகரீக நாற்றங்கள்

 
பெரும்பாலும் மேலைநாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நாய் இருக்கும். குழந்தையைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது போன்று நாயைக் கட்டியணைக்கிறார்கள். இரவில் அதனுடன் சேர்ந்து உறங்குகிறார்கள்.
நாய்க்கு சுத்தம், அசுத்தம் என்று பிரிக்கத் தெரியாது. அசுத்தமான இடங்களில் எல்லாம் அமரும். அதனுடைய வயிற்றில் உள்ள கிருமிகள் பின்புறத்தின் வழியாக மலம் வரும் போது அதனுடன் சேர்ந்து வருகிறது. நாய் தன் பின்புறத்தை நாவால் நக்கும் போது அங்குள்ள கிருமிகள் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. நாயைத் தூக்கி கொஞ்சும் போது அதிலுள்ள கிருமிகள் அவருடைய முகத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.
நாயுடைய எச்சி­ன் விளைவை நன்கு விளங்கியும் இருக்கிறார்கள். நாயின் எச்சி­ன் மூலம் ரேபிஸ் என்ற நோய்  பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன. யாரையாவது நாய் கடித்து விட்டால் பத்து, பதினாறு ஊசிகள் போடப்படுகின்றன. எந்த மிருகம் கடித்தாலும் இத்தனை ஊசி போடப்படுவது கிடையாது. நாயின் எச்சில் மாபெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அறிந்தும் அதனுடன் அதிகத் தொடர்பு வைத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நாயினால் ஏற்படும் விபரீதத்தைப் பயந்து, எந்த மிருகத்திற்கும் சொல்லாத ஒரு எச்சரிக்கையை நாய் விஷயத்தில் விடுத்துள்ளார்கள்.


உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)  நூல்: முஸ்லி­ம் 471

இன்று நோய்கள் பெரும்பாலும் நீரினாலேயே பரவுகின்றன. அதனால் தான் நீரை நன்கு கொதிக்க வைத்துப் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நீர் மாசுபட்டுப் போவதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான்.


குடிநீர் குளங்களில் ஆடு மாடுகளையும், வண்டிகளையும் குளிப்பாட்டுகிறார்கள். அதிலே மலம், ஜலங்களை கழிக்கவும் செய்கிறார்கள். பின்பு அதில் அவர்களும் குளிக்கிறார்கள்.  இப்படி நீரை அசுத்தப் படுத்துவதால் நோய்கள் நம்மை நோக்கிப் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. நீர் நிலைகளில் தூய்மையைப் பேண வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறி, தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதைப் பாருங்கள்.


''உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)   நூல்: முஸ்லி­ம் 475
சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குகள் பலருக்குத் தெரிவதில்லை. ஆடு மாடுகள் நின்று கொண்டு கழிப்பதைப் போன்று இவர்களும் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். கால்நடைகள் குறைந்த அறிவை பெற்றிருப்பதால் அவற்றுக்குச் சுத்தத்தைப் பற்றியும் தெரியாது. அசுத்தத்தைப் பற்றியும் தெரியாது. ஆனால் சிந்திக்கின்ற அறிவை வழங்கப்பட்ட மனிதன் தனக்கு எது உகந்தது என்று சிந்தித்துச் செயல்படாமல் அவைகளைப் போன்றே செயல்படுகிறான்.


நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது அவனுடைய மேனியில் சிறுநீர் தெறித்து விடுகிறது. சாதாரண இந்த அறிவைக் கூட மனிதன் பெறாமல் இருப்பது தான் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உலகத்தாருக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.


(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதி­ருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை. அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி­)  நூல்: அஹ்மத் 24604

 
ஆனால் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள். சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.


நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.  அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ர­லி) நூல்: புகாரி 224

 
அசுத்தம் தரும் அசுர வேதனை

 சுத்தம் ஈமானில் பாதி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் சுத்தத்தைக் கடைப்பிடிக்காதவருக்குத் தண்டனையும் இருப்பதாக இஸ்லாம் எச்சரிக்கிறது.


பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் உள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். (அப்போது) கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவரின் சப்தத்தைச் செவியுற்றார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்­த் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ர­லி)  நூல்: நஸயீ 2041

 
மக்கள் கூடக் கூடிய இடங்களான இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தி மக்களை ஏராளமானோர் துன்புறுத்து கிறார்கள். அவ்விடங்களுக்கருகில் நடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இங்கு அசுத்தம் செய்யாதீர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் செத்தவன் காதில் சங்கு ஊதுவதைப் போன்று  நடந்து கொள்கிறார்கள். இந்தத் தீய செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு  அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன். அல்லது அவர்கள் நிழலாரக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)  நூல்: முஸ்­லிம் 448

 
அதே நேரத்தில் இக்கொடிய செய­ல் ஈடுபடாமல் பாதையில் கிடக்கின்ற அசுத்தங்களை அகற்றினால் இது ஈமானில் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது.


''இறை நம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: முஸ்­லிம் 58

நம்மையும் நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து அல்லாஹ்வின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தை      நம் அனைவருக்கும் அவன் வழங்குவானாக!

நல்லி­ணக்கம் ஏற்படுத்துதல்

நல்லி­ணக்கம் ஏற்படுத்துதல்

அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்குப் பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டை வீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது.நெருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.


இந்நேரங்களில் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக யாரும் முன் வராவிட்டால் சில நேரங்களில் தன்னுடைய சுயநினைவு இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்காமல் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.

தினந்தோறும் பிரச்சனைகளைச் சந்திக்கின்ற நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அமைப்புக்கள் முதன் முத­ல் இணக்கத்தை ஏற்படுத்தவே முனைகின்றன. இதனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தச் செயல் மனிதர்களுக்குப் பலன் தருவதால் இஸ்லாம் இணக்கத்தை ஏற்படுத்துவதை வ­யுறுத்திச் சொல்கிறது. சச்சரவுகள் தோன்றும் போது, 'நாம் ஏன் சிக்க­ல் மாட்டிக் கொள்ள வேண்டும்?' என்று நினைத்து ஒதுங்கிக் கொள்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

இறைவனை நம்பியவர்கள் இவர்களைப் போன்று சுயநலம் கொண்டவர்களாக இல்லாமல் பிறர் நலம் பேணும் பொதுநலம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனால் இந்த உலகத்தில் பயன் ஏற்படுகிறதோ இல்லையோ! மறு உலக வாழ்வில்   பயன் கிடைக்குமா? என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

நல்­லிணக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த உலகத்தில் நன்மை கிட்டாவிட்டாலும் மறுமை நாளில் நிச்சயம் இதற்குக் கூ­ உண்டு என்று கூறி இஸ்லாம் இதில் ஆர்வமூட்டுகிறது. இச்செயலைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுடைய அருளை நம்மால்  பெற முடியும் என்று திருக்குர்ஆன் உணர்த்துகிறது. 

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லி­ணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:9,10)

இந்த வசனம் நபித் தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போது தான் அருளப்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ''தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள்.  முஸ்­லி ம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்த போது அவன், ''தூர விலகிப் போவீராக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்தி விட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களுடன் இருந்த (அன்சாரித்) தோழர் ஒருவர், ''அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனை உடையதாகும்'' என்று கூறினார்.

அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங்குச்சியாலும் கைகளாலும் செருப்புக்களாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது 'இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்' (49:9) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது.  அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)   நூல்: புகாரி (2691)
 
இணக்கத்திற்காக இரகசியம் பேசலாம்
 
இரகசியமாக மக்கள் பேசுகின்ற பெரும்பாலான பேச்சுக்களில் எந்த விதமான நன்மையும் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது. தேவையற்ற விஷயங்களை இரகசியமான முறையில் பேசுவதை வெறுக்கவும் செய்கிறது.

ஆனால் இருவருக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இரகசியம் பேசலாம் என்று அனுமதி தருகிறது. அத்துடன் இல்லாமல் இந்தச் செயலை சுயலாபங்களுக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காகச் செய்தால் மகத்தான பரிசும் கிடைப்பதாக குர்ஆன் நற்செய்தி கூறி இந்தச் செய­ல் ஆர்வமூட்டுகிறது. 

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்­லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூ­லியை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:114)
 
தர்மம் என்றால் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்வது மாத்திரம் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு வகையில் நம் மூலம் பிறருக்கு நன்மை கிடைக்குமானால் அதுவும் தர்மம் தான்.

பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்ப்பளிப்பது மக்களுக்குப் பலன் தருவதால் நபியவர்கள் இதைத் தர்மம் என்று கூறியுள்ளார்கள். இச்செயலை எல்லோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்களித்துள்ள மூட்டுகளுக்குத் தர்மம் செய்வதைக் கடமையாக்கி, இச்செயல் புரிவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்ற முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி (2707)

மார்க்கத்தில் நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களுக்கு ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வணக்கங்களை விட மக்களுடைய பிரச்சனைகளை சரிசெய்வது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

''நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் ''ஆம்! அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். ''(அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர் செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது (நன்மைகளை) அழித்து விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபுத்தர்தாஃ (ர­லி)   நூல்: திர்மிதி (2433)
 
பொய் சொல்லலாம்

மார்க்கம் பொய் சொல்வதை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் காரியமாக எச்சரிக்கிறது. நல்­ணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம்) நல்லதை (புனைந்து) சொல்­ மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.  அறிவிப்பவர்: உம்மு குல்தூம் (ர­லி)  நூல்: புகாரி (2692)
 
இறைவனின் மன்னிப்பு கிடைக்காது

சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் பிரிந்து வாழும் சகோதரர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பு கிடைப்பதில்லை. நல்­ணக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த மோசமான நிலையி­ருந்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கிறார்கள். இறைவனுடைய மன்னிப்பு என்ற பாக்கியத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்ததற்காக அவருக்கும் இறைவனுடைய மன்னிப்பு கிடைக்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. 'இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!' என்று சொல்லப்படும்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: முஸ்­லிம் (4653)

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன. 

ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு குபா வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ''அவர்களிடம் நம்மை அழைத்துச் செல்லுங்கள்! அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர­லி)  நூல்: புகாரி (2693)

பனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ர­லி)    நூல்: புகாரி (1201)

நபி (ஸல்) அவர்களின் பேரனும் அலீ (ரலி­) அவர்களின் மகனுமான ஹசன் (ரலி­) அவர்கள் அலீ (ர­லி) அவர்களின் மரணத்திற்குப் பின் சில மாதங்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் ஹசன் (ர­லி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் முஆவியா (ரலி­) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரண்டது.

தன் சமுதாய மக்கள் இரு பெரும் திரளாகத் திரண்டிருப்பதைக் கண்ட ஹசன் (ரலி­) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி­) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். மக்களுடைய நலனுக்காக, தான் வகித்த ஜனாதிபதி பதவியைத் துறந்தார்கள். இவரின் மூலம் இந்த சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்படும் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே உணர்த்தினார்கள்.
ஹசன் (ரலி) அவர்களிடம் இருந்த இந்த உயரிய பண்பு நம் எல்லோரிடமும் இருந்து விடுமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் வேலையே இல்லை. 

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை  (உரை நிகழ்த்தும் போது) மக்களை நோக்கியும் மற்றொரு முறை ஹஸன் (ர­லி) அவர்களை நோக்கியும் ''இந்த எனது புதல்வர் தலைவர் ஆவார். முஸ்­லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.   அறிவிப்பவர்: அபூபக்ரா (ர­லி) நூல்: புகாரி (2704)
 
விட்டுக் கொடுத்தாலே நல்­ணக்கம் ஏற்படும்

பிரச்சனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வலுவானவராகவும் மற்றொருவர் வலுவற்றும் இருந்தால் பலம் படைத்தவரிடம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படி வ­யுறுத்தி இருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இருவரில் ஒருவர் தனக்குரியதை விட்டுக் கொடுத்தால் தான் இணக்கம் ஏற்படும். இருவரும் தனக்குரியதில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தால் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்லும். இதற்கு எந்த ஒரு தீர்வையும் காண இயலாது.  நபி (ஸல்) அவர்கள் இது போன்ற  நிலையில் இந்த வழிமுறையை கடைப்பிடித்துள்ளார்கள். 

இப்னு அபீ ஹத்ரத் (ரலி­) இடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாச­ல் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டி­ருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து, ''கஅப் இப்னு மா­க்!'' என்று கூப்பிட்டார்கள். ''இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். ''பாதியைத் தள்ளுபடி செய்வீராக!'' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். ''அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி­)யை நோக்கி, ''எழுவீராக! பாதியை நிறைவேற்றும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.   அறிவிப்பவர்: கஃபு பின் மா­க் (ர­லி) நூல்: புகாரி (471)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும் படியும் மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ''நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், ''நான் தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கடன் வாங்கிய) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.   அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)   நூல்: புகாரி (2705)

என் தந்தை உஹதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப் பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள் என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ர­லி)   நூல்: புகாரி (2601)

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் மற்றொருவரை கயிற்றால் இழுத்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொன்று விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''நீ அவரைக் கொன்றீரா?'' என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) ''இவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன்'' என்று கூறினார். (கொன்றவர்) ''ஆம் நான் அவரைக் கொன்றேன்'' என்று கூறினார். நபியவர்கள் ''எவ்வாறு அவரைக் கொன்றாய்?'' என்று கேட்டார்கள்.

''நானும் அவரும் பேரீச்ச மரத்தின் இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையில் இருந்த) கோடாரியால் உச்சந் தலையில் அடித்து விட்டேன். அவர் இறந்து விட்டார். (திட்டுமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''உன்னை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான பொருள் ஏதும் உன்னிடம் உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்தப் பொருளும் எனக்கு இல்லை'' என்று கூறினார். நபியவர்கள், ''உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன்'' என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எறிந்து, ''இவரை நீ பிடித்துக் கொள்!'' என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது, ''அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு விட்ட) அவர் திரும்பி வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைக் கொன்று விட்டால் நானும் அவரைப் போன்றாகி விடுவதாக நீங்கள் கூறியது எனக்கு எட்டியது. (இவ்விஷயத்தில்) நான் உங்கள் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர் உனது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் நபியவர்களே! ஆம் அது அவ்வாறே ஆகட்டும்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''அப்படியானால் அந்தக் குற்றவாளி (உன்னால் மன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க வேண்டும்'' எனக் கூறினார்கள். ஆகையால் அவர் குற்றவாளியின் வழியில் குறுக்கிடாமல் விட்டு விட்டார்.   அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ர­லி)  நூல்: முஸ்­லிம் (3470)

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள்  நல்­ணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பரிந்துரை செய்கிறார்கள். எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர்கள் ஒதுங்கி விடவில்லை. இவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் போது சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள்; சிலர் மறுத்து விட்டார்கள்.

இது போன்ற இடங்களில் பலம் பொருந்தியவர்கள் சற்று விட்டுக் கொடுத்தால் தான் சுமூகமான நிலை ஏற்படும். நம்மிடத்தில் கஞ்சத்தனம் மேலோங்கியிருந்தால் இந்த மோசமான தன்மை நம்மை இணக்கமாக விடாது. இணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் கஞ்சத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும். எனவே தான் அல்லாஹ் 'சமாதானம் சிறந்தது' என்று சொல்­ விட்டு, கஞ்சத்தனம் கொள்ளக் கூடாது என்றும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்றும் பின்வரும் வசனத்தில் அறிவுறுத்துகிறான். 

சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:128)
 
கணவன் மனைவி பிரச்சனை

கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகமாகப் பிரச்சனைகள் ஏற்படுவதால் இங்கும் சமாதானப்படுத்துதல் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்குப் பல குடும்பங்களில் பிரச்சனைகள் பெரிதாவதற்குக் காரணமாக மூன்றாவது ஆள் இருக்கிறார். இவர்கள் தம்பதியினருக்கிடையே பிரச்சனைகளை எழுப்பாமல் இருந்தாலே சமாதானப்படுத்துவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.

இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டால் மூன்றாவது நபர் வந்து தான் நல்­ணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்றாவது ஆள் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் இணக்கமாகிக் கொண்டால் அவர்களும் நல்­ணக்கத்தை உருவாக்கிய நல்லவர்களின் பட்டிய­ல் வந்து விடுவார்கள். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்­ணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:35)
 
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:128)
 
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் நபியவர்கள் அதில் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முனைந்திருக்கிறார்கள். 

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சொல்லப்படும். அவர் (பரீரா தன்னைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ர­லி) அவர்களிடம், ''அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?'' என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்து விட்ட போது) நபி (ஸல்) அவர்கள், ''முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?'' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ''அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு கட்டளை இடுகின்றீர்களா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(இல்லை!) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார்கள். அப்போது பரீரா ''(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி)  நூல்: புகாரி (5283)

வலீத் பின் உக்பாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! வலீத் என்னை அடிக்கிறார்'' என்று முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நபியவர்கள் எனக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்' என்று நீ அவரிடம் கூறு!'' என்று சொன்னார்கள். (இதன் பிறகு) சிறிது காலம் கூட கழியவில்லை. மறுபடியும் திரும்பி வந்து, ''அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையின் ஒரு பகுதியை அப்பெண்ணிடம் கொடுத்து ''மீண்டும் அவரிடம் நபியவர்கள் எனக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள்' என்று கூறு'' என்றார்கள். சிறிது காலம் கூட கழியவில்லை. அதற்குள் அப்பெண்மணி மறுபடியும் வந்து, ''அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் உயர்த்தி, ''இறைவா! வலீதை நீ பார்த்துக் கொள்! அவர் எனக்கு (அளித்த வாக்குறுதியை) நிறைவேற்றவில்லை'' என்று இரண்டு முறை கூறினார்கள்.  அறிவிப்பவர்: அலீ (ர­லி)  நூல்: அஹ்மத் (1236)
 
மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படுகிறது. இதைத் தீர்த்து வைப்பதற்காக நபியவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது பரிந்துரையை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்க மறுத்து விடுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்தாலும் தன்னுடைய மரியாதையை நபியவர்கள் பெரிதுபடுத்தாமல், பிரச்சனைகள் வெடிக்கும் போது அங்கே நல்லி­ணக்கத்தை அவர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை.

 

கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுதல்

கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுதல்

  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல!  அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ர­லி)   நூல்: புகாரி (2622, 6975)

புகாரியின் 2623வது அறிவிப்பில் தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என்று இடம்பெற்றுள்ளது.



உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு உதவி செய்யும் மனிதர்கள், தங்களிடம் உதவியைப் பெற்றவர்கள் இவர்களை மதிக்காத போது அல்லது இவர்களின் கட்டளையை, ஆலோசனையை ஏற்காத போது, தான் செய்த உதவியை சொல்­க் காட்டுகிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். இதனால் நாம் செய்த உதவிக்கு இறைவனிடம் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)


செய்த தர்மங்களைச் சொல்லி­க் காட்டுவது போல், அன்பளிப்புகளையும், தர்மத்தையும் திரும்ப கேட்கும் நபர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஏற்படும் சண்டைகள் இதற்குக் காரணமாக அமைகின்றது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாம் செய்த தர்மங்கள், அன்பளிப்புகள் இவற்றைத் திரும்பத் தருமாறு கேட்பது மிகப் பெரிய இழிசெயலாகும்.

மேலும் தாம் செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் அன்றே மறந்து விட வேண்டும். இதன் கூ­யை மறுமை நாளில் தான் எதிர்பார்க்க வேண்டும். இதற்கு மாறாக செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் திரும்பக் கேட்டால் அவர் எவ்வளவு இழிவானவர் என்பதைத் தான் நாம் முத­ல் எடுத்துக் காட்டிய உதாரணத்தில் கூறியுள்ளார்கள்.


தான் தின்ற பொருளை வாந்தி எடுத்து அதையே உட்கொள்ளும் நாயை எப்படி நாம் அருவருப்பாக காண்போமோ அதைப் போன்றே கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவனை இஸ்லாம் பார்க்கிறது. எனவே செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் இறைதிருப்பதிக்காக மட்டுமே செய்யவேண்டும். இதுவே மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.


அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி­ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-11)


பொதுவாக அன்பளிப்பைத் திரும்ப பெறக் கூடாது என்றாலும், தந்தை மட்டும் தன் மகனுக்குச் செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பளிப்பைக் கொடுத்து விட்டு அதனை திரும்பப் பெறுவது, ஒரு தந்தை தன் மகனுக்குக் கொடுக்கின்ற விஷயத்தில் தவிர (வேறு) எந்த ஒரு முஸ்­லிமுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல!  அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ர­லி)  நூல்: திர்மதி (1220), நஸயீ (3630)


அன்பளிப்பு தொடர்பாக இன்னும் சில விபரங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றையும் காண்போம். 
அன்பளிப்பின் சிறப்பு :



நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: அல்அதபுல்முஃப்ரத் (594)
நாம் பிறருக்கு ஒரு பொருளையோ பணத்தையோ கொடுத்து அன்பளிப்புச் செய்வதால், நம்மின் மீது தவறான எண்ணமும் கோபமும் கொண்டவர் ஒருவர், நம் மீது நல்லெண்ணம் கொள்வார். இதனால் இருவருக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்க வழி ஏற்படும்.
 
முத­ல் யாருக்கு அன்பளிப்புச் செய்வது? 
அன்பளிப்புச் செய்வதற்கு ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு மிக அருகாமையில் இருப்பவருக்கு பொருளைக் கொடுத்து மிக இலகுவான முறையில் நன்மைகளைப் பெறுவதற்கு நபியவர்கள் வழிமுறையைக் காட்டியுள்ளார்கள்.


நான் நபியவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முத­ல்) அன்பளிப்பு செய்வது?'' என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள், ''அவ்விருவரில் யாருடைய வாசல் உன் வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய்!'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ர­லி)  நூல்: புகாரி (2595)

பிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல் 


எல்லா பிள்ளைகளையும் பத்து மாதம் சுமந்திருந்தாலும் தாய், தந்தை, சில குழந்தைகள் மீது மட்டும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். இந்தப் பாசம் மற்ற குழந்தைகளை விட இந்தக் குழந்தைகளுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் செலுத்தக் காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் ஊக்கத்தைத் தருகிறது.

இவ்வாறு சில குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, சில குழந்தைகளுக்குக் கொடுக்காமல் விட்டு விடுவது கூடாது. அன்பளிப்புச் செய்வதில் அனைத்துக் குழந்தைகளிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.



நுஃமான் பின் பஷீர் (ரலி­) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று, ''எனக்கு சொந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச் செய்கின்றேன்'' என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள், ''உன் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்று அன்பளிப்புச் செய்துள்ளீரா?'' என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபியவர்கள், ''அன்பளிப்பை திரும்பபத் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ர­லி)   நூல்: புகாரி (2586)


பிரதி உபகாரம்


அன்பளிப்பு வாங்குவது சுய மரியாதையை இழக்கும் செயல் என்று கருதி சிலர் அன்பளிப்பை மறுப்பார்கள். ஆனால் நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.


நபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும் அதற்குப் பதில் உபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ர­லி)  நூல்: புகாரி (2585)
ஏழைகள் தரும் அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: முஸ்லி­மான பெண்களே! ஒரு அண்டை வீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும் அவள் அலட்சியம் செய்ய வேண்டாம்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா(ர­லி)   நூல்: புகாரி (2566) 

மறுக்கக் கூடாத அன்பளிப்பு


நபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: புகாரி (2582)

லஞ்சம்


உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

நபியவர்கள் லஞ்சம் வாங்குபவரையும் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி)  நூல்: திர்மிதி (1257)
 

அன்பளிப்பு என்ற பெயரில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட லஞ்சத்தை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

Saturday, May 29, 2010

வட்டி


வட்டி



இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருளின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருள்களின் மீதுள்ள ஆசையினால் ''தவணை முறை'' என்ற பெயரில் வட்டிக்குப் பொருளை வாங்குகின்றனர். இந்த வட்டி எனும் நரகப் படுகுழி எவ்வளவு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்றும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள். நூல்: முஸ்லிம் 3258

ஒரு பொருளின் விலை நூறு ரூபாய் என்றால் அதைத் தவணை முறையில் வாங்கும் போது அந்தப் பொருளுக்கு வட்டியைப் போட்டுத் தருகின்றனர். இதனால் தவணை முறையில் வாங்கும் போது வட்டியைக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாகின்றோம். அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்:

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ''வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

தவணை முறை என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து அவர்களை நரகத்தின் உறுப்பினர்களாக ஆக்க சில வியாபாரிகள் முனைகின்றனர். இதற்கு அதிகமாக விலை போகுபவர்கள் பெண்கள் தான். பெண்களே! உஷார்! நீங்கள் நரகத்தின் உறுப்பினர்களாக ஆகும் நிலை வேண்டுமா? பின்வரும் பொன்மொழியை சிந்தித்துப் பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிக பொருட்கள் உடையவன் செல்வந்தன் அல்லன்; போதுமென்ற மனம் படைத்தவனே செல்வந்தன். நூல்:புகாரி 6446


ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, போதுமென்ற தன்மையும் கொடுக்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமாக்கி கொண்டால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 1746

அடுத்து, பணம் தேவைப்பட்டவுடன் வீட்டிலுள்ள நகை, பொருள்களை அடைமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்குகின்றனர். இதுவும் மாபாதகச் செயல் தான். இதற்கு காரணம் அடைமானம் வைத்தால் அந்தப் பொருளை நாம் திருப்பிப் பெற்று விடலாம். அந்தப் பொருளை விற்று விட்டால் திரும்பப் பெறமுடியாது என்ற அவநம்பிக்கை!

ஆனால் பெரும்பாலும் அடகு வைக்கும் நகைகள் மூழ்கிப் போய், இறுதியில் ஏலத்திற்கு வருகிறது. மேலும் திருப்பும் நகையைக் கூட, அதன் மதிப்பை விடக் கூடுதலாக வட்டி கட்டித் தான் திருப்புகின்றனர். உதாரணமாக 5000 ரூபாய் மதிப்புள்ள நகையை அடகு வைத்து 3000 ரூபாய் வாங்குபவர், இறுதியில் வட்டி, குட்டி போட்டு 6000 அல்லது 7000 ரூபாய் கொடுத்து திருப்புகின்றனர். இதற்குப் பதிலாக 5000 ரூபாய்க்கு விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாய் இலாபம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மேலும் பொருளையும் நகையையும் தந்த அல்லாஹ், ஹராமான முறையில் பணம் பெறுவதை தவிர்த்துக் கொண்டு ஹலாலான முறையில் விற்று பணத்தைப் பெற்றால் அதை விடச் சிறந்ததைத் தருவான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் சிறந்த முஃமின் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டும்!

யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 65:3)

ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர் அல்லர். அல்லாஹ் தடை செய்ததை, தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.

மரணத் தருவாயில் மனிதன்!!!


மரணத் தருவாயில் மனிதன்!!!


கண்ணியமும் கருணையும் நிறைந்த இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:



'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.

உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.

உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சம உலகின் தரிசனம் தரப்படுகிறது.

எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் கானும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.

தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.

மெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.

ஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.


அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள! அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக! இன்ஷாஅல்லாஹ்.!

தீயவர்களின் வேதனையின் ஆரம்பம்

தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும்போது அவர்களுக்குக் கொடுக்கபடும் வேதனையைப் பற்றி பின்வரும் இறைவசனம் தெளிவுப்படுத்துகிறது.

கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் '(ஏக இறைவனை)மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப் பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே!' (அல்குர்ஆன்: 8:50)

கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவனுடைய இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.

பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.

இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்க ளின் புலம்பலும்இ நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை

நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (அல்குர்ஆன்: 89 : 27)


நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. மதினாவாசி ஒருவருடைய ஜனாஸாவை பின் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நங்களும் அவரைச் சுற்றி அமர்;ந்தோம். நபி(ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.திடிரென தன் தலையை உயர்த்தி 'கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்' என்று மூன்று தடைவ கூறினார்கள். பின்பு மரணத் தருவாயிலிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றி கூறினார்கள்

'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானாவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்' என்று கூறுவார். தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்த விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.

அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியியீனிலே பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;!

இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்

மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்பு செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.

கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நிங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்த தாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்' (அல்குர்ஆன்: 6:93)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதுவல்ல. மாறாக இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)

ஆகவே நம்முடைய செயல்களை தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.

Wednesday, May 26, 2010

வெட்கம்

வெட்கம்
நம்மிடத்தில் உள்ள பல தன்மைகள் விலங்குகளிடத்தில் காணப்பட்டாலும் நம்முடைய சில தன்மைகளால் அவைகளுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏற்படுகின்றது. உதாரணமாக சாப்பிடுவது, உறங்குவது, மலம், ஜலம் கழித்தல் ஆகிய காரியங்களை நாம் செய்வது மட்டுமல்லாமல் பிராணிகளும் செய்கின்றன. சில பிராணிகள் இக்காரியங்களில் மனிதனையே மிஞ்சி விடுகின்றன. ஒரு பெண், ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை அல்லது அரிதாக இரு குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். ஆனால் முயல், நாய், பன்றி போன்ற பிராணிகள் டஜன் கணக்கில் ஈன்றெடுக்கின்றன. இனப் பெருக்கத்தில் நம்மை மிகைத்து விடுகின்றன.    


நாம் கட்டக் கூடிய கட்டடங்கள், பெரும் மழை அல்லது பலத்த காற்று அடித்தால் அடியோடு சாய்ந்து விடுகின்றன. ஆனால் பறவைகள் கட்டக் கூடிய கூடுகள் இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது கூட நிலைத்து நிற்கின்றன. தூக்கணாங் குருவி வ­மையாகக் கூடு கட்டுவதில் பெயர் பெற்ற பறவை. இப்படிப் பல காரியங்களில் நம்மைப் போன்றோ அல்லது நம்மை விட சிறப்பாகவோ இவை செயல்படுகின்றன. என்றாலும் இறைவன் இந்தப் பிராணிகளிடம் இல்லாத பகுத்தறிவு, நல்லது கெட்டதை அறிதல், நீதி, நேர்மை, மனிதாபிமானம், உதவுதல் போன்ற தனித் தன்மைகளால் நம்மை மேம்படுத்தியுள்ளான்.    


இப்படிக் கால்நடைகளை விட நம்மை சிறப்பிக்கும் தன்மைகளில் ஒன்று தான் வெட்கம் என்பது. அல்லாஹ் இந்த வெட்கத்தை மனித குலத்திற்கு மட்டும் வழங்கிச் சிறப்பித்துள்ளான். மிருகங்கள் ஆடை அணியாமல் இருப்பதாலோ, அல்லது குப்பைக் கூளங்களில் புரளுவதாலோ, அல்லது தனது இனம் முன்னிருக்க மல ஜலம் கழிப்பதாலோ இவற்றின் மான, மரியாதைக்குப் பங்கம் வந்து விடும் என்று இவைகள் வருந்துவதில்லை. இந்தக் கவலை சுயநினைவை இழந்த பைத்தியக்காரன் மற்றும் குடிகாரனைத் தவிர மற்ற எல்லோரிடமும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.  


ஆனால் சூழ்நிலை மாறுபாட்டால் சில மனித ஜென்மங்கள் இந்த வெட்கத்தை உதிர்த்து விட்டு, ஆடு மாடுகளைப் போன்று வாழ்வதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் முரடர்கள் தான் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். இதனால் அவர்களை யாரும் நேசிக்கவும் மாட்டார்கள். வெட்கம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் மென்மையான குணம் கொண்டவராக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இப்பண்பினால் அவர்களை பலரும் நேசிப்பார்கள்.    


மனிதனுக்கு வெறும் உடலுறுப்புகள் மாத்திரம் அழகூட்டுவதில்லை. மாறாக அவனிடத்தில் உள்ள குணங்களும் இதில் முக்கியப் பண்பு வகிக்கிறது. நாணம் இல்லாமல் பெண் இல்லை. அவளுக்கு அழகே வெட்கம் தான். ஒரு பெண் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் அந்த அழகுடன் வெட்கம் சேரும் போது தான் அவளுடைய மதிப்பு உயர்கிறது.
மொத்தத்தில் வெட்கம் தான் மனிதனுக்கு அழகை அதிகரிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.   


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப் படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: திர்மிதி (1897)     


இன்று உலகத்தவரால் மிகவும் நேசிக்கப்படுகின்ற நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அனைவரின் உள்ளத்திலும் அழகு படுத்திக் காட்டுவது அன்னாரின் நடைமுறைகள் மற்றும் ஒழுக்க மாண்புகளாகும்.  இந்த உயரிய பண்புகளில் வெட்கமும் அவர்களிடத்தில் முக்கியப் பங்கை வகித்தது. சத்தியத்தைக் கூற அஞ்சாதவராகவும் மாபெரும் வீரராகவும் திகழ்ந்த நபி (ஸல்) அவர்கள் அதிக வெட்கம் உள்ளவராகவும் இருந்தார்கள்.  
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ர­லி)   நூல்: புகாரி (3562)   


ஆட்கள் போய் வருவதைக் கவனிக்காமல் இன்று பாதையோரத்தில் சிலர் மல ஜலம் கழிப்பதைப் பார்க்கிறோம். தன் அருகில் வந்து ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது கூட அவர்களுக்குக் கூச்சம் ஏற்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் அதிக வெட்கமுள்ளவராக இருந்தமையால் மலம் ஜலம் கழிக்கும் போது வெகு தொலைவில் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.   


பி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள். அறிவிப்பவர்: அல்முகீரா பின்   ஷுஅபா (ர­லி)   நூல்: நஸயீ (17)   


நவீன காலத்தில் ஆண்களும் பெண்களும் நீச்சல் குளத்தில் சென்று குளிக்கிறார்கள். பிறர் பார்க்கிறார்களே என்ற கூச்சம் கூட இல்லாமல் அரைகுறையான ஆடைகளில் காட்சி தருகிறார்கள். குளியல் உட்பட எல்லா விஷயத்திலும் வெட்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆண் என்ற காரணத்தால் எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று நினைத்துவிட முடியாது. நான்கு சுவற்றுக்குள் தனியாகக் குளித்தால் கூட மறைக்க வேண்டிய பகுதிகளை முறையாக மறைத்தாக வேண்டும்.   


வெட்டவெளியில் (மறைக்க வேண்டியவை வெளிப்படுமாறு) ஒரு மனிதர் குளித்துக் கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே மிம்பரின் மீது ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்து விட்டு, ''சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சகிப்புத்தன்மை மிக்கவன். (நாம் செய்யும் குறைகளை) மறைப்பவன், அவன் வெட்கத்தையும் மறைப்பதையும் விரும்புகிறான். உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: யஃலா பின்      உமய்யா (ர­லி) நூல்: நஸயீ (403)   


''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறைக்க வேண்டிய பகுதிகளில் எவற்றை மறைக்க வேண்டும்? எவற்றை நாங்கள் மறைக்காமல் விட்டு விடலாம்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ''உன்னுடைய மறை விடத்தை உனது மனைவி மற்றும் நீ அடிமையாக்கிய பெண்ணிடத்திலே தவிர மற்றவர்களிடத்தில் மறைத்துக் கொள்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ''ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருந்தாலுமா? (மறைக்க வேண்டும்)'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ''அதை எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் (மறைக்க) முடிந்தால் நீ மறைக்க வேண்டும்'' என்று கூறினார்கள். ''ஒரு மனிதர் தனியாக இருந்தால் (மறைக்க வேண்டுமா?)'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ''அவர் வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர்: முஆவியா பின்   ஹய்தா (ர­லி) நூல்: திர்மிதி (2693)  


வெட்கம் அவசியம் நிறைந்திருக்க வேண்டிய பெண்களில் பலர் இந்த நாணத்தைத் தொலைத்து விட்டுப் பெண்மையை இழந்து நிற்கிறார்கள். முறையான ஆடைகளை அணியாமல் ஆண்களை விடக் குறைவான ஆடையை அணியும் பெண்கள் வெட்கப்படுவதில்லை. தெருக்களில் உட்கார்ந்து அந்நிய ஆண்கள் வந்து போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் வெட்கத்தை இழந்து நிற்கிறார்கள்.   


வெட்கம் உள்ளவன் எதைச் செய்தால் நாகரீகமாக இருக்கும்? எதைச் செய்தால் அநாகரீகமாக இருக்கும்? என்று சிந்தித்துப் பார்த்து நல்லவற்றைச் செய்வான். தீமைகளை அவன் செய்வதற்கு வெட்கம் மாபெரும் தடையாகத் திகழ்கிறது.   


அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்தார். ரோம் நாட்டு மன்னரான ஹிர்கல் என்பவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அரபுக் கூட்டத்தைப் பார்த்து, ''உங்களில் முஹம்மதைப் பற்றி யார் நன்கு அறிந்தவர்?'' என்று கேட்டார். உடனே அன்று பெருமானாரின் எதிரியாகத் திகழ்ந்த அபூசுஃப்யான் அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் பற்றி தவறான தகவல்களைத் தர வேண்டும் என்பதற்காக முந்திக் கொண்டு, ''எனக்குத் தெரியும்'' என்று சொன்னார்.  


ஆனால் அவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டு பிடிக்க அவருக்குப் பின்னால் உள்ள மக்களைப் பார்த்து, ''நான் இவரிடத்தில் கேட்கக் கூடிய கேள்விகளுக்குப் பொய்யான பதில் கூறினால் என்னிடத்தில் தெரியப் படுத்திவிடுங்கள்'' என்று மன்னர் கூறினார்.
இப்போது பொய் கூறினால் நாம் சபையோர்களின் முன்னிலையில் அசிங்கப்பட்டு விடுவோம் என்ற வெட்கத்தின் காரணமாக அபூ சுஃப்யான் அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் பற்றிய உண்மைகளை சற்றும் மாற்றாமல் எடுத்துரைத்தார். இஸ்லாத்தைத் தழுவிய பின்பு இதைப் பற்றி அபூசுஃப்யான் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.   


''நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்­ விடுவார்கள் என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களைப் பற்றி நான் பொய்யுரைத்திருப்பேன்'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி)  நூல்: புகாரி (7)  


வெட்கம் மாத்திரம் தடுக்காவிட்டால் பெருமானாரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி இருப்பார். இறை மறுப்பாளராக இருப்பவரைக் கூட, வெட்கம் தீமை செய்ய விடாமல் தடுக்கும் என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.  அபூசுஃப்யான் (ர­லி) அவர்களிடம் இருந்த வெட்கமாவது இன்று நம்மிடத்தில் உள்ளதா? அல்லாஹ்விற்கு அஞ்சாவிட்டாலும் நம்முடைய மானத்திற்கு அஞ்சியாவது பிறரிடத்தில் வம்புக்குச் செல்லாமல் இருக்கிறோமா? பிறரைப் பற்றி வீண் பேச்சுக்களைப் பேசி நம் மானத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.   
கடன் நிறைய வாங்கியவர்கள் நாம் வாங்கிய திருப்பிக் கொடுக்கா விட்டால், கடன் கொடுத்தவன் நம்மைத் தெருவில் நின்று அவமானப்படுத்தி விடுவானே என்று வெட்கப்படாமல் பொறுப்பின்றி வீண் விரயங்களைச் செய்கிறார்கள். பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதை மறைக்காமல் நபி வழிக்கு மாற்றமாக ஒரு விழாவாக அதை சிலர் நடத்துகிறார்கள். இந்தச் செயலை செய்ய இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? இது போன்ற எண்ணற்ற தீய செயல்கள் நம்மிடம் காணப்படுகின்றன. வெட்கம் தீமையை தடுப்பதுடன் நல்லவற்றைச் செய்யவும் தூண்டுகிறது.   


தேர்தல் வந்து விட்டால் இன்றைக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின்பு அவர்களிடத்தில் உண்மையில் வெட்கம் இருக்குமானால் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முறையாக நிறைவேற்றுவார்கள். இந்த நன்மையை அவர்கள் செய்வதற்கு முக்கிய காரணம் நாணம் தான். வெட்கத்தை இழந்தவர்கள் தான் வாக்குறுதிகளை வீசிவிட்டு அதை நிறைவேற்ற மாட்டார்கள். எனவே தான் நபி (ஸல்) வெட்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறினார்கள்.

வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின்  ஹுஸைன் (ரலி­)  நூல்: புகாரி (6117)
  


வெட்கம் இல்லாதவன் இதை எல்லாம் கவனிக்காமல் தன் மனம் போன போக்கில் செல்வான். யாராவது மோசமான ஒரு செயலைச் செய்து விட்டு வந்தால் அவரைப் பார்த்து உனக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறோம்.   


வெட்கம் இல்லாதவன் தான் பிறர் நம்மை ஏளனமாகப் பார்க்க நேரிடும் என்பதை உணராமல் மோசமான கீழத்தரமான செயல்களை சாதரணமாக செய்து விடுகிறான். எனவே தான் வெட்கம் இல்லாதவனுக்கு வழிமுறையோ கட்டுப்பாடோ இருக்காது என்ற கருத்து தூதுத்துவத்தின் போதனையாக இருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களி­ருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதாகும். அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ர­லி) நூல்: புகாரி (3483)   


நல்லதைச் செய்து, தீமையை விட்டும் தவிர்ந்து கொள்வது அல்லாஹ்வை நம்பியவர்களின் பண்பு. ஏக இறைவனுக்கு இணை வைப்பவனோ அல்லது கடவுள் இல்லை என்று கூறுபவனோ நல்லவனாக இருக்க நினைத்தாலும் எப்படியோ அவர்கள் தீமைகளை அதிகமாகச் செய்து விடுகிறார்கள்.   


ஈமான் கொண்டவர்களிடத்தில் உள்ள அந்த மன உறுதி இவர்களிடம் இல்லை. எப்படி அல்லாஹ்வை ஏற்றவன் இந்தப் பண்பிற்கு உரித்தானவனாக இருக்கின்றானோ அதுபோல வெட்கம் உள்ளவனும் நல்லதைச் செய்து தீமையை விட்டு விலகுகிறான். இறை நம்பிக்கையாளர்களை தீமை செய்வதி­ருந்து ஈமான் தடுப்பதைப் போல் வெட்கமும் தடுக்கிறது.  பொதுவாக ஒருபொருள் வேறொரு பொருள் போல் இருந்தால் அப்பொருளுக்கு அதன் பெயரையே சூட்டி விடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.  


உதாரணமாக கடல் குதிரை என்றழைக்கப்படும் மீன், குதிரையைப் போல் இருப்பதால் அதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் வெட்கமும் ஈமான் ஆகும் என்று கூறினார்கள்.    


மேலும் இந்த உயரிய பண்பு எவரிடத்தில் இருந்தாலும் இல்லா விட்டாலும் இறை நம்பிக்கை கொண்டவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஒருவன் ஏற்றிருந்தாலும் அவனிடம் வெட்கம் இல்லாவிட்டால் அவ்விருவரும் கூறிய போதனைகள் அடிப்படையில் நிச்சயம் அவன் செயல்பட மாட்டான்.  


வெட்கம் இல்லாதவனை இந்த உலகமே ஏற்றுக் கொள்ளாத போது எப்படி இறைவன் அவனை ஏற்றுக்கொள்வான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை ஈமானில் ஒரு பகுதி என்று கூறினார்கள்.   


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)  நூல்: புகாரி (9)   


அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ''அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்   உமர் (ர­லி)  நூல்: புகாரி (24)  


வெட்கம் நம்மை நல்வழியில் செலுத்துவதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை மதிப்பதற்கும் காரணமாக விளங்குகிறது. அதிக வெட்கப்படுபவரை நாம் பார்க்கும் போது அவருக்கென்று நாம் ஒரு விதமான மரியாதை செலுத்துகிறோம். மற்றவர்களிடம் சாதாரணமாக நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்வதில்லை. மற்றவர்களிடம் பேசுவதைப் போல் அவரிடத்தில் பேசாமல் அவருடைய கூச்ச சுபாவத்திற்கு ஏற்றவாறு பேசுகிறோம். 


நபித்தோழர்களில் இச்சிறப்பை உஸ்மான் (ரலி­) அவர்கள் பெற்றிருந்தார்கள்.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தன்னுடைய தொடைகளையோ அல்லது கெண்டைக் கால்களையோ திறந்தவராகப் படுத்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி­) அவர்கள் (உள்ளே வர) அனுமதி வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்நிலையில் இருக்க அவருக்கு அனுமதி வழங்கினார்கள். பின்பு அவர்கள் (உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள்.பின்பு உமர் (ரலி­) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கோரிய போது நபி (ஸல்) அவர்கள் இந்த நிலையிலேயே அவருக்கு அனுமதி வழங்க (அவரும் உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்.  

உஸ்மான் (ர­லி) அவர்கள் அனுமதி கோரிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து உட்கார்ந்து தனது ஆடையைச் சரி செய்தார்கள். பின்பு அவர்கள் உள்ளே வந்து பேசினார்கள். அவர்கள் சென்ற பின்பு, நான், நபி (ஸல்) அவர்களிடம் ''அபூபக்கர் (ர­லி) அவர்கள் நுழையும் போது அவர்களுக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். உமர் (ர­லி) அவர்கள் நுழையும் போதும் அவருக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். பின்பு உஸ்மான் (ரலி­) அவர்கள் வந்தபோது தாங்கள் எழுந்து அமர்ந்து ஆடையைச் சரி செய்தீர்கள். (இதற்கு என்ன காரணம்)'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''வானவர்கள் யாரைப் பார்த்து வெட்கப்படுகிறார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா?'' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)  நூல்: முஸ்­லிம் (4414)  


உஸ்மான் (ர­லி) அவர்கள், அபூபக்கர் உமர் (ரலி­) ஆகியோரை விட அதிக நாணம் உள்ளவராக இருந்தார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவர் வரும் போது சாதாரணமாக நடந்து கொண்டதைப் போல் இவரிடம் நடந்து கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெட்கமுள்ளவருக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதைக் காட்டுகிறது.  


அதே நேரத்தில் வெட்கப்படுவது கல்வி போன்ற நற்காரியங்களைச் செய்ய விடாமல் நம்மைத் தடுத்து விடக் கூடாது. தீமையை வெட்கம் தடுத்து, நன்மை செய்யத் தூண்டுவதினால் இது பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது என்பதை முன்னர் பார்த்தோம். தீமையைத் தடுக்காமல் நன்மை செய்வதைத் தடுத்தால் இந்த வெட்கத்தால் எந்தப் பயனும் இல்லை. மேலும் இது         தீய குணமாகவும் இறைவனிடம் கருதப்படும்.  


இரயில் போன்ற வாகனங்களில் நாம் பயணம் செய்யும் போது தொழுகை நேரம் வந்த உடன் தொழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நம்மைச் சுற்றியும் மாற்று மதத்தவர்கள் அமர்ந்திருப்பார்கள். இப்போது இவர்கள் முன்னிலையில் தொழுவதற்கு நமக்குக் கூச்சம் ஏற்படுவதால் பலர் தொழுகையை விட்டு விடுகிறார்கள்.   


படைத்த இறைவனின் நினைவு இல்லாமல் வெறுமனே நேரத்தைக் கழிக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். எல்லோரும் பார்க்க, டீ குடிப்பதற்கும் நின்று கொண்டு உண்பதற்கும் வெட்கப்படாத நாம், ஏன் தொழுவதற்கு வெட்கப்பட வேண்டும்? நல்ல விஷயங்களில் வெட்கம் கூடாது என்று பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.  


நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­ல் மக்களுடன் அமர்ந்து கொண்டிருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்று விட்டார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவர் திரும்பிச் சென்று விட்டார். நபி (ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்ததும் கூறினார்கள். ''இம்மூன்று பேரைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டுக் கொண்டு (கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்று விட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தி விட்டான். அறிவிப்பவர்: அபூ வாக்கிதில்     லைஸீ (ர­லி) நூல்: புகாரி 66  


சபைக்கு வந்த இருவரில் ஒருவர் ஆர்வப்பட்டு முன்னால் வந்து அமர்ந்தார். ஆனால் மற்றொருவர் முன்னால் வர வெட்கப்பட்டுக் கொண்டு இறுதியில் அமர்ந்து கொண்டார். முன்னால் சென்று அமர்ந்தவருக்குக் கிடைத்த சிறப்பை பின்னால் அமர்ந்தவருக்குக் கிடைக்க விடாமல் செய்தது வெட்கம் தான். நபித்தோழியர்கள் மாதவிடாய் போன்ற சட்டங்களை அறிந்து கொள்வதற்காக, கூச்சப்படாமல் நபி (ஸல்) அவர்களிடத்தில் கேள்விகளை கேட்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)  நூல்: முஸ்­லிம் (500)
 

உம்முசுலைம் என்ற பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்க­தமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டார். அதற்கு ''(ஆம். அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா (ர­) அவர்கள் தமது முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, ''பெண்களுக்கும் ஸ்க­தம் ஏற்படுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நன்றாகக் கேட்டாய். ஆம். அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில நேரங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி­) நூல்: புகாரி (130) 


சிறு குழந்தைகள் தானே என்று பெற்றோர்கள் நினைத்து அவர்களுக்கு ஆடைகளை அணிவிக்காமல் வெறும் மேனியில் அலைய விட்டு விடுகிறார்கள். சிலருடைய குழந்தைகள் ஐந்து வயதை அடைந்தும் கூட குளிக்கும் போது ஆடையில்லாமல் குளிப்பார்கள். சாதாரணமாக இந்நிலையிலேயே தெருவை வலம் வருவார்கள்.  


நம் குழந்தைகளுக்கு இது போன்று தவறான வழிகாட்டல்களைக் காட்டாமல் சிறு வயதி­ருந்தே வெட்க உணர்வு மிக்கவர்களாக அவர்களை வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் மான மரியாதையுடன் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

பணிவு

பணிவு

மனிதனிடம் பணமோ, பதவியோ, கல்வியோ கூடுதலாக வரும் போது அவர்களிடம் கர்வமும் ஆணவமும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதனால் அவர்களிடம் மக்கள் நெருங்குவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வுலகத்தின் இறுதி நாள் வரை இறைத் தூதராக இருக்கும் தகுதியை இறைவன் வழங்கியுள்ளான். மேலும் மனிதனால் செய்ய முடியாத பல அற்புதங்களையும் இறைவனின் உதவியால் செய்து காட்டியுள்ளார்கள். சிறந்த கல்வியாற்றலையும் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் துளியும் கர்வமோ ஆணவமோ இருந்ததில்லை. மேலும் அதை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் செயலையும் அமைத்துக் கொள்ளவில்லை.

அன்றைய அரபு நாட்டில் மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்பட்டவர்கள் அடிமைகள். அவர்களை ஒரு மனிதானாகக் கூட மதிப்பதும் இல்லை. அவர்களிடம் அன்பு காட்டுவதும் இல்லை. சாதாரணமான மனிதர்களே மதிக்காத அடிமைகள் கூட நபிகளாரிடம் கைகோர்த்துச் செல்ல முடியும் என்ற அளவிற்கு பணிவு நிறைந்தவர்களாக நபிகளார் திகழ்ந்தார்கள்.

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எழ்மையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (6072)

தன்னிடம் பேசுபவர்களிடம் பெரிய தலைவர்களைப் போன்று, மன்னர்களைப் போன்று கர்வத்தோடு பேசியதில்லை. சாதாரண மனிதரைப் போன்றே அவர்களிடம் பேசியுள்ளார்கள். மேலும் தன்னை மன்னரைப் போன்று நினைத்து பயப்பட வேண்டாமெனவும் கூறியுள்ளார்கள். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)  நூல்: இப்னுமாஜா (3303)

பெரிய மனிதர்களாகத் திகழ்பவர்கள் அவர்களுக்குப் பெரிய அளவில் விருந்து கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெரிய அளவில் விழாக்களும் ஆடம்பர விளம்பரங்களும் இருந்தால் மட்டுமே கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு மத்தியில், பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அன்பாகக் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்களாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

''ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பüப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பüப்பாகத் தரப்பட்டாலும் சரி! நான் அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி (2568)

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் அன்புடன் பழகுபவர்களாகவும் அச்சிறுவர்களுக்கு இவர்களே முந்திக் கொண்டு ஸலாம் கூறுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். தம்மை விடச் சிறியவர்களுக்கு ஸலாம் கூறுவது தமக்கு மரியாதைக் குறைவு என்று எண்ணுபவர்கள் நபிகளாரின் நடைமுறையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ''நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ நூல்: புகாரி (6247)

மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி அவர்களை மகிழ்விப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் மக்கüலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு 'அபூஉமைர்' என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான் என்றே எண்ணுகிறúன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), ''அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறது?'' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டி, சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெüக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (6203)

தம்மிடம் வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள். அவர்களிடம் தாம் மிகப் பெரிய தலைவர் என்று ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ர­) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ''இதை ஏன் இப்படிச் செய்தாய்?'' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ''ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?'' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2768)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன்'' என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.

நான் புறப்பட்டுச் சென்ற போது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ''அருமை அனúஸ! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?'' என்று கேட்டார்கள். நான், ''ஆம்! செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்­லிம் (4626)

தன்னிடம் கோபப்பட்டவர்களிடம் கூட கோபத்துடன் திட்டாமல், பணிவுடன் எந்தப் பதிலும் சொல்லாமல் தன் மவுனத்தாலே அவர்களைச் சிந்திக்கச் செய்தார்கள்.

ஓர் அடக்கத்தலம் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!'' என்றார்கள். அதற்கு அப்பெண், ''என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை'' என்று லி நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் லி கூறினாள். அவர்கள் நபிகளார் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். லி அங்கே நபியவர்களுக்குக் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை லி ''நான் உங்களை (யாரென) அறியவில்லை'' என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ''பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வது தான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (1283)

பெரிய தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் ஆடைகள், மற்றும் நடை பாவனைகளிலேயே தான் பெரிய தலைவர் என்று காட்டி விடுவார்கள். தான் வரும் போது முன்னால் பத்து பேர், பின்னால் பத்து பேர், குடை பிடிப்பதற்கு சில பேர் என்று ஒரு கலக்கலாகத் தான் வருவார்கள். இவற்றைக் கவனிக்கும் போதே வருபவர்களில் யார் தலைவர் என்று நாம் அடையாளம் கண்டு விடலாம். சிலருக்கு அவரது ஆளுர கட்அவுட்டைப் பார்த்து அவரை அடையாளம் தெரிந்து விடலாம். இவை எல்லாம் பெரிய தலைவர்களுக்கு மட்டும் இல்லை. குட்டித் தலைவர்களுக்குக் கூட இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் அழியும் வரை இறுதித் தூதராக உள்ள நபிகளாரைப் பார்க்கும் வரும் அந்நியர் எவரும் அவர்களின் ஆடை, நடை, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மற்றவர்களைப் போன்று எளிமையாகவே காட்சியளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச­ல் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளியில் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அதை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் ''உங்களில் முஹம்மது யார்?'' என்று கேட்டார். லி அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் ''இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம்'' என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ''அப்துல் முத்த­பின் புதல்வரே!'' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் ''என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ''நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உம் மனதில் பட்டதைக் கேளும்!'' என்றார்கள். 

உடனே அம்மனிதர் ''உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள். அடுத்து அவர் ''அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பக­லுமாக (தினமும்) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வர வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ''ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள். அவர் ''அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள். அவர், ''அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வந்தர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள்.

அம்மனிதர் ''நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்'' என்று கூறிவிட்டு ''நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா'' என்றும் கூறினார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (63)

நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)'' என்றேன். அவர்கள் ''ஐந்து நாட்கள்!'' என்றார்கள். ''அல்லாஹ்வின் தூதரே...!'' என்றேன். ''ஒன்பது நாட்கள்!'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். ''பதினொரு நாட்கள்!'' என்றார்கள். பிறகு, ''தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை. அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!'' என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி (1980)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்கüன் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கüன் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கüன் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்றார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (4913)

வீட்டு வேலைகளைச் செய்வதைக் கூட கவுரவக் குறைச்சல் என்று சிலர் எண்ணுவதுண்டு. வீட்டில் கால் மேல் கால் போட்டு, வேலை செய்யாமல் இருப்பதே மரியாதை என்றும், மனைவி செய்யும் வேலைகளில் உதவி செய்வது மரியாதைக் குறைவு என்றும் நினைப்பவர்கள் உள்ளனர். இவர்கள் அகில உலகின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் பணிவையும் அடக்கமான செயல்களையும் பார்க்கட்டும்.

''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று நான் ஆயிஷா (ரலி) அவர்கüடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலüத்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ நூல்: புகாரி (676)