பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 14, 2014

உடலில் வலி ஏற்படும்போது



உடலில் வலி ஏற்படும்போது
எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த பகுதியின் மீது உங்கள் கையை வைத்து பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை சொல்லிய பின் கீழ் கண்ட துஆவை நம்பிக்கையுடன் அல்லாஹ் விடம் ஏழு முறை கேட்க வேண்டும்
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்