பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 22, 2019

மருத்துவம் செய்யுங்கள்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

*☄ஓதிப்பார்த்தலின்*
                       *ஒழுங்குகள்

            *🏖 இறுதி பாகம் 🏖*

*☄ மருத்துவம் செய்யுங்கள் ☄*

*🏮🍂நமது உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் இறைநாட்டத்தால் சில வேளை நமக்கு நோய்கள் ஏற்படத்தான் செய்யும்.* அப்போது குறித்த நோய்க்குரிய முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

*🏮🍂நோய்க்கான காரணிகளைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதுடன் நோய் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை செய்வது அவசியம் எனவும் அது வலியுறுத்துகின்றது.*

*🏮🍂இதை அறியாத சில மூடர்கள் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய மாட்டேன் என்று கூறி முறையான மருத்துவத்தைப் புறக்கணித்து மூடத்தனமான நடக்கின்றனர்.*

*🏮🍂இந்தத் தவறான கொள்கை கொண்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் முதலில் அவர்கள் நாடுவது தாயத்து தகடு போன்ற இணைவைப்புக் கலாச்சாரம் ஆகியவற்றைத்தான்.*

*🏮🍂அல்ஹம்து சூராவை தண்ணீரில் எழுதி அதைக் குடிப்பது போன்ற குர்ஆன் கூறாத மூட நம்பிக்கை சார்ந்த செயல்கள் சமுதாய மக்களிடையே வேரூன்றவும் இந்தத் தவறான போக்குதான் காரணம்.*

*🏮🍂இதுபோன்ற அறியா மக்களை வைத்து காசு பார்க்கும் கும்பலும் நம்மிடையே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.*

*🏮🍂இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். மனிதனுக்கு நோய்கள் ஏற்படும்போது மருத்துவம் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதை பின்வரும் செய்திகளில் அறியலாம்.*

3857 – حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِىُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ *عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَأَصْحَابُهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ فَجَاءَ الأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ « تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ ».*

_*🍃அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
          *உஸாமாபின்ஷரீக் (ரலி),*

        *📚நூல் : திர்மிதீ (1961),*
               *📚அபூதாவூத் (3357)*

*🏮🍂எல்லா நோய்க்கும் அல்லாஹ் பூமியில் நிவாரணத்தை அருளியிருக்கிறான் என்றும் அதை நாம் தேடிப் பெற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.*

5678- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ ، قَالَ : حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.*_

*🎙அறிவிப்பவர் :*
             *அபூஹுரைரா (ரலி),*

        *📚 நூல் : புகாரி (5678) 📚*

5871 – حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَأَبُو الطَّاهِرِ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى عَمْرٌو – وَهُوَ ابْنُ الْحَارِثِ – عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ *عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ ».*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.*_

*🎙அறி: ஜாபிர் (ரலி)*

      *📚நூல் : முஸ்லிம் 4432📚*

*🏮🍂நோய்கள் ஏற்படும்போது அதற்காக மார்க்கம் கற்றுத்தந்தபடி ஓதிப்பார்த்தல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை செய்வதோடு மருத்துவம் செய்வது அவசியம் என்பதனை இலகுவாக அறியலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼...

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment