நோயாளியை சந்திப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
--------------------
முதலில் நோயாளியை சந்திப்பது நபிவழி என்பதையும்,அதற்கான நன்மை அல்லாஹ் தருவான் என்பதையும் நிய்யத்தாக கொள்ளவேண்டும்..
2.நோயுற்றிருக்கிறார் என கேள்விப்பட்டவுடனேயே நோயாளியைச் சந்திக்கவேண்டும்.
3,நோயாளியை அவருக்கு சிரமமில்லாத நேரத்தில் சந்திக்க வேண்டும்.
4, நோயாளியின் தலைமாட்டு பகுதியில் அவரின் முகத்தை பார்த்த வண்ணம் அமர வேண்டும். பின்,
أسأل الله العظيم رب العرش العظيم ان يشفيك
அஸ்அலுல்லாஹ ல்அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அய் யஷ்பீக
மகத்தான அர்ஷின் ரப்பான மகத்தான அல்லாஹ்விடம் உங்களை குணப்படுத்த கேட்கிறேன்
என்று ஏழு முறை சொல்லவேண்டும்.
5 .நோயுற்றவருக்கு அல்லாஹ் விடமிருந்து பாவமன்னிப்பு,இன்னும் பல நன்மைகள்கிடைக்கும் என்பதை அவருக்கு நற்செய்தியாக கூறுவதுடன்,அல்லாஹ் வின் மீது நல்லெண்ணம் வைக்கவேண்டும் என்றும் அவனிடம் குணப்படுத்த துஆ செய்யவேண்டுமென அவருக்கு ஆறுதலாக பேசவேண்டும்.
6, நீண்ட நேரம் அமர்ந்து நோயாளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சிரமம் தாராமல் சீக்கிரமாக சந்திப்பை நிறைவு செய்யவேண்டும்.
-------من كتاب أن الدين عند الله الإسلام / محمد يسري إبراهيم
தமிழில்: கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்த்
No comments:
Post a Comment