பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

சூனியத்திற்கு - 5

*சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part -5)

மூஸா(அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்பை தனக்குரியதாகவும் கருதிக்கொண்டு சூனியக்காரனிடம் சவால் விட்ட பீஜே அவர்களின் சவாலை ஏற்ற சூனியக்காரன் பீஜேவிடம் தோற்றானா?

இதை பார்ப்பதற்கு முன்பாக சூனிய ஒப்பந்தத்தை பார்ப்போம்.

** 48 நாட்களில் பீஜே தற்கொலை செய்து கொள்வார், அல்லது சூனியம் உண்மை என்று பிரச்சாரம் செய்வார் என்பதுதான் சூனியக்காரன் கூறியது.

** சூனியத்தால் இதை செய்ய முடியாது என்றார் பீஜே.

அதாவது, 48 நாட்களில் சூனியக்காரனின் சூனியத்தால் தான் தற்கொலையோ அல்லது சூனியம் உண்மை என்ற பிரச்சாரத்தையோ செய்ய மாட்டேன் என்பதுதான் பீஜேவுக்கும் சூனியக்காரனுக்கும் இடையே போடபட்ட ஒப்பந்தம்.

தற்கொலை மற்றும் சூனியப்பிரச்சாரம் ஆகிய இரண்டையும் தேர்ந்தெடுத்ததற்கு பீஜே தரப்பில் கூறப்பட்ட காரணத்தை இங்கே நினைவுபடுத்த வேண்டும்.

இயற்கையாக (விதிப்படி) நடக்கும் எந்த ஒன்றையும் சூனியக்காரன் தன்னுடைய சூனியத்தால்தான் நடந்ததாக உரிமை கோரிவிடக்கூடாது என்பதால்தான், ஒரு மனிதன் சுயமாக முடிவு எடுத்து செய்யக்கூடிய தற்கொலையையும், சூனியம் உண்மை என்று அவனாகவே பிரச்சாரம் செய்வதையும் தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

** 48 நாட்களுக்குள் தனது சூனியத்தின் மூலம் பீஜேவின் உள்ளத்தை சிதைத்து அவரை தற்கொலை செய்ய வைப்பேன் என்றான் சூனியக்காரன்.

** அவனது சூனியத்தின் மூலம் 48 நாட்களுக்குள் தான் தற்கொலை செய்ய மாட்டேன் என்றார் பீஜே.

இதில்தான் சறுக்கிவிட்டார் பீஜே.

ஒரு மனிதனுக்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் விதிப்படியே என்பதை உணர்ந்திருக்கும் பீஜே அவர்கள், ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்வது என்பது அவனே முடிவு செய்து எடுக்கும் ஒன்று என நினைத்துவிட்டார்போலும்.

அதாவது தற்கொலை என்பதை விதியை மீறிய ஒன்றாக கருதுகிறார் போலும். ஒரு இலை உதிர்ந்தால்  கூட அது அல்லாஹ்வின் பதிவேட்டில் இல்லாமல் இல்லை என்கிறது குர்ஆன் வசனம்.
தற்கொலை என்பதும் விதிப்படியே நடக்கும் ஒரு செயல்தான்.

48 நாட்களுக்குள் நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்று ஒருவனால் கூற முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு "சூனியத்தால்தானே தற்கொலை செய்ய வைக்க முடியாது" என்று கூறினோம் என்று முன்னாள் இந்நாள் பீஜே ரசிகர்கள் கூறக்கூடும்.

ஒரு செயல் சாதாரணமாக நடந்தால் அது எப்படி இருக்கும்? அதே செயல் சூனியத்தால் நடந்தால் அது எப்படி இருக்கும்?

இந்த இரண்டிற்கும் வேறுபாடு தெரிந்தவர்களா பீஜேவின் ரசிகர்கள்?

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளை சூனியத்தால் நடந்ததாக முடிச்சு போடப்படுகிறது என்பதைத் தவிர்த்து சூனியத்தில் வேறு எதுவுமேயில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஒருவனுக்கு கை விளங்காமல் போவதாக வைத்துக்கொள்வோம். அது நடப்பதற்கான வாய்ப்புகள் என்ன?

** தவறி விழுவதால்
** விபத்தில் கை உடைவதால்
** வாதம் அடிப்பதால்

இதுபோன்று ஏதாவது ஒரு நிகழ்வின் மூலமாகத்தான் ஒருவனுக்கு கை விளங்காமல் போகும். அதைத்தான் சூனியத்தால் நிகழ்ந்ததாக முடிச்சு போடுவார்களே தவிர, சூனியத்தால் கை விளங்காமல் போவதென்றால் அது எவ்வாறாக இருக்கும் என்பதை சூனியக்காரன்கூட சொன்னதில்லை.

பீஜேவின் முன்னாள் இந்நாள் ரசிகர்கள் மட்டும் சூனியத்தால் தற்கொலை நிகழ்வதை எப்படி வரையறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

தற்கொலை என்பதும் விதிப்படியான ஒன்றே.

விதிப்படி நடக்கும் எந்த ஒன்றையும் சூனியத்துடன் முடிச்சு போட முடியும்.

பந்தயம் கட்டப்பட்ட அந்த 48 நாட்களுக்குள் பீஜே அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது சூனியத்தால்தான் நிகழ்ந்தது என்று சூனியக்காரன் உரிமை கோரியிருப்பான். அதை மறுப்பதற்கு பீஜேவின் முன்னாள் இந்நாள் ரசிகர்களிடம் வாய்ப்பு ஏதும் இல்லை.

ஓகே. தற்கொலையும் விதிப்படியே என்று வைத்துக்கொள்வோம். தற்கொலை செய்வது இஸ்லாத்தில் ஹராம் என்று தெரிந்திருக்கும் எங்கள் அண்ணன் பீஜே அவர்கள் தற்கொலை செய்துகொள்வாரா? என்று பீஜேவின் சில அன்பர்கள் கேட்கக்கூடும்.

இதை பீஜே அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் விவரித்த வகையில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.

பீஜே ஒரு பெண்ணுடன் தவறாக பேசுவது போன்று ஒரு ஆடியோ வெளியாகிறது. அதை மிமிக்ரி என்று பீஜே அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள். பல மாதங்கள் அதை மிமிக்ரி என்றவர் திடீரென அது தான் பேசியதுதான் என்றார். சுமார் மூன்று மாத காலம் அந்த நிலை நீடித்தது. பின்னர், அந்த ஆடியோவை தான் பேசவில்லை என்றார்.

அந்த ஆடியோவை முதலில் பொய் என்றார், பிறகு உண்மை என்றார், அதற்குப்பிறகு பொய் என்றார். மூன்று மாத கால இடைவெளியில்

** ஒரு செயலை செய்யவில்லை என்றார்
** அந்த செயலை செய்தேன் என்றார்
** அந்த செயலை செய்யவில்லை என்றார்.

அந்த ஆடியோவை பொய்யென்று வைத்துக்கொண்டால், மூன்று மாத காலத்திற்கு அவர் செய்யாத ஒன்றை செய்ததாக அவருக்கு பிரம்மையூட்டப்பட்டிருக்கிறது.

அந்த ஆடியோவை உண்மை என்று வைத்துக் கொண்டால், ஆடியோ பேசியதாக அவர் கூறிய அந்த மூன்று மாத காலம் மட்டுமே அவர் பிரம்மையூட்டப்படாமல் இருந்திருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும், செய்யாத ஒன்றை செய்ததாகவோ, அல்லது செய்த ஒன்றை செய்யாததாகவோ பீஜே பிரம்மையூட்டப்பட்டிருக்கிறார்.

இது விதிப்படியான ஒரு நிகழ்வுதானே தவிர இதற்கு வேறு எந்த காரணத்தையும் கற்பிக்கக் கூடாது. [ ஸலபுகளுள் சிலர் இது யாரோ செய்த சூனியத்தால் நிகழ்ந்ததாக தங்களுக்குள் கூறிக்கொண்டு மகிழ்கிறார்கள். அவர்கள் கலிமாவை மீண்டும் மொழியட்டும்]

இதுபோன்ற ஒரு விதிப்படியான நிகழ்வு ஏதாவது அந்த 48 நாட்களுக்குள் நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

அதாவது, சூனிய சவால் பந்தயம் நிகழ்ந்த அந்த 48 நாட்களில் மிமிக்ரி ஆடியோவோ அல்லது கிராபிக்ஸ் வீடியோவோ என ஏதாவது ஒன்றின் மூலம் பீஜே அவர்கள் மிரட்டப்பட்டு அதன் மூலம் அவருக்கு பிரம்மை பிடித்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

சூனியக்காரன் தன்னுடைய சூனியத்தால் அது நிகழ்ந்ததாகக் கூறி உரிமை கோருவான். பீஜேவின் ரசிகர்கள் என்ன செய்வார்கள்?

அல்லது, பிரம்மை முத்திப்போன நிலையில் சூனியம் உண்மை என்று பீஜே அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தால்
பீஜேவின் ரசிகர்கள் என்ன செய்வார்கள்?

ஒருவன் உங்களைப் பார்த்து "பத்து நாட்களில் ரோட்டில் அடிபட்டு சாவாய்!" என கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
நாம் அதற்கு என்ன பதிலுரைப்போம்?

"எனக்கு அல்லாஹ் விதித்த விதியை அறிந்தவன் போல கூறுகிறாயே! நீ கூறுவது போன்று பத்து நாட்களில் நான் ரோட்டில் அடிபட்டு சாகமாட்டேன்" என்று கூறமாட்டோம்.

அவன் வாய்க்கு வந்ததை உளறுகிறான் என்பது உண்மைதான் என்றாலும், அதற்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அது நடக்கவே நடக்காது என்று கூறக்கூடாது.

ஏனென்றால், அந்த பத்து நாட்களில் அல்லாஹ் என்ன நாடியிருக்கிறான் என்பதை நாம் அறிய மாட்டோம்.

"நீ கூறுவதை விட்டும் அல்லாஹ் என்னை பாதுகாக்கட்டும்" என்பதுதான் நம்முடைய பதிலாக இருக்க வேண்டும்.

எந்த ஆற்றலும் இல்லாத ஒரு சூனியக்காரன், "48 நாட்களில் எனது சூனியத்தின் மூலம் நீ தற்கொலை செய்துகொள்வாய்" என்று பீஜே அவர்களிடம் கூறினான் என்றால் அவன் விதியேட்டைப் படித்தவனல்ல. முகத்திற்கு நேராக நீ சாவாய்! என்று அவன் கூறியது வெறும் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

அடுத்த நொடி தனக்கு என்ன நடக்கும் என்பதை அறியாத பீஜே அவர்கள், 48 நாட்களுக்குள் சூனியத்தால் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று அவரால் கூறமுடிந்ததென்றால் அவர் நிச்சயமாக "லவ்ஹுல் மஹ்ஃபூல்" என்ற ஏட்டை வாசித்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.

"லவ்ஹுல் மஹ்ஃபூல்" ஏட்டை பீஜே வாசித்தார் என்று அவரது ரசிகர்கள் நம்பினால் அதற்கு நான் செய்ய ஒன்றுமில்லை.

பீஜேவிடம் சூனியக்காரன் தோற்றானா என்பதை சொல்லாமலேயே இப்படி ஜவ்வாக இழுக்கிறாயே என்று யாரோ கேட்பது என் காதில் விழுகிறது.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய கடைசிப் பதிவில் அதை கூறுகிறேன். தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment