பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

சூனியத்திற்கு - 2

சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part -2)

மறுப்பாளர்களிடம் அவர்களுடைய கடவுள்களுக்கு ஆற்றல் இருக்கிறதா என்று இறைத்தூதர்கள் பலரும் கேட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கேள்வியை அறிவுபூர்வமான கேள்வியாக பார்க்கிறோம். அதே கேள்வியை நாமும் மறுப்பாளர்களிடம் கேட்க முடியுமா என்பதைப் பார்ப்போம்.

நாம் அல்லாஹ்வை நம்புகிறோம். அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்தவாறு மார்க்க கடைமைகளை நிறைவேற்றுகிறோம்.

அந்த ஏக இறைவனை மட்டும் வணங்குமாறு மக்களிடம் நாம் பிரச்சாரமும் செய்கிறோம். அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைகளைக் கொண்டே அத்தகைய பிரச்சாரத்தை செய்கிறோம்.

அல்லாஹ்வின் வல்லமையை அறிந்திருக்கிறோம். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை நம்புகிறோம். வானங்களையும் பூமியையும் படைப்பினங்களையும் படைத்துப் பரிபாலிக்கிறான் என்பதை உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையை காரண காரியங்களோடு பிறருக்கு நம்மால் விளக்கவும் முடியும்.

ஆனால், அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபி! என்று இனைவைப்பாளர்கள் கேட்டால்,  நாம் அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களிடம் எப்படி நிரூபித்துக் காட்ட முடியும்?

இனைவைப்பாளர்களின் கடவுளின் ஆற்றலை அவர்களால் நிரூபித்துக்காட்ட முடியாது என்பதைப்போலவே, அல்லாஹ்வின் ஆற்றலை நாமும் நிரூபித்துக்காட்டிவிட முடியாது.

** அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பினங்களையும் படைத்துப் பரிபாலிக்கிறான் என்பது நம்முடைய உறுதியான நம்பிக்கை.

** இவற்றை தங்களுடைய கடவுள்களும் செய்கின்றன என்பது இனைவைப்பாளர்களின் நம்பிக்கை.

** அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதன் மூலம் நமக்குத் தேவையானதை அடைந்து கொள்வதாக நாம் நம்புகிறோம்.

** தங்களுடைய கடவுள்களிடம் பிரார்த்தனை செய்வதன் மூலம் தங்களுக்குத் தேவையானதை அடைந்து கொள்வதாக இனைவைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

** ஒரு நிகழ்வு நடக்கும்போது அது அல்லாஹ்வின் நாட்டப்படி நிகழ்வதாக நாம் கூறுவோம்.

** ஒரு நிகழ்வு நடக்கும்போது அது தங்களுடைய கடவுள்களின் நாட்டப்படி நிகழ்வதாக இனைவைப்பாளர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் ஆற்றலால் நிகழ்வதாக நாம் உரிமைகோரும் எந்த ஒன்றையும், தங்கள் கடவுள்களின் ஆற்றலால் நிகழ்வதாக இனைவைப்பாளர்களும் உரிமைகோருவார்கள்.

இனைவைப்பாளர்களால், தங்களுடைய கடவுள்களுக்கு உரியது என்று உரிமை கோர முடியாத ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது "இறைத்தூதர்களால் நிகழ்த்தப்பட்ட அல்லாஹ்வின் அற்புதம்" மட்டுமே.

வழிகேட்டில் இருக்கும் சமுதாயங்களை திருத்துவதற்காக அந்தந்த சமுதாயத்தில் இருந்தே மனிதர்களை தூதர்களாக அல்லாஹ் ஆக்குவான். அந்த தூதர்கள் அந்த சமுதாயத்தின் இனைவைப்புக்களை அந்த மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
அவர்களுடைய கடவுள்கள் ஒன்றும் செய்ய இயலாதவை என்பதை அந்த மக்களுக்கு தூதர்கள் உணர்த்துவார்கள்.

அந்த உண்மையை உணர்ந்துகொண்டு, எங்களது கடவுள்களை ஆற்றலற்றவை என்றா கூறுகிறீர்கள்! அப்படியென்றால் நீங்கள் கூறும் அல்லாஹ்வின் ஆற்றலை அற்புதங்கள் மூலம் எங்களுக்கு காட்டு!! என இனைவைப்பாளர்கள் கேட்பார்கள்.

..."எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!'' என்று அவர்கள் கேட்டனர். (14:10)

"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்''... (6:109)

இறைத்தூதர்களின் பிரார்த்தனையின் அடிப்படையில் அல்லாஹ் அற்புதங்களை நிகழவும் செய்வான்.

அந்த அற்புதத்தை கண்டவர்களுள் அல்லாஹ் நாடியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் அந்த அற்புதங்களை "தீய சக்திகளின் செயல்" என்பார்கள். அதாவது, அல்லாஹ்வின் ஆற்றலால் நிகழ்ந்த அற்புதத்தை தங்களுடைய கடவுள்கள் நிகழ்த்தியது என்று உரிமை கோராமல் அது சூனியத்தால் நிகழ்ந்தது என்பார்கள்.

அதாவது, அல்லாஹ் நிகழ்த்துவது என்று நாம் கூறுவதையெல்லாம் தங்களுடைய கடவுள்களும் நிகழ்த்துவதாகக் கூறமுடிந்த இனைவைப்பாளர்களால், அல்லாஹ்வின் அனுமதியோடு இறைத்தூதர்கள் நிகழ்த்தும் அற்புதங்களை தங்கள் கடவுள்கள்தான் நிகழ்த்தின என்று கூறமுடியாமல், சூனியம் என்று ஒரே வார்த்தையில் புறந்தள்ளிவிடுவார்கள்.

ரைட். நம்முடைய விஷயத்துக்கு வருவோம்...

இனைவைப்பாளர்களின் கடவுள்களுக்கு சக்தி இருக்கிறதா என்று அவர்களிடம் கேள்வி எழுப்பும்போது, அதற்கு பதிலுக்கு, உன்னுடைய அல்லாஹ்விற்கு சக்தி இருக்கிறதா என்று எதிர் கேள்வி கேட்கப்பட்டால் அதை நிரூபிக்க நம்மிடம் வாய்ப்பு ஏதும் இல்லை. உனது ஆற்றலை இம்மறுப்பாளர்களுக்கு நிரூபித்துக் காட்டு! என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அற்புதம் நிகழ்த்துவதற்குரிய நபர்களும் நாம் அல்ல.

ஆனால், அத்தகைய பிரார்த்தனையை அல்லாஹ்விடம் இறைத்தூதர்கள் செய்து அல்லாஹ்வின் நாட்டப்படி அற்புதங்கள் நிகழும்போது அல்லாஹ்வின் ஆற்றலை இனைவைப்பாளர்கள் தெரிந்துகொள்வார்கள்.

அதுமட்டுமல்லாமல், உங்களுடைய கடவுள்களுக்கு ஆற்றல் இருந்தால் அவைகளை அழைத்து எனக்கெதிராக சூழ்ச்சி செய்யுங்கள் என்று இறைத்தூதர்கள் சவாலும் விடுவார்கள்.

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! (7:195)

"...அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார் (11:55)

உங்களுடைய கடவுள்களுக்கு ஆற்றல் இருந்தால் அவைகளின் மூலம் எனக்கெதிராக ஏதாவது செய்யுங்கள் என்று இறைத்தூதர்கள் மறுப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதை ஆதாரமாக வைத்து நாமும் இதுபோன்ற கேள்விகளை கேட்டு சவாலும் விடலாம் என்கின்ற முடிவுக்கு வந்தார் பீஜே.

அவருடைய முடிவை ஏழரை லட்சம் உறுப்பினர்களும் அப்படியே ஏற்றனர். சவால் வீடியோக்களை தெறிக்க விட்டனர்.

இது சரியா என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment