பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

ஸிஹ்ரு - சூனியம்* (Part - 10)

*ஸிஹ்ரு - சூனியம்* (Part - 10)

சூனியம் நிகழ்கிறதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்போம்...

"தீயசக்திகள் ஆட்கொள்வதால் நிகழும் அமானுஸ்யம்" என்பதுதான் சூனியத்திற்கு மறுப்பாளர்கள் தரும் வரைவிலக்கணம் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தீயசச்திகள் ஆட்கொள்வதையும் இரண்டு வகையாக பிரித்து வைத்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.

(1) தீய சக்திகள் தாமாகவே அமானுஸ்யங்களை நிகழ்த்துவது.

(2) தீய சக்திகளை மனிதர்கள் வசப்படுத்தி அதைக் கொண்டு பிறருக்கு கேடு விளைவிப்பது.

*முதலாவது வகையை பார்ப்போம்...*

தீய சக்திகள் தாமாகவே அமானுஸ்யங்களை நிகழ்த்துவது என்பதில், பேயாக வருவது, அருள் வந்து குறி சொல்வது போன்றவைகள் அடங்கும்.

நன்றாக இருந்த ஒருவர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து, இறந்து போன ஒருவரின் பெயரைச் சொல்லி, இன்னார் வந்திருப்பதாக கூறுவதை "பேய் பிடித்துவிட்டது" என்கிறார்கள்.

இது உண்மையா அல்லது பொய்யா என்பதுதான் கேள்வி.

ஒருவரின் மீது நிரந்தரமாக இருந்து விரும்பியபோது அவர்மீது அருள் வந்து மக்களுக்கு குறி சொல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றனவாம்.

இது உண்மையா அல்லது பொய்யா என்பதுதான் கேள்வி.

*இரண்டாவது வகையைப் பார்ப்போம்...*

தீய சக்திகளை வசப்படுத்தி அவற்றை பிறர் மீது ஏவி விடுவது என்பதில், ஒருவருடைய கை கால்களை முடக்கிப்போடுவது, ஒருவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது, ஒருவரை வசியம் செய்வது, ஒருவரை பைத்தியமாக்குவது போன்றவைகள் அடங்கிவிடும்.

எந்த உபகரணமும் இல்லாமல் ஒருவர் மீது மற்றொருவரால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று சூனியம் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்களே!

இது உண்மையா அல்லது பொய்யா என்பதுதான் கேள்வி.

இந்த கேள்வியை நாம் வேறு ஒரு கோணத்தில் அனுகுவோம்.

கடவுள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மிடம் கேட்கப்பட்டால்
நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் எனபதை நம்மால் நிரூபிக்க முடியும். அதாவது, விஞ்ஞானத்தைக் கொண்டு அல்லாஹ் இருக்கிறான் என்பதை நிரூபிக்க முடியும்.

ஆனால், ஷைத்தான் இருக்கிறான் என்பது உண்மையா அல்லது பொய்யா என்று கேட்கப்பட்டால் அதற்கு நேரடியாக பதில் கூற முடியாது. ஏனென்றால், நம்மால் முடிந்த அளவிற்கு பல ஆய்வுகள் செய்து அல்லாஹ் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனிடமே சரணடைந்தபிறகு ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் கூறுவதால் மட்டுமே அவன் இருக்கிறான் என்று நம்புகிறோம்.

ஷைத்தான் இருக்கிறான் என்றும் விதி இருக்கிறது என்றும் அல்லாஹ் கூறுவதால் மட்டுமே நமது உள்ளம் ஏற்கிறது. விதி இருக்கிறது என்பதும், ஷைத்தான் இருக்கிறான் என்பதும் நமது உள்ளம் சார்ந்தது.

விதிப்படியே நிகழ்வுகள் நடக்கின்றன என்பது உண்மை. ஷைத்தான், அந்த நிகழ்வுகளைப் பற்றி நமது உள்ளத்தில்  குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதும் உண்மை.

உதாரணத்திற்கு, மழை பொழிவதை எடுத்துக்கொள்வோம். அல்லாஹ் விதித்தபடி நிகழும் ஒரு நிகழ்வுதான் மழை பொழிவது. அந்த நிகழ்வைப் பற்றி ஷைத்தான் பலவாறாக நமது உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவான்.

** இன்ன நட்சத்திரத்தால்தான் மழை பொழிகிறது என்று உள்ளத்தில் குழப்பம் ஏற்படுத்துவான்.

** இன்ன இன்ன மூலக்கூறுகள் இணைந்ததால்தான் மழை பொழிகிறது என்றும் உள்ளத்தில் குழப்பம் ஏற்படுத்துவான்.

** கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததால்தான் மழை பொழிகிறது என்றும் உள்ளத்தில் குழப்பம் ஏற்படுத்துவான்.

விதிப்படி மழை பொழிந்தது என்று ஒருவரின் உள்ளம் கூறினால் அவர் கூறுவது  உண்மை.

மழைபொழிவிற்கு வேறு எந்த காரணத்தை அவருடைய உள்ளம்  தீர்மாணித்தாலும் அது பொய்யே.

ஒரு மனிதனுக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்தும் விதிப்படியே என்று கூறுவது உண்மை.

அவனுக்கு நடக்கும் தீமைகள் சூனியத்தால் நிகழ்கின்றன என்று கூறுவது பொய்.

ஒருவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் விதிப்படியே நிகழ்கின்றன. விதிப்படிதான் நடக்கின்றன என்பதை நபி(ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார்கள்.

"நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ
செய்யாது" என்றும்,

மேலும், நேர்ச்சை செய்யப்படுவதால் கஞ்சர்களிடமிருந்து செல்வம் வெளியேற்றப்படுகிறது என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் அதில் இல்லை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். (புஹாரி 6692, 6693, 6608)

இறைவனுக்காக செய்யப்படும் நேர்ச்சை கூட விதியில் மாற்றம் ஏற்படுத்திவிடாது என்று மார்க்கம் கூறிவிட்ட நிலையில், தீயசக்திகளை வணங்கி அவைகளிடம் உதவி பெறப்பட்டு ஒரு மனிதனின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிவிடுவதாக கூறப்படும் "சூனியக்காரனின் சூனியத்திற்கு" ஆற்றல் உண்டு என்று கூறுவது விதியை மறுக்கும் செயலாகும்.

அல்லாஹ் நாடினால் "சூனியக்காரனின் சூனியம் பலிக்கும்" என்று கூறுவது, ஷைத்தானிய செயலை அல்லாஹ் நிகழ்த்துவதாக கூறும் மதியிழந்த வாசகம் ஆகும்.

"சூனியக்காரனின் சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா" என்று கேட்பது, "விதியை சதியால் வெல்ல முடியுமா" என்று குருட்டுத்தனமாக கேட்பதற்கு ஒப்பாகும்.

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளுக்குள் சூனியத்தைக் கொண்டு எவ்வாறு முடிச்சிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமல் "நபிகளாருக்கு சூனியம்" என்ற வரலாற்றுச் செய்தியை புரிந்து கொள்ள முடியாது.

நிகழ்வுகளுடன் சூனியம் முடிச்சிடப்படும் விதத்தைப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment