பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 16, 2019

இஸ்லாத்தை அறிந்து - 23

*🍅🍅🍅மீள் பதிவ🍅🍅🍅*

*🌹🌹🌹🌹*

*🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋*
                                                                        

*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர்  பாகம் 23  👈👈👈*

     *👉தலைப்பு👇*

*👹👹ஷைத்தானின் சூழ்ச்சிகள்..!👹👹*

*👉👉👉ஷைத்தானின் சூழ்ச்சிகள்👈👈👈*

*✍✍✍ஈர்வுலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான்.✍✍✍*

*🕋🕋அனைத்தையும் படைத்தான்🕋🕋.*

📕📕📕அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.📕📕📕

*(அல்குர்ஆன் (39:62)*

*🛑🛑அனைத்தையும் படைத்து விட்டு மனிதனை சிறப்பித்துள்ளான்🔵🔵*

*👨‍👨‍👦👨‍👨‍👦மனிதனை சிறப்பித்தான்👨‍👨‍👦👨‍👨‍👦.*

*✍✍✍நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்து படைப்பையும் படைத்து அதில் மனிதனை மட்டும் சிறப்பித்துள்ளான். விலங்குகள் மனிதனை விட பலத்தாலும். வேகத்தாலும் சிறந்ததாக இருந்தாலும் மனிதனை சிறப்பித்துள்ளான். மலக்குமார்கள் அல்லாஹ்வுடைய அனைத்து பணிகளையும் செய்தாலும் அவர்களை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். ஜின்கள் பலத்தால் சிறந்ததாக இருந்தாலும் மனிதர்களை சிறப்பித்துள்ளான். அதே போன்று தான் ஷைத்தான் மலக்குமார்களுக்கே தலைவராக இருந்தாலும் அந்த இனத்தை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு “ஸஜ்தா’ செய்யுமாறு வானவர்களுக்கு கட்டளையிட்டான்.✍✍✍*

📘📘📘“”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.📘📘📘

*(அல்குர்ஆன் (2:34)*

*👹👹👹ஷைத்தான் பெருமையடித்தான், நெருப்பால் படைத்தாய்👹👹👹*

*✍✍✍ஆதமை படைத்து அவருக்கு பணியும் மாறு மலக்குமார்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட போது மலக்குமார்களின் தலைவனான ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் தன்னை நீ நெருப்பால் படைத்தாய் இந்த ஆதமை கருப்பு களிமண்ணால் படைத்து இருக்கிறாய். நான் அவனை விட சிறந்தவன் நான் எப்படி அவனுக்கு சிறை வணக்கம் செய்வோன் என்று பெருமையடித்தான்*✍✍✍ .

📙📙📙“”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.📙📙📙

*(அல்குர்ஆன் (38:76)*

*✍✍✍“”சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை” என்று அவன் கூறினான்.✍✍✍*

*(அல்குர்ஆன் (15:33)*

*👹👹விரட்டி அடிக்கப்பட்டான்👹👹*

📗📗📗ஷைத்தான் அல்லாஹ்விற்கு எதிராக பெருமையடித்த காரணத்தினால் கண்ணியமிக்க இடத்தை விட்டும் இழிவு ஏற்பட்டவனாகவும், விரட்டியடிக்கப்பட்டவானகவும் வெளியேற்றப் பட்டான். மறுமையிலும் இழிந்தவனாக அல்லாஹ் கொண்டுவருவான்.📗📗📗

*✍✍✍“”இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.*✍✍✍

*(அல்குர்ஆன் (7:13)*

📒📒📒“”இங்கிருந்து இழிவு படுத்தப்பட்ட வனாகவும், விரட்டப்பட்டவனாகவும் வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின் பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான்.📒📒📒

*(அல்குர்ஆன் (7:18)*

*👹👹அவகாசம் கேட்டான்👹👹*

*✍✍✍ஷைத்தானை கண்ணியமிக்க இடத்திலிருந்து வெளியேற்றி போது மறுமை நாள் வரை என்னை அழிக்க கூடாது என்று அல்லாஹ்விடத்தில் தன்னுடைய ஆணவத்தை அடக்கிக் கொண்டு அவகாசம் கேட்கிறான்.✍✍✍*

📓📓📓“”அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான்.📓📓📓

*(அல்குர்ஆன் (7:14)*

*🌎🌎அவகாசம் கொடுக்கப்பட்டது🌎🌎*

*✍✍✍அல்லாஹ் தஆலா ஷைத்தானின் அடிப்படிதலை கண்டு அவனுடைய கூட்டாத்திற்கு உயிர் பிச்சை தருகிறான். மறுமையை நாள் வரை உன்னையும் உனது கூட்டாத்தாரையும் அழிக்க மாட்டோன் என்று உத்திர வாதம் தந்துள்ளான். இதுவரை ஷைத்தானின் இனம் அழியப்படவில்லை✍✍✍* .

📔📔“நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.📔📔

*(அல்குர்ஆன் (7:15)*

*👹👹வழிகெடுப்பேன்👹👹*

*✍✍✍இப்லீஸ் என்பது ஷைத்தான்களின் தந்தைப் பெயராகும். இவன் நெருப்பால் படைக்கப்பட்டான். ஜின் இனத்தை சார்ந்தவன். இப்லீசுக்கு சந்ததிகளும், சேனைகளும் உண்டு. மனித இனத்தை கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு வழிகெடுப்பதே இவர்களின் முக்கிய பணியாகும். இப்லீஸின் சிம்மாசனம் நீரில் உண்டு. அவன் தன் படைகளை அனுப்பி, மனிதர்களை குழப்படையச் செய்கிறான். இப்பணியில் முன்னணியில் இருக்கும் ஷைத்தான்களுக்கே இப்லீஸிம் முதல் தர மரியாதை கிடைக்கும். அல்லாஹ் அவகாசம் அளித்த பிறகு நீ கருப்பு களிமண்ணால் படைத்த இந்த மனிதர்களில் சிலரை வழிக்கெடுப்பேன் என்று அல்லாஹ்விடத்தில் சவால் விட்டான்.✍✍✍*

⛱⛱⛱“”நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று கூறினான். “”பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).⛱⛱⛱

*(அல்குர்ஆன் (7:16,17)*

*👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦ஒவ்வொரு மனிதனுடனும் 👹👹👹ஷைத்தான் இருப்பான்👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦*

*✍✍✍ஒவ்வொரு மனிதனுக்கும் வானவர் ஒருவரும் ஷைத்தான் ஒருவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வானவர் நல்லதையே எண்ணுமாறும் நல்லதையே செய்யுமாறும் மனிதனுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும் கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக்கொண்டிருக்கிறான்.✍✍✍*

🌈🌈🌈அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிரி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை” என்று கூறி னார்கள். அப்போது, “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “”என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்” என்று சொன்னார்கள்.🌈🌈🌈

*நூல் :முஸ்லிம் 5421*

*✍✍✍நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “”ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “”என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “”அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “”ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள். நான், “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “”ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.✍✍✍*

*நூல் : முஸ்லிம் 5422*

*👹👹👹ரத்தம் நாளங்களில் ஒடுகிறான்👹👹👹*

📚📚📚ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசரில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் “”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்📚📚📚
.

*நூல் : புகாரி : 2038*

*🌐🌐நல்லவர்களை வழிகெடுக்க முடியாது🌐🌐*

*✍✍✍அல்லாஹ் ஷைத்தானை வெளியேற்றிய பிறகு அல்லாஹ்விடத்தில் மனிதர்களை நான் வழிகெடுப்பேன் என்று சவால் விடுகிறான். ஆனால் இறைநம்பிக்கையாளர்களை என்னால் வழிகெடுக்க முடியாது என்று தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சவால் விடுகிறான்.✍✍✍*

☪☪☪“”என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார் களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரை யும் வழி கெடுப்பேன்” என்று கூறினான்☪☪☪

*அல்குர்ஆன் (15:39,40)*

*👹👹கொள்கை விட்டும் தடுப்பான்👹👹*

*✍✍✍ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதெல்லாம் அடிப்படையான கொள்கை விஷயத்தில் தான். ஏனென்றால் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அந்த மனிதர் சொர்க்கம் சென்று விடுவார். முதலில் கொள்கையில் வழிகெடுக்க முயற்சிப்பான் அதில் தோல்வியடைந்தால் மற்ற விஷயத்தில் முயற்சி செய்வான், அடிப்படையான கொள்கை விஷயத்தில் மனிதனை வழிகெடுத்து விட்டால் அந்த மனிதன் சொர்க்கம் செல்ல மாட்டான். அதற்காக கொள்கை விஷயத்தில் வழிகெடுக்க முயற்சிப்பான். மனிதரிடத்தில் படைப்பினங்களை பற்றி சிந்தனை ஊட்டுவான், இந்த பைக், செல்போன், அழகிய கார், இது போன்ற பொருட்களை யார் படைத்தான் என்று சிந்தனை ஊட்டுவான், சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தும் மனிதன் தான் உருவாக்கினான் என்று சிந்தனையை ஏற்படுத்துவான். பிறகு இந்த இயற்கை, செடி, மரம், விலங்கினங்கள், மனிதனை யார் படைத்தான் என்று சிந்தனை ஏற்படுத்துவான். இந்த சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தையும் அல்லாஹ் தான் படைத்தான் என்று நம்புவான். அதை நம்பிய பிறகு அல்லாஹ்வை யார் படைத்து இருப்பார்கள் என்று சிந்தனையை ஏற்படுத்துவான் இப்படிப்பட்ட மோசமான சிந்தனை ஏற்படுத்தும் போது விரட்டி அடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்.✍✍✍*

🏵🏵🏵அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “”உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக்கொள்ளட்டும்🏵🏵🏵.

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 3276*

*👹👹தொழுகையை விட்டு தடுப்பான்👹👹*

*✍✍✍நம்மிடத்தில் கொள்கை விஷயத்தில் ஷைத்தான் தோற்று விட்டால் பிறகு தொழுகை விஷயத்தில் நம்மை வழிகெடுக்க வழிவகுப்பான். இஸ்லாம் என்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு தொழுகையை கடைபிடிக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தொழுகையை கடைபிடித்தால் நம்முடைய சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அதனால் தொழுகை வீணாக்குவதற்குகாக அதிகமான முயற்சிகளை செய்வான். தொழுகையை தடுப்பதற்கு என்ன என்ன தீமையான விஷயங்கள் இருக்கிறதே அவை அனைத்தையும் மனிதர்களிடத்தில் அழகாக அழங்கரித்து காட்டுவான். இதை நம்பி நல்ல அமல்களை விட்டு விடுகிறார்கள்.✍✍✍*

🏮🏮🏮மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா❓🏮🏮🏮

*(அல்குர்ஆன் (5:91)*

*🌐🌐தூக்கத்தின் மூலம்🌐🌐*

*✍✍✍பஜருடைய பாங்கு சப்தத்தை நாம் கேட்கும் போது தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் சோம்பேறி தனமாக இருந்து கொண்டு பஜர் தொழுகைக்கு நாம் வரமால் தூக்கி விடுகிறோம். இப்படி தூக்கத்தை ஏற்படுத்தி நன்மையை செய்ய விடாமல் ஷைத்தான் நாடுகிறான். ஆனால் ஷைத்தானுக்கு நாம் கட்டுபடாமல் தூக்கத்திலிருந்து நாம் எழுந்திருத்து துஆவை ஒதி, உளு செய்து, தொழுதால் அன்றைய தினம் சுறுசுறுப்பவனாக அடைகிறான். ஆனால் நாம் பஜர் தொழுகையில் தொழாமல் இருந்தால் அன்றைய தினத்தில் சோம்போறிவுடையவனாக அடைகிறான்✍✍✍.*

🛑🛑🛑அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்🛑🛑🛑
.

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : புகாரி : 1142*

*👹👹👹காதில் சிறுநீர் விடுகிறான்👹👹👹*

*✍✍✍பஜருடைய பாங்கு சப்தத்தை கேட்கும் போது இன்னும் சிறிது நேரம் தூக்கலாம், இன்னும் சிறிது நேரம் தூக்கலாம் என்று ஷைத்தான் நமக்கு ஆசை வார்த்தைகளை நினைவு கூறும் போது அவன் ஓரே அடியாக தூக்கிவிடுகிறான். பஜர் தொழுகையை விட்டுவிடுகிறான். இப்படி ஆசை வார்த்தைக்கு கட்டுபடாமல் பாங்கு சப்தத்தை கேட்டவுடன் உடனே எழுந்தெரித்து பஜர் தொழுகையில் கலந்துக் கொள்ள வேண்டும்.✍✍✍*

🔵🔵🔵அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “”அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.🔵🔵🔵

*நூல் : புகாரி : 1144*

*👹👹தொழுகையில் நிற்கும் போது👹👹*

*✍✍✍ஷைத்தான் தூக்கத்தின் மூலமாக நம்மை வழிக்கெடுக்க முயற்சிக்கும் போது அந்த செயலை நாம் முறியடித்து விட்டால் அவனுடைய முயற்சி வீணாகி விடுகிறது. பிறகு வேற வழிமுறைகளை கையாளுவான். அல்லாஹ்வின் அடியார்கள் தொழுகைக்கு வரும் போது தொழுகை முறியடிப்பதற்காக சில வழிமுறைகளை கடைபிடிப்பான். அடியார்கள் தொழுகைக்காக தக்பீர் கட்டும் போது பல சிந்தனைகளை நினைவு படுத்துவான். தொழுகையில் நிற்கும் போது இவரிடத்தில் இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தேன் அதற்குறிய வட்டியை அவன் தருவானா இல்லையா என்று நினைத்து பார்ப்பான். ஆனால் தொழுகையில் கவனத்தை செலுத்தாமல் விட்டுவிடுகிறான். அல்லது நம்முடைய கடையில் வியபாரம் என்ன ஆகுமே என்று நினைத்து பார்ப்பான் இப்படி பல சிந்தனைகளை ஏற்படுத்தி நம்முடைய தொழுகையை வீணாக்க முயற்சி செய்வான். இப்படிப்பட்ட சிந்தனை நமக்கு வரும் போது உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.✍✍✍*

🏛🏛🏛அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமரிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, “”இதை இதையெல்லாம் நினைத்துப்பார்” எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.’’🏛🏛🏛

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 1231*

*🌎🌎தொழுகையின் நடுவில் குறுக்கிடுதல்🌎🌎*

*✍✍✍தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் பல சிந்தனைகளை ஏற்படுத்தும் போது அதனை நாம் முறியடித்தால் ஷைத்தானின் முயற்சி வீணாகி விடுகிறது. இந்த விஷயத்திலும் அவன் தோல்வியடையும் போது வேற வழிமுறைகளை கையாளுவான். நாம் தொழுகும் போது சிலர் குறுக்கே செல்வதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாக்க முயற்சி செய்வான். குறுக்கே செல்லும் போது அவன் செல்ல விடாமல் அவர்களை தடுக்க வேண்டும், இப்படி செய்யும் போது அவனுடைய முயற்சிகள் வீணாகி விடுகிறது*✍✍✍ .

📕📕📕நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.📕📕📕

*அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்                 நூல் : புகாரி : 3274*

*👹👹தொழுகையில் திரும்பி பார்த்தல்👹👹*

*✍✍✍நமது தொழுகையில் திரும்பி பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகையை வீணாக்குவதற்கு ஷைத்தான் சில வித்தைகளை கையாளுகிறான். நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது நமக்கு முன்னால் சிலர் பேசிக்கொண்டும், விளையான்டு கொண்டும் இருப்பார்கள். அவர்களின் செயல்களை பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாகி விடுகிறது. நாம் தொழுவும் போது நமக்கு முன்னால் என்ன நடந்தாலும் அந்த செயல்களை கண்டுக்கொள்ளாமல் தொழ வேண்டும்.✍✍✍*

📘📘📘ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “”அது (திரும்பிப் பார்க்கும் அந்த நேரம்) உங்கள் தொழுகையிலிருந்து ஷைத்தான் திருட்டுத்தனமாகப் பறித்துக் கொள்வதாகும்” என்று பதிலளித்தார்கள். 📘📘📘

*நூல் : புகாரி : 3291*

*👹👹👹அல்லாஹ்வின் நினைவை மறக்க செய்வான்👹👹👹*

*✍✍✍தொழுகையில் அவனால் வழிகெடுக்க முடியவில்லையென்றால் தொழுகைக்கு வெளியே நல்ல அமல் செய்ய விடாமல் வழிகெடுக்க முயற்சிப்பான். தொழுகை முடித்த பிறகு சில திக்ருகளை ஓதும்மாறு கற்றுதந்துள்ளார்கள். ஆனால் நாம் தொழுகையை முடித்த பிறகு திக்ருகள் செய்யும் போது நம்மிடத்தில் சிலர் திக்ருகளை செய்ய விடாமல் பேசிக் கொண்டும், விளையாண்டு கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் தொழுகைக்கு பின்னால் நாம் திக்ருகள் ஓதினால் நம்முடைய சிறிய பாவங்கள் கடல் நுறையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான். அல்லாஹ் மனிதனை மன்னிப்பது ஷைத்தானுக்கு பிடிக்காமல் நல்ல அமல்களை செய்ய விடாமல் தடுப்பான். அந்த நேரத்தில் இந்த செயல் ஷைத்தானின் ஊசலாட்டம் என்று நினைத்து சுதாரித்துக் கொள்ள வேண்டும்✍✍✍* .

📙📙📙மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா❓📙📙📙

*(அல்குர்ஆன் (5:91)*

*✍✍✍ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்✍✍✍*

.
*(அல்குர்ஆன் (58: 19)*

*🌐🌐உபதேசத்தை கேட்பதை தடுப்பான்🌐🌐*

📗📗📗நல்ல விஷயங்களை கேட்க விடாமல் நம்மை தடுப்பான். எத்தனையே ஊர்களில் இஸ்லாத்தை பற்றி அறிவதற்காக சில மார்க்க பிரசாரங்களை நடத்துகிறார்கள். பிரச்சாரத்தை கேட்காமல் சிலர் பேசிகொண்டு இருப்பார்கள். இப்படி உபதேசத்தை கேட்காமல் ஷைத்தான் அவர்களை தடுக்கிறான். அல்லது ஜீம்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது கையில் எதையாவது வைத்து விளையாண்டு கொண்டும், பிறரிடத்தில் பேசிக் கொண்டும் இருப்பார்கள். இவை அனைத்தும் ஷைத்தானின் வீர விளையாட்டுகளாகும். ஜீம்ஆவில் பேசாமல் இருந்தால் நம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதை ஷைத்தான் விரும்ப மாட்டான். அதை நாம் முறியடித்தோம் என்றால் அவனுடைய முயற்சி வீணாகிவிடும். இமாம் ஜீம்ஆவில் உரை நிகழ்த்தும் போது நாம் யாரிடமும் பேசாமலும், விணான விளையாட்டில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.📗📗📗

*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிரிப்பவரிடம் நீ “மௌனமாக இரு!’ என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்*✍✍✍ .

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி :934*

📒📒📒அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாரிக் அல்லைஸீ(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசரில் அமர்ந்துகொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:  இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.📒📒📒

*நூல் : புகாரி : 66*

*👹👹பகைமையை ஏற்படுத்துவான்👹👹*

*✍✍✍நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை செய்வான். அதாவது நல்ல நண்பர்களுக்கு மத்தயில் ஒருவரோடு ஒருவரை மோதிவிட்டு வேடிக்கை பார்ப்பவன் தான் ஷைத்தான். ஏனென்றால் அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்ந்து அவனுக்காக பிரிந்த இரு நல்ல நண்பர்களை மறுமை நாளில் தன்னுடைய அர்ஷின் நிழலை தருகிறான். மறுமை நாளில் நிழல் கிடைக்க கூடாது என்பதற்காக இவ்வுலகத்தில் நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்காக நேசிக்க விடாமல் தடுத்து விடுகிறான்.✍✍✍*

📓📓📓மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா❓📓📓📓

*(அல்குர்ஆன் (5:91)*

*✍✍✍(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.✍✍✍*

*(அல்குர்ஆன் 17: 53*

📔📔📔சுலைமான் பின் சுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “”எனக்கு ஒரு (பிரார்த் தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், “ஷைத்தானிட மிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “”நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “”எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.📔📔📔

*நூல் : புகாரி 3282*

*✍✍✍ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருவது பைத்தியத்தைத் தெளியவைக்கத் தான் என்று தவறாக அவர் புரிந்து கொண்டதாலேயே இவ்வாறு கேட்டார். உண்மையில் கோபமும் ஷைத்தானின் தூண்டுதலாலேயே உண்டாகிறது. கோபத்திலிருந்து விடுபட, ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்.✍✍✍*

*👹👹தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்👹👹*

⛱⛱⛱ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் சைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “”நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், “”அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.⛱⛱⛱

*நூல் : புகாரி : 3281*

*✍✍✍நபி ஸல் அவர்கள் யாரோ அன்னியப் பெண்ணைச் சந்திக்கிறார்கள் என்ற சந்தகேத்தை ஷைத்தான் உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தி விடக் கூடாதே என்பதற்காகவே நான் அப்படிக் கூறினேன் என்று நபி ஸல் அவர்கள் விளக்கினார்கள்*✍✍✍ .

*👹👹கொட்டாவி👹👹*

🌈🌈🌈கொட்டாவி என்னும் நெட்டுயிர்ப்பு சோம்பலக்கும் களைப்புக்கும் அடையாளமாகும். இப்படி மனிதன் உற்சாகம் குன்றி விடும் போது நல்ல காரியங்கள் பல தடைபடும். அளவுக்கு அதிகமாக உண்பது பருகுவதாலேயே இந்த தேக்க நிலை உருவாகிறது. எனவே இது ஷைத்தானின் தூண்டுதலால் நேரும் சோதனையாகும். அதிலும் அடக்கமின்றி ஹா என்று நெட்டுயிர்ப்பு போது மனிதன் தன் வலையில் சிக்கிவிட்டான் என ஆனந்தத்தில் சிரித்து மகிழ்கின்றான். எனவே கொட்டாவியை இயன்றவரை அடக்கிவிட வேண்டும்.🌈🌈🌈

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான்.✍✍✍*

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 3289*

*👹👹👹வறுமையை காட்டுகிறான், வெட்கக் கேடானதை தூண்டுவான்👹👹👹*

📕📕📕நம்மிடத்தில் அதிகமான செல்வங்கள் இருந்து அதனை தர்மம் செய்யும் போது நாம் ஏழையாகிவிடுவோம் என்று ஷைத்தான் நமக்கு பயமுறுத்துவான். அந்த நேரத்தில் இந்த எண்ணத்தை ஷைத்தான் தான் ஏற்படுத்துகிறான் என்று எண்ணவேண்டும்.
இன்னும் வெட்ககோடான தீய எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஏற்படுத்துவான். அரைகுறை ஆடையை உடுத்த வேண்டும் என்று ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்.📕📕📕

*✍✍✍ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.✍✍✍*

*(அல்குர்ஆன் (2:268)*

*👹👹இரவு நேரத்தில் ஷைத்தான் பரவுகிறான்👹👹*

📘📘📘பகல் வெளிச்சம் முடிந்து இரவின் இருட்டு படரத் தொடங்கும் போது ஷைத்தான்களின் நடமாட்டம் அதிமகாகும். பரபரப்பாக அவர்கள் இயங்கத் தொடங்குவர். இந்த நேரத்தில் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடப் பயன்படுகின்ற குர்ஆன் வசனங்கள், மற்றும் துஆக்கள் வேண்டுதல்களை அறிந்தராத சிறுவர்கள் வெளியே திரிந்து கொண்டிருந்தால் ஷைத்தான்களால் அவர்களுக்குத் தீங்கு நேரலாம். அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு ஷைத்தான்கள் போய்ச் சேர்ந்த பிறகு அதாவது இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு இந்த ஆபத்து நீங்கி விடும் என்பதால் அப்போது குழந்தைகளை வெளியே விடுவதால் பிரச்சினை இல்லை.📘📘📘

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு.(அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்✍✍✍.*

*இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நூல் : புகாரி 3280*

*👹👹கெட்ட கணவு👹👹*

📙📙📙ஷைத்தான் பகலில் வழிகெடுப்பதை போன்று இரவிலும் வழிகெடுக்கிறான். பகலில் மனிதன் அதிகமான நன்மைகளை செய்கிறான். ஆனால் இரவில் அதிக நன்மை செய்யாமல் உரங்குகிறான். அந்த நேரத்திலும் அவர்களை வழிகெடுக்க வேண்டும் என்று ஷைத்தான் நினைக்கிறான். தூக்கும் போது நம்மை பயம் முறுத்தும் அளவுக்கு கெட்ட கணவை ஏற்படுத்துவான். இரவில் ஷைத்தானின் ஊதசலாதட்தை ஏற்படுத்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். தனது வலது புறத்தில் எச்சில் துப்ப வேண்டும்📙📙📙
.

*✍✍✍நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது.✍✍✍*

*இதை கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி :3292*

*🕋🕋🕋இறையச்சமுடையவர்கள்சுதாரித்துகொள்வார்கள்🕋🕋🕋*

📗📗📗ஷைத்தானின் நம்முடைய நன்மைகளை அழிப்பதற்காக பல வழிகளை கையாலுவான். மனித இனத்தையே நரகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று கங்கடம் கண்டிக் கொண்டு இருக்கிறான். ஆனால் மனித இனத்தின் அனைவரையும் வழிகெடுக்க முயற்சிக்கும் போது நல்லயடியார்கள் சுதாரித்துக்கொள்ளவார்கள். இந்த தீயச் செயல் ஷைத்தானின் ஏற்பாடாகும். இவைகளை விட்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.📗📗📗

*✍✍✍(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்✍✍✍*

*.(அல்குர்ஆன் (7:201)*

*👹👹👹ஊசலாட்டம்👹👹👹*

📒📒📒ஷைத்தான் இது போன்ற தீய காரியங்களை ஏற்படுத்தி தீமையை செய்யுமாறு நமக்கு ஏவுகிறான். நம்முடைய உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் போது அந்தசெயல்களை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வராத வரை அல்லாஹ் நம்மை தண்டிக்க மாட்டான்.📒📒📒

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.✍✍✍*

*இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : புகாரி : 2528*

*🛑🛑பாதுகாப்பு வழிமுறை🔵🔵*

📓📓📓பகல் நேரத்தில் அதிகமான நன்மைகளை செய்கிறான். அதிகமான நன்மைகளை செய்வதை ஷைத்தான் விரும்ப மாட்டான். பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் அதிகமாக இருக்கும். அதனால் காலையிலிருந்து மாலைவரை ஷைத்தான் நம்மை தீண்டாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சிறிய துஆக்களை கற்றுத்தத்துள்ளார்கள். அந்த துஆவை நாம் ஒதினால் காலையிருந்து மாலை வரை ஷைத்தான் நம்மை தீண்டமுடியாது.📓📓📓

*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்  லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்- ஷய்இன் கதீர் # என்று எவர் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப் பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கி -ருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.✍✍✍*

*இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : புகாரி : 3293*

📔📔📔பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் இருப்பதைப் போன்று இரவில் நேரத்திலும் ஷைத்தான் தீண்டுவான். இரவில் தூங்கும் போது ஷைத்தான் கெட்ட கணவை ஏற்படுத்தி பயமுறுத்துகிறான். இரவு நேரத்திலும் ஷைத்தானின் தீண்டல் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சில ஆயத்துகளை கற்றுத்துள்ளார்கள்.📔📔📔

*✍✍✍அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; “”உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சி யையும் விபரமாகச் சொல்கிறார்.) இறுதியில் அவன், “”நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள்.70 (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) “”அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்*✍✍✍ .

*நூல் : புகாரி : 3275*

⛱⛱⛱ஷைத்தானின் தீண்டலிருந்து நம்மை பாதுகாத்து மறுமையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.⛱⛱⛱

*🧕🧕🧕பெண்களே! சிந்திப்போம்! செயல்படுவோம்!🧕🧕🧕*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 24*
*

No comments:

Post a Comment