பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 1, 2019

அகீகாவின் சட்டங்கள

*🧘‍♂🧘‍♀மீள் பதிவு🧘‍♂🧘‍♀*

➖➖➖➖➖➖➖➖➖➖
   🐐 *அகீகாவின் சட்டங்கள்*🐑
➖➖➖➖➖➖➖➖➖➖

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் 📚📚📚ஸஹியான 📚📚📚ஹதீஸ் ஆதாரங்கள்📚📚📚*

*🧘‍♂🧘‍♀ஆண் குழந்தைக்கு இரு🐐🐐 ஆடுகள், பெண்குழந்தைக்கு🐐 ஒரு ஆடு.🧘‍♀🧘‍♂*

*“✍✍✍நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”✍✍✍*

*நூல்: அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183*

➖➖➖➖➖➖➖➖➖➖

🐐🐑🔪  *அகீகா கொடுப்பவர்*
   *இறைச்சியை உண்ணலாமா❓🐐🐑*
➖➖➖➖➖➖➖➖➖➖

*✍✍✍அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை.* *ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.✍✍✍*

*📕📕📕ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.📕📕📕*

*✍✍✍அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!✍✍✍*

*அல்குர்ஆன் (22 : 28)*

➖➖➖➖➖➖➖➖➖➖
*🐑🐑அகீகா பற்றி கூடுதல் செய்தி🐐🐐*
➖➖➖➖➖➖➖➖➖➖

*📘📘📘அகீகா என்றால் குழந்தைக்காக ஆட்டை அறுத்து குர்பான் கொடுப்பதாகும்.📘📘📘*

*✍✍✍“குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது.குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்”.✍✍✍📚 திர்மிதி 1442.📚*

*📓📓📓குழந்தைப் பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும்,பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும். ஏழாம் நாள் அகீகா கொடுக்க வசதியில்லா விட்டால், பிறகு கொடுக்க தேவை இல்லை.📓📓📓*

*✍✍✍புதிநான்காவது நாள் அல்லது இருபத்தி ஏழாம் நாள், அல்லது எப்போது வசதி வருகிறதோ அப்போது கொடுக்கலாம் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் இல்லாததாகும். அப்படி கொடுப்பதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பதை விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.✍✍✍*

*📗📗📗எனவே ஏழாம் நாள் வசதியிருந்தால் அகீகா கொடுப்பது, ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கு வசதி இல்லை என்றால் அதன் பிறகு கொடுக்க தேவை இல்லை📗📗📗*

*✍✍✍அகீகாவிற்கு ஆடு தான் கொடுக்க வேண்டும். சிலர் மாடும் கொடுக்கலாம் என்று ஹதீஸிற்கு மாற்றமாக சொல்கிறார்கள், அகீகாவிற்காக நபியவர்கள் மாடு கொடுத்ததாக எந்த ஹதீஸீம் கிடையாது. நபியவர்களே அகீகா கொடுக்கும் படி வழி காட்டினார்கள், அதன் படி ஆட்டை அறுத்து அகீகா கொடுப்பதே நபி வழியாகும். மாட்டையோ, ஒட்டகத்தையோ, கோழியையோ, அல்லது வேறு எந்த* *பிராணியையும் அகீகா கொடுப்பது நபியவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்✍✍✍.*

*📙📙📙இன்னும் சிலர் இரண்டு, மூன்று பிள்ளைகளுக்காக ஒன்றாக சேர்த்து மாட்டை கொடுக்கலாம் என்று கூறி அப்படி செய்கிறார்கள் இதுவும் நபிவழியில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.📙📙📙*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

📚📖📚📖📚📖📚📖📚📖

No comments:

Post a Comment