பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, September 14, 2019

குர்ஆனிய துஆ - பிரார்த்தனைகள்!

✏ குர்ஆனிய துஆ - பிரார்த்தனைகள்!

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியவில்லை என்றால், நிச்சயமாக நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (எனவே எங்களை மன்னித்து அருள்புரிவாயாக!)
[அல்குர்ஆன் 07 : 23]

எங்கள் இறைவனே!

எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்று, பாவமன்னிப்பு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பாவமன்னிப்பு வழங்குபவன். நிகரற்ற அன்புடையோன். [அல்குர்ஆன் 02 : 127, 128]

▪ எங்கள் இறைவனே!

எங்களையும் எங்கள் தாய் தந்தையரையும் நம்பிக்கையுடன் இறையில்லத்தில் நுழைந்தோரையும் மேலும் இறைநம்பிக்கை கொண்ட ஆண் பெண் அனைவரையும் மன்னிப்பாயாக! [அல்குர்ஆன் 71 : 28]

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ, அதை உன்னிடம் நாங்கள் கேட்பதிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். [அதிலிருந்து நீ எங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக!]  [அல்குர்ஆன் 11 : 47]

எங்கள் இறைவனே!

எங்களுக்கு ஸாலிஹான நல்லோரிலிருந்து சந்ததியை நீ வழங்குவாயாக! [அல்குர்ஆன் 37 : 100]

▪ எங்கள் இறைவனே!

எங்களிடமிருந்து எங்களது நல்லறங்களை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே அனைத்தையும் செவியேற்பவன். நன்கறிந்தவன்.

▪ எங்கள் இறைவனே! எங்களை உங்களுக்கு அடிபணிந்த முஸ்லிம்களாக ஆக்கி அருள் புரிவாயாக! எங்களது சந்திகளிலிருந்தும் உனக்கு அடிபணியும் முஸ்லிமான சமூகத்தை உருவாக்குவாயாக!

▪ எங்கள் இறைவனே! உனக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய வணக்க வழிபாட்டு முறைகளை எங்களுக்குத் தெளிவுற காட்டித் தருவாயாக!

▪ எங்கள் இறைவனே! எங்களையும் எங்களது சந்ததியினரையும் தொழுகையை முறையாக நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி அருள்புரிவாயாக! எங்கள் இறைவனே! எங்களது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக! [அல்குர்ஆன் 14 : 40]

▪ எங்கள் இறைவனே!

கேள்வி கணக்கு நடைபெறும் அந்த மறுமை நாளில், எங்களையும் எங்களது தாய் தந்தை யரையும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரை யும் மன்னிப்பாயாக! [அல்குர்ஆன் 14 : 41]

▪ எங்கள் இறைவனே!

நீ எங்களுக்கு (சத்தியத்தை விளங்கும்) ஞானத்தை வழங்குவாயாக! மேலும், எங்களை நல்லோருடன் சேர்த்து வைப்பாயாக! வருங்கால சந்ததியினரிடம் எங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! மேலும், நற்பேறுகள் நிரம்பிய சுவனவாசிகளில்  எங்களை நீ ஆக்குவாயாக! [அல்குர்ஆன் 26 : 83 - 85]

▪ எங்கள் இறைவனே!

நாங்கள் முற்றிலும் உன்னையே சார்ந்திருக்கி றோம். உன்னளவிலேயே சரணடைகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் மீண்டும் மீள வேண்டியுள்ளது.

▪ எங்கள் இறைவனே!

உன்னை மறுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கு எங்களை சோதனைப் பொருளாக ஆக்கிவிடாதே!
உனது அருளால் உன்னை நிராகரிக்கும் சமுதாயத்திடமிருந்து எங்களைக் காப்பாற்று வாயாக! - 10 : 86]

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் நீ புரிந்துள்ள உனது அருட்கொடைகளுக்கு நாங்கள் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நாங்கள் நன்மை செய்யவும் எங்களுக்கு நீ அருள்புரிவாயாக! மேலும் உனதருளால் எங்களை உனது நல்லடியார்  கூட்டத்தில் சேர்ப்பாயாக! [அல்குர்ஆன் 27 : 19]

▪ எங்கள் இறைவனே!

உன்னிடமிருந்து (எல்லா வகையிலும்) பரிசுத்த மான சந்ததியை எங்களுக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீ (எங்கள்) பிரார்த்தனைகளைச் செவியேற்பவன். [அல்குர்ஆன் 03 : 38]

▪ எங்கள் இறைவனே!

நீ எங்களை சந்ததி இல்லாமல் தனித்து நிர்க்கதி யற்றவர்களாக விட்டுவிடாதே! நீயே வாரிசுதாரர் களில் மிகச்சிறந்தவன். [அல்குர்ஆன் 21 : 89]

▪ (எங்கள் இறைவனே!)

உன்னைத்தவிர வணக்கத்துக்குரிய வேறு இறைவன் இல்லை. நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் ஒருவராக ஆகிவிட்டோம். (எனவே எங்களை நீ மன்னித்து அருள்புரிவாயாக.) [அல்குர்ஆன் 21 : 87]

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்காக எங்களது நெஞ்சத்தை உறுதிப் படுத்தி அதை நீ விசாலமாக்கித் தருவாயாக!
எங்களது செயல்களை எங்களுக்கு நீ எளிதாக்கித் தருவாயாக! எங்கள் வார்த்தைகளை மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில், எங்களது நாவு களில் உள்ள முடிச்சுகளை நீ அவிழ்த்து விடு வாயாக! எங்கள் குடும்பத்திலிருந்து (அழைப்புப் பணிக்கு) உதவிசெய்ய ஓர் உதவியாளரையும் நீ ஏற்படுத்தித் தருவாயாக! [அல்குர்ஆன் 20 : 25 - 29]

▪ எங்கள் இறைவனே!

நீ எங்களுக்கு வழங்கிய இறைவேதத்தை நாங்கள் நம்புகிறோம். உனது இறைத்தூதரையும் நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே சத்தியத்துக்கு சான்று சொல்வோரின் பட்டியலில் எங்களை நீ எழுது வாயாக! [அல்குர்ஆன் 03 : 53]

▪ எங்கள் இறைவனே!

எங்கள் பாவங்களையும், எங்களது செயல்பாடு களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னித்து அருள்புரிவாயாக! எங்கள் பாதங்களை  (சத்தி யத்தின் மீது) உறுதியாக்குவாயாக! (உன்னை) நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவிபுரிவாயாக! [அல்குர்ஆன் 03 :147]

▪ எங்கள் இறைவனே!

உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை  வழங்கு வாயாக! மேலும், எங்களது செயல்பாடுகளில் நேரான வழியை எங்களுக்கு ஏதுவாக்கித் தருவாயாக! [அல்குர்ஆன் 18 : 10]

▪ எங்கள் இறைவனே!

அறிவு - ஞானத்தை எங்களுக்கு அதிகப்படுத்தித் தருவாயாக! [அல்குர்ஆன் 20 : 114]

▪ எங்கள் இறைவனே!

ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து நாங்கள் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். அவை எங்களை அண்டுவதிலிருந்தும் உன்னிடம் நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம். [அல்குர்ஆன் 23 : 97, 98]

▪ எங்கள் இறைவனே!

நாங்கள் மறந்தோ அல்லது தவறுதலாகவோ செய்துவிட்ட குற்றங்களுக்காக எங்களைப் பிடித்து விடாதே - தண்டித்து விடாதே! எங்களுக்கு முன் சென்ற சமுதாயங்கள் மீது சுமத்தியதைப் போன்று தாங்க முடியாத கடமைகளை எங்கள்மீது சுமத்திவிடாதே!

எங்கள் இறைவனே!

எங்களுக்கு சக்தியில்லாதவற்றை எங்களைச் சுமக்கச் செய்துவிடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக!
எங்களுக்கு அருள்புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. எனவே உன்னை நிராகரித்த சமுதாயத்துக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக! [அல்குர்ஆன் 02 : 286]

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்கு நேர்வழி காட்டிய பிறகு எங்கள் இதயங்களை அதிலிருந்து சருகிவிடுமாறு நீ செய்துவிடாதே! மேலும், (அவ்வாறு சருகி விடாத அளவில்) உனது புறத்திலிருந்து எங்களுக்கு அருள்புரிவாயாக! எங்கள் இறைவனே! நாங்கள் உன்னிடமே மீளவேண்டியுள்ளது! [அல்குர்ஆன் 03 : 08]

▪ எங்கள் இறைவனே!

இந்தப் பேரண்டத்தை நீ வீணாகப் படைக்க வில்லை. நீ மிகத் தூய்மையானவன். நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!

▪ எங்கள் இறைவனே!

நீ யாரை நரக நெருப்பில் புகச் செய்கின்றாயோ, அவரை உறுதியாக நீ இழிவாக்கிவிட்டாய். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

▪ எங்கள் இறைவனே!

உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உண்மையான) நம்பிக்கையின் பக்கம் அழைப்புவிடுத்த (உனது) அழைப்பாளரின் அழைப்பை நாங்கள் கேட்டு, உறுதியாக அதை நம்பினோம்.

▪ எங்கள் இறைவனே!

எங்களுக்கு எங்களது பாவங்களை மன்னிப்பாயாக! எங்களிலிருந்து எங்களது  தீமைகளை அகற்றிவிடுவாயாக! மேலும், எங்களை நல்லோருடன் மரணிக்கச்செய்வாயாக!

▪ எங்கள் இறைவனே!

உனது தூதர்கள் மூலம் எங்களுக்கு வழங்குவதாக நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள் புரிவாயாக! நாளை மறுமையில் எங்களை இழிவு படுத்தாமல் இருப்பாயாக! உறுதியாக நீ வாக்கு மீற மாட்டாய்!

▪ எங்கள் இறைவனே!

உறுதியாக நரகவேதனை நிரந்தரமானது. அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிக மோசமான இடம். எனவே எங்களை விட்டும் நரகத்தின் வேதனை யைத் திருப்பிவிடுவாயாக! [அல்குர்ஆன் 25 : 65 - 66]

▪ எங்கள் இறைவனே!

எங்கள் மனைவியர் மற்றும் சந்ததியினரிடமிருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை வழங்குவாயாக!
மேலும் இறையச்சமுடையோருக்கு எங்களை வழிகாட்டியாக - முன்னோடியாக ஆக்குவாயாக! [அல்குர்ஆன் 25 : 74]

▪ எங்கள் இறைவனே!

எங்கள் மீதும் எங்கள் பெற்றோர் மீதும் புரிந்த உனது அருட்கொடைக்காக நன்றி செலுத்தவும் உனது திருப்தியை அடையக்கூடிய நல்ல செயல்களைச் செய்யவும் எங்களுக்கு அருள் புரிவாயாக!

இதில் எங்களுக்கு உதவிபுரிய, எங்களது சந்ததியையும் நல்லது செய்வோராக சீர்படுத்து வாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்புகிறோம்; உனக்கு முற்றிலும் அடிபணிந்த முஸ்லிம்களில் உள்ளோராக இருக்கிறோம். [அல்குர்ஆன் 46 : 15]

▪ எங்கள் இறைவனே!

எங்களையும் இறைநம்பிக்கையில் எங்களை முந்திய எங்களது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! மேலும், பிற இறைநம்பிக்கை யாளர்களைக் குறித்து எங்களது இதயங்களில் விரோதம் - குரோதத்தை ஏற்படுத்திவிடாதே!
எங்கள் இறைவனே! உறுதியாக நீ மிக்க இரக்க முள்ளவன்; கிருபை உள்ளவன். [அல்குர்ஆன் 59 : 10]

▪ எங்கள் இறைவனே!

எங்களது (ஈமானிய) ஒளியை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் வழங்கு வாயாக! நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றல் பெற்றவன். [அல்குர்ஆன் 66 : 08]

▪ எங்கள் இறைவனே!

நாங்கள் (உனது இந்த) வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டோம். எனவே, இந்த வேதம் உண்மை யானது என்று சான்று கூறுவோரது பட்டியலில்  எங்களையும் நீ பதிவுசெய்வாயாக! [அல்குர்ஆன் 05 : 83]

▪ எங்கள் இறைவனே!

அநியாயம் செய்கிற சமூகத்தாருடன் எங்களை நீ சேர்த்துவிடாதே! [அல்குர்ஆன் 07 : 47]

▪ எங்கள் இறைவனே!

அநியாயம் செய்யும் சமூகத்திடமிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! [அல்குர்ஆன் 28 : 43]

▪ எங்கள் இறைவனே!

குழப்பம் செய்யும் சமூகத்துக்கு எதிராக எங்க ளுக்கு நீ உதவிசெய்வாயாக! [அல்குர்ஆன் 29 : 30]

No comments:

Post a Comment